ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பழமொழி
- Study MIT(Massachusetts Institute of Technology)courses for free
- சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???
- தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!
- என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......
- தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை
- மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
- குடி குடியைக் கெடுக்கும்!
- அறிமுகம்
- பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல!
- 3டி வரைபடம் :)
- கோட்டயம் புஷ்பநாத்தின் 2 மோகினி நாவலை டவுன்லோட் செய்ய
- ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !
- நாக்பூர் போட்டோக்கள்
- நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
- தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!
- ராசிகளும் நோய்களும்!
- அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?
- ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
- நேதாஜி - மதுமிதா
- வல்லமை மின்னிதழ் குழுவில் சிறந்த கட்டுரையாளராக என்னைத் தேர்வு செய்துள்ளனர். = ஆதிரா
- BMW - மதுமிதா
- 6 கிலோ மட்டுமே; சுக பிரசவத்தில் பிறந்து சாதனை !
- தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..?
- இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
- வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
- முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..!
- பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !!
- குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா :
- தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!
- ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா
- சூரியனின் ஐரிஸ் கருவி படம்: நாசா
- 122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்!
- புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார் - கனகா
- நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை! - கண்டிப்பாக படியுங்கள் :)
- எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் சோயாபீன்ஸ்: ஆய்வில் தகவல்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- என் மனம் சொன்னது அவள் என் உயிர்
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல்
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- பற்களை இழந்தால் ஞாபக சக்தி பாதிக்குமா?
| Posted: 31 Jul 2013 01:47 PM PDT மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? மழை எப்போது பெய்யும், கருவுற்ற பெண் எப்போது பிரசவிப்பாள் என்று தெரியாது அதற்காக இப்பழமொழி. அடைத்த கதவு திறக்காத மழை கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் கார்த்திகை மாதம் கனமழை பெய்யும் ஒரு நாள் முழுவம் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர். அந்தி மழை அழுதாலும் விடாது! கோடை காலத்தில் அந்தி நேரத்தில் மழை பிடித்தால் நாள் முழுவதும் மழை பெய்யும் அதற்கு கூறிய மொழி தான் ... |
| Study MIT(Massachusetts Institute of Technology)courses for free Posted: 31 Jul 2013 01:38 PM PDT MIT(Massachusetts Institute of Technology) உலகின் முன்னணி பல்கலைகழகங்களில் ஒன்று இது மிகவும் தொன்மையானதும் கூட(1865இல் நிறுவப்பட்டது ). கடந்த 60 ஆண்டுகளாக MITஇன் கல்வித் திட்டங்கள் பௌதீக அறிவியல் மற்றும் பொறியியல் போன்றவற்றைக் கடந்து பொருளாதாரம், தத்துவம், மொழியியல், அரசியல் அறிவியல் மற்றும் மேலாண்மை போன்ற சமூக அறிவியல் வரை நீண்டிருக்கிறது. MIT தற்பொழுது MITOpenCourseWare (OCW) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் MITஇல் உள்ள அனைத்து இளநிலை(UG) மற்றும் முதுநிலை(PG) Course ... |
| சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? Posted: 31 Jul 2013 12:59 PM PDT பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம். இவ்வாறு கூற காரணம் என்ன ??? |
| தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை! Posted: 31 Jul 2013 12:20 PM PDT 2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. 2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது ... |
| என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Posted: 31 Jul 2013 12:19 PM PDT என் எண்ணும் எண்ணங்கள் என் போல எண்ண முடியவில்லை என்னவென்று பார்த்தால் என் எண்ணம் எல்லாம் எண்ணிடும் எண்ணம் நீயே .... எழுத்துகள் என் எண்ணம் போல எழவில்லை எழுதிடும் போதெல்லாம் எதுஎதுவோ எழுதினாலும் எழுதுவது மட்டும் என் எண்ணத்தில் இருக்கும் நீயே .... எட்டி பார்க்கும் நிலவு போல எட்டாமல் நின்று ஏனோ சிரிக்கிறாய் எழுந்திடும் கனவாக மட்டும் உதிக்கிறாய் எழுத போனால் ஏனோ உதிர்கிறாய் நீயே ... எல்லைகள் இல்லை என்பார்கள் எண்ணிடும் உன் கொள்ளை அழகிற்கு ... |
| தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை Posted: 31 Jul 2013 11:54 AM PDT எனது micromax A87ஐ ROOT செய்து விட்டேன் ஆனாலும் அதில் தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை |
| மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! Posted: 31 Jul 2013 11:50 AM PDT மதுரை: அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும், மாணவர் விஜயகுமாரும், சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் ... |
| Posted: 31 Jul 2013 11:45 AM PDT 1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ... |
| Posted: 31 Jul 2013 11:19 AM PDT |
| பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Posted: 31 Jul 2013 10:48 AM PDT வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து ... |
| Posted: 31 Jul 2013 10:14 AM PDT நன்றி :வெப் துனியா |
| கோட்டயம் புஷ்பநாத்தின் 2 மோகினி நாவலை டவுன்லோட் செய்ய Posted: 31 Jul 2013 09:52 AM PDT கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ciye5wj7r9vw86e/manthira-k.p.pdf கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ueuwre99w9ty48z/mohini%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 31 Jul 2013 09:51 AM PDT ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் புகழ், கௌரவம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதிதாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து ... |
| Posted: 31 Jul 2013 09:38 AM PDT நாக்பூரில் கடந்த இரு மாதங்களாக விடாத மழை இனியும் வெளியே மழை கொட்டி கொண்டிருக்கிறது. தினமும் கொஞ்சம் போட்டோ கிளிக் பண்ணி அனுப்புகிறேன் நான் வாக்கிங் செல்லும் ரோட் ![]() |
| நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 31 Jul 2013 08:35 AM PDT நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மின்னல் கலைக்கூடம் . 117.எல்டாம்ஷ் சாலை ..சென்னை 18. செல் 9841436213 விலை ரூபாய் 30. 'நிலா தேடும் ஆகாயம் ' நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .ஆகாயத்தில்தானே நிலா தெரிகின்றது . ஆகாயத்தில் நிலா இருந்தாலும் ,நிலா ஆகாயத்தை தேடுகின்றதா ? அருகில் இருப்பதால் கண்ணில் பட வில்லையா? இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன . நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் மண் பற்று மிக்கவர் .பிறந்த ... |
| ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! Posted: 31 Jul 2013 08:31 AM PDT ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! காட்சிப் பொருளானது கிராமத்தில் ஏர் கலப்பை ! காற்று உள்ளபோதே தூற்றலாம் தூற்ற நெல் ? விளைச்சல் குறையும் விலைகள் ஏறும் உலகமயம் ! ஈரமில்லா இலை உதிரும் ஈரமில்லா மனிதன் வீழ்வான் ! காற்றால் உயர்ந்தது காற்றால் வீழ்ந்தது சருகு ! பணம் வாங்கி பாகனிடம் தந்தது யானை ! விமானம் தொடர் வண்டி இயக்கியும் வீட்டில் கையில் கரண்டி புதுமைப்பெண் ! முள்ளிலிருந்து விடுதலை தலைவி தலையில் சிறை ரோஜா ! சலிப்பதில்லை பார்த்திடவும் ... |
| தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி! Posted: 31 Jul 2013 08:14 AM PDT முதலில் விரிப்பில் நேராக படுக்கவும். பின்னர் இடது பக்கமாக ( ஒரு பக்கமாக) படுத்து கொண்டு கால்கள், கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். இடது கையை தரையில் ஊற்றி உடலை மேலே தூக்கவும். இந்த நிலையில் படத்தில் உள்ளது போல் நேராக இருக்க வேண்டும். கைகள் உடலை ஒட்டி வைக்க வேண்டும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் வலது பக்கமும் செய்ய வேண்டும். முதலில் இந்த பயிற்சியை செய்யும் போது கடினமாக இருக்கும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை மட்டும் செய்தால் போதுமானது. ... |
| Posted: 31 Jul 2013 08:12 AM PDT நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார். மேஷம்: தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில் ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை, ஒருபக்கத் ... |
| அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? Posted: 31 Jul 2013 08:09 AM PDT பெண்கள் என்றாலே அழகு என்பார்கள். அது இயற்கை. இன்றைய பரபரப்பான சூழலில் இயற்கையாக அழகு சாதனங்களை தயாரித்து பயன்படுத்த நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. தற்போது உள்ள பெண்கள், நினைக்கும் போது ஷாப்பிங் சென்று புதிது புதிதாக வரும் அழகு சாதன பொருட்களை அள்ளிக் கொண்டு நிரப்பிவிடுகிறார்கள். முகத்தை பளிச்சென்று வைக்கும் க்ரிம் என்று எந்த விளம்பரம் வந்தாலும் சிலர் தவறுதில்லை. எவ்வளவு விலையாக இருப்பினும் அதை வாங்கினால் தான் அவர்களுக்கு திருப்தி. வாங்குவது தவறில்லை. முகத்திற்கு பயன்படுத்தும் பொருளல்லவா? ... |
| ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் Posted: 31 Jul 2013 08:00 AM PDT ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் .... இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ...... முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,, நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் .. நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் நீங்கள் ஈகரையில் சுகமே நான் அக்கரையில் சுகமா நீங்கள் ஈகரையில் சுகமே நான் அக்கரையில் சுகமா நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் தீண்ட வரும் காற்றினையே ... |
| Posted: 31 Jul 2013 07:57 AM PDT நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள் சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ... |
| வல்லமை மின்னிதழ் குழுவில் சிறந்த கட்டுரையாளராக என்னைத் தேர்வு செய்துள்ளனர். = ஆதிரா Posted: 31 Jul 2013 07:22 AM PDT அன்பு உறவுகளே, வல்லமை மின்னிதழ் குழுமத்தில் என்னைச் சிறந்த கட்டுரை கவிதையாளராகத் (வல்லமையாளராக) தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை என் உறவுகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (அங்கு நான் பதிவிட்ட கட்டுரைகள் மொத்தம் ஐந்து. கவிதை இரண்டு ) http://www.vallamai.com/?p=37292 |
| Posted: 31 Jul 2013 06:55 AM PDT the BMW Pininfarina Gran Lusso Coupé |
| 6 கிலோ மட்டுமே; சுக பிரசவத்தில் பிறந்து சாதனை ! Posted: 31 Jul 2013 06:52 AM PDT ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் சுகபிரசவத்தில் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை பெற்றுள்ளார். அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை தான் டாக்டர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், ஆபரேஷன் செய்துக்கொள்ள விரும்பாத அந்த இளம்பெண் கடந்த சனிக்கிழமை இயல்பான முறையில் 13 1/2 பவுண்ட் (6 கிலோ 110 கிராம்) எடையுள்ள குழந்தையை பிரசவித்தார். இந்த குழந்தைக்கு ஜஸ்லீன் என பெயரிடப்பட்டுள்ளது. பிறந்த போது அதிக எடை கொண்ட குழந்தையாக ஜெர்மானியர் இதை கருதுகின்றனர். இதற்கு முன்னதாக ... |
| தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? Posted: 31 Jul 2013 06:31 AM PDT தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது ... |
| இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி Posted: 31 Jul 2013 05:37 AM PDT சென்னை : ''நான் இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள். உயிரோடுதான் இருக்கிறேன்'' என்று நடிகை கனகா கூறினார். வதந்தி ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கனகா. அதிசயப்பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.தேவிகா மரணம் அடைந்த பின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் கனகா தனிமையில் வசித்து வந்தார். படங்களில் ... |
| வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு Posted: 31 Jul 2013 05:18 AM PDT 2012-13ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை அடுத்த மாதம் 5ந் தேதி வருமான வரித்துறை நீடித்துள்ளது. வருமான வரியை தாக்கல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி மண்டல அலுவலகத்தில் 34 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 24 கவுன்டர்களும், காஞ்சிபுரத்துக்கு 3 கவுன்டர்களும், தாம்பரத்துக்கு 7 கவுன்டர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், ... |
| முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! Posted: 31 Jul 2013 05:07 AM PDT முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்..! "முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்" என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென ஒப்புக் கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததையடுத்து, கேரள அரசு தரப்பு வாதம் நேற்று (30ஆம் தேதி) தொடங்கியது. கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே ... |
| பிரமிப்பு தரும் விசித்திரக் கூட்டம் !! Posted: 31 Jul 2013 04:49 AM PDT ஒரு நண்பர். விகடனில் வட்டியும் முதலும்( பழைய பதிவு) என்கிற தலைப்பில் நண்பர் ராஜூ முருகன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி - இந்திய மக்களை படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது. 1) ஒரு பக்கம் ப்ளாட்பாமில் குடும்பம் நடத்தி,பிள்ளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவெனியூவில் பக்கெட் சிக்கன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 2) ஓட்டுக்கு காசு வாங்குகிறார்கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார்கள். ஈழப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது - வைகோவைத் தோற்கடிக்கிறார்கள். 3) ... |
| குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் ஜெயலலிதா : Posted: 31 Jul 2013 04:48 AM PDT நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட காரில் சென்றார். அடர்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள், மான் கூட்டங்களை பார்த்து ரசித்தார். பின்னர் தெப்பக் காட்டில் உள்ள யானை முகாமுக்கு வந்த அவருக்கு 22 யானைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூர்த்தி என்ற மக்னா யானைக்கும் முதுமலை என்ற யானைக்கும் காவேரி என்ற 2 வயது குட்டி யானைக்கும் பழம், வெல்லம் மற்றும் ... |
| தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Posted: 31 Jul 2013 04:30 AM PDT சென்னை: புதிதாக உதயமாகி உள்ள தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோப்பித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும். 1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த ... |
| ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா Posted: 31 Jul 2013 04:29 AM PDT ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா இரு நாட்களுக்கு முன்பு Indian Express என்னும் ஆங்கில பத்திரிகைக்கு கிடைத்த ஒரு தகவலின் படி சமீபத்தில் உத்திராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை காக்க ரஷ்யா நாட்டின் அதி வேக விபத்து மற்றும் அவசர நிலை உதவியாளர்கள் 150 பேர் விமானங்கள் மற்றும் மக்களை கண்டுபிடிக்கும் சாதனங்களோடு இந்தியா வர தாயார் நிலையில் இருந்தனர்.. அவர்கள் இந்திய அரசிடம் அனுமதி கேட்ட போது இந்தியாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்க வில்லை என்று அந்த நாட்டு ... |
| சூரியனின் ஐரிஸ் கருவி படம்: நாசா Posted: 31 Jul 2013 04:00 AM PDT நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனின் பிரத்யேக புதிய படத்தை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதிகம் அறியப்படாத இன்டர்பேஸ் ரீஜியன் என்னும் பகுதியை ஐரிஸ் ( Interface Region Imaging Spectrograph or IRIS ) கருவி படம் எடுத்துள்ளது. இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத பிரத்யேக படம் என்பதால் பல ஆராய்ச்சிக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஐரிஸ் என்று அழைக்கப்படும் இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலம் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோகிராஃப்-ல் உள்ள அல்ட்ரா வயலட் ... |
| 122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Posted: 31 Jul 2013 03:58 AM PDT டெல்லி: நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கான 'பிறப்பெடுக்க' 122 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது தெலுங்கானா மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கு 4 மாத காலம் தேவைப்படுமாம். தெலுங்கானா தனி மாநிலத்துக்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் கொடுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இனி தொடங்கும்.. முதலாவதாக ஆந்திர மாநில சட்டசபையில் தெலுங்கானா தனி மாநில தீர்மானம் நிறைவேற்ற குறிப்பு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தீர்மானத்தை ... |
| புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார் - கனகா Posted: 31 Jul 2013 03:36 AM PDT சென்னை: "புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் ... |
| நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை! - கண்டிப்பாக படியுங்கள் :) Posted: 31 Jul 2013 03:36 AM PDT வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும், "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' அமைப்பின் அறங்காவலர், நிர்மலா தேசிகன்: சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், சொந்த வீடு வாங்குவது குதிரை கொம்பாக உள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி போன்றவற்றால், நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல், வாடகை வீட்டிலேயே குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடகை வீட்டில் குடியேறினால், வீட்டின் உரிமையாளர் பல காரணம் கூறி, அதிக பணம் வசூலிப்பர். குறிப்பாக, மின்சாரத்திற்காக கட்ட வேண்டிய கட்டணமே, வீட்டின் ... |
| எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் சோயாபீன்ஸ்: ஆய்வில் தகவல் Posted: 31 Jul 2013 03:30 AM PDT வாஷிங்டன், ஜூலை 31– சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிர் கொல்லியான 'எய்ட்ஸ்' நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர். அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் 'எச்.ஐ.வி.' கிருமிகளை தடுக்கும் ... |
| Posted: 31 Jul 2013 03:22 AM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| என் மனம் சொன்னது அவள் என் உயிர் Posted: 31 Jul 2013 03:19 AM PDT என் கனவு என்னிடம் வாரமொன்று கேட்டது என் வழியில் தலையிடாதே உன்னால் நான் படும் பாட்டிற்க்கு அளவில்லை அவ்வளவு அன்பு அவளில் என்றாள் அணைத்துக்கொள் உன் நெஞ்சுக்குள் அவிழ்த்துவிடாதே என் கண்ணுக்குள் நிகழ் காலம் என்னை கேலி செய்தது பிம்பங்களுக்கு முத்தமிட நீ என்ன மூடனா என்று இப்படி நிழலுக்கு உயிர் தராமல் நிழலாகவே மாறிவிடு நீ அவளுக்கு தொட்டுத்தொடரும் உறவேன்று தொடைதட்டிச் சொல்லலாமென்று எதிர்காலமோ என்னாய் ஏளனமாய் பார்த்தது மடத்தனமான காதல் இம்மண்ணுக்கு போகுமென்று உன் நெஞ்சுக்குள் ... |
| Posted: 31 Jul 2013 03:17 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Posted: 31 Jul 2013 03:16 AM PDT சீனாவில் தெற்குப்பகுதியில் இருக்கும் ஷாஹூகை என்ற ஊரிலுள்ள ஒர்க்ஷாப்புக்கு மினிவேன் ஒன்று பழுதுபார்க்க வந்தது. அதன் என்ஜின் பகுதியை மெக்கானிக் ஆய்வு செய்ய முயன்ற போது ஒரு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வாகன உரிமையாளர் லி என்பவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் ஒர்க்ஷாப்புக்கு வந்து ஒரு நீளக்குச்சியை கொண்டு அந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தார். அது சுமார் 10 அடி நீளம் இருந்தது. இச்சம்பவம் பற்றி வேனின் உரிமையாளர் லி கூறிய தகவல் ஒர்க்ஷாப் ஊழியர்களை திகிலிட ... |
| Posted: 31 Jul 2013 03:13 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| பற்களை இழந்தால் ஞாபக சக்தி பாதிக்குமா? Posted: 31 Jul 2013 03:06 AM PDT உடல் ஆரோக்கியம், முகம் அழகுக்கு துணை நிற்கும் உறுப்புகளில் பற்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அதுமட்டுமல்ல இந்த பற்கள் மனிதனின் ஞாபக சக்தியுடன் தொடர்புடையது என விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுருக்கமாக சொன்னால் பற்களை இழந்தால் ஞாபக சக்தி பிரச்சினை ஏற்படும் என்கிறார்கள். 55 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள 273 பேரை ஆய்வு செய்து இதை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஐரோப்பிய மருத்துவ இதழில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. -- தினத்தந்தி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
