Tamil News | Online Tamil News |
- சேலத்தில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு: அஞ்சலி கூட்டத்தில் அத்வானி இன்று உரை
- தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "பந்த்': ஆந்திராவின் பிற பகுதிகளில் மக்கள் கொந்தளிப்பு
- அணுமின் உற்பத்தியில் களமிறங்கும் இந்திய ரயில்வே: 1,400 மெ.வா., மின்சாரம் தயாரிக்க திட்டம்
- அ.தி.மு.க.,வில் இருந்து நீக்க முடியாது: ஈரோடு பெண் மேயர் ஆவேசம்
- நகரங்களுக்கு 10 ஆயிரம் புது பேருந்து வழங்கும் திட்டம்: ஆலோசகரை தேடுகிறது மத்திய அரசு
- கூடங்குளத்தில் திட்டமிட்டபடி உற்பத்தி: அணுமின் வளாக இயக்குனர் சுந்தர் தகவல்
- அசாம், மேகாலயாவில் தாக்குதல் நடத்த உல்பா - கரோ தீவிரவாதிகள் சதி திட்டம்
- சதுரகிரி மலையில் கடும் வறட்சி: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ. 40
- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் கோரிக்கை
- தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு
| சேலத்தில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு: அஞ்சலி கூட்டத்தில் அத்வானி இன்று உரை Posted: சேலம், பா.ஜ., பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அடுத்து, அவர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவும், கொலையைக் கண்டித்து நடைபெறும், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, இன்று சேலம் வருகிறார். அவரது பாதுகாப்புக்காக, சேலத்தில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சேலத்தில், கடந்த, 19ல், படுகொலை செய்யப்பட்ட பா.ஜ., மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து, இரங்கல் பொதுக் கூட்டம், சேலம், ஜவகர் மில் திடலில் இன்று மாலை, 4:30 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவர், எல்.கே.அத்வானி கலந்து கொள்கிறார். அதற்காக ... |
| தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "பந்த்': ஆந்திராவின் பிற பகுதிகளில் மக்கள் கொந்தளிப்பு Posted: ஐதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு, ஆந்திராவின் மற்ற பகுதிகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில், நேற்று, "பந்த்' நடத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆந்திராவை இரண்டாக உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை, காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, தெலுங்கானா பகுதிகளில், உற்சாகம் கரை புரண்டோடுகிறது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது. இது, தெலுங்கானா மக்களுக்கு தித்திப்பை ... |
| அணுமின் உற்பத்தியில் களமிறங்கும் இந்திய ரயில்வே: 1,400 மெ.வா., மின்சாரம் தயாரிக்க திட்டம் Posted: புதுடில்லி: இந்திய ரயில்வே, அணு மின் நிலையம் அமைத்து, 1,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மாநில மின் வினியோக நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது. இந்திய ரயில்வே, 1,15,000 கி.மீ., இருப்பு பாதைகள், 65,000 கி.மீ.,க்கும் அதிகமான போக்குவரத்து தடங்கள் மற்றும் 7,500க்கும் அதிகமான ரயில் நிலையங்கள்உடன் இயங்கி வருகிறது. இருப்பு பாதை: உலகில், மிகப் பெரிய ரயில் போக்குவரத்து வசதி கொண்ட முன்னணி நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. இந்திய ரயில்வே இருப்பு பாதையில், ... |
| அ.தி.மு.க.,வில் இருந்து நீக்க முடியாது: ஈரோடு பெண் மேயர் ஆவேசம் Posted: ஈரோடு: ""மொத்தம், 45 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்ற என்னைப் பற்றி, எத்தனை செய்திகள் போட்டாலும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்க முடியாது,'' என, ஈரோடு மேயர் மல்லிகா, சவால் விட்டார். ஈரோடு மாநகராட்சி கூட்டம், மேயர் மல்லிகா தலைமையில், நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், ""கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள், துணை மேயர் பழனிச் சாமியை சந்தித்து பேசுகின்றனர். மண்டலத்திலேயே அவர்களின் தேவை முடிந்து விடுவதால், என்னிடம் வருவதில்லை. காசிபாளையம் மண்டலத்தலைவர் காஞ்சனா மட்டுமே வருகிறார்,'' என, மேயர் மல்லிகா பேசினார். பெண்கள் ஆக்கிரமிப்பு: ""மேயர் அறையில், ... |
| நகரங்களுக்கு 10 ஆயிரம் புது பேருந்து வழங்கும் திட்டம்: ஆலோசகரை தேடுகிறது மத்திய அரசு Posted: சென்னை: நகர்ப்புற பகுதிகளில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வழங்கும் திட்டத்துக்கான, கலந்தாலோசனை நிறுவனத்தை தேர்வும் செய்யும் பணியை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை துவங்கியுள்ளது. நாட்டின் அனைத்து பெருநகரங்களிலும், அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 2005ல் துவக்கப்பட்டது. இதற்காக, நாடு முழுவதும், 552 திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததில், இதுவரை, 150க்கும் குறைவான திட்டப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை ... |
| கூடங்குளத்தில் திட்டமிட்டபடி உற்பத்தி: அணுமின் வளாக இயக்குனர் சுந்தர் தகவல் Posted: திருநெல்வேலி: ""கூடங்குளம் அணு உலையில், திட்டமிட்டபடி பணிகள் நடக்கின்றன. ஆகஸ்ட் இறுதியில், 400 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும்,'' என, அணு மின் வளாக இயக்குனர், ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார். செஞ்சிலுவை சங்கம் சார்பில், பேரிடர் மேலாண் பயிற்சி பெற்ற இளையோருக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, நெல்லையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் பேசியதாவது: பேரிடர் மேலாண்மை: நான், கூடங்குளத்தில் பணியில் இருந்தபோது, என் தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது கோட்டயத்தில், செஞ்சிலுவை ... |
| அசாம், மேகாலயாவில் தாக்குதல் நடத்த உல்பா - கரோ தீவிரவாதிகள் சதி திட்டம் Posted: அசாம், மேகாலயாவில், சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், உல்பா மற்றும் கரோ தீவிரவாதிகளும் பெரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தீவிரவத செயல்கள்: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான, உல்பா மற்றும் ஜி.என்.எல்.ஏ., என்ற, கரோ தேசிய விடுதலை ராணுவம் ஆகிய, தீவிரவாத அமைப்புகள், முறையே அசாம் மற்றும் மேகாலயாவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அசாம் மாநிலத்திற்கு, நிரந்தர தலைவலியாக உள்ள, உல்பா தீவிரவாதிகள், சில நாட்களுக்கு ... |
| சதுரகிரி மலையில் கடும் வறட்சி: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ. 40 Posted: வத்திராயிருப்பு: இன்னும் சில நாட்களில் ஆடி அமாவாசை விழா துவங்க உள்ள சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான சதுரகிரி மலையில், கடும் வறட்சி நிலவுகிறது. மற்ற இடங்களில் பெய்த சாதாரண மழைகூட, இம்மலைப்பகுதியில் பெய்யாததால், மலையில் உள்ள ஆற்றுப்படுகைகள், ஆகாயகங்கை ஊற்று, கிணறுகள் வறண்டு விட்டன. எப்போதும் வற்றாமல் இருக்கும், நாவல் ஊற்றும், இந்த ஆண்டின் வறட்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வற்றி விட்டது. ... |
| பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் கோரிக்கை Posted: சென்னை: ""பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக, நேற்று இரவு, அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு, ஆண்டுக்கு, இரண்டு முறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாற்றிய நிலை மாறி, மாதத்திற்கு, இரு முறை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டு போட்ட மக்களை, மத்திய அரசு, வஞ்சிப்பதை பார்க்கும்போது, "பாம்புக்கு பால் வார்த்தாலும், நஞ்சைத் தான் கக்கும்' என்ற ... |
| தெலுங்கானா உதயம்: ஐதராபாத்தில் வீடுகள் விலை உயர்வு Posted: புதுடில்லி: ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்ததை தொடர்ந்து தற்போதைய தலைநகர் ஐதராபாத்தில் வீடுகளின் விலை உயரத்துவங்கியுள்ளது என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவான தலைநகரம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் ஐதராபாத் நகரம் எந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் என்ற குழப்ப நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கிய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 01,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |