Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!

Posted: 28 Jul 2013 01:50 PM PDT

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் ...

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Posted: 28 Jul 2013 12:05 PM PDT

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் 2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் . 3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள். 4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று ...

ஏமாளி

Posted: 28 Jul 2013 11:49 AM PDT

ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது. அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது. அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர். அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ...

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!

Posted: 28 Jul 2013 11:43 AM PDT

கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது! கரூரில் வாரியார் சுவாமிகள் தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டு விழா! பாராட்டிப் பேசிய அன்பர் ஒருவர், "மீண்டும் வாரியார் சுவாமிகளின் பேச்சை எப்போது கேட்போமோ...' என்ற ஏக்கத்தோடு, ""மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள்?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள், ""கரூருக்கா? கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டி பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கருவூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே...!'' ...

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Posted: 28 Jul 2013 11:39 AM PDT

உண்மை பாஸ்! நம்புங்க! பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகார் சாஹிப் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 12 வயது முஸ்லிம் சிறுவன் அர்ஷித் அலி கான் வாலுடனேயே பிறந்தார். இவரை அனுமார் என்று கும்பிட்டு வருகின்றனர். கீழ் முதுகுப் பகுதியில் விலங்குகளுக்கு இருப்பது போலவே அவருக்கு வால் முளைத்துள்ளது. பிறவியிலேயே அப்படித்தான். இந்தச் சிறுவனை இந்துக் கடவுள் அனுமன் என்றே கும்பிட்டு வருகின்றனராம். பல ஊர்களில் இருந்தும் வந்து இந்தச் சிறுவனுக்கு காணிக்கைச் செலுத்தி கும்பிட்டு ...

உடும்பை சாப்பிட்ட ராஜநாகம்...அபூர்வ படம் பற்றிய பதிவு இது.

Posted: 28 Jul 2013 11:36 AM PDT

இன்றைக்கு பிரபலமாக பேசப்படும் "வைல்டு லைப் போட்டோகிராபி' துறையில், எல்லோருக்கும், எதிர்பார்க்கும் எல்லாமே எப்போதுமே கிடைத்துவிடாது, அந்த வகையில் ஒரு ஐம்பது வருட தேடுதலுக்கு பிறகு கிடைத்த ஒரு அபூர்வ படம் பற்றிய பதிவு இது. ராஜேஷ் பேடி. டில்லியை சேர்ந்தவர், வைல்டு லைப் போட்டோகிராபியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலமாக இருப்பவர், சர்வதேச புகழ் பெற்றவர். உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் நேஷனல் பார்க்கிற்கு கடந்த ஜூன் மாதம் சென்றிருந்தார். இவர் போனபோது கடுமையான மழை. மழை பெய்தால் எந்த மிருகமும் ...

நாய் கூட தின்னாத மதிய உணவை நாங்கள் சாப்பிட்டு பரிசோதிப்பதா?: ம.பி. ஆசிரியைகள் போர்க்கொடி

Posted: 28 Jul 2013 11:35 AM PDT

பீகார் மாநில பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் கடந்த வாரம் பரிதாபமாக பலியாகினர். அந்த பள்ளியின் தலைமையாசிரியையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து, கல்வி சாராத மதிய உணவு தயாரிப்பது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்த கூடாது என பீகார் மாநில ஆசிரியைகள் மதிய உணவு பணிகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக சுமார் 3 லட்சம் மாணவ - மாணவிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பீகார் சம்பவத்தையடுத்து பல மாநிலங்களிலும் நடைபெறும் மதிய உணவு திட்டத்தின் குறைபாடுகள் ...

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Posted: 28 Jul 2013 11:32 AM PDT

[img:ace4]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_130728113607000000.jpg[/img] கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி. அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு ...

CryEngine இன்னும் 3D விளையாட்டு செய்ய மென்பொருட்கள்

Posted: 28 Jul 2013 10:26 AM PDT

உங்களுக்கு முப்பரிமாண வல்லுநராக வரும் விருப்பம் உள்ளதா? உலகச் சிறுவர்களின் கனவுலமாக இருக்கும் computer game களைச் செய்து அதில் சிறந்த graphicer , designer என்னும்பெயர் பெறவிரும்புகிறீர்களா. இதோ சில இலகுவானவை /அதிசிக்கலுள்ள பலவகையான மென்பொருட்கள் இலவசமாக.. இவற்றில் எனக்குஆர்வம் இருந்தபோதும் இளமையிற் கல் என்ற சொல்லிற்கேற்ப முதுமையில் கற்பதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை இளஞ் சமுதாயமே கேம் விளையாடியதுபோதும் இதோ விளையாட்டுச் செய்வது எப்படிஎன்று பாருங்கள் தேடிப்படியுங்கள்````தமிழுக்கு இங்கு ...

வேலன்:-புகைப்படங்களை ஒன்றாக சேர்க்க

Posted: 28 Jul 2013 10:09 AM PDT

சில புகைப்படங்கள் எடுக்கையில் நமது கேமராவின் ப்ரேமிற்கு வெளியில் இருக்கும்.. அந்த மாதிரியான சமயங்களில் நாம் புகைப்படம் எடுத்து அதனை இந்த சாப்ட்வேரி்ல் வைத்து ஒரே புகைப்படமாக மாற்றலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இப்போது நீங்கள் உங்களுக்கான புகைப்படஙகளை தேர்வு செய்யவும். நான் மூன்று புகைப்படங்களை தேர்வு செய்துள்ளேன்.  இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து ...

ஆடிப்பிறப்பில கூடி நாம்

Posted: 28 Jul 2013 10:04 AM PDT

நாளைக்கு
ஆடிப்பிறப்பாம் - நல்லாக்
கூடிக் கூழும் குடிக்கலாம்
ஆடிக் கொழுக்கட்டையும் விழுங்கலாம்
தேடிப் பிடி நண்பர்/நண்பி முகவரிகளை
ஓடிப் போய் அவர்கள் வீட்டில குந்தி
உண்டு களிக்கலாம் நண்பா!

ஜூலை 2013-புதிய ஆங்கில இதழ்கள் டவுன்லோட் செய்ய

Posted: 28 Jul 2013 10:02 AM PDT

2013-MEN'S FITNESS TOTAL TRAINING GUIDE இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . PDF | 196 pages | 120 Mb | English The Total Training Guide from Men's Fitness magazine and written by Joe Warner, author of the Amazon best-selling 12 Week Body Plan, is the ultimate handbook to mastering every exercise you'll ever need to build muscle and burn fat to get a stronger, fitter and leaner body. Containing hundreds of clearly demonstrated moves – ...

முக நூலில் படித்தவை

Posted: 28 Jul 2013 09:39 AM PDT

உனக்கு கவிதை எழுதி ... எழுதி நீ காதலித்தாயோ .. தெரியவில்லை -நான் கவிதையை .. காதலித்து விட்டேன் ...!!! இப்போதெல்லாம் கவிதையை .. நினைத்துதான் .... உன்னை விரும்புகிறேன் .... கவிதையின் உணர்வில்தான் .. உன்னை நேசிக்கிறேன் ... கவிதை சிரித்தால்.. நீ சிரிக்கிறாய் ...!!! கவிதை அழுதால் நீ அழுகிறாய் ...!!! ஒரு வேளை நீ என்னை .. விரும்பாது போனால்.. நான் கவலையே படமாட்டேன் ... நான் கவிதையில் உன்னை வாழ்நாள் முழுவதும் காதலிப்பேன் ...!!!

மீண்டும் தாக்கியதா இஸ்ரேல்

Posted: 28 Jul 2013 09:35 AM PDT

மீண்டும் தாக்கியதா இஸ்ரேல் நேற்று அதாவது 27 ஆம் தேதி ஒரு சிறிய ஜீப்பில் ஆயுதங்களை ஏற்றி சென்ற ஹிஷ்புல்லா தீவிரவாதிகள் மீது இஸ்ரேலிய வான் படை அதிரடி தாக்குதல் நடத்தியதாக சில அரேபிய செய்தி நிறுவனகள் செய்தி வெளியிட்டுள்ளன.. இதை உறுதிப்படுத்தும் விதமாக அங்கு உள்ள புரட்சி படையில் உள்ள ஒரு புரட்சியாளர் கூறுகையில். ""நேற்று லெபெனான் நாட்டிலிருந்து சிரியா நோக்கி வந்த ஒரு ஜீப்பை இஸ்ரேலிய வான் படை அழித்தது """ ஆனால் இதைப் பற்றிக் கருத்து கூற இஸ்ரேல் அரசு மறுத்து விட்டது.. மேலும் ...

அ.வ கல்யாண சுந்தரத்தின் கண்களின் வார்த்தைகள் புரியாதோ நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 28 Jul 2013 09:34 AM PDT

அமுதவள்ளி கல்யாண சுந்தரத்தின் கண்களின் வார்த்தைகள் புரியாதோ நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/xztvy242y5kkb48/N-48++KVP.pdf

காதல் துளிகள்

Posted: 28 Jul 2013 09:32 AM PDT

அன்பு கொண்ட இதயம் அருகில் இருந்தால் என்ன தொலைவில் இருந்தால் என்ன தொலையாத நினைவுகள் உள்ளவரை தொலைவும் ஓர் சுகம்தான் ********************** வலிகள் சில விழிகளில் கண்ணீரை விதைத்தாலும் என் இதையத்தில் விளைவது உன் புன்னகை மட்டுமே ********************* நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன் ..நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்நான் பொறுத்து கொண்டிருந்தேன்..நீ வெறுத்து கொண்டிருந்தாய்..நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்நீ வருந்தி கொண்டிருந்தாய் ******************** பத்துகொண்டு இருக்கும் உறவைவிட காத்துக் கொண்டுஇருக்கும் ...

குரங்கை இன்னும் காணோமே! - மதுமிதா

Posted: 28 Jul 2013 09:29 AM PDT

ஒரு பிரயாணி தனது பயணத்தின் போது வழமைக்கு மாறாக தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார். நாயும் அவர் பின்னால் விளையாடிக் கொண்டு வந்து கொண்டிருந்து. பயணத்தின் ஒரு கட்டத்தில், அவர் தனது பிரயாணத்தை காட்டு வழியே செல்ல நேர்ந்தது. காட்டில் வண்ணாத்திப் பூச்சிகளைக் கண்ட நாய், அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது. பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் ...

கலைமாமணி விக்கிரமனின் சரித்திர கதைகள் -தொகுதி 1&2 டவுன்லோட் செய்ய

Posted: 28 Jul 2013 09:26 AM PDT

கலைமாமணி விக்கிரமனின் சரித்திர கதைகள் -தொகுதி 1&2 டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : தொகுதி 1 http://www.mediafire.com/download/uhg69w2pce9v40e/vikramanin+sarithira+kathaikal.pdf தொகுதி -2 http://www.mediafire.com/download/wbe007cpu5x4oq7/vikraman-sarithira+kathaikal+part2.pdf

கவிராயர்கள்!

Posted: 28 Jul 2013 09:25 AM PDT

திரிகூடராசப்பக் கவிராயர் இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். சீகாழி அருணாசலக் கவிராயர் இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை ...

கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Posted: 28 Jul 2013 09:11 AM PDT

நித்திரையில் மட்டுமே நித்தம் பூக்கும் கனவு பூக்கள்  தகர்ந்து போக கண்டேன் நிஜங்கள் எல்லாம்  நிரந்தரமாய் தொலைந்து  நினைவோடு  போக  கண்டேன் நெஞ்சமெல்லாம் வஞ்சம் செய்தது  போல   அஞ்சி அஞ்சி துடிக்கும் இதயம் கண்டு அடியோடு  நின்று விடுமோ என திகைத்தேன் ... நிமிடத்திற்கு நிமிடம்  மாறும்   நினைவுகளின்  நிரந்தர முகவரி   நிஜங்களோடு  தொலைந்து  போனதை நித்தம் நிழலோடு போராடும்  போது உணர்ந்தேன் .... நினைக்கும்  மனமும்  நினைப்பதை   நிறுத்திய  பாடில்லை  நித்தம்   தவிக்கும்  மனமும் எந்நேரமும் ...

புத்திசாலிதனம் -மதுமிதா

Posted: 28 Jul 2013 08:46 AM PDT

ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்....... புத்திசாலி : என்ன சார்? போலிஸ் : ஓவர் ஸ்பீட்? புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன். போலிஸ் : லைசென்ஸ் எடுங்க. புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல. போலிஸ் : லைசென்ஸ் இல்லையா? புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ . போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க. புத்திசாலி : அதுவும் இல்ல. போலிஸ் : என்ன? புத்திசாலி ...

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி? - மதுமிதா

Posted: 28 Jul 2013 08:33 AM PDT

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது ...

சர்ச்சிலின் நகைச்சுவை

Posted: 28 Jul 2013 07:56 AM PDT

இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில் சிறந்த பேச்சாளர். நகைச்சுவை கலந்து பேசுவதில் வல்லவர். தேர்வுகளைப் பற்றி அவரது கருத்துக்களை அவரது மொழியிலேயே கேட்போம்: - "எனக்குப் பன்னிரெண்டு வயதாகும்போது எனக்குச் சற்றும் பிடிக்காத தேர்வுகளை எழுத நேர்ந்தது. அவை எனக்குப் பெரும் சோதனையாகவே முடிந்தது. ஏனென்றால் தேர்வாளர்கள் எந்தெந்த பாடங்களை பரிசோதிக்க விரும்பினார்களோ அவை எனக்குச் சற்றும் விருப்பமில்லாதவை. - எனக்குப் பிடித்த கவிதை, கட்டுரை, வரலாறு பாடங்களைவிட்டு விட்டு கணக்கிலும் இலத்தீன் மொழியிலும் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Posted: 28 Jul 2013 07:29 AM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.   இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ...

கவிதையில் யாப்பு

Posted: 28 Jul 2013 07:03 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய

Posted: 28 Jul 2013 06:56 AM PDT

100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள்  இலவசமாக டவுன்லோட் செய்ய  கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .KARTHIK https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEi0apHwjHTQE5Ycsx8BKju_cLCDFC2gcWy8_Sq1fdz2yg4txDSl_SYKH8Jgi8R-Ax60pGLeDOKVDC40zsGt7fTCkz-Jg-DjN1nk1jabUPDt-wmThSahUXz3NJkDQyPi0tqzwUiZw3z74/s1600/Crime+Novel+-+Cover+Page.jpg டவுன்லோட் லிங்க் : http://orathanadukarthik.blogspot.ae/2013/07/100.html  

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

Posted: 28 Jul 2013 06:18 AM PDT

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. ...

தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை. - மதுமிதா

Posted: 28 Jul 2013 06:08 AM PDT

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான். மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். ஒரு ...

முடியாத மூன்று விடயங்கள்

Posted: 28 Jul 2013 05:37 AM PDT

. முடியாத‌ மூன்று விடயங்கள் ... . . . . . . . . . . . . . 1. தலைமுடிய எண்ண மிடியாது... . . . . . . . . . 2. நாக்கை வெளிய நீட்டிட்டு மூச்சுவிட மிடியாது.. . . . . . . . . . . . . . . 3. * * * * * * * * * * * * * * . . . . . * * * * * * * * * * உடனே நாக்க வெளிய நீட்டி மூச்சு விட்டு பாக்ற உங்களலாம் திருத்தவே முடியாது... நன்றி முகநூல்

நண்பனை கண்டேன்

Posted: 28 Jul 2013 05:35 AM PDT

கடந்த கால நட்பை ..
கண்டேன் கடற்கரையில் ..
கண்ணீர் தழும்பும் உறவுடன் ..
ஓடிவந்தன இறந்த கால ..
சம்பவம் ...
ஓடிப்போனது ...
சங்கடங்கள் ...
பேச்சு வரவில்லை ...
ஆனால் பேசியதை ..
மறக்கவும் இல்லை ..
கட்டிப்பிடித்தேன் நண்பனை ..
கல்லாக இருந்த மனம் ..
கற்கண்டாகியது ,,,!!!
இதற்குமேல் என்ன வேண்டும் ..
என் உயிர் நண்பா ...!!!

முக நூல் படித்தது

முகநூலில் படித்தது

Posted: 28 Jul 2013 05:29 AM PDT





நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!

எச்சரிக்கை. - மதுமிதா

Posted: 28 Jul 2013 05:09 AM PDT

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒரு நொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்தாள். அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில். இது ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 28 Jul 2013 04:52 AM PDT

சூப்பருங்க மகிழ்ச்சி

நீ வருவாய் என

Posted: 28 Jul 2013 03:05 AM PDT

வா வா வானவில்லாய் வா என் பிரம்மசாரிய  வேடம் உன்னுடன் நிறம் மாற.... வா வா அலை அலையாய் வா என் குழந்தை மனம் உன்னுடன் விளையாட .... வா வா பூவாய் பூத்திட வா என் பாலைவன தோட்டத்தில் உன்னுடன் மகிழ்ந்தாட... வா வா எதிர்கால மனைவியே வா என் எதிர்காலத்தை உன்னுள் அர்ப்பணிக்க என் இளமை பருவம் இளந்நரையில் வீழம் முன்பே வா -- உனை முத்திமிட என் உதடுகள் உறவு சாயத்தோடு காத்திருக்கிறது வா...  வா...

ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.

Posted: 27 Jul 2013 10:29 PM PDT

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர் என்று மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா சதுரகிரி மலையில் உள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆக.6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகப் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் ...

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 31-ல் தொடக்கம்

Posted: 27 Jul 2013 10:25 PM PDT

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனாய நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பாக இந்தக் கோவில் நிர்வாக அதிகாரி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லையப்பர் திருக்கோவில் காந்திமதி அம்பாள் சன்னிதியில் ஆடிப்பூரத் திருநாள் வரும் 31.7.2013-ம் தேதி புதன்கிழமை காலை 6.54 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத் திருவிழா வரும் 9.8.2013-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவிழாவின் 4-ம் நாளான வரும் 3.8.2013-ம் ...

ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது!

Posted: 27 Jul 2013 10:19 PM PDT

மதுரை /28 July 2013 ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார். சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது: சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை ...

முத்தான வெண்பாக்கள் மூன்று!

Posted: 27 Jul 2013 10:04 PM PDT

டி.கே.சி.யின் ஒரே மகன் தீபன் என்னும் தீத்தாரப்பன். "செல்லையா' என்பது அவரது செல்லப் பெயர். இவர் 32 வயதிலேயே காலமாகிவிட்டார். அச்சமயம் "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை ரசிகமணிக்கு எழுதியனுப்பிய வெண்பா இது: "எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வாஎன் அப்பா அழகியசெல் லையா - இப்பாரில் சிந்தை குளிரச் சிரித்தொளிரும் நின்முகத்தை எந்தநாள்க் காண்பேன் இனி'' இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய ரசிகமணி, ""தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான்; ...

அவையடக்கம்!

Posted: 27 Jul 2013 10:01 PM PDT

அவையடக்கம்' என்ற சொல்லை அவை+அடக்கம் எனப் பிரிக்கலாம். அவை-சபை. அவை எனும் சொல் அவையில் உள்ள மக்களையே உணர்த்தும்; ஈண்டு இடவாகுபெயர். அடக்கம் என்ற சொல், அடக்கம் தெரிவிக்கும் பாடலைச் சுட்டும்; ஈண்டு தொழிலாகுபெயர். ஆனால், தற்போது "அவையடக்கம்' என்ற சொல் அவைக்கு முன்பு தான் இயற்றிய நூலோடு நிற்கும் புலவன், "எளியேன்', "கடையேன்', "அறியேன்' என்று தன்னைத்தானே தாழ்த்தி (இகழ்ந்து) கூறிக்கொள்ளும்படியானச் சொற்களே நம் நினைவுக்கு வருகின்றன. ""வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே'' (பொரு.செய்.111) என்பார் தொல்காப்பியர். ...

அகப்பாட்டில் அறயியல்!

Posted: 27 Jul 2013 09:58 PM PDT

ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற இல்லறத்தைப் பற்றிப் பேசும் அகப்பாடல்கள் பலவற்றுள் உயரிய மானுட விழுமங்களும், அற இயல் கருத்துகளும் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன. வரைவுக்குரிய முயற்சியோடு தன் இல்லம் நாடி வரும் தலைவனை தம் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களோ, மறுப்பார்களோ என மனம் பதைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. மணவினைக்கு அன்னையும் அத்தனும் உடன்பட்டனர். அந்த இனிய செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அரும்பெறலமிழ்த மார்பதமாகப் பெரும்பெய ருலகம் பெறீஇயரோ அன்னை தம்மிற் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழந் ...

ஆடி மாதத்து ஆதிரை விழா!

Posted: 27 Jul 2013 09:49 PM PDT

ஆதிரையான் என்பது சிவபெருமானின் திருநாமம். அவர்க்குரிய திருநாள் மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளாகும். அதனால்தான் தில்லை போன்ற திருத்தலங்களில் ஆதிரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனங்களில் மார்கழி மாதத்து ஆதிரை நாள் தமிழ்நாட்டு மன்னர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்ற திருநாளாக குறிக்கப்பெற்றுள்ளன. திருநாவுக்கரசு பெருமானார் திருவாரூரில் தான் கண்ட ஆதிரை நாளின் சிறப்புக்களை "முத்து விதானம்' எனத் தொடங்கும் திருவாதிரைத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™