மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உணவு பாதுகாப்பு மசோதா: ஏழை மக்களை கவர சோனியா அதிரடி வியூகம்
- டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம்: மோடி கலந்து கொள்கிறார்
- மும்பையில் மீண்டும் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 18 பேர் படுகாயம்
- ரூ.8 கோடி தேர்தல் செலவு: பா.ஜனதா எம்.பி.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
- உத்தரகாண்டில் சேதமடைந்த கேதார்நாத் கோவில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும்: மத்திய மந்திரி தகவல்
- முலாயம்சிங்கை தாக்கி பேசிய மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
- வங்கிகளில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்: மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எச்சரிக்கை
- உணவு பாதுகாப்பு அவசர சட்டம்: பா.ஜனதா - இடதுசாரிகள் கண்டனம்
- எங்களுடைய ஆதரவு இல்லாமல் மத்தியில் அடுத்த ஆட்சி அமையாது: முலாயம் சிங்
- சிக்கிம் மாநில ஆளுநராக ஸ்ரீநிவாஸ் பாட்டீல் நியமனம்
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: உ.பி. ஆறுகளில் இதுவரை 42 சடலங்கள் மீட்பு
- உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இஷ்ரத் கொலை போலி என்கவுண்டர் தான்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
- சி.பி.ஐ.க்கு தன்னாட்சி அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
- குஜராத்தில் நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு திருமணமையம்
- கலவர வழக்கில் மறுவிசாரணையை எதிர்த்து டைட்லர் மனு: சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
- உத்தரகாண்ட் பேரழிவு: தந்தை காணாமல் போனதாக மகன் பொய் புகார்
- குஜராத் என்கவுண்டரில் இறந்த மாணவி தீவிரவாதி அல்ல: குற்றப்பத்திரிகையில் தகவல்
- காங்கிரஸ்- சிபு சோரன் கட்சி பேச்சு வார்த்தையில் உடன்பாடு: ஜார்கண்டில் புதிய அரசு அமைகிறது
- புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று அளிப்பது அவசியம்
| உணவு பாதுகாப்பு மசோதா: ஏழை மக்களை கவர சோனியா அதிரடி வியூகம் Posted: 03 Jul 2013 10:39 PM PDT உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த சட்டம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதும் இந்த சட்டம் அமலுக்கு வரும். பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் ஏழைகளை கவர இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. |
| டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம்: மோடி கலந்து கொள்கிறார் Posted: 03 Jul 2013 10:00 PM PDT குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டார். கோவாவில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மோடியை பிரச்சாரக் குழு |
| மும்பையில் மீண்டும் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 18 பேர் படுகாயம் Posted: 03 Jul 2013 08:35 PM PDT மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மேலும் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தானே பகுதியில் இருந்த 2 மாடிக்கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்தது. |
| ரூ.8 கோடி தேர்தல் செலவு: பா.ஜனதா எம்.பி.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் Posted: 03 Jul 2013 04:37 PM PDT பாரதீய ஜனதா கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் பீட் தொகுதியில் இருந்து கோபிநாத் முண்டே தேர்வு செய்யப்பட்டார். இவர் பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த தேர்தலில் ரூ.8 கோடி செலவு |
| உத்தரகாண்டில் சேதமடைந்த கேதார்நாத் கோவில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்படும்: மத்திய மந்திரி தகவல் Posted: 03 Jul 2013 03:38 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடரால் சேதம் அடைந்த, புகழ் பெற்ற கேதார்நாத் கோவில், அதன் தொன்மை மாறாமல் சிறப்பாக புதுப்பிக்கப்படும் என்று மத்திய கலாசாரத்துறை மந்திரி சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். இதுபற்றி நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது |
| முலாயம்சிங்கை தாக்கி பேசிய மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் Posted: 03 Jul 2013 03:18 PM PDT சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் பிரதமர் வீட்டு வேலைக்காரராக இருக்கக்கூட தகுதியற்றவர் என்று விமர்சித்த மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது தவறுக்கு கட்சியில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சமாஜ்வாடி கட்சியில் இருந்த பெனிபிரசாத் வர்மா |
| Posted: 03 Jul 2013 02:21 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், டெல்லியில் நேற்று பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயத்துக்கு வழங்கக்கூடிய |
| உணவு பாதுகாப்பு அவசர சட்டம்: பா.ஜனதா - இடதுசாரிகள் கண்டனம் Posted: 03 Jul 2013 01:40 PM PDT உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், 'உணவு பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்கள் |
| எங்களுடைய ஆதரவு இல்லாமல் மத்தியில் அடுத்த ஆட்சி அமையாது: முலாயம் சிங் Posted: 03 Jul 2013 10:05 AM PDT ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறிவருகிறார். |
| சிக்கிம் மாநில ஆளுநராக ஸ்ரீநிவாஸ் பாட்டீல் நியமனம் Posted: 03 Jul 2013 08:41 AM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவருமான ஸ்ரீநிவாஸ் பாட்டீல் (வயது 72), சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாட்டீலை புதிய ஆளுநராக ஜனாதிபதி |
| உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: உ.பி. ஆறுகளில் இதுவரை 42 சடலங்கள் மீட்பு Posted: 03 Jul 2013 08:13 AM PDT மலைப்பகுதி மாநிலமான உத்தரகாண்டின் கேதர்நாத், பதிரிநாத், ஜொஷிமட் ஆகிய இடங்களில் கடந்த 15-ம் தேதி பேய் மழை கொட்டியது. இதைத்தொடர்ந்து அங்கு பெய்த மழையின் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். |
| உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 03 Jul 2013 06:39 AM PDT நாட்டில் உள்ள 67 சதவீத மக்களுக்கு குறைந்த விலையில், அதாவது சராசரியாக 5 கிலோ உணவு தானியத்தை ஒரு ரூபாய் முதல் 3 ரூபாய் விலையில் வழங்க வழிவகை செய்யும் உணவு பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த மசோதா பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அது நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. |
| இஷ்ரத் கொலை போலி என்கவுண்டர் தான்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல் Posted: 03 Jul 2013 06:15 AM PDT குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அருகே கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இது போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. |
| சி.பி.ஐ.க்கு தன்னாட்சி அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் Posted: 03 Jul 2013 05:41 AM PDT மத்திய அரசுக்கு ஆதரவாக சி.பி.ஐ. செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின. மேலும் சி.பி.ஐ. அமைப்பு அரசியல் தலையீடு இல்லாமல் செயல்படுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டும் கேள்வி எழுப்பியது. இதையடுத்து சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்படும் வகையில், அதற்கு |
| குஜராத்தில் நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு திருமணமையம் Posted: 03 Jul 2013 05:16 AM PDT குஜராத் மாநிலத்தில் நீரிழி நோயாளிகளுக்காக திருமணம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் டைப்-1 என்ற பிரிவு 12 வயதுக்குட்பட்டவர்களைத் தாக்கக்கூடியது. இதனால் அந்த மாநிலத்தில் 20, ஆயிரம் பேர் நோயாளிகளாக அவதிப்படுகிறார்கள். டைப்-2 என்ற வகை அன்றாட வாழ்க்கை முறைகளின் பிரச்சினைகளால் ஏற்படுவது லட்சக்கணக்கானோர் இந்த டைப் -2 வகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். |
| கலவர வழக்கில் மறுவிசாரணையை எதிர்த்து டைட்லர் மனு: சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Posted: 03 Jul 2013 04:18 AM PDT 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. வடக்கு டெல்லி குருத்வாராவில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை தூண்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக |
| உத்தரகாண்ட் பேரழிவு: தந்தை காணாமல் போனதாக மகன் பொய் புகார் Posted: 03 Jul 2013 03:42 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய பெருமழை மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. ஆறுதல் அளிக்க வேண்டிய இந்த சமயத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை வைத்து அரசியல் செய்யும் நபர்களும், உணவு தட்டுப்பாட்டை வைத்து பணம் பார்க்கும் வியாபாரிகளும் மக்களின் துயரத்தை |
| குஜராத் என்கவுண்டரில் இறந்த மாணவி தீவிரவாதி அல்ல: குற்றப்பத்திரிகையில் தகவல் Posted: 03 Jul 2013 02:45 AM PDT குஜராத் மாநிலம் ஆமதா பாத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி நடந்த என்கவுண்டரில் மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், பிரானேஷ் கோபிநாத் பிள்ளை என்ற ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலிராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள், போலி என் கவுண்டரில் சுட்டுக்கொன்று விட்டதாக போலீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. |
| காங்கிரஸ்- சிபு சோரன் கட்சி பேச்சு வார்த்தையில் உடன்பாடு: ஜார்கண்டில் புதிய அரசு அமைகிறது Posted: 03 Jul 2013 02:42 AM PDT ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் அர்ஜுன் முண்டேவின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து கடந்த ஜனவரி 8-ம் தேதி அரசு கவிழ்ந்தது. ஜனவரி 18-ம் தேதியிலிருந்து ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதியுடன் இந்த ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. |
| புதிய சிம் கார்டுகள் வாங்க கைரேகை சான்று அளிப்பது அவசியம் Posted: 03 Jul 2013 02:30 AM PDT போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளை வாங்கி, அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டு வாங்குபவர்கள் கைரேகை அல்லது உடற்கூறு சார்ந்த பிற சான்றுகளை அளிக்கும் புதிய முறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |