puthiyathalaimurai.tv online |
- ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீக்கம்
- மயிலாடுதுறை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
- கும்பகோணம் அருகே தீவிபத்தில் குழந்தை பலி
- உத்தரகண்டில் சிக்கியுள்ள 300 பேரை மீட்கும் பணிகள் துரிதம்
- ஆசிய தடகளப் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
- கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
- மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; ஏராளமானோர் படுகாயம்
- ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை: முன்னாள் சி.பி.ஐ., அதிகாரி புகார்
- ஊருக்குள் புகுந்த 15 அடி அரிய வகை ராஜநாகம்
- பசில் ராஜபக்ச இன்று இந்தியா வருகை: இலங்கை அரசியலமைப்பு குறித்து ஆலோசனை
| ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீக்கம் Posted: 03 Jul 2013 10:45 PM PDT ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் மேல் தண்ணீ்ர் சென்றதால் கடந்த 6 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும்,பரிசலில் பயணம் செய்யவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் தடை நீக்கப்பட்டுள்ளது. |
| மயிலாடுதுறை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் Posted: 03 Jul 2013 10:39 PM PDT மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முடிகண்டநல்லூரில் தனியார் புகையிலை ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவற்றை அதிகாரிகள் முற்றிலுமாக அழித்தனர். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். |
| கும்பகோணம் அருகே தீவிபத்தில் குழந்தை பலி Posted: 03 Jul 2013 10:33 PM PDT கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இரண்டரை வயது ஆண் குழந்தை பலியானது. இந்த தீவிபத்தில் வீடுகளும் எரிந்தன. மேலும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக சரவணப் பொய்கை வீதியில் வசிக்கும் துப்புரவு பணியாளரான மாதவன் என்பவரது குடிசை வீட்டில் இன்று காலை தீப்பிடித்தது. இதில் மாதவனின் மகன் யோகேஸ்வர் உயிரிழந்தார். தீ அங்கிருந்து மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த தீவிபத்து குறித்து சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| உத்தரகண்டில் சிக்கியுள்ள 300 பேரை மீட்கும் பணிகள் துரிதம் Posted: 03 Jul 2013 10:10 PM PDT மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் பகுதியில் சிக்கியுள்ள 300 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தர்மா மற்றும் வியாஸ் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும், என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால், அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இடையூறு ஏற்படலாம் என கூறப்படுகிறது. மழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதால், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 176 பேர் ராணுவத்தினர் மூலம் மீட்கப்பட்டனர்.இதுவரை 3 ஆயிரத்து 500 பேரின் நிலை என்ன வென்று தெரியாததால் அவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் சுகாதாரத்தை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த குழுவினர் உத்தரகாசி, ருத்ரபிரயாக், உத்தம்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும். |
| ஆசிய தடகளப் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் Posted: 03 Jul 2013 09:57 PM PDT ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை மைக்கா ஜானி நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். குண்டு எறிதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் சிங் கர்ஹானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 19 புள்ளி நான்கு ஐந்து மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடம் பிடித்தார் அவர். மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா பூனியா, நான்காவது இடம் பிடித்து, பதக்கத்தை நழுவவிட்டார். காணொளி:ஆசிய தடகளப் போட்டி:இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் |
| கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு Posted: 03 Jul 2013 09:48 PM PDT கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கபினிஅணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளான மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நள்ளிரவில் கபினிக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் மொத்தம் 20 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும் ஆனால் ஏற்கனவே 19 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அணையின் 4 மதகுகள் வழியாகவும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் இன்றிரவு பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரும். நாளை மதியம் மேட்டூர் அணைக்கு கபினி நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காணொளி:கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு |
| மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; ஏராளமானோர் படுகாயம் Posted: 03 Jul 2013 09:42 PM PDT மும்பையின் பிவாண்டி பகுதியில் இரண்டு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார்.15 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு நேரத்தில் இந்த விபத்து நேரிட்டது. 3 வார காலத்தில் மும்பையில் நடக்கும் 3 வது கட்டட விபத்து இதுவாகும்.. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கட்டட்த்தின் 3 ஆவது மாடி விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை: முன்னாள் சி.பி.ஐ., அதிகாரி புகார் Posted: 03 Jul 2013 08:47 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணை முழுமையான முறையில் நடத்தப்படவில்லை என மீண்டும் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற சிபிஐ காவல்துறை அதிகாரி வழக்கு தொடர்ந்துள்ளார். பார்க்க சாதாரண ஆள் போல இருந்தாலும், காவல்துறை ஆய்வாளராக இவர் கடந்த வந்த பாதைகள் கரடுமுரடானது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த மோகன் ராஜ், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த வழக்கில் தம்மை தொடர்புபடுத்திக்கொண்டுள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு சிபிஐ-யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற மோகன்ராஜ், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் இன்னும் பலரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், மத்திய அரசு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக சந்திராசாமி, விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்புகளை கவனித்தவர் என்று கருதப்பட்ட குமரன் பத்மநாபா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்கிறார் மோகன்ராஜ். கடந்த 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாபா, இலங்கை அரசின் பாதுகாப்புடன் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். குமரன் பத்மநாபானை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ராஜீவ் காந்தி வழக்கில் மட்டுமல்ல, இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச வல்லுனர்கள். |
| ஊருக்குள் புகுந்த 15 அடி அரிய வகை ராஜநாகம் Posted: 03 Jul 2013 07:42 PM PDT கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 15 அடி நீளம் கொண்ட அரிய வகை ராஜநாகம் ஒன்று ஊருக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். கல்லார் வனப்பகுதிக்குள் இருந்து வெளிவந்த ராஜநாகம் ஒன்று, நெல்லித்துறை கிராமத்துக்குள் வந்து தென்னந்தோப்பு ஒன்றில் தஞ்சம் புகுந்தது. இதனைக் கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பாம்புகளை பிடிக்கும் சாதிக் அலி என்பவரை வரவழைத்தனர். இதனைத்தொடர்ந்து சாதிக் அலி குழுவினர், 2 மணி நேரம் போராடி ராஜ நாகத்தை பிடித்தனர். பின்னர் ராஜநாகம் அடந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்புடன் விடப்பட்டது. ராஜ நாகங்கள், பொதுவாக மனிதர் வாழும் இடங்களில் நடமாடாது. பிற பாம்புகளை உணவாக உட்கொள்ளும் இவைகள் கடித்தால், உடனடி மரணம் நிச்சயம். கடும் விஷம் கொண்ட இந்த ராஜ நாகங்கள் 20 அடிக்கும் மேலும் வளரும் தன்மை கொண்டவை. காணொளி:ஊருக்குள் புகுந்த 15 அடி அரிய வகை ராஜநாகம் |
| பசில் ராஜபக்ச இன்று இந்தியா வருகை: இலங்கை அரசியலமைப்பு குறித்து ஆலோசனை Posted: 03 Jul 2013 07:30 PM PDT
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது ஏ பிரிவில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்கு மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதில் திருத்தம் செய்ய இலங்கை அரசு முயன்று வருகிறது. இதற்கு, அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வடக்கு மாகாணத்தில், தேர்தல் முடியும் வரையில், 13 – ஏ பிரிவில் புதிய திருத்தங்களை செய்ய வேண்டாம் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. எனினும், இந்த திருத்தத்தை உடனடியாக செய்து முடிப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்ச, இன்று இந்தியா வருகிறார். டெல்லி வரும் பசில் ராஜபக்ச வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். காணொளி:பசில் ராஜபக்ச இன்று இந்தியா வருகை: இலங்கை அரசியலமைப்பு குறித்து ஆலோசனை |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அதிபர் ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச, இன்று இந்தியா வருகிறார்.