Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பூமிக்கு அருகே பேருந்து அளவிலான விண்கல் பறந்து சென்றதாக நாசா அறிவிப்பு

Posted: 08 Jun 2013 08:03 PM PDT

பூமிக்கு மிக அருகில் 2013-எல்.ஆர்.6 என்று பெயரிடப்பட்ட பேருந்து அளவிலான ஒரு விண்கல் நேற்று பறந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 30 அடி அகலமுடைய இந்த விண்கல் பறந்த சென்றபோது எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை என்றும் நாசா கூறியுள்ளது. இதனையடுத்து நம் பூமியில் விண்கற்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கியூ.இ-2 என்று பெயரிடப்பட்ட 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு விண்பாறை சென்றது [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

குறைகளை தெரிவித்த இந்திய தொழிலாளர்களுக்கு சவூதியில் அடி உதை

Posted: 08 Jun 2013 08:01 PM PDT

வங்காள தேசத்தை சேர்ந்த ஆள் எடுக்கும் கம்பெனியின் மூலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 200 இந்தியர்கள் சவூதி அரேபியாவிற்கு சென்றனர். இவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் மோசமாக நடத்தப்படுவதாக   இந்திய தூதரகத்திடமும் சமூக ஆர்வலர்களிடமும் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து வெள்ளியன்று அவர்கள் வேலைபார்த்த இடத்திற்கு வந்த இரு வங்காளிகள், அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த இந்தியர்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும் வேலை குறித்து தகவல் தெரிவித்தால் உங்களை தொலைத்து விடுவோம் என்று மிரட்டி ஒருவரை இழுத்து சென்றதாகவும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

Posted: 08 Jun 2013 07:59 PM PDT

இலங்கையில் இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்தும் அவற்றுக்கு இந்திய உதவியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான சந்திப்பில் பேசப்பட்டதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  தெரிவித்தார். இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டவை குறித்து தமிழோசையிடம் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தாம் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!– இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு!

Posted: 08 Jun 2013 07:56 PM PDT

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடந்த புதன்கிழமை மூழ்கிய படகில் இருந்த அகதிகளில் 13 பேரின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் ஒன்று பெரும்பாலும் ஆண்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக சுமார் 55 பேர் வரை குறித்த படகின் மேல் தளத்தில் இருப்பதை அவதானித்துள்ளது. பின்னர், இன்னொரு படகில் இருந்து விடுக்கப்பட்ட உதவி அழைப்பு தகவலையடுத்து, தேடுதல் நடத்தியும் மூழ்கிய படகை கண்டுபிடிக்க முடியவில்லை. வெள்ளி [...]

கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!– இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு!

Posted: 08 Jun 2013 07:54 PM PDT

சர்ச்சைக்குரிய வியடமாக பேசப்பட்ட திருகோணமலையின் அமெரிக்க நிலையத்துக்கு கிழக்கு மாகாணசபை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் திருகோணமலை நகர சபையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கோ கிழக்கு மாகாணசபைக்கோ அறிவிக்கப்படாத நிலையில் திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் செய்துக்கொண்ட உடன்படிக்கை சட்டவிரோதமானது என்று தெரிவித்து இந்த உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தது. எனினும் அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சுடன் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

9 ஆண்டு காலத்தில் பிரதமர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.620 கோடி செலவு

Posted: 08 Jun 2013 10:58 AM PDT

பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 9 ஆண்டுகளாக பதவியில் இருந்த வரையில் இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.620 கோடி செலவிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் பதவியை ஏற்றபோது முதல் பயணமாக 2004 ஜூலையில் பாங்காங் நாட்டிற்கு சென்றார். கடைசி பயணமாக 2013 ஏப்ரலில் ஜெர்மனி சென்றுள்ளார். இந்த கால கட்டத்திற்கிடையிலான 67 வெளிநாட்டு பயணங்களில் 64 பயணங்களுக்கான பில்கள் பிரதமரின் அலுவலகத்திற்கு வந்துள்ளன. அவ்வகையில், இந்த பயணங்களுக்காக இதுவரை ரூ.620 கோடி [...]

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரீப் விரைவில் ஆப்கானிஸ்தான் பயணம்

Posted: 08 Jun 2013 10:52 AM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரைவில் ஆப்கானிஸ்தான் செல்ல உள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படைகள் அடுத்த திரும்ப பெற உள்ளதையொட்டி, அங்கு பதட்டத்தை தணித்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அதிபர் ஹமீத் கர்சாயுடன், நவாஸ் ஷெரீப் பேச உள்ளார். நவாஸ் ஷெரீப் இந்த மாதம் ஆப்கானிஸ்தான் பயணம் செய்ய உள்ளதாக அவரது கட்சியின் முக்கிய தலைவரான தாரிக் அசீம் உறுதி செய்துள்ளார். ஆனால் எந்த நாளில் புறப்படுவார் என்பதை தெரிவிக்கவில்லை. சமீபத்தில் [...]

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: அமெரிக்க நடிகை கைது

Posted: 08 Jun 2013 10:50 AM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரெசின் எனப்படும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. போலீசார் பலரிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார். தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவின் அமைதியான வளர்ச்சியை அமெரிக்கா வரவேற்கிறது: ஒபாமா

Posted: 08 Jun 2013 10:47 AM PDT

சீன அதிபர் சி ஜிங்பிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இவரை நேற்று கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றார். இந்த தலைவர்களின் முதல் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. உறவுகளை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. சந்திப்புக்கு முன்னதாக சீனா குறித்து ஒபாமா கூறியதாவது:- சீனா அமைதியான முறையில் உலகின் முக்கிய சக்தியாக வளர்ச்சியடைந்து வருவதை அமெரிக்கா வரவேற்கிறது. இதே வெற்றி பாதையை சீனா தொடர [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை: பெற்றோர் கொதிப்பு

Posted: 08 Jun 2013 10:40 AM PDT

சீனாவில் 90 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகத்தில் சேர 2 நாட்கள் நுழைவு தேர்வு நடந்தது. அதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக, சீனாவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவிகளே பெருமளவில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மெட்டல் கொக்கிகளால் தயாரிக்கப்பட்ட பிராக்களில் சிறிய வகை செல்போன்கள் போன்றவற்றையும், பிட்களையும் மறைத்து வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, தேர்வு முறைகேடை தடுக்க இந்த ஆண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™