puthiyathalaimurai.tv online |
- இலங்கை அதிகாரிகளுக்கு நீலகிரியில் பயிற்சி: முதல்வர் எதிர்ப்பு
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்:இறுதிப்போட்டியில் இந்திய வீரர்
- துருக்கியில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டம்
- மண்டேலா மருத்துவமனையில் அனுமதி : நுரையீரல் கோளாறுக்கு தீவிர சிகிச்சை
- நட்பும்… தமிழ் திரைப்படமும்…
- ஏலச்சீட்டில் ரூ.3 கோடி மோசடி : காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
- முதுமலை புலிகள் காப்பகத்தில் மீண்டும் யானை சவாரி தொடங்கியது
- ஓமலூர் அருகே காவல்துறையினர் மீது புகார்:பொதுமக்கள் சாலை மறியல்
- கடல் சீற்றத்தால் மீனவர் பலி : நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்
- புதுக்கோட்டையில் கார் எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
| இலங்கை அதிகாரிகளுக்கு நீலகிரியில் பயிற்சி: முதல்வர் எதிர்ப்பு Posted: 08 Jun 2013 10:52 PM PDT இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மே 27-ம் தேதி தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயற்சி அளிக்க மாட்டோம் என உறுதி அளித்த அதே நாளில் தான், இலங்கையைச் சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரியில் பயிற்சி தொடங்கியுள்ளதாகவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவருக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதித்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காணொளி:<இலங்கை அதிகாரிகளுக்கு நீலகிரியில் பயிற்சி: முதல்வர் எதிர்ப்பு> |
| தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்:இறுதிப்போட்டியில் இந்திய வீரர் Posted: 08 Jun 2013 10:50 PM PDT தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தரநிலையில் 61-வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், தரநிலையில் 143-வது இடத்தில் உள்ள தாய்லந்து வீரர் தம்மஸின் சித்திகோமை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். |
| துருக்கியில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டம் Posted: 08 Jun 2013 10:46 PM PDT துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல் நகரில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இஸ்தான்புல் நகரில் உள்ள தக்சிம் கெஸி பூங்காவை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடங்கிய சிறிய அளவிலான போராட்டம், தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது. மூன்றாது முறையாக பதவியில் இருக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், போராட்டத்தின்போது அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணொளி:<துருக்கியில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டம்> |
| மண்டேலா மருத்துவமனையில் அனுமதி : நுரையீரல் கோளாறுக்கு தீவிர சிகிச்சை Posted: 08 Jun 2013 10:38 PM PDT உடல் நலக் கோளாறு காரணமாக தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் கோளாறு காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மண்டேலாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 08 Jun 2013 10:26 PM PDT “வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருட்டில் நண்பனோடு சேர்ந்து நடப்பதே சிறந்தது”… இது ஹெலென் கெல்லரின் கூற்று. நட்பு என்ற உணர்வும், நண்பன் என்ற உறவும் இல்லாத உயிரினமே இல்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட, நட்பை தமிழ் சினிமா பல காலமாக போற்றி வந்திருக்கிறது. “தளபதி”… தலைமுறைகள் கடந்தும் நட்பிற்காக போற்றப்படும் படம். மகாபாரத காவியத்தில் கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் இருக்கும் நட்பை முன்மாதிரியாகக் கொண்டு உருகாக்கப்பட்டது. ரஜினி, மம்மூட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த இப்படத்தின் வசனங்கள், இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் கூட அதிகம் பேசப்படுகின்றன. அன்பை தவிர வேறேதும் அறிந்திராத ஓர் ஏழை . அவனுக்கொரு பணக்கார நண்பன்.இந்த நட்பை விரும்பாத பணக்கார நண்பனின் தந்தை செய்யும் சூழ்ச்சிகளால், அவன் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை. அதிலிருந்து மீண்டு, நண்பனை வென்று, நட்பையும் மீட்கும் கதை சொன்ன படம் அண்ணாமலை. தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் தலைவர்களின் நட்பு, துரோகம், பிரிவு, பரிவு. இதனால் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் என, நட்பையும், அரசியலையும் இணைத்து சொன்ன படம் இருவர். ஒரு எஜமானருக்கும், தொழிலாளிக்குமிடையே இருக்கும் நட்பு, விசுவாசம் போன்றவற்றை கிராமிய பின்னணியில் சொன்ன திரைப்படம் நட்புக்காக. கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் சரத்குமார், விஜயகுமார், சிம்ரன் உட்பட பலரும் நடித்திருந்தனர். நண்பனுக்கு இழைத்த துரோகத்திற்காக நட்பால் பிராயச்சித்தம் தேடும் நாயகன். நட்பிற்கிடையே குறுக்கிடும் காதல், அதனால் ஏற்படும் மோதல் என நட்பைச் சுற்றிய விஷயங்களை சொன்னது ப்ரெண்ட்ஸ். நட்பு என்று யோசித்தாலே நம் நினைவுக்கு வருவது கல்லூரி வாழ்க்கைதான். நட்பு பூக்கும் பூந்தோட்டமாக இருக்கும் கல்லூரி வாழ்க்கையை பதிவு செய்த தமிழ்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. மோதலால் இணையும் நட்பு, காதலால் பிரிந்து, மீண்டும் இணைவது தான் காதல் தேசத்தின் ஒரு வரிக் கதை. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த “முஸ்தஃபா” பாடல், இன்றும் மாணவர்களின் மத்தியில் முக்கிய இடம்பெற்றுள்ளது. பணக்காரன், ஏழை, கருப்பு, வெள்ளை, சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி, எதிர்பார்ப்புமின்றி இருக்கும் சமத்துவமான உறவு நட்பு தான் என்பதை பதிவு செய்தது ஏப்ரல் மாதத்தில் திரைப்படம். தெலுங்கில் வெளியான HAPPY DAYS என்ற படத்தை தழுவி, தமிழில் எடுக்கப்பட்டது “இனிது இனிது”. கல்லூரி காலத்தின் இனிமையான நினைவுகளையும், நண்பர்களோடு செலவழித்த இனிமையான தருணங்களையும் ஒரு சேர பதிவு செய்தது இனிது இனிது. நல்ல நண்பன் வாழ்வின் சிறந்த வழிகாட்டி.. நல்ல நண்பன் நமக்கு கிடைத்த ஏணிப்படி…இந்தக் கருத்தோடு இன்றைய கல்வித்துறையில் அவசியப்படும் மாற்றங்களையும் இணைத்து சொன்னது சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யன், சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. நட்பு… ஆணுக்கும் ஆணுக்குமான, பெண்ணுக்கும் பெணுக்குமான, திருநங்கைக்கும் திருநங்கைக்குமான உறவு மட்டும் கிடையாது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை நட்பாகவே மட்டும் கருதும் சுபாவம் நம் சமூகத்தில் குறைவாகவே இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு குறித்தும் சில தமிழ் படங்கள் பேசியிருக்கின்றன. நல்ல தோழி, நல்ல காதலியாகவும், நல்ல மனைவியாகவும் ஆக முடியும் என்ற கருத்தை பதிவு செய்தது “பிரியாத வரம் வேண்டும்”. பிரசாந்த், ஷாலினி, மணிவண்ணன் உட்பட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஒரு பெண், ஒரு ஆணுக்கு எந்த நிலையிலும் நல்ல தோழியாக இருக்க முடியும், அதே சமயத்தில் அது குறித்த சரியான புரிதல் சமூகத்திற்கு அவசியமாகிறது. இந்தக் கருத்தை தன் “ப்ரியமான தோழி” படத்தின் மூலம் பதிவு செய்தார் இயக்குநர் விக்கிரமன். தோள் கொடுக்கும் தோழன், தன் துணைவனாகவும் ஆகலாம். ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பு, காதலாக மாறுவதை ஒரு பெண்ணின் பார்வையிலும் காட்டியது பாண்டவர் பூமி. வாழ்க்கைக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் சில இளைஞர்கள். இவர்களுக்கு உறுதுணையாக, வழிகாட்டியாக வரும் ஒரு தோழி. ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை அதன் யதார்தத்தோடு சொன்னது ஆட்டோகிராஃப். இன்றைய இளைஞர்களுக்கு நட்பு தொடர்பான படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருபவர் சசிக்குமார். தான் நடிக்கும், இயக்கும், தயாரிக்கும் படங்களில் நட்பையே இவர் முக்கிய கருவாகக் கொண்டிருக்கிறார். சசிக்குமார் தயாரித்து, இயக்கி, நடித்த முதல் படமான சுப்ரமணியபுரம், 1980-களில் வாழும் இரு நண்பர்கள் குறித்த கதையை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த நாடோடிகள் நண்பனின் காதலுக்காக பல போராட்டங்களை சந்திக்கும் நண்பர் கூட்டம் பற்றி சொன்னது. வாழ்க்கைப் போராட்டத்தில் நட்பின் துணையோடு வெல்லும் கதையைச் சொன்னது போராளி திரைப்படம். ஒரு பெண்ணின் காதல் நண்பர்களிடையே பிளவை உண்டாக்குகிறது. நண்பர்களிடையே சரியான புரிதல் இல்லாததால், அது குரோதத்தை வளர்க்கிறது. இந்த களத்தில் எடுக்கப்பட்ட படம் “சுந்தர பாண்டியன்”. துரோகம் செய்யும் நண்பனைக் கூட காட்டிக் கொடுக்காதது தான் உண்மையான நட்பு என்ற கருத்தை வலியுறுத்தியது “சுந்தர பாண்டியன்”. நண்பர்களும், நட்பும் இல்லாத வாழ்க்கை நிச்சயம் பாலைவனமாகத் தானிருக்கும். “ஓர் உயிர் ஈறுடலில் இருப்பது தான் நட்பு” என்றார் அரிஸ்டாட்டல். நல்ல நட்பு நம் வாழ்வை செம்மைப்படுத்தும், மகிழ்ச்சிபடுத்தும், பக்குவப்படுத்தும். இப்படி, உயர்வான உறவாக இருக்கும் நட்பு குறித்த படங்கள் என்றுமே ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. |
| ஏலச்சீட்டில் ரூ.3 கோடி மோசடி : காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் Posted: 08 Jun 2013 09:59 PM PDT காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் அவர் மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஆனந்தா பேட்டையைச்சேர்ந்தவர் சுந்தரம் என்பவர் கட்டட காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்ததோடு அவரது மகன் குமாரோடு இணைந்து ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சுந்தரமும் மற்றும் அவரது மகன் குமாரும் ஏலச்சீட்டு முடிந்த பின்னரும் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும், இது குறித்து கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதையறிந்த சுந்தரம் தனது குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. காணொளி:<ஏலச்சீட்டில் ரூ.3 கோடி மோசடி> |
| முதுமலை புலிகள் காப்பகத்தில் மீண்டும் யானை சவாரி தொடங்கியது Posted: 08 Jun 2013 09:52 PM PDT நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2-ம் தேதி முதல் நடந்து வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் யானை மற்றும் வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி முடிவடைந்து நேற்று முதல் மீண்டும் யானை சவாரி தொடங்கியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள காரணத்தினால் இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் சற்று குறைந்துள்ளது. காணொளி:<முதுமலை புலிகள் காப்பகத்தில் மீண்டும் யானை சவாரி தொடங்கியது> |
| ஓமலூர் அருகே காவல்துறையினர் மீது புகார்:பொதுமக்கள் சாலை மறியல் Posted: 08 Jun 2013 08:50 PM PDT சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெங்கடேசன் என்ற அந்த ஊழியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும், பின்னர் வெங்கடேசன் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் சேலம்-பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். |
| கடல் சீற்றத்தால் மீனவர் பலி : நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள் Posted: 08 Jun 2013 08:49 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த மீனவரின் உடலை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் இனையம் புத்தன் துறைமுகப்பகுதியிலிருந்து மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் போது கடல் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்துள்ளது. இதில், மூன்று மீனவர்களும் அலையில் சிக்கினர். ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இரண்டு மீனவர்கள் கரை திரும்பினர். இனையம் புத்தன் துறை மீனவர்கள் ஏழு பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் தவித்து வருவதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காணொளி:<கடல் சீற்றத்தால் மீனவர் பலி : நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்> |
| புதுக்கோட்டையில் கார் எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி Posted: 08 Jun 2013 08:39 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சாலையில் சென்ற கார் திடீரென எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கர்பட்டியை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி குசேலகுமாரி இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊருக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அன்னவாசல் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வயல்வெளிக்குள் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், கார் தீப்பற்றிக்கொண்டதில் அதில் இருந்த ரவி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காணொளி:<புதுக்கோட்டையில் கார் எரிந்து விபத்து> |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
தெலுங்கில் வெளியான HAPPY DAYS என்ற படத்தை தழுவி, தமிழில் எடுக்கப்பட்டது “இனிது இனிது”. கல்லூரி காலத்தின் இனிமையான நினைவுகளையும், நண்பர்களோடு செலவழித்த இனிமையான தருணங்களையும் ஒரு சேர பதிவு செய்தது இனிது இனிது. நல்ல நண்பன் வாழ்வின் சிறந்த வழிகாட்டி.. நல்ல நண்பன் நமக்கு கிடைத்த ஏணிப்படி…இந்தக் கருத்தோடு இன்றைய கல்வித்துறையில் அவசியப்படும் மாற்றங்களையும் இணைத்து சொன்னது சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யன், சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. நட்பு… ஆணுக்கும் ஆணுக்குமான, பெண்ணுக்கும் பெணுக்குமான, திருநங்கைக்கும் திருநங்கைக்குமான உறவு மட்டும் கிடையாது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை நட்பாகவே மட்டும் கருதும் சுபாவம் நம் சமூகத்தில் குறைவாகவே இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு குறித்தும் சில தமிழ் படங்கள் பேசியிருக்கின்றன. நல்ல தோழி, நல்ல காதலியாகவும், நல்ல மனைவியாகவும் ஆக முடியும் என்ற கருத்தை பதிவு செய்தது “பிரியாத வரம் வேண்டும்”. பிரசாந்த், ஷாலினி, மணிவண்ணன் உட்பட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஒரு பெண், ஒரு ஆணுக்கு எந்த நிலையிலும் நல்ல தோழியாக இருக்க முடியும், அதே சமயத்தில் அது குறித்த சரியான புரிதல் சமூகத்திற்கு அவசியமாகிறது. இந்தக் கருத்தை தன் “ப்ரியமான தோழி” படத்தின் மூலம் பதிவு செய்தார் இயக்குநர் விக்கிரமன். தோள் கொடுக்கும் தோழன், தன் துணைவனாகவும் ஆகலாம். ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பு, காதலாக மாறுவதை ஒரு பெண்ணின் பார்வையிலும் காட்டியது பாண்டவர் பூமி. வாழ்க்கைக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் சில இளைஞர்கள். இவர்களுக்கு உறுதுணையாக, வழிகாட்டியாக வரும் ஒரு தோழி. ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை அதன் யதார்தத்தோடு சொன்னது ஆட்டோகிராஃப். இன்றைய இளைஞர்களுக்கு நட்பு தொடர்பான படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருபவர் சசிக்குமார். தான் நடிக்கும், இயக்கும், தயாரிக்கும் படங்களில் நட்பையே இவர் முக்கிய கருவாகக் கொண்டிருக்கிறார். சசிக்குமார் தயாரித்து, இயக்கி, நடித்த முதல் படமான சுப்ரமணியபுரம், 1980-களில் வாழும் இரு நண்பர்கள் குறித்த கதையை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த நாடோடிகள் நண்பனின் காதலுக்காக பல போராட்டங்களை சந்திக்கும் நண்பர் கூட்டம் பற்றி சொன்னது. வாழ்க்கைப் போராட்டத்தில் நட்பின் துணையோடு வெல்லும் கதையைச் சொன்னது போராளி திரைப்படம். ஒரு பெண்ணின் காதல் நண்பர்களிடையே பிளவை உண்டாக்குகிறது. நண்பர்களிடையே சரியான புரிதல் இல்லாததால், அது குரோதத்தை வளர்க்கிறது. இந்த களத்தில் எடுக்கப்பட்ட படம் “சுந்தர பாண்டியன்”. துரோகம் செய்யும் நண்பனைக் கூட காட்டிக் கொடுக்காதது தான் உண்மையான நட்பு என்ற கருத்தை வலியுறுத்தியது “சுந்தர பாண்டியன்”. நண்பர்களும், நட்பும் இல்லாத வாழ்க்கை நிச்சயம் பாலைவனமாகத் தானிருக்கும். “ஓர் உயிர் ஈறுடலில் இருப்பது தான் நட்பு” என்றார் அரிஸ்டாட்டல். நல்ல நட்பு நம் வாழ்வை செம்மைப்படுத்தும், மகிழ்ச்சிபடுத்தும், பக்குவப்படுத்தும். இப்படி, உயர்வான உறவாக இருக்கும் நட்பு குறித்த படங்கள் என்றுமே ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.