Tamil Star |
- வடக்கில் தேர்தல் குறித்து அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை. -ஜனாதிபதி
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க அரசியல் கைதிகளிடம் பேரம் பேசும் அரசு
- அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை. – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- மழையில் ஆடிய பெண்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்
- ஹெலிகாப்டரை ஆற்றில் இறக்கி 4 பேரின் உயிர் காத்த விமானி
- கால் பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு ; 12 பேர் பலி, 25 பேர் படுகாயம்
- ஆஸி. செல்ல முயன்ற இலங்கை இளைஞர்களுக்கு சிறை
- இன்று இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை
- சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொன்டார் சல்மான் பட்
- ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்
| வடக்கில் தேர்தல் குறித்து அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை. -ஜனாதிபதி Posted: 30 Jun 2013 10:35 PM PDT வடக்கில் தேர்தல் நடத்துவது குறித்து தாம் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செசெல்ஸ் தீவுக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அந்த நாட்டின் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "30 ஆண்டுகளாக நீடித்த போர் இப்போது முடிந்து விட்டது. சிறிலங்கா இப்போது அமைதியையும், உறுதிநிலையையும் அனுபவிக்கிறது. வடக்கு மாகாணசபைக்குத் திட்டமிட்டபடி இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும். அனைத்துலக சமூகத்துக்கு அல்ல, எனது நாட்டு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதறடிக்க அரசியல் கைதிகளிடம் பேரம் பேசும் அரசு Posted: 30 Jun 2013 10:03 PM PDT சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் வடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்" என ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது. கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னர் பொதுப் பணிகளில் ஈடுபட்டவர்களிடமே இந்த ஆதரவை தேடி வருகின்றது. குறிப்பாக கைதிகளாகவுள்ள ஆசிரியர்கள், கிராமசேவர்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் ஆகியோரிடமே அரசு பேரம்பேசத் தொடங்கியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை. – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted: 30 Jun 2013 09:49 PM PDT 13ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் பினர் எடுத்துள்ள முடிவை மனதார வரவேற்கின்றேன். இதுவே எனது விருப்பமாகவும் இருந்தது."இவ்வாறு நேற்று தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். "தெரிவுக்குழுவுக்கு வாருங்கள்; நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்; ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம்" என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்க் கூட்டமைப்பினர் தக்க பதிலை வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் [...] |
| மழையில் ஆடிய பெண்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் Posted: 30 Jun 2013 06:49 PM PDT மழையை கண்ட ஆனந்தத்தில் துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் – சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹெலிகாப்டரை ஆற்றில் இறக்கி 4 பேரின் உயிர் காத்த விமானி Posted: 30 Jun 2013 06:30 PM PDT
புறப்பட்ட 12வது நிமிடத்தில் தேவையான உந்து சக்தி கிடைக்காததால் விமானியால் தொடர்ந்து ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை. அப்போது, ஹட்சன் ஆற்றின் அருகேயுள்ள 79வது தெருவுக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்துக்கொண்டிருந்தது. மிகவும் சிக்கலான சூழ்நிலையில் சமயோஜிதமாக முடிவெடுத்த விமானி, ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினார். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் 4 பயணிகளையும், விமானியையும் ஆற்றில் இருந்து வெளியேற்றினர். ஹெலிகாப்டரை ஆற்றில் இறக்கி இருக்காவிட்டால் கட்டிடங்கள் மீது மோதி பெரிய விபத்தும், உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கால் பந்தாட்ட மைதானத்தில் குண்டு வெடிப்பு ; 12 பேர் பலி, 25 பேர் படுகாயம் Posted: 30 Jun 2013 06:20 PM PDT ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். சமீப காலமாக ஈராக்கில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தெற்கு பாக்தாத்தில் உள்ள நஹ்ரவான் நகரில் நேற்று [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆஸி. செல்ல முயன்ற இலங்கை இளைஞர்களுக்கு சிறை Posted: 30 Jun 2013 03:11 AM PDT தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகளுக்கென சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கை அகதிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும் என விதிகள் உள்ளன. இந்நிலையில் திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் இளைஞர்கள் 12 பேர் கள்ளத்தோணி மூலம் கடலூர் வழியாக அவுஸ்திரேலியா செல்வதாக திருச்சி க்யூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய [...] |
| இன்று இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை Posted: 30 Jun 2013 12:39 AM PDT முத்தரப்பு தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் பலம் பொருந்திய இந்திய அணி இன்று மோதுகிறது. மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் கிண்ண சுற்றுத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கிண்ணத்தை தனதாக்கியது. அத்துடன் இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் வென்றுள்ளது. கடந்த 2011ல் மேற்கிந்திய தீவுகளில் விளையாடிய 4 போட்டிகளில் 69 ரன்கள் [...] |
| சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொன்டார் சல்மான் பட் Posted: 30 Jun 2013 12:37 AM PDT சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அத்தோடு தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் சல்மான் பட் தெரிவித்துள்ளார். சல்மான் பட் இற்கு சர்வதேசக் கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்ட 10 வருடப் போட்டித் தடையில் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட தடை என்பதால் அவரால் 5 வருடங்களின் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற முடியுமென்பதால், தான் இதுவரை 3 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதால், உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல் Posted: 30 Jun 2013 12:35 AM PDT கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அணுகுண்டு சோதனை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
