மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஸ்ரீசைலம் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது: 18 பேர் படுகாயம்
- திருப்பதி கோவிலுக்கு புதிய தங்க ரதம்
- ஆந்திராவில் திக்விஜய்சிங் காரை முற்றுகையிட்ட மாணவர்கள்: போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர்
- கேதர்நாத்துக்கு செல்ல உத்தரகாண்ட் அரசு தடை: பத்ரிநாத்தில் 900 பேர் தவிப்பு
- பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மூன்றாவது அணி அமையும்: முலாயம் சிங் யாதவ் நம்பிக்கை
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் பேரின் கதி என்ன?
- அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை கைது
- உத்தரகாண்டில் உயிரிழந்தோரின் சடலங்கள் வேதமுறைப்படி எரியூட்டப்படவேண்டும்: ராம்தேவ்
- பத்ரிநாத்தில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்வதில் புதிய சிரமம்
- 'ஏர் ஆசியா' இந்த வருட இறுதியில் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குகிறது
- சுற்றுலா பயணிகளை கவர்வதில் உலக அளவில் தாஜ்மகாலுக்கு 3 வது இடம்
- சேதமடைந்த கேதர்நாத் கோவிலை அரசும், கோவில் நிர்வாகமும் புதுப்பிக்கும்: பகுகுணா
- இமாச்சல்: மந்தி எம்.பி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
- உத்தரகாண்ட்: வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் பேரழிவு- திடுக் தகவல்
- உத்தரகாண்ட் பேரழிவு: ஆந்திர அரசு ரூ. 50 கோடி நிதி
- பெற்றோரின் கவனக்குறைவு: பூட்டிய காரில் 2 வயது குழந்தை மூச்சு திணறி பலி
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உத்தரகாண்டில் விடுதிகட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு
- காஷ்மீரில் தீவிரவாதிகள் என்று தவறாக நினைத்து 2 இளைஞர்களை சுட்டு கொன்ற ராணுவம்
- பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள்- சிறப்புப் பார்வை
- கற்பழிப்பு புகார்: கேரள எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய தேவை இல்லை- அச்சுதானந்தன்
| ஸ்ரீசைலம் அருகே பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது: 18 பேர் படுகாயம் Posted: 30 Jun 2013 11:22 PM PDT ஸ்ரீசைலம் கோவிலுக்கு மங்களகிரியில் இருந்து அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. சிகரேஸ்வரம் என்ற இடத்தில் சென்ற போது ஒரு திருப்பத்தில் பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர். மண்டை உடைந்தும், கை, கால் முறிவு ஏற்பட்டும் அலறினார்கள். |
| திருப்பதி கோவிலுக்கு புதிய தங்க ரதம் Posted: 30 Jun 2013 11:18 PM PDT திருப்பதி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. மேலும் கோவிலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகிறது. திருப்பதி மலைப் பகுதிகளை சீரமைப்பது, கோவிலில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது உள்பட பல பணிகளை செய்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் புதிய தங்க ரதம் தயாரிக்க முடிவு செய்தது. இதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கீழ்திருப்பதியில் ரதத்துக்கு கட்டைகள் பொருத்தும் பணி தொடங்கியது. இப்பணி வருகிற |
| ஆந்திராவில் திக்விஜய்சிங் காரை முற்றுகையிட்ட மாணவர்கள்: போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர் Posted: 30 Jun 2013 10:51 PM PDT ஆந்திராவில் தனி தெலுக்கானா கோரி போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் ஆந்திராவை பிரிக்க கூடாது. ஒன்றுபட்ட ஐக்கிய ஆந்திராவாக இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலிறுயுத்தி வருகிறார்கள். இரு தரப்பை சேர்ந்த காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திக்விஜய்சிங் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல் முறையாக விசாகபட்டினம் வந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய ஆந்திராவை ஆதரிக்கும் 4 மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ஆந்திராவை பிரிக்ககூடாது ஐக்கிய அந்திராவாகதான் இருக்க |
| கேதர்நாத்துக்கு செல்ல உத்தரகாண்ட் அரசு தடை: பத்ரிநாத்தில் 900 பேர் தவிப்பு Posted: 30 Jun 2013 10:36 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 1 1/2 லட்சம் பேர் வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஆவார்கள். கடந்த 15 நாட்களாக 50 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். நேற்று வரை ஒரு லட்சத்து 7670 |
| பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மூன்றாவது அணி அமையும்: முலாயம் சிங் யாதவ் நம்பிக்கை Posted: 30 Jun 2013 02:44 PM PDT பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மூன்றாவது கூட்டணியை பற்றி முடிவு செய்ய முடியும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முலாயம் சிங் யாதவ் கூறியதாவது |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் பேரின் கதி என்ன? Posted: 30 Jun 2013 01:30 PM PDT 2 வாரங்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த பேய் மழை - வெள்ளத்தினால், உத்தரகாண்ட் மாநிலம் உருக்குலைந்தது. அந்த மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற லட்சக்கணக்கான பக்தர்களும் மழை வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர் |
| அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை கைது Posted: 30 Jun 2013 11:50 AM PDT அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பஞ்சாயத்து தலைவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். சமீப காலமாக பஞ்சாயத்து தலைவர்கள் |
| உத்தரகாண்டில் உயிரிழந்தோரின் சடலங்கள் வேதமுறைப்படி எரியூட்டப்படவேண்டும்: ராம்தேவ் Posted: 30 Jun 2013 09:45 AM PDT உத்தரகாண்டில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை சேகரித்துவரும் அரசு நிர்வாகத்திற்கு யோகா குரு பாபா ராம் தேவ் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். |
| பத்ரிநாத்தில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்வதில் புதிய சிரமம் Posted: 30 Jun 2013 04:04 AM PDT உத்தரகாண்டில் இந்துக்களின் புனிதத் தலமான பத்ரிநாத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு அங்கு கிராம மக்கள் மற்றும் யாத்ரீகர்கள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கித்தவிப்போரை பாதுகாப்பு படை வீரர்கள் காப்பாற்றி ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றி வருகின்றனர். |
| 'ஏர் ஆசியா' இந்த வருட இறுதியில் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குகிறது Posted: 30 Jun 2013 03:51 AM PDT மலேசியாவின் குறைந்த சேவைக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, இந்தியாவின் டாட்டா குழுமம் மற்றும் அருண் பாட்டியாவின் டெலஸ்டிரா டிரேட்பிளேஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையைத் துவக்குகின்றது. இதற்கான அரசாங்க நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், இந்நிறுவனம் தனது முதல் சேவையை இந்த வருட இறுதியில் தொடங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. |
| சுற்றுலா பயணிகளை கவர்வதில் உலக அளவில் தாஜ்மகாலுக்கு 3 வது இடம் Posted: 30 Jun 2013 03:38 AM PDT இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகால் உலகில் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த தலங்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. |
| சேதமடைந்த கேதர்நாத் கோவிலை அரசும், கோவில் நிர்வாகமும் புதுப்பிக்கும்: பகுகுணா Posted: 30 Jun 2013 02:53 AM PDT உத்தரகாண்டில் சமீபத்தில் பெய்த இடியுடன் கூடிய பேய் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்துக்களின் புகழ்பெற்ற புனிதத் தலமான கேதர்நாத் கோவில் சேதமடைந்தது. மேலும் கேதர்நாத் நகரின் பெரும்பாலான பகுதிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. |
| இமாச்சல்: மந்தி எம்.பி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி Posted: 30 Jun 2013 01:32 AM PDT இமாச்சல பிரதேசத்தின் மந்நி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா சிங் வெற்றி பெற்றுள்ளார்.இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, முதல் மந்திரி வீர்பத்ரா சிங் இந்த தொகுதயின் |
| உத்தரகாண்ட்: வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் பேரழிவு- திடுக் தகவல் Posted: 30 Jun 2013 01:11 AM PDT வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் உத்தரகாண்ட்டில் பேரழிவு ஏற்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வழக்கமாக ஜூலை மாதத்தில்தான் அதிக அளவு மழை இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதமே தொடங்கியது. என்றாலும் மழை லேசாக பெய்ததால் பக்தர்கள் புனித யாத்திரை சென்றார்கள். ஆனால் ஜூன் 14, 15, 16 ஆகிய தேதிகளில் 3 நாட்களாக இடை விடாது வானம் பிளந்ததுபோல் மழை கொட்டியது. இதனால் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதுபற்றி வானிலை இலாகா போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது. ஆனால் வானிலை இலாகா உரிய எச்சரிக்கை |
| உத்தரகாண்ட் பேரழிவு: ஆந்திர அரசு ரூ. 50 கோடி நிதி Posted: 30 Jun 2013 12:49 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பெரும் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள புண்ணிய தலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த 17-ம் தேதி தொடங்கிய மீட்புப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து மறுசீரமைப்புப் பணிகளை அரசு தொடங்க உள்ளது. |
| பெற்றோரின் கவனக்குறைவு: பூட்டிய காரில் 2 வயது குழந்தை மூச்சு திணறி பலி Posted: 30 Jun 2013 12:30 AM PDT ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கார் என்ற இடத்தை சேர்ந்தவர் இஸ்தாக்கான். இவரது மனைவி உன்னாஸ். இவர்களுக்கு பர்வானா (3), மஹிமா (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். சம்பவத்தன்று இவர்களுடன், உறவினரின் குழந்தை பார்கானும் சேர்ந்து காருக்குள் ஏறி விளையாட்டிக் கொண்டிருந்தனர். கார் கதவுகளின் கண்ணாடிகளை உயர்த்தி விட்டு உள்ளே விளையாட்டினர். அதை இஸ்தாக் கானும், உன்னாசும் கவனிக்கவில்லை. ஷாப்பிங்குக்காக அவசரமாக வெளியே சென்றனர். |
| திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உத்தரகாண்டில் விடுதிகட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு Posted: 30 Jun 2013 12:19 AM PDT உத்தரகாண்டில் விடுதி கட்ட திருப்பதி தேவஸ்தானம் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 30 அறைகள் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருக்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு 5 மணி நேரம் ஆகிறது. நேற்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 60 ஆயிரம் பேர் |
| காஷ்மீரில் தீவிரவாதிகள் என்று தவறாக நினைத்து 2 இளைஞர்களை சுட்டு கொன்ற ராணுவம் Posted: 30 Jun 2013 12:13 AM PDT காஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டம் சம்பல் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுதுறை இந்திய ராணுவத்தை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த பகுதியில் தீவிரவாதிகள் என்று நினைத்து 2 இளைஞர்களை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட ஒரு வாலிபரின் பெயர் இர்பான் அகமது, மற்றொருவர் பெயர் இர்ஹாத் அகமதுதர். இருவரும் சம்பல் பகுதியில் உள்ள மார்க்குண்டால் கிராமத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து காஷ்மீர் மாநில உயர்கல்வித்துறை மந்திரியும் |
| பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள்- சிறப்புப் பார்வை Posted: 30 Jun 2013 12:05 AM PDT பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007-ம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதிமூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53 சதவீதம் குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9 சதவீதம் குழந்தைகள் மோசமான பாலியல் |
| கற்பழிப்பு புகார்: கேரள எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய தேவை இல்லை- அச்சுதானந்தன் Posted: 29 Jun 2013 11:48 PM PDT கேரளாவைச் சேர்ந்தவர் ஜோஸ் தெற்றியல். ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் ஜோஸ் தெற்றியல் மீதும், அவரது மகன் மீதும் ஒரு இளம்பெண் கற்பழிப்பு புகார் கூறினார். ஜோஸ் தெற்றியல் தனது மகனுக்கு தன்னை திருமணம் செய்து வைப்பதாக கூறியதால், அவர் மகனிடம் நெருங்கி பழகியதாகவும், அவர் தனக்கு திருமண |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |