Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோ

Posted: 29 Jun 2013 11:18 PM PDT

தொழில்நுட்பம் வளர்ச்சியின் விளைவாக உலகில் மிகவும் வித்தியாசமான வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோவை National university of Singapore மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இதனை வைத்து மிக எளிதாக மற்ற நாடுகளை உளவு பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இந்தியா திரும்புவர் ?

Posted: 29 Jun 2013 10:11 PM PDT

இலங்கை கடற்படை வசமுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 26ஆம் திகதி கடலுக்கு சென்ற மீன்பிடி படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. அதிலிருந்த மீனவர்கள் பர்லோகராஜன், வில்சன், ஜாக்சன், பர்லோகராஜ் ஆகியோர் காற்றில் திசைமாறி, இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர். அவர்களை, ஜூன் 27 மாலை, இலங்கை கடற்படையினர் பிடித்து, தலைமன்னார் கொண்டு சென்றனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தை மத்திய, மாநில அரசுகள் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

P.S.L.V, C.22 விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது

Posted: 29 Jun 2013 09:53 PM PDT

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நாளை இரவு 11.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி,சி.22 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 64 மணி  30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று 29ம் தேதி காலை 7.11 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி , சி.22 ராக்கெட்டில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், 1ஏ என்ற செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் எடை 1425 கிலோ. இதில் அதிநவீன கேமராக்கள், கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, நீர், நிலம், ஆகாய மார்க்கங்களில் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி சீசெல்ஸ் பயணம்

Posted: 29 Jun 2013 09:47 PM PDT

தன்சானியாவுக்கான விஜயத்திலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து சீசெல்ஸிற்கான இரண்டு நாட்கள் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி நேற்று (29) மாலை சீசெல்ஸ் நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று தன்சானியாவில் இடம்பெற்ற விசேட மாநாடு ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் தன்சானியா விஜயத்தின் போது அரசியல், பொருளாதார, அபிவிருத்தி ஆகிய துறைகள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

உலகிலேயே நன்மதிப்புள்ள நாடாக கனடா தெரிவு

Posted: 29 Jun 2013 09:20 PM PDT

canada

canadaகனடா நாடானது உலகிலேயே மிகச்சிறந்த நன்மதிப்புள்ள நடாக தற்போது நடைபெற்ற புதிய வாக்களிப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மதிப்பு, நாட்டைப்பற்றிய நன்மதிப்பு, நாட்டைப் பற்றிய பிரமிப்பு, நாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு நாட்டை நன்மதிப்புள்ள நாடாக தெரிவு செய்வார்கள்.

இதன் அடிப்படையில் G8 நாடுகளைச் சார்ந்த 27,000 மக்கள் 50 நாடுகளைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களை வாக்கெடுப்பில் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அம்மக்களிடம் 16 கேள்விகள் கேட்கப்படும் அவற்றில் முக்கியமானதாக 1.ஆற்றல் வாய்ந்த அரசாங்கம் 2.கவர்ச்சியான சுற்றுச்சூழல் 3.பொருளாதார முன்னேற்றம் ஆகியவையே முக்கியமானதாக கருதப்படும்.

இவற்றின் முடிவுகளிலிருந்து கனடா 100ற்கு 76.6 மதிப்பீடும், சுவீடன் 100ற்கு 76.5 மதிப்பிடும், சுவிட்சர்லாந்து 76.3 மதிப்பீடும், அவுஸ்திரேலியா 76.1 மதிப்பீடும், நோர்வே 74.1 மதிப்பீடும் பெற்றுள்ளன.

இம்மதிப்பீட்டின் படி கனடா முதலாவது இடத்தை பிடித்திருக்கின்றது. கடைசியிலிருந்து ரஷ்யா 36.7, நைஜீரியா 34.0, பாகிஸ்தான் 28.8, ஈரான் 22.6, ஈராக் 21.2, யுனைடெட் ஸ்டேட்ஸ் 22. மதிப்பீட்டை பெற்றிருக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாணத்தால் விமானத்தை இயக்க ஆய்வு

Posted: 29 Jun 2013 09:03 PM PDT

பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளால், விமானத்தை இயக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், “நவீன விமான தயாரிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம்’ குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு, தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதில், சிறந்த ஐந்து திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதைப் பற்றிய ஆராய்ச்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் முதலிடம் பிடித்த திட்டம், பசுவின் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிக்கு ஒருவர் தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை பலி : பிக்கு கைது!

Posted: 29 Jun 2013 08:38 PM PDT

காலி, லபுதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் லபுதுவ பிரதேச விகாரைக்கு வருகை தந்த நபரை இவ் விகாரையின் பிக்கு ஒருவர் தாக்கியுள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், நேற்றிரவு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 44 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும், காலி பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தின் முன் [...]

மயக்கத்தில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்: ஆந்திர டாக்டர் கைது

Posted: 29 Jun 2013 08:31 PM PDT

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி(24) என்ற பெண் தனது தம்பியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று அரக்கு பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு வந்தார். நடுவழியில் தலை சுற்றல் ஏற்பட்டு லட்சுமி மயங்கி விழுந்தார். பதறிப்போன தம்பி அப்பகுதியில் உள்ள யோகானந்தா கிளினிக்கிற்கு லட்சுமியை அழைத்துச் சென்றார். அங்கிருந்த டாக்டர் சங்கர ராவ்(45) என்பவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக அவரது பிடியில் இருந்து தப்பியோடி வந்த லட்சுமி தனது தம்பியிடம் கூறி அழுதார். [...]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட அறிக்கை விரைவில் வெளிவரும்!

Posted: 29 Jun 2013 08:13 PM PDT

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வெளியிடவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் [...]

பாகிஸ்தான் அதிபருடன் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சந்திப்பு

Posted: 29 Jun 2013 07:59 PM PDT

உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வரும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இது தொடர்பாக உலக தலைவர்களிடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துவரும் நிலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி டேவிட் கேமரூன் நேற்று ஆப்கானிஸ்தானிற்கு திடீர் பயணமாக சென்றார். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்-யை சந்தித்து பேசிய டேவிட் கேமரூன் அங்கிருந்து நேராக பாகிஸ்தான் வந்து சேர்ந்தார். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™