மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திர தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்தது: முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உயிர் தப்பினார்
- பா.ஜனதாவில் சேர மேலிடத்துக்கு எடியூரப்பா ரகசிய தூது
- திருப்பதியில் அலை மோதிய கூட்டம்: தரிசனத்துக்கு 20 மணி நேரம்
- ஸ்னோடெனின் அடைக்கல கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஈக்குவடார் அதிபருக்கு அமெரிக்கா கோரிக்கை
- கூகுளின் அறிவியல் கண்காட்சியில் பங்குபெறும் இந்தியப் பெண்
- சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கு: பி.ஜே.குரியன் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- அழகு சாதனப் பொருட்களை விலங்குகள் மீது பரிசோதிக்க இந்தியா தடை
- மக்கள் பிரதிநிதியை திரும்பப் பெறும் சட்டத்திற்கு கவர்னர் எதிர்ப்பு : மோடி வருத்தம்
- கற்பழிப்பு வழக்குகளில் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த நேரத்திலும் மின் உற்பத்தி தொடங்கும்: அணுசக்தி கழக ஆலோசகர் தகவல்
- புதுடெல்லி: 13 வயது ஊமை சிறுமி கற்பழிப்பு - லாரி டிரைவர் கைது
- மயக்கத்தில் இருந்த இளம்வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்: ஆந்திர டாக்டர் கைது
- போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 2 மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- புதுடெல்லியில் இலங்கை விமானத்தின் 2 டயர்களும் வெடித்தன : 70 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்
- கருப்புப் பணத்தின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கும் காலம் வரும்: மோடி எச்சரிக்கை
- இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி
- ராஜஸ்தானில் சிறை வளாகத்தில் காவலர் படுகொலை
- ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த உ.பி. அதிகாரியின் இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்பு
- உ.பி.யில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று வீசியவனுக்கு மரணதண்டனை
- உத்தரகாண்டில் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்: சபாநாயகர் தகவல்
| ஆந்திர தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்தது: முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உயிர் தப்பினார் Posted: 29 Jun 2013 10:57 PM PDT ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். காரில் இருந்து இறங்கி தனது அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் விழுந்த மரம் அங்கு நின்ற கார்கள் மீதும் விழுந்து அமுக்கியது. முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி சென்ற சிறிது நேரத்தில் மரம் விழுந்ததால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். |
| பா.ஜனதாவில் சேர மேலிடத்துக்கு எடியூரப்பா ரகசிய தூது Posted: 29 Jun 2013 10:51 PM PDT கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஊழலில் சிக்கி பதவி இழந்தார். அவரை பாரதீய ஜனதா மேலிடம் புறக்கணித்ததால் கட்சியில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். சட்டசபை தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தலில் எடியூரப்பா |
| திருப்பதியில் அலை மோதிய கூட்டம்: தரிசனத்துக்கு 20 மணி நேரம் Posted: 29 Jun 2013 10:46 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக அவர்கள் வெள்ளிக்கிழமை இரவே கோவிலில் குவிந்தனர். கோவிலின் 13 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்து நின்றனர். தரிசனத்துக்கு முண்டியடித்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. |
| ஸ்னோடெனின் அடைக்கல கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: ஈக்குவடார் அதிபருக்கு அமெரிக்கா கோரிக்கை Posted: 29 Jun 2013 10:32 PM PDT அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் இணைய நிறுவனங்களின் துணையுடன் உலக நாடுகளின் இணைய பயன்பாட்டாளர்களை உளவு பார்த்ததை வெளியிட்டவர் எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்காவின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து ஹாங்காங் சென்ற அவர், அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்றார். தற்போது ஸ்னோடென் மாஸ்கோவில் உள்ள விமான நிலையத்தில் தங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கூகுளின் அறிவியல் கண்காட்சியில் பங்குபெறும் இந்தியப் பெண் Posted: 29 Jun 2013 10:22 PM PDT அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், கடந்த 2011-ஆம் ஆண்டு இணையதளத்தில் அறிவியல் கண்காட்சி போட்டி ஒன்றைத் தொடங்கியது.13 வதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்தது. இந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவியல் சோதனைகள், ஆய்வு அறிக்கைகள் போன்றவை திறமை வாய்ந்த நீதிபதிகளின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு செய்யப்படுபவருக்கு முதல் பரிசாக 50,000 டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும். அதைத்தவிர, சிறப்புப் பரிசுகளும் உண்டு. மேலும், தேசிய புவியியல் ஆய்வுக்குழுவினருடன், 10 நாட்கள் பயணமாக ஈக்வடாரில் உள்ள எரிமலைத் தீவுகளான கலப்பாகோஸ் தீவுகளுக்குச் சென்று வரும் வாய்ப்பும் கிட்டும். |
| சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கு: பி.ஜே.குரியன் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு Posted: 29 Jun 2013 09:59 PM PDT கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி பகுதியை ஒரு சிறுமி கடந்த 17 வருடங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டாள். இந்த சிறுமியை கற்பழித்ததாக கேரள காங்கிரஸ் முக்கிய தலைவரும் டெல்லி மேல்-சபை தற்போதைய துணை தலைவருமான பி.ஜே.குரியன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த சிறுமியை பி.ஜே. குரியன் உள்பட பலருக்கு விருந்தாக்கியதாக வக்கீல் தர்மராஜன் மீதும் புகார் எழுந்தது. தலைமறைவாக இருந்த தர்மராஜன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அந்த சிறுமியைதான் அழைத்து சென்றதாகவும் |
| அழகு சாதனப் பொருட்களை விலங்குகள் மீது பரிசோதிக்க இந்தியா தடை Posted: 29 Jun 2013 08:49 PM PDT பொதுவாக புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளோ, அழகு சாதனப் பொருட்களோ முதலில் விலங்குகள் மீதே பரிசோதித்துப் பார்க்கப்டுகின்றன. இந்த பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பின்னரே, அவை விற்பனை சந்தைக்கு வெளிவரும். மிருகங்கள் வதை தடுப்பு ஆர்வலர்கள் இந்த முறையைத் தடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மதிப்பீட்டு செயலகம் அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிக்க விலங்குகளை உபயோகிப்பதைத் தடை செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாற்றாக உருவாகியுள்ள நவீன செயற்கை முறைப் பரிசோதனைகளையும் அது கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவு அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மேலாளர் டாக்டர் ஜி.என். சிங் வெளியிட்டுள்ளார். |
| மக்கள் பிரதிநிதியை திரும்பப் பெறும் சட்டத்திற்கு கவர்னர் எதிர்ப்பு : மோடி வருத்தம் Posted: 29 Jun 2013 05:18 PM PDT குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- எனது தலைமையிலான குஜராத் அரசு வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை |
| Posted: 29 Jun 2013 05:02 PM PDT கற்பழிப்பு வழக்குகளில் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் துவக்க விழாவில் பேசிய அல்டமாஸ் கபிர் |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்த நேரத்திலும் மின் உற்பத்தி தொடங்கும்: அணுசக்தி கழக ஆலோசகர் தகவல் Posted: 29 Jun 2013 04:36 PM PDT கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் எந்த நேரத்தில் செயல்படத் தொடங்கும் என அணுசக்தி கழக ஆலோசகர் சிதம்பரம் தெரிவித்தார். கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.எஸ்.ஐ. நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக முதன்மை விஞ்ஞான ஆலோசகர் |
| புதுடெல்லி: 13 வயது ஊமை சிறுமி கற்பழிப்பு - லாரி டிரைவர் கைது Posted: 29 Jun 2013 02:33 PM PDT மேற்கு டெல்லியில் வசிக்கும் பேச முடியாத 13 வயது பெண்ணை கற்பழித்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் லாரிகளை நிறுத்தி வைத்திருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த 3 டிரைவர்கள் பேச முடியாத அந்த 13 வயது பெண்ணை |
| மயக்கத்தில் இருந்த இளம்வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்: ஆந்திர டாக்டர் கைது Posted: 29 Jun 2013 01:54 PM PDT ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி(24) என்ற பெண் தனது தம்பியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று அரக்கு பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு வந்தார். நடுவழியில் தலை சுற்றல் ஏற்பட்டு |
| போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 2 மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 29 Jun 2013 12:44 PM PDT மும்பையின் பந்த்ரா பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்ற மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. க்ஷிட்டிஜ் தாக்கூர் என்பவரை மடக்கிப் பிடித்த போக்குவரத்து போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் சூர்யவன்ஷி என்பவர் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்தார். இச்சம்பவத்திற்கு மறுநாளான |
| புதுடெல்லியில் இலங்கை விமானத்தின் 2 டயர்களும் வெடித்தன : 70 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர் Posted: 29 Jun 2013 11:50 AM PDT இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் |
| கருப்புப் பணத்தின் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்கும் காலம் வரும்: மோடி எச்சரிக்கை Posted: 29 Jun 2013 11:29 AM PDT குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயிலும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- பணம் என்பது கருப்பாக இல்லை. ஆனால் கருப்புப் பணம் என்பது கருப்பு மனம் கொண்டவர்களின் பங்களிப்பால் |
| இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி Posted: 29 Jun 2013 11:14 AM PDT இந்தியாவின் குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் |
| ராஜஸ்தானில் சிறை வளாகத்தில் காவலர் படுகொலை Posted: 29 Jun 2013 08:42 AM PDT ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சிறைக் காவலர் ஒருவர் சிறை வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகங்காநகர் மாவட்டம் ஜெய்த்சர் பகுதியில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் |
| ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த உ.பி. அதிகாரியின் இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்பு Posted: 29 Jun 2013 07:34 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணியின்போது, விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 20 வீரர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. |
| உ.பி.யில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று வீசியவனுக்கு மரணதண்டனை Posted: 29 Jun 2013 06:34 AM PDT உத்திரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் குவாரி கிராமத்தை சேர்ந்த பப்ளி என்ற 4 வயது சிறுமி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காணாமல் போனாள். சிறுமியை காணாமல் தேடி அலைந்த நிலையில், மறுநாள் அவளது சடலம் அருகில் உள்ள நிலத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. |
| உத்தரகாண்டில் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்: சபாநாயகர் தகவல் Posted: 29 Jun 2013 05:51 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மாநில சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அல்மோராவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்வால் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது அங்கு மட்டும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |