Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சாய்னா நேவாலுக்கு பின்னடைவு: உலக பேட்மின்டன் தரவரிசை

Posted: 22 Jun 2013 11:10 PM PDT

உலக பேட்மின்டன் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்து அவர் 4-வது இடத்துக்கு பின்தங்கினார். ஐதராபாத்தைச் சேர்ந்த அவர் சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் ஒபன் போட்டியில் கால் இறுதியில் தோற்றதால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. அவர் இந்த ஆண்டு எந்த ஒரு பட்டத்தையும் இதுவரை வெல்லவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்து அணி சவாலானது- டோனி (இன்று கடைசிப்போட்டி)

Posted: 22 Jun 2013 10:51 PM PDT

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான இந்தியா- கூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து கோப்பையை பெற்றது. இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இறுதிப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:- இங்கிலாந்து அணி சிறந்த அணியாகும். சொந்த [...]

பாகிஸ்தான் ஓட்டல் ஒன்றில் வெளிநாட்டு பயணிகள் 10 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலி

Posted: 22 Jun 2013 10:45 PM PDT

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் வெளிநாட்டுப் பயணிகள் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 10 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், அங்கு அதிக அளவில் சீன சுற்றுலா பயணிகள் தங்கி இருந்ததாக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டன் ஹாரிச் துறைமுகத்தில் உள்நாட்டு கப்பல் மோதியதால் பயணிகள் அவதி

Posted: 22 Jun 2013 10:24 PM PDT

டென்மார்க் எஸ்ப்ஜெர்க் நகரிலிருந்து லண்டன் ஹாரிச் துறைமுகத்திற்கு சுமார் 500 பயணிகளுடன் சைரெனா சீவேய்ஸ் என்ற உள் நாட்டு போக்குவரத்து கப்பல் ஒன்று நேற்று மதியம்வந்தது. 23,000 டன் எடைகொண்ட அந்த உள்நாட்டு கப்பல் துறைமுக வளாகத்தில் நிறுத்துவதற்கு வந்தபோது துறைமுக சுவரின் மீது மோதியது. இதனால் கப்பலின் அடியில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. உடனடியாக வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் கப்பலின் உள்ளே சென்று தண்ணீர் புகுவதை தடுத்து ஓட்டையை அடைத்தனர். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

தீருப்பதியில் பணத்துக்கு ஆசைப்படாத ஊழியர்கள்

Posted: 22 Jun 2013 10:11 PM PDT

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை செயல் அலுவலர் சின்னகாரு ரமணா நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் பக்தர்களிடம் கோயிலில் உள்ள குறைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து பக்தரை போல் கேட்டறிந்தார். அதேபோல், லட்டு கவுன்டர், விசாரணை மையங்களுக்கு சென்று விசாரித்தார். பின்னர், விசாரணை மையத்தில் உள்ள ஊழியர்களிடம் சென்று, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரிசை வழியாக தரிசனத்துக்கு அனுமதித்தால் ரூ.3000 கொடுப்பதாக கூறினார். அதற்கு ஊழியர்கள் டிக்கெட் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கூறினர்.அதற்கு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

உத்தர காண்டத்தில் மீண்டும் மழை

Posted: 22 Jun 2013 09:47 PM PDT

வரலாறு காணாத வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. சமோலி, உத்தர்காசி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட இடங்கிளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள மழையால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கியுள்ள பக்தர்களை மீட்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு சென்ற ராணுவ வீரர்களும் மோசமான வானிலை காரணமாக முகாம்களிலேயே முடங்கியுள்ளனர். இதனால் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

’இமயமலை சுனாமி’ நிவாரண நிதிக்கு ரூ 13 லட்சம் கொடுத்த‌ திகார் ஜெயில்வாசிகள்

Posted: 22 Jun 2013 09:30 PM PDT

'இமயமலை சுனாமி' நிவாரண நிதிக்கு ரூ 13 லட்சம் கொடுக்கும் திகார் ஜெயில்வாசிகள் டெல்லி: உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திகார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில், 'இமயமலை சுனாமி’ என அழைக்கப்படும், கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உதவ, நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். மேலும், பொதுமக்களும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை வரும் நவநீதம்பபிள்ளை முள்ளிவாய்கால் செல்வார்

Posted: 22 Jun 2013 09:10 PM PDT

ஓகஸ்ட் மாதம் இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) இறுதிப்போர் இடம்பெற்ற தமிழர்கள் பெரும் அவலத்தைச் சந்தித்த முள்ளிவாய்க்கால்ப் பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இப்போதே அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் நிலைமைகளை அவதானிப்பார். இலங்கைப் பயணத்தின் போது கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒப்பற்ற தலைவன் பிரபாகரனை ஏன் நீங்கள் காட்டவில்லை?

Posted: 22 Jun 2013 09:00 PM PDT

பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!" என்கிற தனது ஆதங்கத்தினை நடிகர் சத்யராஜ் வெளிபட்டுத்தினார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு

Posted: 22 Jun 2013 08:52 PM PDT

யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™