மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரகாண்ட் பேரழிவு: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
- உத்தரகாண்டில் தவித்த குஜராத் பக்தர்கள் 15 ஆயிரம் பேரை மீட்ட நரேந்திர மோடி
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெங்களூரில் ரூ. 2 கோடியில் ஏழுமலையான் கோவில்
- நீளமான தலைமுடிக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மும்பை பெண்
- இந்தியத் தொழில்நுட்பக் கழகத் தேர்வில் சாதனை புரிந்த 13 வயது மாணவன்
- கேரளாவில் வயிற்றுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்: டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு
- சிகிச்சைக்காக அழைத்து வந்த சித்தப்பா ரூ.20 ஆயிரத்துடன் ஓட்டம்: ஆந்திர வாலிபர் பரிதவிப்பு
- உத்தரகாண்ட் துயரத்திற்கு பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள்,..ஒரு மாத சம்பளம் வழங்க முடிவு
- கோத்ரா கலவரத்தை தவிர்க்க முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
- நிலக்கரி சுரங்க ஊழல்: காங். எம்.பி. நவீன் ஜிண்டால் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
- ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாகக்கொலை
- ஜால்காவ் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட 13 பேரின் உடல்கள் உ.பி. ஆறுகளில் மீட்பு
- உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார்
- உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள்: சோனியா வழியனுப்பி வைக்கிறார்
- உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற ஐ.மு. கூட்டணி அரசு துடிப்பது ஏன்?: மம்தா கேள்வி
- கேதார்நாத் கோவில் வாசலில் பிணக்குவியல்
- உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு பகுதிகளில் அரியானா முதல்வர் ஆய்வு: ஹெலிகாப்டர் வழங்கினார்
- உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஒருநாள் சம்பளம் நன்கொடை
- வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ஓமன் விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்
| உத்தரகாண்ட் பேரழிவு: சாவு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது Posted: 22 Jun 2013 10:40 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று சுமார் 50 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதனால் நேற்று ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். இதற்கிடையே நிலச் சரிவுகளில் சிக்கியவர்களின் உடல்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு |
| உத்தரகாண்டில் தவித்த குஜராத் பக்தர்கள் 15 ஆயிரம் பேரை மீட்ட நரேந்திர மோடி Posted: 22 Jun 2013 10:19 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மேலும் சுமார் 12 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அரித்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 94 பாலங்களை வெள்ளம் அடித்து சென்று விட்டதால் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு வருகிறார்கள்.சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். |
| திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பெங்களூரில் ரூ. 2 கோடியில் ஏழுமலையான் கோவில் Posted: 22 Jun 2013 09:35 PM PDT திருப்பதி கோவில் தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் டெல்லியில் ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. அடுத்து கன்னிகுமரியில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இதேபோல் பெங்களூரில் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் 14,985 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கொண்டதாக கோவில் அமைய உள்ளது. |
| நீளமான தலைமுடிக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மும்பை பெண் Posted: 22 Jun 2013 09:07 PM PDT மும்பையைச் சேர்ந்த ரேஷ்மா கம்ப்ளே 5 அடி 4 அங்குலம் உயரமானவர். ஆனால், அவரது தலைமுடியின் நீளமோ 6 அடி 10 அங்குலமாகும். இந்த சிறப்பிற்காக அவர் இந்த வருட லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த முடியின் சிறு வயது பராமரிப்புகளைப் பற்றி அவரது சகோதரர் கூறும்போது, தலை பின்ன வேண்டும் என்பதற்காகவே எனது சகோதரி தினமும் அதிகாலையில் எழுந்துகொள்வார். அதுபோல் தலை குளிக்க வேண்டும் என்றால் அவர்தான் கடைசியாகக் குளிக்க வேண்டும் என்பது எங்கள் வீட்டில் எழுதப்படாத ஒரு விதிமுறையாக பின்பற்றப்பட்டது என்று கூறுகின்றார். |
| இந்தியத் தொழில்நுட்பக் கழகத் தேர்வில் சாதனை புரிந்த 13 வயது மாணவன் Posted: 22 Jun 2013 08:59 PM PDT இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் கடினமான ஒன்று என்று கருதப்படுபவை ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வினை மேற்கொள்ளுவர். இத்தேர்வினில் பெறும் மதிப்பெண்களின் தர வரிசைப் பட்டியலின்படியே இந்த அமைப்பின் கீழ் இயங்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய முடியும். உலக அளவில் இந்த நிறுவனங்களின் மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதுவே இதன் சிறப்பை எடுத்துக்கூறும். முதல் நிலைத் தேர்வு, இறுதித் தேர்வு என்று இரண்டு கட்டமாக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடம் நடத்தப்பட்ட முதல் நிலைத் தேர்வில் 1,52,351 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இதில், பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யம்குமார் என்ற மாணவனும் |
| கேரளாவில் வயிற்றுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்: டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு Posted: 22 Jun 2013 08:53 PM PDT கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 22 வயது பெண்ணுக்கு நேற்று நடந்த பிரசவத்தில் இரட்டைக்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளின் வயிறு மற்றும் இடுப்பு எலும்புகள் இணைந்த நிலையில் ஒட்டிப்பிறந்து உள்ளன. அதிசய குழந்தையை பெற்றெடுத்த தாய் மற்றும் குழந்தையை டாக்டர்கள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர கண்காணிப்பில் வைத்து உள்ளனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பிரதாப் கூறுகையில், இதுபோன்று லட்சத்தில் ஒருவருக்குதான் இப்படி குழந்தை பிறக்கும். இந்த குழந்தைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தையாக உள்ளது. மற்றொரு குழந்தையின் வயிறு மற்றும் இடுப்பு |
| சிகிச்சைக்காக அழைத்து வந்த சித்தப்பா ரூ.20 ஆயிரத்துடன் ஓட்டம்: ஆந்திர வாலிபர் பரிதவிப்பு Posted: 22 Jun 2013 05:06 PM PDT ஆந்திராவில் சிகிச்சைக்காக வந்த வாலிபரை, அவரது சித்தப்பா தவிக்கவிட்டு விட்டு ரூ.20 ஆயிரம் பணத்துடன் ஓடிவிட்டார். அவர் மீது சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| Posted: 22 Jun 2013 04:58 PM PDT உத்தரகாண்டில் பெய்து வரும் இடியுடன் கூடிய பேய் மழைக்கு வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் கேதர்நாத் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சிக்கி இறந்தனர். இவர்களின் எண்ணிக்கை 5000-க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. |
| கோத்ரா கலவரத்தை தவிர்க்க முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் Posted: 22 Jun 2013 02:52 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். |
| நிலக்கரி சுரங்க ஊழல்: காங். எம்.பி. நவீன் ஜிண்டால் வீட்டில் சி.பி.ஐ. சோதனை Posted: 22 Jun 2013 02:19 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பற்றி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் இரு நிறுவனங்கள் தவறான தகவல்களை தெரிவித்து கடந்த 2008-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் |
| ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாகக்கொலை Posted: 22 Jun 2013 01:39 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மாதவன் நகரை சேர்ந்த தர்மேந்திரா சிங் இறைச்சி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தர்மேந்திரா வீட்டில் அவர், அவரது மனைவி, ஒன்றரை வயது குழந்தை, மாமியார் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத சிறுமி உள்பட 5 பேர் |
| ஜால்காவ் அருகே விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு Posted: 22 Jun 2013 12:56 PM PDT ஜால்காவ் மாவட்டம் ஜம்னெர் தாலுகா போத்வாத் கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் ராஜேந்திர தார்தே (வயது 35) தனது மகன்களான சாகர் வாமன் (14), சாகர் (14), அக்ஷய் (12) ஆகியோருடன் மோட்டார் |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட 13 பேரின் உடல்கள் உ.பி. ஆறுகளில் மீட்பு Posted: 22 Jun 2013 11:22 AM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட 13 பேரின் உடல்கள் உ.பி. ஆறுகளில் மீட்பு |
| உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார் Posted: 22 Jun 2013 09:23 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் முதல்வரும், பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவருமான நரேந்திர மோடி நேற்று இரவு உத்தரகாண்ட் சென்றார். இன்று அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்த்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த நெருக்கடியான நேரத்தில் உத்தரகாண்ட் மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். அங்கு தவிக்கும் |
| உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள்: சோனியா வழியனுப்பி வைக்கிறார் Posted: 22 Jun 2013 08:58 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு திங்கட்கிழமை நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் செல்லும் வாகனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். |
| உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற ஐ.மு. கூட்டணி அரசு துடிப்பது ஏன்?: மம்தா கேள்வி Posted: 22 Jun 2013 08:07 AM PDT மேற்கு வங்க மாநிலம் பங்குரா நகரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:- தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றப் போவதாகவும், அதனை திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாகவும் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், 4 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், இப்போது அவசரம் காட்டுவது ஏன்? நாங்கள் உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், அது மக்களை சென்றடையும் என்ற மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். குக்கிராமங்களில் வங்கி வசதிகள் இல்லாதால் அப்பகுதியில் உணவு தானியத்துக்கான நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தை |
| கேதார்நாத் கோவில் வாசலில் பிணக்குவியல் Posted: 22 Jun 2013 07:21 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். சாப்பாடு இல்லாமல் காட்டில் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தி கோஷங்கள் முழங்க எப்போதும் பரபரப்பாக காணப்படும் கேதார்நாத் நகரம், இப்போது மயான பூமியாக மாறிவிட்டது. வெள்ளம் வடிந்து கோவிலின் வெளிப்பகுதி பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது. ஆனால், கோவிலின் வெளிப்புற வாயிலில் சடலங்கள் குவிந்து |
| உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு பகுதிகளில் அரியானா முதல்வர் ஆய்வு: ஹெலிகாப்டர் வழங்கினார் Posted: 22 Jun 2013 05:53 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அங்கு நடைபெறும் மீட்புப் பணிகளை அரியானா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இன்று பார்வையிட்டார். ஜிண்ட் மற்றும் சோனிபட் நிகழ்ச்சிகளை ரத்து செய்த முதல்வர் ஹூடா, தனி ஹெலிகாப்டரில் பறந்தபடி, ஹரித்வார், டேராடூன் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அந்த ஹெலிகாப்டரை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக வழங்கிய ஹூடா, சாலை மார்க்கமாக டெல்லி திரும்பினார். இதுதொடர்பாக ஹூடா நிருபர்களிடம் கூறியதாவது:- கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை கவனத்தில் கொண்டு, உத்தரகாண்ட் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரியானா அரசு தயாராக உள்ளது. மீட்பு மற்றும் |
| உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஒருநாள் சம்பளம் நன்கொடை Posted: 22 Jun 2013 05:08 AM PDT இந்திய துணை ராணுவம் என்றழைக்கப்படும் மத்திய ஆயுதப்படையில் (சி.ஆர்.பி.எப்.) சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் பெய்த அடைமழையால் உத்தரகாண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்டு நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ள வெள்ளத்திற்கு பலியான 559 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. |
| வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ஓமன் விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம் Posted: 22 Jun 2013 04:33 AM PDT ஓமன் நாட்டு பயணிகள் விமானம் இன்று மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 190 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் இந்திய வான்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானிக்கு தகவல் வந்ததாகத் தெரிகிறது. இதனால் பதட்டம் அடைந்த விமானி, அருகில் உள்ள மும்பை விமான நிலையத்தை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |