Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உத்தரகண்டில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 14 பேரின் கதி என்ன? தகவல் கிடைக்காமல் தமிழக அரசு குழுவினர் திணறல்

Posted:

""உத்தரகண்டில், மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கிய, தமிழர்களில், 413 பேர் மீட்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும், புதுச்சேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் உட்பட, 14 பேரின் நிலைமை என்னவானதென்று தெரியவில்லை,'' என, தமிழக அரசின் டில்லி பிரதிநிதி ஜக்கையன் தெரிவித்து உள்ளார்.

உத்தரகண்டில் உள்ள, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்றிருந்த, தமிழகத்தைச் சேர்ந்த பலரும், இந்த மழை வெள்ள பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களை மீட்டு, பத்திரமாக, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழு, ...

உரத்த சிந்தனை: நரேந்திர மோடியை நிராகரிப்பது நியாயமா?- வி.சண்முகநாதன்

Posted:

இன்றைய தினம் சாதாரண மக்களை, விலைவாசி பிரச்னை பெரிதும் வாட்டி எடுக்கிறது. மத்திய அமைச்சர்களின் ஊழலால் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.மத்திய அரசின் நிதி நிர்வாகக் கோளாறினால், ரூபாயின் மதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது. ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும், வெகுவாகச் சரிந்து வருகிறது. ஒரு காலத்தில் லாபகரமாக இயங்கி வந்த தனியார் துறைகள், இன்று பொருளாதார நெருக்கடியால் தத்தளிக்கின்றன.சி.பி.ஐ., மூலமாக, எதிர்க்கட்சிகளை, மத்தியில் ஆளும் காங்கிரஸ், மிரட்டி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது வீரர்களை கடத்திச் ...

"ஆபரேஷன் அம்லா' - கற்றுக்கொடுத்தது என்ன?

Posted:

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டுக்கு இருமுறை, "ஆபரேஷன் அம்லா' என்ற, பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் மூலம், தமிழக காவல் துறை கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.மும்பையில், 2008, செப்., 26ம் தேதி, கடல் வழியாக, பயங்கரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தி, கடும் சேதம் விளைவித்ததை தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகை:
தமிழகத்தில், 2011ம் ஆண்டு முதல், கடல், தரை, ஆகாய வழி ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையை தடுக்க, தமிழகம் முழுவதும், "ஆபரேஷன் அம்லா' என்ற பெயரில், ...

இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தின் சதாசிவம் நியமனம்: ஜூலை, 19ம் தேதி பொறுப்பேற்பு

Posted:

சென்னை : இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி ...

""என்னுடன் போட்டோ எடுத்தால் ரூ.500 தரணும்'' : கல்வி நிதியளிப்பு விழாவில் ஸ்டாலின் கண்டிஷன்

Posted:

மதுரை : ""என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள் ரூ.500 நன்கொடை வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த கல்வி நிதியளிப்பு விழாவில், பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கண்டிஷன் போட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா, மதுரையில் நேற்று நடந்தது.பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வில் பல துணை அமைப்புகள் இருக்கின்றன. எனினும் இளைஞரணி அறக்கட்டளை மூலம், மாணவர்களுக்கு ...

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் "சஸ்பெண்ட்': கட்சி தலைவர் விஜயகாந்த் அதிரடி

Posted:

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., கொறடா உத்தரவை மீறி, அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த, ஏழு எம்.எல்.ஏ.,க்களை, கட்சியில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்து, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.தே.மு.தி.க., தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், கடந்தாண்டு, அக்., 26ம் தேதி, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), தமிழழகன் (திட்டக்குடி) ஆகியோர், தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்தனர். அதற்கடுத்த நாள், எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), நடிகர் அருண்பாண்டியன் (பேராவூரணி) ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்குமார் (செங்கம்), ...

ஒரு எம்.பி., சீட்டுக்காக காங்.,வுடன் மீண்டும் கூட்டணியா?தி.மு.க., மீது இலங்கை தமிழர்கள் கடும் அதிருப்தி

Posted:

இலங்கை தமிழர்கள் பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக, கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, மீண்டும் காங்கிரசுடன் கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது, இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.நீண்ட இழுபறிக்கு பின், 31 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்களை பெற்ற தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்பதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், - தே.மு.தி.க., - பா.ம.க., ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவை ...

சோனியாவுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி

Posted:

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற, காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக, நன்றி கூறினார்.தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா, எம்.பி.,க்கள், ஆறு பேரை தேர்வு செய்ய, சமீபத்தில், தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அதனால், அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம், இரண்டாவது முறையாக, ராஜ்யசபா, எம்.பி.,யாக, அவர் தேர்வானார்.காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு.கூட்டணியிலிருந்து, சில மாதங்களுக்கு முன், தி.மு.க., வெளியேறிய ...

காங்கிரஸ் கட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் : ராகுல் உறுதி

Posted:

புதுடில்லி:"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், இதர கட்சி அமைப்புகளிலும், பெண்களுக்கு, 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உறுதி அளித்தார்.அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள், சமீபத்தில், மாற்றி அமைக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட, பொறுப்பாளர்களுடன், காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று முதல் முறையாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: அகில இந்திய காங்., கமிட்டி பொதுச் செயலாளர்கள், 12 பேரில், தற்போது, பெண் ...

அரசு பணிக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்ய மும்முரம் : டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., சுறுசுறுப்பு

Posted:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.அரசு" தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™