Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தங்கம் விலை சவரனுக்கு 728 ரூபாய் வீழ்ச்சி அபாரம்: 2 ஆண்டுகளுக்கு முந்திய நிலவரத்தில் விற்பனை

Posted:

சென்னை: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வீழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விலை நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.கடந்த சில நாட்களாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை, கடும் சரிவை கண்டு வருகிறது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,470 ...

எரிவாயு, மின் கட்டணம், உரம் விலை உடனடியாக உயராது: சிதம்பரம் விளக்கம்

Posted:

""இயற்கை எரிவாயுவை, உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து, கூடுதல் விலை கொடுத்து வாங்க, மத்திய அரசு முடிவு செய்திருந்தாலும், பொதுமக்களுக்கான விற்பனை விலை அதிகரிக்காது. அத்துடன், மின் கட்டணமோ அல்லது உரங்களின் விலையோ, உடனடியாக உயர வாய்ப்பு இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கும், இயற்றை எரிவாயுவின் விலையை, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ...

செயல்படாத தலைவர் கருணாநிதி: பரிதி இளம்வழுதி சிறப்பு பேட்டி

Posted:

சென்னை: கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபையில், தி.மு.க., சார்பில், ஒரேயொரு, எம்.எல்.ஏ., வாக பரிதி இளம்வழுதி அதிரடியாக பணியாற்றி, தி.மு.க., வுக்கு குரல் கொடுத்தார். 1996 முதல், 2001ம் ஆண்டு வரை துணை சபாநாயகர் பதவி வகித்தார். பின், 2006 முதல், 2011ம் ஆண்டு வரை, செய்தித் துறை அமைச்சராக பணியாற்றினார்.
ஆறு முறை எம்.எல்.ஏ., வாக பணியாற்றிய அவர், கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதற்கு, சொந்த கட்சியின் உள்குத்து தான் காரணமாக அமைந்தது. தேர்தலில், தனக்கு ...

நாடகம் முடிவுக்கு வந்தது: வெதும்புகிறார் விஜயகாந்த்

Posted:

சென்னை: ""தொகுதி மேம்பாடு மற்றும் தொகுதி மக்களின் நலன் கருதி, முதல்வரை சந்தித்ததாக கூறியவர்களின் நாடகம், ராஜ்யசபா தேர்தல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. முதல்வரின் உள்நோக்கமும், மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில், யார் வெற்றிப்பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வி அடைய வேண்டும் என்பதில் தான் அ.தி.மு.க., ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க., முதலில், ஐந்து வேட்பாளர்களை அறிவித்தது; ...

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாற்றம் ஏன்?

Posted:

மதுரை: மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீரென வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அவரது மாற்றத்தின் பின்னணியில் ஆளும் கட்சியினர் இருக்கலாம் என, கருதப்படுகிறது.
இங்கு கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார். அவர் மதுரையில் 28.5.2012ல் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் ...

தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்: காஷ்மீர் முதல்வருக்கு அத்வானி "அட்வைஸ்'

Posted:

புதுடில்லி: ""மோசடி, ஏமாற்றுதல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மற்றவர்களை விமர்சிப்பதை, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தவிர்ப்பது, அவரின் அரசியல் வளர்ச்சிக்கு நல்லது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு, ஜவகர்லால் நேரு, பிரதமராக இருந்த போது, கொண்டு வரப்பட்டது. "இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது' என்பது உள்ளிட்ட, பல வித்தியாசமான விதிமுறைகள், இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ளன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த, சர்தார் வல்லபாய் ...

கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு: கெஜ்ரிவால் வீடு என்றதும் மீண்டும் வழங்கிய அதிகாரிகள்

Posted:

புதுடில்லி: காஜியாபாத்தில், நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர், "ஏழை மக்கள் கட்சி - ஆம் ஆத்மி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்த மின்துறை அதிகாரிகள், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக மீண்டும் வழங்கினர்.
மின் கட்டணம் உயர்வு:
சில மாதங்களுக்கு முன், டில்லியில், மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியினர், போராட்டம் நடத்தினர். அப்போது, "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த ...

ஸ்ரீபெரும்புதூர் உட்பட எட்டு இடங்களில் விமான நிலைய பணிகளை துவக்க இலக்கு

Posted:

புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், "கிரீன்பீல்டு' விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் - அரசுத் துறை பங்களிப்புடன், ...

மோசமான வானிலை: முதல்வர் ஹெலிகாப்டர் கோவை திரும்பியது: காரில் கோடநாடு பயணம்

Posted:

கோவை: முதல்வர் ஜெயலலிதா சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, கோடநாட்டில் தரை இறங்காமல், மீண்டும் கோவை திரும்பியது; பின், அவர் காரில், கோடநாடு சென்றார்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு செல்ல, நேற்று காலை 10.10 மணிக்கு, சென்னையிலிருந்து தனி விமானத்தில் முதல்வர் ஜெ., கோவை புறப்பட்டார். கோவை விமானநிலையத்துக்கு காலை 11.10 மணிக்கு முதல்வரின் தனி விமானம் வந்திறங்கியது. விமான நிலையத்தில் முதல்வரை கலெக்டர் கருணாகரன், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மேற்கு மண்டல ஐ.ஜி., டேவிட்சன் தேவாசிர்வாதம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். கோவை விமான ...

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி : பாக்., அதிரடி முடிவு

Posted:

கொழும்பு: இலங்கை ராணுவ அதிகாரிகளு்க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்க எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் பாக்.ராணுவம் பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்கள் மீது தாக்குதல்: தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற பகுதிகளை சேர்நத மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் இந்தியகடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை கப்பல் ப‌டை‌ வீரர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், மீன்களை பறிமுதல் செய்தல், படகுகளில் உள்ள நவீன உபகரணங்களை பறிமுதல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™