Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு

Posted: 28 Jun 2013 01:11 PM PDT

தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2013-14-ஆம் கல்வி ஆண்டுக்கு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 1,2,3 ஆகிய தே

சிறையில் அபு சலீம் மீது தாக்குதல்: 4 போலீஸார் இடைநீக்கம்

Posted: 28 Jun 2013 01:10 PM PDT

மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா அபு சலீம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 4 போலீஸார் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நில மோசடி: 6 பேர் மீது வழக்கு

Posted: 28 Jun 2013 01:10 PM PDT

: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1.82 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

12 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

Posted: 28 Jun 2013 01:10 PM PDT

குஜராத் மாநிலம், கட்ச் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 12 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

Posted: 28 Jun 2013 01:10 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா, தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆலோசகர் பாரதி, முதல்வர் முருகதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 28 Jun 2013 01:10 PM PDT

சிவகாசியில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேர்தலில் கோபிநாத் முண்டே ரூ.8 கோடி செலவு: தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான நடவடிக்கை

Posted: 28 Jun 2013 01:09 PM PDT

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய தொகுதிக்கு ரூ.8 கோடி செலவு செய்ததாகக் கூறிய பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முறையான குடிநீர் விநியோகம் கோரி முற்றுகை

Posted: 28 Jun 2013 01:09 PM PDT

விருதுநகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டி கிராமத்தில் குடிநீர் உள்பட  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜூலை 1-இல் மாநில சப் ஜூனியர் இறகுப் பந்து போட்டி தொடக்கம்

Posted: 28 Jun 2013 01:09 PM PDT

விருதுநகர் மாவட்ட இறகுப் பந்து கழகம் சார்பில், மாநில சப் ஜூனியர் ரேங்கிங் இறகுப் பந்து போட்டி சிவகாசியில் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 4 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதாக அந்த அமைப்பின் செயலர் எஸ்.வி. செந்தியப்பன் தெரிவித்துள்ளார்.

ரத்த வகை கண்டறியும் முகாம்

Posted: 28 Jun 2013 01:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் டிவைன் அறக்கட்டளையின் ராஜா மருத்துவ தொழில் நுட்பக் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

Posted: 28 Jun 2013 01:08 PM PDT

சிவகாசி அருகே  இ.டி.ரெட்டியபட்டியில் நடந்த  மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு, ஆர்டிஓ எஸ்.ஜி. ரெங்கன் தலைமை வகித்தார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 72 மனுக்கள் பெறப்பட்டன. வட்டாட்சியர் மைக்கேல்ராஜ், தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்பு) ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின் உற்பத்தி, உரத் தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் எரிவாயு

Posted: 28 Jun 2013 01:08 PM PDT

மின்சாரம் மற்றும் உரத் தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் எரிவாயு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மணல் திருட்டு: வருவாய் ஆய்வாளரை அச்சுறுத்தியதாக டிரைவர் கைது

Posted: 28 Jun 2013 01:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் ஆய்வாளரை அச்சுறுத்திய டிராக்டர் டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted: 28 Jun 2013 01:07 PM PDT

விருதுநகர் நுகர்வோர் விழிப்புணர்வு மன்றம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையம் தொடக்கம்

Posted: 28 Jun 2013 01:07 PM PDT

விருதுநகர் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் சாவு

Posted: 28 Jun 2013 01:07 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

Posted: 28 Jun 2013 01:06 PM PDT

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் வாரியத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஷ்மீரில் மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதி தப்பியோட்டம்

Posted: 28 Jun 2013 01:06 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்ட மருத்துவமனைக்குள் நுழைந்த தீவிரவாதி, பாதுகாப்புப் படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து தப்பியோடி விட்டார்.

காட்டுநாய்க்கன் சமூகத்தினருக்கு எஸ்.டி. ஜாதிச் சான்று வழங்க ஆய்வு

Posted: 28 Jun 2013 01:06 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 600 குடும்பங்களைச் சேர்ந்த காட்டு நாய்க்கன் இனத்தவர்களுக்கு எஸ்.டி. ஜாதிச் சான்று வழங்குவது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவர் எஸ்.சுமதி வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார்.

கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை

Posted: 28 Jun 2013 01:06 PM PDT

திருவண்ணாமலை நகராட்சி கவுன்சிலர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு விருது: மருத்துவ அலுவலருக்கு பாராட்டு

Posted: 28 Jun 2013 01:05 PM PDT

தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனையாக ஆரணி அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றதையடுத்து, மருத்துவ அலுவலர் கார்த்தீசனுக்கு தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்தன

நகரில் பிடிபடும் மாடுகளை ஏலம் விட முடிவு

Posted: 28 Jun 2013 01:05 PM PDT

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து வாரம் முறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடுவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகரமைப்பு திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

"இஷ்ரத் வழக்கு: உளவுத்துறை அதிகாரியை கைது செய்ய ஆதாரமில்லை'

Posted: 28 Jun 2013 01:04 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் மூத்த உளவுத்துறை அதிகாரி ராஜேந்தர் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்த போதுமான ஆதாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

எஸ்.எம்.எஸ். மூலம் ரயிலில் முன்பதிவு திட்டம் தொடக்கம்

Posted: 28 Jun 2013 01:04 PM PDT

எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

வருகைப் பதிவேட்டில் முறைகேடு கண்டுபிடிப்பு: தொழிலாளர்கள் எதிர்ப்பு

Posted: 28 Jun 2013 01:04 PM PDT

செங்கம் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிப் பதிவேட்டில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட உதவி திட்ட அலுவலர் காரை தொழிலாளர்கள் தடுத்து வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

மணிப்பூர் குண்டு வெடிப்பில் மேலும் ஒருவர் சாவு

Posted: 28 Jun 2013 01:03 PM PDT

மணிப்பூர் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

300 பேருக்கு இலவச கண் பரிசோதனை

Posted: 28 Jun 2013 01:03 PM PDT

ஸ்ரீரமண மகரிஷி கண் மருத்துவமனை சார்பில் ஆரணி கிராம விடியல் சிறுகடன் திட்ட கிளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது

வந்தவாசி அருகே பெண் கொலை: 3 பேர் கைது

Posted: 28 Jun 2013 01:03 PM PDT

வந்தவாசி அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கல்லால் அடித்து 3 கைதிகள் சாவு

Posted: 28 Jun 2013 01:02 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் சிறையில் சக கைதி ஒருவர் கல்லால் தாக்கியதில் 3 கைதிகள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.

செயல்வழிக் கற்றல் முறையில் புத்தாக்கப் பயிற்ச

Posted: 28 Jun 2013 01:02 PM PDT

செய்யாறு வட்டார வள மையம் சார்பில் செயல்வழிக் கற்றல் முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

லாலுவின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 28 Jun 2013 01:02 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக, லாலு தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடைகளில் பான் மசாலா, குட்கா பறிமுதல்

Posted: 28 Jun 2013 01:02 PM PDT

செங்கத்தில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து 2 பேர் சாவு

Posted: 28 Jun 2013 01:02 PM PDT

போளூர் அருகே கிணறு தூர்வாரும் போது மின்சாரம் பாய்ந்து இரண்டு பேர் வெள்ளிக்கிழமை இறந்தனர். கடலாடியை அடுத்த அருணகிரிமங்கலம் ஊராட்சி வேட்டக்காரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு.

மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து நகர்மன்ற உறுப்பினர் போராட்டம்

Posted: 28 Jun 2013 01:01 PM PDT

அடிப்படை வசதி கோரி வந்தவாசி நகர்மன்றக் கூட்டத்தில் மேஜைமீது மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து நகர்மன்ற உறுப்பினர் எ.நஜீர்உசேன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.

வேலை வாய்ப்பு பயிற்சித் திறன் மேளா

Posted: 28 Jun 2013 01:01 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் 2013-14ஆம் ஆண்டுக்கான திறன், வேலை வாய்ப்பு பயிற்சித் திறன் மேளா செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேளாவினை செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவர் விமலா மகேந்திரன் தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட

சிங்கம்புணரி

Posted: 28 Jun 2013 01:00 PM PDT

விருதுநகர்

Posted: 28 Jun 2013 01:00 PM PDT

ஸ்னோடென் விவகாரத்தில் நெருக்கடி தரும் அமெரிக்கா: ரஷியா குற்றச்சாட்டு

Posted: 28 Jun 2013 12:59 PM PDT

அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் விவகாரத்தில், அமெரிக்கா தங்களுக்கு நெருக்கடி தருவதாக ரஷியா குற்றம் சாட்டி உள்ளது.

ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட பைபிள் ரூ. 4 கோடிக்கு ஏலம்

Posted: 28 Jun 2013 12:58 PM PDT

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட பைபிள் புத்தகம், ரூ. 4.07 கோடிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் போனது.

மோசடி: இத்தாலி மத போதகர் கைது

Posted: 28 Jun 2013 12:55 PM PDT

இத்தாலியில் மோசடி, ஊழல் புகாரில் சிக்கிய மத போதகர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழினி விடுதலை

Posted: 28 Jun 2013 12:54 PM PDT

கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு தலைவர் சு. சிவத்தாய் என்ற தமிழினி இலங்கை அரசால் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

"கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் கூடாது'

Posted: 28 Jun 2013 12:53 PM PDT

இஸ்ரேல்-சிரியா இடையிலான கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

குடியேற்ற சீர்திருத்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது

Posted: 28 Jun 2013 12:53 PM PDT

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஒருங்கிணைந்த குடியேற்ற சீர்திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

மலேசியாவில் கைதான சீக்கிய பயங்கரவாதி இந்தியாவிடம் ஒப்படைப்பு

Posted: 28 Jun 2013 12:50 PM PDT

மலேசியாவில் கைது செய்யப்பட்ட பப்பர் கல்சா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாஸ்டன் குண்டுவெடிப்பு: குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது 30 பிரிவுகளின் கீழ் வழக்கு

Posted: 28 Jun 2013 12:50 PM PDT

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது 30 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்படி அந்த நபருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பாரம்பரிய நகைக் கண்காட்சி

Posted: 28 Jun 2013 12:49 PM PDT

சென்னையில் பாரம்பரிய நகைக் கண்காட்சி சனிக்கிழமை (ஜூன் 29) தொடங்குகிறது. பிரின்ஸ் ஜுவல்லரி நடத்தும் இந்த நகைக் கண்காட்சி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆண்டு இறுதியில் அமெரிக்க "ஜீப்' விற்பனைக்கு வரும்

Posted: 28 Jun 2013 12:48 PM PDT

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க பன்முகப் பயன்பாட்டு வாகனமான "ஜீப்' இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று ஃபியட் நிறுவனம் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ரூபாய் மதிப்பில் மேலும் ஏற்றம்

Posted: 28 Jun 2013 12:46 PM PDT

செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 80 காசுகள் அதிகரித்து வெள்ளிக்கிழமை மாலையில் 59.39 என்ற அளவில் இருந்தது.

பங்குச் சந்தையில் எழுச்சி: 520 புள்ளிகள் உயர்வு

Posted: 28 Jun 2013 12:43 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டது. 520 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 19,395 என்ற அளவில் நிலைத்தது. பத்து நாள் இடைவெளிக்குப் பிறகு சென்செக்ஸ் மீண்டும் 19,000 அளவைக் கடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கூட்டுடன் "கிரீன்ஃபீல்டு' விமான நிலையம்

Posted: 28 Jun 2013 12:31 PM PDT

 தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் உள்பட நாட்டின் எட்டு இடங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள "கிரீன் ஃபீல்டு' விமான நிலையத்தை தனியாருடன் கூட்டு சேர்ந்து அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

"செபி' நிர்பந்தம் காரணமாக என்எல்சி பங்கு விற்பனை

Posted: 28 Jun 2013 12:31 PM PDT

"செபி' நிர்பந்தம் காரணமாகவே என்எல்சி பங்குகளை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

உத்தரகண்டில் மீட்கப்பட வேண்டிய தில்லிவாசிகள் எத்தனை பேர்?

Posted: 28 Jun 2013 12:31 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், கேதார்நாத் பகுதிகளுக்குச் சென்று மீட்கப்பட வேண்டிய தில்லிவாசிகளின் எண்ணிக்கையை பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக

குடியரசுத் தலைவர் மாளிகையை சீரமைக்க செயல்திட்டம்

Posted: 28 Jun 2013 12:30 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகையை சீரமைக்க செயல்திட்டம் தயாரிக்கும்படி தனது மாளிகைச் செயலக அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

நிமோனியா ஜுரம்: 21 மாத குழந்தைக்கு 70 முறை நுரையீரல் வழியாகச் சிகிச்சை

Posted: 28 Jun 2013 12:30 PM PDT

: நிமோனியா ஜுரத்தால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியார் மருத்துவமனையில் உள்ள 21 மாதக் குழந்தை அனுஷ்காவுக்கு, நுரையீரல் வழியாகச் சிகிச்சை அளிக்க உதவும் கருவி 70 மு

பீதம்புரா தில்லி ஹாட்டில் மாம்பழக் கண்காட்சி நாளை நிறைவு

Posted: 28 Jun 2013 12:30 PM PDT

தில்லி சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் பீதம்புரா தில்லி ஹாட்டில் 3 நாள் மாம்பழக் கண்காட்சி ஞாயிற்றுகிழமை (ஜூன் 30) நிறைவு பெறுகிறது.

மனைவி, 2 குழந்தைகளை கொன்று இளைஞர் தற்கொலை

Posted: 28 Jun 2013 12:29 PM PDT

குடும்ப வறுமை, ஆண் குழந்தையில்லாத ஏக்கம், நோய்த் தாக்கம் ஆகியவற்றால் விரக்தியுற்ற நொய்டாவைச் சேர்ந்த சுபாஷ் பால் (37), தனது மனைவி, இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கேஜரிவால் வீட்டுக்கு மின்சாரம் துண்டிப்பு

Posted: 28 Jun 2013 12:29 PM PDT

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, நான்கு மாதங்களாக மின் கட்டணத்தை செலுத்தாமல் எதிர்ப்பு தெரிவித்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் காஜியாபாத் வீட்டுக்கு வியாழக்கிழமை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

கிழக்கு தில்லி கல்லூரிகளை நாடும் மாணவர்கள்

Posted: 28 Jun 2013 12:29 PM PDT

நான்காண்டுப் பட்டப் படிப்பில் சேர்வதற்கு கூட்டம் அலைமோதும் நிலையில், போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் இல்லாத மாணவர்கள், கிழக்கு தில்லி கல்லூரிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

விமானப் படை வீரர் தபன் கபூருக்கு தில்லியில் கடைகளை அடைத்து அஞ்சலி

Posted: 28 Jun 2013 12:28 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தில்லியைச் சேர்ந்த விமானப் படை வீரர் தபன் கபூருக்கு, சாந்தினி செüக் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

உத்தரகண்ட் மீட்புப் பணி: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Posted: 28 Jun 2013 12:28 PM PDT

"உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிக்கியுள்ளவர்கள் அனைவரையும், அந்த மாநில அரசு உறுதியளித்துள்ளபடி சனிக்கிழமைக்குள் மீட்க முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கையை விளக்கி உத்தரகண்ட் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரகண்ட்

தெற்கு தில்லியில் குப்பைகளை அள்ள மேலும் 80 லாரிகள்

Posted: 28 Jun 2013 12:27 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு 15 நாள்களுக்குள் கூடுதலாக 80 லாரிகள் வாங்கப்படும் என்று நிலைக்குழுத் தலைவர் ராஜேஷ் கெலாட் தெரிவித்தார்.

மருத்துவமனையில் ரகளை: 4 பேர் கைது

Posted: 28 Jun 2013 12:27 PM PDT

தில்லியில் நியூ பிரண்ட்ஸ் காலனியில் தனியார் மருத்துவமனையில் காவலாளி, மருத்துவர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பயிலரங்கில் "திடீரென' பங்கேற்ற ராகுல்

Posted: 28 Jun 2013 12:27 PM PDT

தில்லியில் சுகாதாரப் பெண் பணியாளர்களின் தேசிய பயிலரங்கில் திடீரென பங்கேற்ற ராகுல் காந்தி, அவர்களுடைய அதிரடியான பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

75 வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

Posted: 28 Jun 2013 12:27 PM PDT

கொள்ளை, கொலை, கொலை முயற்சி உள்பட 75 வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக கர்னைல் சிங் என்ற நபர் தில்லியில் கைது செய்யப்பட்டார்.

பூட்டு ரிப்பேர் செய்வதாக கூறி ரூ. 4 லட்சம் திருட்டு

Posted: 28 Jun 2013 12:26 PM PDT

பூட்டு ரிப்பேர் செய்வதாகக் கூறி வீட்டின் அலமாரியின் இருந்த ரூ. 4 லட்சத்தைத் திருடிச் சென்ற இரு நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கார்கள் மோதல்: பெண் சாவு

Posted: 28 Jun 2013 12:26 PM PDT

மத்திய தில்லியில் வியாழக்கிழமை இரவு இரு கார்கள் மோதிக் கொண்டதில் ஒரு பெண்  உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

கல்வி உதவித்தொகை வழங்கல்

Posted: 28 Jun 2013 12:25 PM PDT

திருக்கோவிலூர் அருகே பிரிவிடையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  தலைமை ஆசிரியர் சி.அந்தோணி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ரா.சதாசிவம் முன்னிலை

அடிப்படை வசதி கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

Posted: 28 Jun 2013 12:24 PM PDT

திருக்கோவிலூர் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி இரு பெண்கள் காயம்

Posted: 28 Jun 2013 12:24 PM PDT

ஆரோவில் அருகே நடைபெற்ற கோயில் திருவிழா தேரோட்டத்தின்போது, தேர்சக்கரத்தில் சிக்கி இரு பெண்கள் காயமடைந்தனர்.

மக்கள் தொடர்பு முகாமில் 117 பேருக்கு நல உதவி

Posted: 28 Jun 2013 12:24 PM PDT

பரிகம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம்

Posted: 28 Jun 2013 12:24 PM PDT

திண்டிவனத்தில், சமூகநல உரிமைகள், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அண்மையில் நடைபெற்றது.

இரு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் கிராமம்

Posted: 28 Jun 2013 12:23 PM PDT

திருநாவலூர் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட மல்லிகா கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

Posted: 28 Jun 2013 12:23 PM PDT

மரக்காணம் அருகே, வெள்ளிக்கிழமை பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஜூலை 4-ல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

Posted: 28 Jun 2013 12:22 PM PDT

விழுப்புரம் அருகே உள்ள அனந்தபுரம் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் குறை கேட்பு நாள் கூட்டம், வரும் ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது.

பாரதி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம்

Posted: 28 Jun 2013 12:22 PM PDT

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்த அறிமுக விளக்கக் கூட்டம், தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வாகனம் மோதி பெண் சாவு

Posted: 28 Jun 2013 12:22 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

முஸ்லிம் மக்கள் கழக செயற்குழுக் கூட்டம்

Posted: 28 Jun 2013 12:21 PM PDT

முஸ்லிம் மக்கள் கழகத்தின் நகர செயற்குழுக் கூட்டம், திண்டிவனத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கிணற்றில் தூர்வாரும்போது விஷவாயு தாக்கி 2 பேர் சாவு

Posted: 28 Jun 2013 12:21 PM PDT

சிதம்பரம் நகரில் வெள்ளிக்கிழமை கிணற்றில் தூர்வாரும் போது விஷவாயு தாக்கி 2 பேர் இறந்தனர். சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள ஒரு கட்டடத்தின் பின்புறம் உள்ள சுமார் 75 அடி

நிதி நிறுவனத்தில் ரூ.8.27 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

Posted: 28 Jun 2013 12:21 PM PDT

சிதம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.8.27 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர்  மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எம்.பி. காரை இடைமறித்து வாசன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

Posted: 28 Jun 2013 12:20 PM PDT

கொடியேற்று விழாவுக்கு அழைக்கவில்லை என கூறி வாசன் ஆதரவாளர்கள் கடலூர் எம்பி கேஎஸ். அழகிரி காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடலூர் ம

சிதம்பரம் உதவி ஆட்சியர் சுப்பிரமணியன் மதுரை ஆட்சியராக நியமனம்

Posted: 28 Jun 2013 12:20 PM PDT

சிதம்பரம் உதவி ஆட்சியராக இருந்த எல்.சுப்பிரமணியன்  மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் வெள்ளம்:ரூ.70 ஆயிரம் நிதியுதவி

Posted: 28 Jun 2013 12:20 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு அம்மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சிதம்பரம் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் ரூ.70 ஆயிரம் நிதியை வழங்கியுள்ளது.

ஜூன் 29 மின் தடை

Posted: 28 Jun 2013 12:19 PM PDT

வணிக வளாகத்தில் தீ: 3 கடைகள் எரிந்து சேதம்

Posted: 28 Jun 2013 12:19 PM PDT

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீப்பிடித்ததில், 3 கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர் சாவு வாகன உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

Posted: 28 Jun 2013 12:18 PM PDT

சென்னை பல்லாவரத்தில் பள்ளி வாகனம் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து மாணவன் உயிரிழந்த வழக்கில், வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய ஆட்சியர் லி.சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

70 வயது முதியவருக்கு மூட்டு எலும்பு அறுவை சிகிச்சை

Posted: 28 Jun 2013 12:18 PM PDT

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், முதல் முறையாக இடுப்பு பகுதி மூட்டு எலும்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து இளம் மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.

சிறு, குறு தொழில்கள் தொடங்க கனரா வங்கி ரூ.60 கோடி கடனுதவி

Posted: 28 Jun 2013 12:18 PM PDT

சிறு, குறு, மத்திய தொழில் நிறுவனங்கள் தொடங்க கனரா வங்கியின் வர்த்தகப் பிரிவு மையத்தில் ரூ.60 கோடி வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என வங்கியின் துணை பொதுமேலாளர் தேவராஜ் தெரிவித்தார். 

மொபெட்டில் சென்றவர் லாரி மோதி சாவு

Posted: 28 Jun 2013 12:18 PM PDT

செங்கல்பட்டு அருகே, மொபெட்டில் சென்ற இளைஞர், லாரி மோதி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

உத்தரகண்ட் வெள்ளச்சேதம்:நிவாரண நிதி திரட்டிய பா.ஜ.க.

Posted: 28 Jun 2013 12:17 PM PDT

உத்தரகண்ட் வெள்ளச்சேதத்தில் பாதித்தவர்களுக்கு உதவ, காஞ்சிபுரத்தில் பொதுமக்களிடம் நகர பா.ஜ.க.வினர் வெள்ளிக்கிழமை நிவாரண நிதி திரட்டினர்.

ஜூலை 15-ல்  சட்டப்பேரவை கூட்டத் தொடர்

Posted: 28 Jun 2013 12:17 PM PDT

: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூலை 15-ஆம் தேதி மதியம் 12.30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்டாக் கலந்தாய்வு: மாணவர் இடஒதுக்கீடு விவரங்களை முன்னதாக வெளியிட வலியுறுத்தல்

Posted: 28 Jun 2013 12:16 PM PDT

புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களது இடஒதுக்கீடு விவரங்களை முன்னதாக வெளியிட வேண்டுமென புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக அதன் தலைவர் வை.பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஏ.எஃப்.டி. ஆலையில் மத்தியக் குழு ஆய்வு தொடக்கம்

Posted: 28 Jun 2013 12:16 PM PDT

ஏ.எஃப்.டி. ஆலையின் நிலை குறித்து, மத்திய ஜவுளித்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் வெள்ளிக்கிழமை தங்களது ஆய்வைத் தொடங்கினர்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 28 Jun 2013 12:15 PM PDT

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து இந்திராகாந்தி சிலை அருகே பா.ஜ.க.வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

பட்ஜெட் கூட்டத்துக்குப் பின்னர் வறட்சி நிவாரணம்'

Posted: 28 Jun 2013 12:15 PM PDT

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றார் புதுவை முதல்வர் என். ரங்கசாமி

மதுபானக் கடை காசாளரைத் தாக்கிய 3 இளைஞர்கள் கைது

Posted: 28 Jun 2013 12:15 PM PDT

புதுச்சேரியில் மாமூல் கேட்டு காசாளரை பாட்டிலால் தாக்கிய 3 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

4 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.45 கோடி ஒதுக்கீடு

Posted: 28 Jun 2013 12:14 PM PDT

திண்டிவனத்தில், நான்கு இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.45 கோடி ஒதுக்கி திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில் வெள்ளிக் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பாதியில் முடிந்த பேரூராட்சிக் கூட்டம்

Posted: 28 Jun 2013 12:14 PM PDT

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பஸ் நிலைய வணிக வளாகத்தை ஏலம் விடுவது தொடர்பான விவாதத்தின்போது,

புதிய மாநிலங்களவை உறுப்பினருக்கு வரவேற்பு

Posted: 28 Jun 2013 12:14 PM PDT

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.லட்சுமணன் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார்.

மழை வேண்டி பொங்கல் வைத்த பெண்கள்!

Posted: 28 Jun 2013 12:13 PM PDT

மழை வேண்டி, விழுப்புரம் மாவட்டம், பெருவங்கூரில் உள்ள ஏரியில் பெண்கள் வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பொறுப்பேற்பு

Posted: 28 Jun 2013 12:08 PM PDT

கச்சிராயப்பாளையம் காவல் உதவி ஆய்வாளராக எ.லட்சுமி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™