Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு

Posted: 28 Jun 2013 02:13 PM PDT

இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்: ""கல்கியின் "சிவகாமியின் சபதம்' ...

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Posted: 28 Jun 2013 01:11 PM PDT


அரட்டை, சேட்டை, அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத் தகவல்கள் என 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

உன் நினைவுகளை

Posted: 28 Jun 2013 11:59 AM PDT

காதல் கானல் நீர்
தாகத்தையும் தரும் ..
மோகத்தையும் தரும் ...

உன் நினைவுகளை
பதிந்து வைக்கும் ..
கணணியாகிவிட்டேன்
தேவையற்றதை ...
அழிக்கவும் முடியவில்லை ..

நீ தந்தது
நினைவு அல்ல
மரணம் .......!!!

கஸல் 178

சந்தோசப்படுவேன் ....!!!

Posted: 28 Jun 2013 11:58 AM PDT

நான் உன்
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...

மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை

உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!

கஸல்;179

காதலித்தோம் ஒரே நிமிடத்தில் ...

Posted: 28 Jun 2013 11:57 AM PDT

நான் உனது பெயரையும்
நீ எனது பெயரையும் ..
ஆயிரம் முறை கூப்பிட்டேன்
யாருக்கும் நம்மை தெரியவில்லை
காதலித்தோம் ஒரே நிமிடத்தில்
நாம் இருவரும் பிரபல்ஜம் ஆனோம் ...!!!

நீர் மேல் பந்து போல் ...
உன் நினைவுகள்
ஆடுகிறது ...

உன் கண் அழகானது
உன் வார்த்தைதான்
அழகில்லை ...!!!

கஸல் 180

அழகிய பள்ளிவாயல்கள் (MASJID WALLPAPER)

Posted: 28 Jun 2013 11:56 AM PDT

உயிரே ..உயிரே ....

Posted: 28 Jun 2013 11:54 AM PDT

உன்னைத் தெரியாதவர்களுக்கு
நீ கொடுப்பது நினைவு பரிசு ..
உன்னைத் தெரிந்த எனக்கு
உன் நினைவே பரிசு...

புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Posted: 28 Jun 2013 11:14 AM PDT

புல் நுனியோடு  பேசிடும்   புத்தம் புது  பூங்காற்று  போலவே புன்னகையோடு  பேசிடும்   புத்தம் புது  மலர்  நீயோ  ... புதிது  புதிதாய்  பூக்கும் புன்னகை மலர்கள்  மணம் வீசும் புன்னகை பூத்திடும்  நீயோ புதிதாய்  என்  மனம் வீசுகிறாய் ஏனோ ! பூக்கள்  எல்லாம்  மெல்லமாய்   பூங்காற்று  முத்தமிடுகின்றன   புன்னகை  புரியும்  நீயோ   புயலாய்  யுத்தம்  புரிவது ஏனோ  ! புரியாத  மொழிகள் பேசிடும்   புது  மழலை போலவே  நீயோ   புன்னகையில் பேசிடும்  மொழிகள்  யாவும் புரியாத  புதிராய்  என்னுள்ளே ...

66000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நமது ஈகரை கிங் மேக்கர் சிவா ஸ்டார் அவர்களை வாழ்தலாம் வாருங்கள்

Posted: 28 Jun 2013 11:05 AM PDT

66000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நமது ஈகரை கிங் மேக்கர் சிவா ஸ்டார் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் வாழ்துக்கள் சிவா ஸ்டார் உங்களின் பயனுள்ள பதிவுகள் இன்று போல் என்றும் தொடரட்டும் அண்ணா

கீதை 11 விஸ்வ ரூப தரிசன யோகம் !

Posted: 28 Jun 2013 10:56 AM PDT

கீதை 11 : 1 அர்ச்சுணன் கூறுகிறார் : மிக உயர்ந்ததும் ரகசியமானதும் ஆன்மாவைதேற்றுவதுமான உபதேசங்களை என் மீது தயவுகூர்ந்து அருளினீர்கள் ! அதைக்கேட்டதனால் எனது அஞ்ஞானம் அகன்றது ! கீதை 11 : 2 தாமரைக்கண்ணா ! எல்லா படைப்பினங்களின் உற்பத்தி மற்றும் அழிவு தொடர்பான ஆழமான விவரங்களை அறிந்துகொண்டேன் ! அத்தோடு எல்லையற்ற உமது மஹிமையையும் உணர்ந்துகொண்டேன் ! கீதை 11 : 3 சகலவற்றின் அதிபதியே ! ( பரமேஸ்வரா ) கடவுளின் உன்னதமான வெளிப்பாடே ! ( நாராயணனே ) சகல உருவங்களின் மொத்த சொருபமான புருஸோத்தமரே ! இப்போது உங்களது ...

தண்ணீரில் கோலமிட

Posted: 28 Jun 2013 10:53 AM PDT




உன்னால் மட்டும்தான் முடியும்

விழியால்
புள்ளி வைத்து
விரலால் கோலமிட

தண்ணீரில்..!!!

- வித்யாசன்

எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)

Posted: 28 Jun 2013 10:39 AM PDT

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

(150 வரிகளைக்கொண்ட கவிதை தொடரும் )

நண்பேண்டா ...!!!

Posted: 28 Jun 2013 10:14 AM PDT

தோள் கொடுக்க தோழனும்...
தோள் சாய தோழியும் ...
கிடைத்தால் ...
தோழன் எனக்கு தந்தை
தோழி எனக்கு தாய் ...!!!
நட்பால் மட்டும் தான் ...
இது சாத்தியமாகும் ...!!!

நீ சிரிக்கும் சிரிப்பை ..

Posted: 28 Jun 2013 10:07 AM PDT


பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்...
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும்
சிரித்துக் கொண்டே இருங்கள்...!
சிரிப்பதை புரிந்தவன் முன்னால்..
சிரியுங்கள் ..
நீ சிரிக்கும் சிரிப்பை ..
பலகோணத்தில் பார்ப்பதற்கு ..
கழுகு கண்கள் நிறைய உன் முன்...!!!

மனம் இல்லையா..!

Posted: 28 Jun 2013 10:02 AM PDT

நான் பேச வேண்டுமென்று - உன் மொழிகளை தந்தாய்..! நான் பார்க்க வேண்டும் என்று - உன் விழிகளை தந்தாய்..! நான் எழ வேண்டும் என்று - உன் கரங்களை தந்தாய்..! இவையாவையும் தந்த உனக்கு - நான் உயிர் வாழ வேண்டும் என்று உன் காதலை தர மனம் இல்லையா..!

நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Posted: 28 Jun 2013 09:53 AM PDT

இறைவனின் தொண்டர்களை நாளும், கோளும் என்ன செய்துவிடும்? அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாமோ நாளையும் கோளையும் கண்டு நடுநடுங்குகிறோம். நாளும் நட்சத்திரமும் நம்மைக் கோழைகளாக்க அனுமதிக்கிறோம். நட்சத்திரங்களிடமும், கிரக நிழல்களிடம் பிச்சைக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறோம். ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தால் இது நன்றாக விளங்கும் என்று நினைக்கிறேன். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்களுக்கு, மாதத்திற்கு 28 நாட்கள், இந்த 28 நாட்களில் 14 நாட்கள் நல்ல நாட்கள் இல்லை. இந்தப் பதினான்கு நாட்களிலும் ...

Krish3

Posted: 28 Jun 2013 09:52 AM PDT

இந்தியாவின் முதல் வெற்றிகரமான சூப்பர்ஹீரோ க்ரிஷ். அமெரிக்காவின் சூப்பர்ஹீரோக்களுக்கு இணையான பலம் பொருந்திய க்ரிஷ் முழுக்க ஒரு சுதேசி படைப்பு. க்ரிஷின் முதலிரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஹிருத்திக் ரோஷனுக்கு க்ரிஷ் வெற்றிப்படம் மட்டுமல்ல, இன்று அவரது சினிமா வாழ்க்கையில் க்ரிஷ் ஓர் அடையாளம். ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் முதலிரண்டு பாகங்களையும் போல் மூன்றாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். இந்த வருட இந்தி சினிமாவின் பிரமாண்ட படங்களுள் க்ரிஷ் 3 ம் ஒன்று. நவம்பர் ...

தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...

Posted: 28 Jun 2013 09:50 AM PDT

அன்பர்களே, தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்... அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்... முதலில் இது... கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும். மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும். இதனுடன் ...

காதல்..!

Posted: 28 Jun 2013 09:44 AM PDT

காதல் ஒரு கனவு ரசனையுடன் காண்கிறேன் - நீ அதில் வருவதால்...! காதல் ஒரு வலி சுகமாய் அனுபவிக்கிறேன் -நீ   தருவதால்..! காதல் ஒரு சிலுவை இன்பமாய் சுமைக்கிறேன் - நீ என்னுள் இருப்பதால்..! காதல் ஒரு கடல் ஆனந்தமாய் மூழ்குகிறேன் - உன்னில் மூழ்குவதால்..! காதல் ஒரு காடு தொலைந்து போகிறேன் - உன்னை அடைய போவதால்..! காதல் ஒரூ  தீ எரிந்து  சாம்பாலகுகிறேன் - நீ எரிப்பதால்..! காதல் ஒரு மரணம் தெரிந்தும் நேசிக்கிறேன் - அதை தருவது நீ என்பதால்..! இவை ...

மனிதனும் விலங்கும்(படித்ததில் பிடித்தது)

Posted: 28 Jun 2013 09:36 AM PDT

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே  கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக்  காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி ...

கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted: 28 Jun 2013 09:24 AM PDT

கனிமொழியில் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த  மாநிலங்களவை தேர்தலில்  தேமுதிக பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏனெனில்  இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அ.தி.மு.க. அரசு அதிக ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின் ...

ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!

Posted: 28 Jun 2013 09:16 AM PDT


சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்தங்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றி சென்றது ஏன்
ஆண் மழையே!
நீயும் என் காதலனாய்?

உறவு பகை!

Posted: 28 Jun 2013 08:53 AM PDT

வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. இன்னும் நான்கு நாட்களில் மதிவதனிக்கு திருமணம்; உறவினர் வர தொடங்கினர். அனைவரும் சந்தோஷமாய் பேசி, சிரித்து, மணப்பெண்ணை கிண்டலடித்து என, நேரம் சென்று கொண்டிருந்தது. ஆனாலும், தன்னுடைய அம்மாவின் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை என்பதை கவனித்த மதிவதனி, துணுக்குற்றாள். என்னவாக இருக்கும் என்று குழம்பியவள், அம்மாவிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாள். ""அம்மா உன்கிட்ட பேசணும்... மொட்டை மாடிக்கு வா,'' சொன்னவள் நொடியும் தாமதிக்காமல், மரகதத்தை இழுத்துக் கொண்டு ...

எழுதுவதற்கொன்றுமில்லை......

Posted: 28 Jun 2013 08:43 AM PDT

எழுதுவதற்கு எதுவும் இல்லாத இரவுகள் கொடூரமானவை காதலை எழுதி, எழுதி சலித்து நேசங்களை தொலைத்தாயிற்று கான்கிரீட் அறைகளில் அமர்ந்து கொண்டு இயற்கையை எழுதுவதென்பது கல்லறைக்குள் படுத்துக்கொண்டு காற்றை தேடுவது போலானது. சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட காலத்தில் சுதந்திரம்,சமூகம் பற்றியும் எழுதுதல் முறையன்று. போகம், ரோகம் என எதுவும் சுகிக்காமல் வாழ்க்கையை எழுதி என்ன பயன்? கண்ணிவெடிகள் புதைந்திருக்கும் பூமியில் வாழ்வைக் கழித்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி என்ன எழுதுவது. எழுதுவதற்கு ...

மகாபாரதத்தில் பிராமண எதிர்ப்பு?!

Posted: 28 Jun 2013 08:25 AM PDT

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்னும் சொற்றொடர் நமக்கு நன்கு பொருந்தும் என சொல்லலாம். மத புத்தகம் சார்ந்த விடயங்களை அதன் மூலம், அக்காலம் முதல் இப்போதைய மொழி பெயர்ப்புகள் சார்ந்து கற்பதில் நமக்கு நாட்டம் உண்டு. அவை அனைத்தும் அக்கால மனிதர்களின் சிந்த்னையை பிரதி பலிக்கிறது என்பதால் , மொழி பெயர்ப்புகளில் பல மாற்றம் செய்து இப்போதும் பொருந்தும் வண்ணம் மறைத்து, திரித்து விளக்கம் கொடுப்பதுதன் மத விளம்பரதாரிகளின் வேலை என் நாம் அறிவோம். தமிழகத்தை பொறுத்தவரை நாத்திகம் என்னும் இறைமறுப்பு ...

சென்னையில் நிர்வாணத் திருடன்; பெண்கள் பீதி

Posted: 28 Jun 2013 08:15 AM PDT

சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் நள்ளிரவில் நிர்வாணமாக ஒருவர் அங்குள்ள வீடுகளில் திருடி வந்ததை பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த திருடன் ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி கார்டன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் கைவரிசை காட்டி வருகிறான். வீடுகளுக்கு வெளியில் காம்பவுண்டு சுவருக்கு ...

முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!

Posted: 28 Jun 2013 07:55 AM PDT

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம். தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, ...

ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு

Posted: 28 Jun 2013 07:48 AM PDT

இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., திகழ்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் உள்ள கிரேடு பி (ஜெனரல்) டைரக்ட் ரெக்ரூட்மெண்ட் பிரிவிலான 98 அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின் ...

அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி

Posted: 28 Jun 2013 07:44 AM PDT

தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கமானதாகவே இருந்து வருகிறது. இதன்படி தி.மு.க.,வில் இருந்து பரிதிஇளம்வழுதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி ஆகியோர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விலகல் மேற்கண்ட கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ.,வை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரிதியை பொறுத்தவரை ...

சுகபோக வாழ்வளிக்கும் சுக்கிராசார்யார் !

Posted: 28 Jun 2013 07:37 AM PDT

மனித வாழ்வில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. சிலருக்குத்தான் கிடைக்கின்றன.  அப்படிக் கிடைத்த அந்தச் சில பேர்களிலும்  எல்லோரும் பேரும் புகழும் பெற்று இருப்பதில்லை. மிகவும் குறைவாக, ஒருசிலர்தான் பேரும் புகழும் பெற்று விளங்குவார்கள். அட!  மனிதர்களுக்குத்தான் இப்படியென்றால், நவகிரகங்களுக்குக்கூட இதே நிலைதான் போலிருக்கிறது. யாருக்காவது ஏதாவது வசதி, வாய்ப்பு கிடைத்து விட்டால் எதிர்பார்த்ததோ- எதிர்பாராமலோ, எப்படியாயினும் சரி, உடனே நாம், ''அவனுக்கு என்னப்பா! சுக்கிர தசை சுருட்டிக்கிட்டு ...

மலை, நீருக்கு அடியில் பிரமாண்ட ஹோட்டல் : சாதனையின் படங்கள்!

Posted: 28 Jun 2013 07:13 AM PDT

சீனாவின் சொங்ஜியாங் மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கற்சுரங்கமொன்றில் 345 மில்லியன் பவுண்ட் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இத்திட்டம் தொடர்பான வரைபடம் மற்றும் படங்கள் பார்ப்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அட்கிண்ஸ் நிறுவனமே இதனை வடிவமைத்துள்ளது. தற்போது நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 19 இற்கும் மேற்பட்ட மாடிகளையும் 380 அறைகளையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. நன்றி ...

நீ..!

Posted: 28 Jun 2013 07:11 AM PDT

உன் மனதை சிறை செய்ய நினைத்தேன் பின்பு தான் தெரிந்தது - என் மனம் உன்னிடம் சிறைப் பட்டுள்ளது என்று ....! கோடைக் காற்றும் குளிருகிறது -அதில் உன் மூச்சுக் காற்று இருப்பதால் ....! ஊரெல்லாம் வாயடி பெண் என்று பெயர் எடுத்த நான் உன் முன்னால் மட்டும் ஊமை ஆகிவிடுகிறேன்....!

15000 பதிவுகளிட்டும் பதறாமல் தொடரும் கவிதைப்பேரரசர் பூவேந்திரனை வாழ்த்தலாம் வாருங்கள்

Posted: 28 Jun 2013 07:09 AM PDT







வாழ்த்துக்கள் பூவன்.

நான் மோசமான கணவன் - தனுஷ்

Posted: 28 Jun 2013 07:08 AM PDT

ராஞ்சனா படத்தின் வெற்றியை சில வடஇந்திய ஊடகங்களால் ‌ஜீரணிக்க முடியவில்லை. இந்தி சினிமாவில் நடிக்கிற பர்சனாலிட்டி உங்களுக்கு கிடையாது தெ‌ரியுமா என்று தனுஷின் முகத்துக்கு நேராகவே கேள்வி என்ற பெய‌ரில் கணை தொடுக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இங்கேயும்தானே உதாசீனப்படுத்தினார்கள். தனுஷ் டோண்ட் கேர் மனநிலையில் எல்லா கேள்விக்கும் பதிலளிக்கிறார். அப்படிதான் இந்தப் பதிலையும் கூறினார்.ஐ யம் ஏ பேட் ஹஸ்பண்ட். சினிமாவை ஓய்வே இல்லாமல் துரத்திக் கொண்டிருப்பதால் மனைவியையும், குடும்பத்தையும் ச‌ரிவர கவனிக்க ...

2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்

Posted: 28 Jun 2013 07:00 AM PDT

2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்   வாழ்துக்கள் பூவன் இன்று போல் என்றும் நிறைய காதல் கவிதைகள் படைத்து ஈகரையை சிறப்பிக்க வேண்டுகிறேன்

ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!

Posted: 28 Jun 2013 06:53 AM PDT

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே (திருமந்திரம் - 462) திருமூலர் திருமந்திரத்தில் "கரு உற்பத்தி" என்ற தலைப்பில் இப்படிப் பாடியுள்ளார். இதன் பொருள்: காதலர் இருவரும் உடலுறவு கொள்ளும்பொழுது ஆண் ஆகியவனுக்கு வலது பக்க மூச்சு அதிகமாகச் சென்றால் கருவுற்றுப் பிறப்பது ஆணாகப் பிறக்கும். பெண்ணாகியவளுக்கு இடதுபுற மூச்சு அதிகமாகச் சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு ...

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Posted: 28 Jun 2013 06:45 AM PDT

தமிழ் கருத்துக்களங்களில் நாங்கள் தான் முன்னணியில் உள்ளோம், என ஓரிரு உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றுத்தனமாக பேசிக்கொண்டு திரியும் தளங்களையெல்லாம் புறந்தள்ளி எந்த ஆரவாரமும் இன்றி முன்னேறிவருகிறது நம் தளம். அதில் ஒரு சாதனையாக இன்றுடன் நமது தளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது. ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக நிற்கும், அட்மின்கள், நிர்வாக உறுப்பினர்கள், ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் ஈகரை பற்றியும், ...

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?

Posted: 28 Jun 2013 06:37 AM PDT

நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது. இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது. உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.   ஒருவரின் கைப்பக்குவம் ...

விரைவில் வருது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்

Posted: 28 Jun 2013 06:33 AM PDT

நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று ...

தனிஓசை

Posted: 28 Jun 2013 06:27 AM PDT

தனிஓசை வசந்தத்தின் வாசல்களை தொடமுடியாத சிறகொடிந்த பறவை இது இது ஏனோ எதற்க்கோ கூவிதிரிகிறது.. அதன் மனதிற்க்குள் அழும் ஓசை ஒற்றைபுல்லாங்குழலாகிறது..... அந்த அடர்ந்த வனத்திற்க்குள்ளே சூரியனின் ஒளிச்சேர்க்கை இன்னும் ஏனோ தொடமுடியாத தூரத்தில் இளவேனிற்காலத்தின் இருண்ட இரவில் நம்பிக்கை மட்டுமே அதற்க்கு வெளிச்சமாய்.. அது பாடும் பாடல் எல்லாம் அன்பே உன்பெயர்தானே....!

பத்தாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதிற்கு வாழ்த்துகள்!

Posted: 28 Jun 2013 06:27 AM PDT


வாழ்த்துகள் நண்பா! மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாகட்டும்!

22000 பதிவுகள் கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....

Posted: 28 Jun 2013 06:19 AM PDT

22000 பதிவுகள் கடந்த உங்களுக்கு  வாழ்த்துக்கள்  அண்ணா  , மேலும்  பல  லட்சங்கள் கடக்க வாழ்த்துக்கள் 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™