Tamil News | Online Tamil News |
- ஆறாவது இடத்துக்கு போட்டியிட்ட தே.மு.தி.க., தோல்வி : ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - இந்திய கம்யூ., வெற்றி
- காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துங்க: பா.ஜ., கட்சியினருக்கு மோடி கட்டளை
- உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு
- நடுவழியில் நிற்கும் காங்., அனுப்பிய நிவாரண பொருள் லாரிகள்
- விஜயகாந்த் போட்ட சொதப்பல் "பிளான்' : ஓட்டு போட படாத பாடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள்
- பா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு முடிவு: கட்சி நிர்வாகிகளிடம் 1ம் தேதி முதல் விசாரணை
- தமிழகத்துக்கு 90 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை : கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கைவிரிப்பு
- "கிளாசிக்' பேருந்துகள் "பிரேக் டவுன்': இனி புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு இடமில்லை
- ஐந்து பிரிவுகளுக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
| Posted: சென்னை : தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை, தேர்வு செய்வதற்கு, நேற்று நடந்த தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க., வேட்பாளர்கள், நான்கு பேர், இந்திய கம்யூ., வேட்பாளர், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றனர். ஒரு எம்.எல்.ஏ., செல்லாத ஓட்டு போட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடத்தின், தரை தளத்தில், சட்டசபை குழுக்கள் கூடும் இடத்தில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.ஆறு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ... |
| காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துங்க: பா.ஜ., கட்சியினருக்கு மோடி கட்டளை Posted: மும்பை : அடுத்த லோக்சபா தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிரா மாநில பா.ஜ., தலைவர்களுடன், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், "காங்கிரஸ் அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள்; பல மாநிலங்களில், பா.ஜ., தந்துள்ள நல்லாட்சி பற்றி மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்' என, கட்சியினரை, முதல்வர் மோடி வலியுறுத்தினார். மோடிக்கு பதவி: கோவாவில், சமீபத்தில் நடந்த, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான கட்சியின், தேர்தல் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ... |
| உத்தரகண்டில் சிக்கியவர்களை மீட்பதில் மற்ற மாநிலங்களை விட வேகம் காட்டிய தமிழக அரசு Posted: உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில், சிக்கிய பயணிகளை மீட்பதில், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழக அரசு காட்டிய வேகம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. களம் இறங்கிய அரசுகள்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அம்மாநிலத்திற்கு புனித பயணமாக சென்ற எண்ணற்ற சுற்றுலா பயணிகள், ஆங்காங்கே சிக்கினர். அவர்கள் எந்தப் பகுதியில், சிக்கித் தவிக்கின்றனர் என்ற விவரம் கிடைப்பதே, முதலில் சிரமமாக இருந்தது. இருந்தாலும், பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் புனித யாத்திரை சென்றிருந்ததால், அவர்களை ... |
| நடுவழியில் நிற்கும் காங்., அனுப்பிய நிவாரண பொருள் லாரிகள் Posted: ரிஷிகேஷ்:உத்தரகண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள், சரியான வழிகாட்டுதல் இல்லாததால், மலைப்பகுதியில் ஆங்காங்கே நடுவழியில் நிற்கின்றன. இது போன்று நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட நூற்றுக்கணக்கான லாரிகளை, காங்., தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுலும் கொடியசைத்து துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. உத்தரகண்ட் வெள்ளத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மலை பகுதிகளில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர். ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ... |
| விஜயகாந்த் போட்ட சொதப்பல் "பிளான்' : ஓட்டு போட படாத பாடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் Posted: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்ட திட்டத்தால், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போட சென்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், படாத பாடுபட்டனர். ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக ஓட்டளிக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க., இழுக்க கூடும் என்ற தகவல், நேற்று முன்தினம் இரவு, தே.மு.தி.க., தலைமைக்கு கிடைத்தது.உஷார் அடைந்த கட்சி தலைமை, நேற்று காலை, 8:30 மணிக்கே, கட்சி அலுவலகத்திற்கு வருமாறு எம்.எல்.ஏ.,க்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட, 21 எம்.எல்.ஏ.,க்கள், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். ... |
| பா.ம.க.,விடம் ரூ.100 கோடி இழப்பீடு வசூலிக்க அரசு முடிவு: கட்சி நிர்வாகிகளிடம் 1ம் தேதி முதல் விசாரணை Posted: சென்னை:வட மாவட்டங்களில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடாக, 100 கோடி ரூபாய் வரை, பா.ம.க.,வினரிடம் வசூலிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஜூலை, 1ம் தேதி முதல், விசாரணைக்கு வருமாறு, பா.ம.க.,வினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இந்த விழாவிற்கு சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கிடையே, மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதன் மீதான, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் ... |
| தமிழகத்துக்கு 90 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை : கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கைவிரிப்பு Posted: பெங்களூரு : ""பருவ மழை காரணமாக, கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தாலும், 90 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு திறந்து விட வாய்ப்பில்லை என்று, காவிரி கண்காணிப்பு குழுவிடம், திட்டவட்டமாக கூறியுள்ளோம்,'' என, கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் கூறினார். நிருபர்களிடம், அவர் கூறியதாவது:வழக்கமாக, கர்நாடகாவில், அணைகள் முழுவதுமாக நிரம்பிய பின்னரே, தண்ணீர் திறந்து விடப்படும். காவிரி நதிநீர் நடுவர்மன்றம் நிர்ணயித்தபடி, மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை, திறந்து விடுவது இயலாத காரியம். நடுவர் மன்றத்திடமும், சுப்ரீம் கோர்ட்டிலும், எங்கள் ... |
| "கிளாசிக்' பேருந்துகள் "பிரேக் டவுன்': இனி புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு இடமில்லை Posted: புதிதாக இயக்கத்திற்கு வரவுள்ள, "கிளாசிக்' பேருந்துகள், புனரமைக்கப்பட்ட பேருந்துகளாக இல்லாமல், புதிய பேருந்துகளாக தயாரிக்க வாய்ப்புள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். சென்னை - ஸ்ரீரங்கம் வழித்தடத்தில், உணவு பரிமாறுதல் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய, "கிளாசிக்' பேருந்துகள், கடந்த, 20ம் தேதி இயக்கத்திற்கு வந்தன. மூன்றே நாட்களுக்குள், இந்த பேருந்துகளில், ரேடியேட்டரில் ஏற்பட்ட பழுதால், அடுத்தடுத்து "பிரேக் டவுன்' ஆகி நின்றன.திருச்சி பணிமனையைச் சேர்ந்த இந்த பேருந்துகள், பாதி வழியில் நின்றதற்கு, பராமரிப்பு பணியை முறையாக மேற்கொள்ளாததே ... |
| ஐந்து பிரிவுகளுக்கு மேல் இருந்தால் கடும் நடவடிக்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு எச்சரிக்கை Posted:
சென்னை:""மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார். அறிக்கையில் தகவல்: அவரது அறிக்கை:மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 28,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |