Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்

Posted: 27 Jun 2013 11:14 AM PDT

ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர். திருவள்ளுவர் 'விருந்து' என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார். ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால். "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே" என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது. கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த ...

என் தமிழ் பசிக்கு கிடைத்த விருந்து இந்த ஈகரை.

Posted: 27 Jun 2013 09:59 AM PDT

நல்ல தமிழ் பதிவுகளை பல பிரிவுகளில் கொடுத்தமைக்கு

நன்றி நன்றி நன்றி அருமையிருக்கு

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with photos :)

Posted: 27 Jun 2013 09:02 AM PDT

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப்  அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு தொடர்ந்து படியுங்கோ முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று ...

Vijai டி‌வி இல் நம் தளத்தைப்பற்றி பேசினார்கள் :)

Posted: 27 Jun 2013 08:54 AM PDT

ஆமாம் , சந்தோஷமான செய்தி ஒன்று சொல்லணும் நண்பர்களே! இன்று சாயங்காலம் நாங்கள் vijai டி‌வி பார்த்துக்கொண்டிருந்தோம் அப்போது 'என் தேசம் என் மக்கள் ' என்று ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது, அதில் பேசிய ஒரு ஆசிரியை பேச்சின் நடுவில் தமிழ் ஆசிரியர்களின் நிலமை குறித்து பேசும் போது, ' நம் ஈகரையை ' பற்றியும் சிலவார்த்தைகள் சொன்னார்கள். யாரும் பார்த்தீர்களா? ரோமன் எழுத்துகள் கூட தமிழிலிருந்து வந்தது என்று சொல்லும் கட்டுரை ஏதாவது இங்கு இருக்கிறதா நண்பர்களே? அத்தப்பற்றித்தான் அவங்க சொன்னாங்க, ஆனால் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 27 Jun 2013 08:32 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் ஈகரை

Posted: 27 Jun 2013 08:20 AM PDT

என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் ஈகரை என்று ஒரு வெப்சைட் உள்ள்து என்று ஒரு ஆசிரியர் கூறினார்.

திருப்பதி வெங்கட் ரமணா

Posted: 27 Jun 2013 07:56 AM PDT

நேற்று எதிர்பாராமல் , திருப்பதி போக கூடிய ஸந்தர்பம் அமைந்தது. காலை 4-15 மணிக்கு கிளம்பி ,மாலை 6-45 மணிக்கு வந்து சேர்ந்தோம்.சென்னை-திருப்பதி -திருச்சானூர். இன்னோவா வண்டி , திறமையான ஓட்டுனர், தமிழ்நாடு ரோடுகள் நன்றாகவே உள்ளன . முதியோருக்கு தனி சலுகை. Battery காரில் கூட்டிவந்து Q வரிசையில் நிற்க வைக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அடையாள சீட் இருக்கவேண்டும்.TTD சட்டப்படி 65 வயதுக்கு மேல்தான் முதியோர் என கருத படுகின்றனர் இலவச தரிசனம்.தான். 8-45 மணிக்கு முதியோர் க்யூ வரிசையில் நின்று ,10-45 ...

இது கொஞ்சம் புதிசு ...

Posted: 27 Jun 2013 07:20 AM PDT

உணவு வேகும்
உடல் வேகும்
+தீ +

********
உயிர் தந்தாய்
மூச்சு தந்தாய்
+நீ +

********

ஈரமிருக்கு
இரக்கமில்லாதது
+நா +

********
நீ
நான்
+காதல் +

**********

போ
நில்
+பிரிவு+

*********

EEGARAI FLASH NEWS

Posted: 27 Jun 2013 07:18 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

Posted: 27 Jun 2013 06:41 AM PDT

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். "முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் ...

கடி ஜோக்ஸ்

Posted: 27 Jun 2013 06:39 AM PDT

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! நீங்க வேற... பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். *************************************** இரு மாணவர்கள் பேசிக்கொன்டது: கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா? தெரியலையே... ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்! ***************************************** இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது: பாத்திரக் கடைக்கு வேலைக்கு புதுசா ஒரு பையனை சேர்த்தீங்களே, எப்படி ...

சிறு கவிதை

Posted: 27 Jun 2013 06:38 AM PDT

ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம்
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதனையாளனாகலாம் ...!!!
***********

கலங்காதே கண்ணே ...

Posted: 27 Jun 2013 06:37 AM PDT

காலங்கள் மாறலாம் ...
கனவுகள் மறையலாம்....
கவிதைகள் மாறலாம் ....
என உயிர் பிரியலாம் ...
பிரிந்த உயிர் காற்றோடு ....
வந்து கலப்பேன் உன்னோடு...
கலங்காதே கண்ணே ...
கைவிடுவேன் என்று .......!!!

நட்பு என்றால் உயிர் தரும் ,,,,!!!

Posted: 27 Jun 2013 06:37 AM PDT

பூக்கள் என்றால் வாசம்...!
காதல் என்றால் நேசம்...!
அம்மா என்றால் பாசம்..!
நட்பு என்றால் சுவாசம்...!

அழகு என்றால் அழியும் ..!
காதல் என்றால் பிரியும் ...!
பாசம் என்றால் விலகும் ..!
நட்பு என்றால் உயிர் தரும் ,,,,!!!

பிறகு என்ன ..? சந்தோசப்படு ..!!!

Posted: 27 Jun 2013 06:36 AM PDT

உன் முதுகுக்கு
பின்னால்
புறம் பேசுபவர்களை பற்றி
ஏன் கலலைப்படுகிறாய் ..
யோசித்தாயா நீ அவர்களுக்கு
முன்னாள் தான் நிற்கிறாய் ...!!!
பிறகு என்ன ..?
சந்தோசப்படு ..!!!

நமக்குள் பிரிவா ...?

Posted: 27 Jun 2013 06:35 AM PDT

நமக்குள் பிரிவா ...?
யார் சொன்னது ...
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன் இருப்பேன் ..!!!
உயிருள்ளவரை காதலும் ..
இருக்கும் ...!!!

கே .இனியவன் சென்றியூ ...

Posted: 27 Jun 2013 06:35 AM PDT

புத்தாடை நெய்யும் நெசவாளி வேட்டியில் +கந்தல் + *********************************** மாட்டு வண்டி ஒட்டி நாளைய விமானி +பயிற்சி + ************************************ வானம் கட்சி மாறியது +அந்திவானம் + ************************************ பெட்டி செய்தவர் பெட்டிக்குள் சடலமாய் +பிணப்பெட்டி + *********************************** நடிகை வரமுன் வந்தது +ஒப்பனை பெட்டி +

richness about worlds oldest language Tamil -தமிழ் மொழி தொன்மை

Posted: 27 Jun 2013 06:06 AM PDT

கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.மு. ...

உத்தரகாண்டை தொடர்ந்து ஒடிசா தத்தளிப்பு, 1,731 வீடுகள் மூழ்கின

Posted: 27 Jun 2013 06:04 AM PDT

உத்தரகாண்டை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்‌டர் கோவிந்த் சந்த்ராஷெட்டி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள காலம்பூர், ஜூனாகர்க் மற்றும் ஜெய்பட்னா ஆகிய மண்டலத்தில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 1,731 வீடுகள் சேதமடைந்துள்ளது, சுமார் 63 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் வசித்து வந்த 30 ஆயிரம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர். ...

உத்தரகண்டில் மலை மலையாக பிணங்கள் எரிப்பு

Posted: 27 Jun 2013 05:59 AM PDT

இயற்கை சீற்றத்தால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்திற்கு ஆளான உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்லாயிரகணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், மலை மலையாக குவிந்திருக்கும் பிணங்கள் மொத்தமாக எரிக்கப்படுவது நேற்றுமுதல் துவங்கியது. பலாயிரக்கணக்கான ஆன்மீக யாத்ரீகள் குவிந்த கேதார்நாத் பகுதியில் நேற்று மதியம் நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் மொத்தமாக எரிக்கப்பட்டதாக தெரிகிறது. சடலங்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவலை தர அதிகாரிகள் மறுத்தாலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் சடலங்கள் அழுகுவதால்,இதனால் ...

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது

Posted: 27 Jun 2013 05:49 AM PDT

சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கனடா வாழ் ஈழத் தமிழர் ஒருவர் தயாரித்த திரைப்படமொன்றுக்கு உயர்விருது அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் கலாசார சதுக்கத்தில் 16வது சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த திரைப்பட விழாவில் உலகெங்கிலுமிருந்து 1600க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து 12 திரைப்படங்கள் உயர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்தன. இதில் கனடா வாழ் ஈழத்தமிரான லெனின் எம்.சிவம் அவர்களது இயக்கத்தில் உருவான த கன் என்ட் த ரிங்க் ...

ராஜ்யசபா தேர்தல்: வெற்றி பெறப் போவது யார்?

Posted: 27 Jun 2013 05:44 AM PDT

தமிழகத்தில் இன்று நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் 6 சீட்களில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4 அ.தி,மு.க., எம்.பி.,க்கள் வெற்றி பெறுவதும், இந்த கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த டி. ராஜா ஆகியோரது வெற்றி உறுதியாகி விட்டது. ஆனால் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் இளங்கோவன் ஆகியோரது வெற்றி மட்டும் ஓட்டு எண்ணி முடிக்கும்வரை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளது. அதே நேரத்தில் தி.மு.க,வுக்கு இந்த கட்சியின் ...

ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’

Posted: 27 Jun 2013 05:41 AM PDT

புதுடில்லி: குர்கானில் இரவு நேர கிளப்புக்கு சென்று விட்டு திரும்பிய 2 பெண்கள் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவில் ஒரு திகில் கதை போல நிஜமாகவே நடந்திருக்கிறது . ஏற்கனவே டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போல் இந்த சம்பவமும் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது. டில்லி அருகே மேக்ராலி - குர்கான் ரோட்டில் உள்ள கிளப்புக்கு 27 வயது மதிக்கத்தக்க 2 பெண்களும் டில்லி திரும்பினர். இந்த வழியாக சென்ற ஒரு வெள்ளை நிற காரை மறித்து லிப்ட் கேட்டனர். ...

நான் படும் வேதனையை நீயும் படுகிறாயா ...?

Posted: 27 Jun 2013 05:36 AM PDT

நிஜமாக பேச நீ ..
வருவதில்லை ...
நினைவோடு தான்
பேசவும் முடியவில்லை...
கனவோடு பேசலாம்
என்றால்?
உன் நினைவுகள்
என்னை தூங்க
விடுவதில்லை...!
நான் படும் வேதனையை ..
நீயும் படுகிறாயா ...?

தமிழர்கள் கவனத்திற்கு

Posted: 27 Jun 2013 05:34 AM PDT

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்களின் போது மட்டும் ஃ…
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று

நன்றி ………..ஒரு தமிழன் படைப்பு

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி? பின்னணி அம்பலம்

Posted: 27 Jun 2013 05:25 AM PDT

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க, கூட்டணி தொடர்பான, சில நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது. அதை தி.மு.க., தரப்பு ஏற்றுக் கொண்டதால், காங்கிரஸ் தன் ஆதரவை தி.மு.க.,வுக்கு அளித்து உள்ளது. டில்லி, ரகாப்கஞ்ச் சாலையில் உள்ளது, "வார் ரூம்' எனப்படும் போர் அறை. அங்கு வைத்து தான், காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முடிவு எடுக்கப்படுவது வழக்கம். ஆலோசனை: இம்மாதம், 14ம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல், சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்ட ...

வணக்கம்

Posted: 27 Jun 2013 05:24 AM PDT

இணய உறவுகளுக்கு வணக்கம். இதுவரை Blogger, Wordpress, Geocities, googlepages போன்ற தளங்களில் எழுதிவந்தேன். தற்பொழுது அனைத்தையும் ஒருங்கே அமைக்கும் முயற்சியே இந்த ஈகரை தமிழ் களஞ்சியம். உறுப்பினராக அங்கத்துவம் பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
சிவா

ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..

Posted: 27 Jun 2013 05:23 AM PDT



பார்பதற்கு ஒரு ஓவியம் போல இருக்கும் இந்த ஓவியத்திற்குள் பல உருவங்கள் உள்ளன. ஓவியக்கலைஞரின் அற்புதமான படைப்பை
நீங்களும் பாருங்கள்.

வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி

Posted: 27 Jun 2013 05:22 AM PDT

தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் அழகிரியிடம், ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. அழகிரியின் பதில், கோர்ட் ஹாலில் இருந்த, வழக்கறிஞர்களை சிரிப்புக்கு உள்ளாக்கியது. மதுரை, லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், அழகிரி போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மோகன் போட்டியிட்டார். அழகிரியின் தேர்தலை எதிர்த்து, ஐகோர்ட்டில், மோகன் மனுத் தாக்கல் செய்தார். மனு நிலுவையில் இருக்கும் போது, மோகன் மரணமடைந்தார். மனுத்தாக்கல் இதையடுத்து, ...

கனிமொழிக்கு கருணாநிதி ஓட்டளித்தார்

Posted: 27 Jun 2013 04:47 AM PDT

சென்னை : தலைமை செயலகத்தில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு கட்சி தலைவர் கருணாநிதி இன்று ஓட்டளித்தார். தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர்.

500 வருடக்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’

Posted: 27 Jun 2013 04:39 AM PDT

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் ...

ஈகரை உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும்

Posted: 27 Jun 2013 04:27 AM PDT

ஈகரை உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும்

எனது மேல் அதிகாரி இதய நோய்னால் கிறீம்ஸ் ரோட் இல் உள்ள அப்போலோ மருத்துவமனை இல் அனுமதிக்க பட்டுள்ளார் அவருக்கு உடனடியாக 0- ரதம் தேவை படுகிறது. 0- ரதம் கிடைப்பது மிகவும் அரிது நண்பர்கள் தங்கள் யாராவது அவருக்கு உதவ முடியுமா. எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை உதவுங்கள் நண்பர்களே.

உரிமை உடன் போப்ஷன்

தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA)

Posted: 27 Jun 2013 03:38 AM PDT

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தமிழீழ அணி தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் ...

என்றென்றும் புன்னகை ...!

Posted: 27 Jun 2013 03:18 AM PDT



அதிசயத்திற்கு உயிரூட்டும்
அவள் கண்கள்

அன்பிற்கு பயிரூட்டும்
அவள் வாசம்

அத்தனைக்கும் ஆசைப்படு என்று
விதையாகி வீழ்ந்தேன்

வீதியை அலங்கரிக்கு
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...!

அது தான் நட்பு

Posted: 27 Jun 2013 02:56 AM PDT

நண்பா ...
நான் உன் பிரதி விம்பம்
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு

ஒடுபாதையில் விமான இஞ்ஜின் வெடிக்கும் காட்சி - காணொளி

Posted: 27 Jun 2013 02:56 AM PDT



பிரியும் வரை தெரியாது

Posted: 27 Jun 2013 02:48 AM PDT

விடியும் வரை தெரியாது
கண்டது கனவு என்று...
அதுபோல் தான்
காதலும் ...
பிரியும் வரை தெரியாது
நான் உன் மீது வைத்த
காதலின் ஆழத்தை ...!!!

உன்னுடைய மௌனம் ...

Posted: 27 Jun 2013 02:46 AM PDT

உன்னோடு பேச
ஒரு நிமிடம் தா ..
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
கவலைகளும் மறந்து விடும்...!
உன்னுடைய மௌனம் ...
உனக்கு அழகு எனக்கு ...
உயிர் துறப்பு ...!!!

உன்னை பிரிவது எப்படி?

Posted: 27 Jun 2013 02:42 AM PDT

கதையோடு கலந்திருந்தால்
பேச்சோடு விட்டிருப்பேன் ....!!!

கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்...!

இதயத்தோடு கலந்திருப்பதால் ...
என் உயிரோடு நீ கலந்ததால்....
என் மூச்சோடு கலந்திருப்பதால் ...
உன்னை பிரிவது எப்படி?

காதல் என்றால் என்ன..?

Posted: 27 Jun 2013 02:33 AM PDT

நீ அருகில் இருக்கும் போது
காதல் என்றால் என்ன என்றே
புரிவதில்லை...!
சும்மா கதைப்பேன் ...
அலட்டுவேன் ...
உன்னை பிரிந்திருக்கும் போது
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!

கவிதையை தவிர ...

Posted: 27 Jun 2013 02:26 AM PDT

நான் எழுதும் கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!
காதல் என்பது கவிதையால் .
வடித்துவிட முடியாத கடல் ..
இருந்தும் கவிதையை தவிர
வேறு கருவியும் இல்லை ..
அதை விளக்க ...!!!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™