Tamil News | Online Tamil News |
- பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம்
- குஜராத்துக்கு வெளியேயும் சாதித்தார் மோடி
- ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் திருப்பம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது சி.ஏ.ஜி.,
- கறுப்பு பண பதுக்கல் பட்டியல் 70வது இடத்தில் இந்தியா
- பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம்...: பள்ளி இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என திடீர் முடிவு
- தமிழக அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம்: பிரதமருக்கு, முதல்வர் ஜெ., கடிதம்
- என்.எல்.சி., பங்குகளை விற்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: ஒட்டுமொத்தமாக போராட திட்டம்
- காற்றாலை மின் உற்பத்தி 3,400 மெகா வாட்: தொடர்கிறது மின்வெட்டு
- அரசின் இலவச புத்தக பை: மாணவர்கள் தயக்கம்
| பரிதவிக்கும் 30 ஆயிரம் பேர்: உத்தரகண்டில் பலத்த மழையால் மீட்பு சுணக்கம் Posted: டேராடூன்:இம்மாதம், 17ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தையே புரட்டிப் போட்ட பேய் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு போன்றவற்றால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு உள்ளது.உத்தரகண்ட் மாநிலம், 93 சதவீதம் மலைகளும், அதில், 64 சதவீதம் அடர்ந்த காடுகளும் கொண்டது. அங்கு அமைந்துள்ள சிவபெருமானின் வழிபாட்டுத் தலங்களில், வழிபடச் சென்ற பக்தர்கள் மற்றும் அங்கு வசித்த பொதுமக்கள், கடந்த, ஏழு நாட்களாக சொல்லொணாத் துயரம் அனுபவித்து வருகின்றனர். சிக்கிய லட்சம் பேர்: பேய் மழை பெய்யத் துவங்கிய போது, உத்தரகண்டின், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ... |
| குஜராத்துக்கு வெளியேயும் சாதித்தார் மோடி Posted: டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தை உருக்குலைத்த, "இமயமலை சுனாமி' எனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, குஜராத் முதல்வர் மோடி, நேரடியாகவே களத்தில் இறங்கினார். ஹெலிகாப்டர், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன், 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதோடு நின்றுவிடாத மோடி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் உதவியுடன், நிவராண முகாம்களை ஏற்படுத்தினார்.வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ... |
| ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் திருப்பம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது சி.ஏ.ஜி., Posted: புதுடில்லி : ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,), பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.இந்திய வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக, இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளின் கூட்டு நிறுவனமான, "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்'டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தியாவைச் சேர்ந்த, சில வி.ஐ.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்து, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது ... |
| கறுப்பு பண பதுக்கல் பட்டியல் 70வது இடத்தில் இந்தியா Posted: புதுடில்லி:சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. கறுப்பு பண பதுக்கல் பட்டியலில், இந்தியா, 55வது இடத்திலிருந்து, 70வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.உலகம் முழுவதும், சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பவர்கள், அதை பதுக்கி வைக்கும் சொர்க்கமாக திகழ்பவை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள். இங்குள்ள குறிப்பிட்ட சில வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களையும், அவர்கள் கணக்கில் உள்ள நிதியையும், மிகவும் ரகசியமாக வைத்துள்ளன.இதனால், கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், அதை பதுக்குவதற்காக, இங்குள்ள ... |
| பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம்...: பள்ளி இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என திடீர் முடிவு Posted: சென்னை:பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும், பள்ளிகள் இயக்கப்படும், 9:30 மணிக்கு, அரசு, தனியார் அலுவலகங்களும் செயல்படத் துவங்குகின்றன. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களைத் தவிர, அரசு பேருந்துகளில், சொந்த வாகனங்களில் செல்லும் மாணவர்கள், இதனால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சாலைகள் ... |
| தமிழக அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம்: பிரதமருக்கு, முதல்வர் ஜெ., கடிதம் Posted: சென்னை:"என்.எல்.சி., பங்குகளின் உண்மையான மதிப்பு தெரிந்திருந்தும், அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தமிழக அரசு மீது, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் முயற்சி,' என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடித விவரம்:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்.எல்.சி.,), பங்குகளை விற்க வேண்டாம் என்று, இம்மாதம் 8ம் தேதி, நான் கடிதம் எழுதியிருந்தேன். அப்போதும், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடிய போது, என்.எல்.சி.,யின், ஐந்து சதவீத ... |
| என்.எல்.சி., பங்குகளை விற்க தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: ஒட்டுமொத்தமாக போராட திட்டம் Posted: நெய்வேலி:என்.எல்.சி., பங்கு விற்பனையைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்களும், இன்று வேலை நிறுத்த, "நோட்டீஸ்' வழங்க உள்ளனர்.என்.எல்.சி., நிறுவனத்தின், 5 சதவிகித பங்குகளை விற்கப்போவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில், அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த நிலையில், என்.எல்.சி., நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், ஓரணியில் திரண்டுள்ளன. பங்கு விற்பனை நடவடிக்கையை, மத்திய அரசு, வாபஸ் பெறாவிட்டால், மின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தும் வகையில், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.நெய்வேலி மத்திய பஸ் நிலையம் ... |
| காற்றாலை மின் உற்பத்தி 3,400 மெகா வாட்: தொடர்கிறது மின்வெட்டு Posted: சென்னை:கடந்த ஒரு வாரமாக, காற்றாலைகளில் இருந்து சராசரியாக, 3,400 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் இரவு நேரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்துவதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தென் மேற்கு பருவமழை துவங்கி இருப்பதால், காற்றாலைகள் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.கடந்த, ஏப்ரல் மாதம், 27 கோடி யூனிட் மின்சாரமும், மே மாதத்தில், 144 கோடி யூனிட் மின்சாரமும், காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. |
| அரசின் இலவச புத்தக பை: மாணவர்கள் தயக்கம் Posted: தமிழக அரசு வழங்கும் இலவச புத்தகப் பையை பள்ளிக்கு எடுத்துச் செல்ல, மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளி மாணவர்களுக்குக் காலணிகள், புத்தகப் பை (பேக்), லேப்-டாப் வழங்கப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். பள்ளிகள் துவக்க நாளன்று இலவச சீருடை, காலணிகள், நோட்டு, புத்தகம் மற்றும் பேக் வழங்க முதல்வர் உத்தரவிட்டதால், ஜூன் 10ம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு, "ஸ்மால் சைஸ்', 4 ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 24,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |