Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதியா?ராணுவம் முறியடிக்கும் என தளபதி நம்பிக்கை

Posted:

ஐதராபாத்:""அமர்நாத் யாத்திரையின் போது, பயங்கரவாதிகள், எந்த விதமான சதி வேலைகளிலும் ஈடுபடாமல் தடுக்க, முழுமையான செயல் திட்டங்களுடன், ராணுவம் தயார் நிலையில் உள்ளது,'' என, ராணுவ தளபதி, விக்ரம் சிங் கூறியுள்ளார்.பனி லிங்கம்ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இமயமலை பகுதியில் உள்ள, அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பனி லிங்கம் உருவாகும். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பனிலிங்க தரிசன யாத்திரை, வரும், 28ம் தேதி துவங்கி, இரண்டு மாதம் நடைபெறும்."இந்த அமர்நாத் யாத்திரையின் போது, ...

என்.எல்.சி.,யை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கண்டனம்

Posted:

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒட்டுமொத்தமாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன."நவரத்னா': பெரும் லாபத்தை ஈட்டித் தரும் பொதுத் துறை நிறுவனங்கள், "நவரத்னா' நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இவற்றின், லாபத் தொகை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள, என்.எல்.சி., நிறுவனமும் ஒன்று. நவரத்னா நிறுவனங்களில் ...

பம்ப் செட் உபயோகம் அதிகரிப்பு: தமிழக மின் தேவை 11,278 மெகா வாட் ஆக உயர்வு

Posted:

தமிழகத்தில் பல இடங்களில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சாகுபடிக்கான பம்ப் செட் மோட்டார் உபயோகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தின் மின் தேவை, 11,278 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவுதிறன், 10,364 மெகா வாட். தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால், தமிழக காற்றாலைகளில், தற்போது தினமும், 3,200 முதல், 3,700 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அதிகபட்சமாக, 3,727 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது. தமிழகத்தில், 19 லட்சம், மின் பம்ப் செட் மோட்டார்கள் உள்ளன. மொத்த மின் உற்பத்தியில், 30 சதவீதம் ...

நெரிசல் தவிர்க்க பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்

Posted:

சென்னை: பள்ளி மாணவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில், அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பள்ளிக்கு செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து, நாளை முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என, பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள, ...

ராஜ்யசபா தேர்தலில் காங்., இழுத்தடிப்புக்கு காரணம் என்ன?

Posted:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால் தான், காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எம்.பி.,க்கள் கிடைக்கும் என்பதால், ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர், அக்கட்சியின் தலைவர் சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
பலப்படுத்தலாம்:
அதேபோல், தே.மு.தி.க., வுக்கு ஆதரவு அளித்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஓட்டு வங்கியை பலப்படுத்தலாம் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால், உடனடியாக முடிவு ...

இது தீர்வல்ல! உரத்த சிந்தனை - ஜி.கிருஷ்ணசாமி, சிந்தனையாளர்

Posted:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி நபரின் வருமானத்தை அளவுகோலாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குடும்பமோ அல்லது தனி மனிதனோ பொருளாதார தன்னிறைவு பெறாத வரையில், அது ஏழ்மையின் அடையாளமாகவே கொள்ளப்படும். தனி மனிதனின் ஏழ்மைக்கு காரணம், அவனது செலவுகள், வரவை மிஞ்சியதாக இருப்பது தான். வரவை மிஞ்சிய செலவு நீடிக்கையில், மனிதன் கடனாளியாகிறான். அக்கடனை அடைக்க வழி இல்லாத போது, திவாலாகி நடை பிணமாகிறான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான், மக்களாட்சியின் தத்துவம். அதை விடுத்து, மக்கள் நலனுக்கு ...

உத்தரகண்டில் முழுவீச்சில் நடந்து வருகின்றன மீட்பு பணிகள்

Posted:

டேராடூன்: உத்தரகண்டில் பெய்த பேய் மழையிலும், காட்டாற்று வெள்ளத்திலும் சிக்கி, பலியானோரின் எண்ணிக்கை, 550 ஆக அதிகரித்துள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1,500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இன்னும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்க வேண்டியுள்ளது. நாளையிலிருந்து, மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மீட்பு பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பேய் மழை:
உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில், கடந்த வாரம், பேய் மழை பெய்தது. காங்., ஆட்சி ...

சாதனை மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா: கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு

Posted:

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள் நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து, "தினமலர்' விரிவான செய்தி வெளியானது. இதை அறிந்த முதல்வர், மீண்டும் அவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடத்த உத்தரவிட்டுள்ளார்; இவ்விழா, 26ம் தேதி, நடைபெற உள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், தமிழை முதல் பாடமாகப் படித்து, பொதுத்தேர்வில், மாநில ...

கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை பா.ஜ.,: விமர்சிக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்

Posted:

புதுடில்லி: ""பாரதிய ஜனதா கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை; அதனால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது,'' என, அந்த கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, சமீபத்தில், முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இதையடுத்து, நிதிஷ்குமாரை, "சந்தர்ப்பவாதி, துரோகி' என, பீகார் மாநில, பா.ஜ., தலைவர்கள், விமர்சித்து வருகின்றனர்.
சந்தர்ப்பவாதி:
இந்நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு, நிதிஷ்குமார் அளித்துள்ள பேட்டி: ...

கர்நாடகா அணைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு: நீர் திறக்க குழுவை வலியுறுத்துமா தமிழக அரசு

Posted:

"பருவமழையால், கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு நீர் விடுவிக்க உத்தரவிடுமாறு, காவிரி மேற்பார்வை குழுவை, காலம் தாழ்த்தாது தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்' என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், நீடிக்கும் வறட்சியால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 16 அடியாகவும், நீர் இருப்பு, 3 டி.எம்.சி.,யாகவும் குறைந்தது. இதனால், கடந்த, 12ம் தேதி டெல்டா குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் நீர் திறக்காததால், 4 லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி பாதித்துள்ளது. காவிரி நடுவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™