ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
- இன்று பிறந்தநாள் காணும் சாமி மற்றும் மாணிக் அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....
- கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை
- உதவி தேவை - PART TIME ONLINE JOBS
- Wi5 தனது சேவையை நிறுத்த போகிறதா ?
- பூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- கஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்!
- ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு
- திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்!
- ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்!
- தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
- உன் இதயக்கூண்டில் ..
- தனிமையில் இருக்கிறேன் ....!!!
- நேரில் ஏன் கண்ணே ..???
- வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!
- என்ன உலகமிது ...???
- ரஜினி என்றொரு அபாயம்
- என்னை கண்ட தருணத்தில் ..
- தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்
- மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்
- காதல் கவிஞரை உருவாக்கும் ..
- நகை சுவைக்காக ....
- எப்படி பொருந்தும் ...???
- உன்னை மறப்பிக்கும் ..
- தெர்மா மீட்டர் பறவை
- திருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்!
- கும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்!
- திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்!
- மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!
- சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!
- இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும்
- திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்!
- காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
- OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்!
- சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!
- சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!
- விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம்
- விரைவில் வருது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்
- தோஷம்! சந்தோஷம்!
- மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?
- அமெரிக்க விஞ்ஞானிகளின் குளோனிங் ஆராய்ச்சி வெற்றி தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கம் : மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் பகீர் முயற்சியா?
| தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2 Posted: 22 Jun 2013 02:22 PM PDT வணக்கம் . இது ஈகரையின் புதிய பகுதி .... நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி. அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் . உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் . பங்கு சந்தை பற்றி எழுதும் ... |
| இன்று பிறந்தநாள் காணும் சாமி மற்றும் மாணிக் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ..... Posted: 22 Jun 2013 02:08 PM PDT இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சாமி மற்றும் மாணிக் அவர்களே ....... |
| கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை Posted: 22 Jun 2013 02:04 PM PDT கார்ல் மார்ஸின் வரலாறு படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, ஒரு மனிதன் 15 ஆண்டு காலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து தனது மூன்று பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்த பின்பும் சிந்தனை, புத்தகம், எழுச்சி இதனை மட்டுமே சிந்தித்து உலகமே போற்றும் ஒரு புரட்சி நாயகனாக விளங்க முடியுமா என்று!!! மார்க்ஸின் மனைவி ஜென்னி தனது பிள்ளைகள் ஒவ்வொருவாராய் தாய்பால் கூட இன்றி வறுமையில் மடியும் வேளையிலும் தன் கணவரின் சிந்தனைகள் இதனால் தடைபடுமோ, வருததிற்குள்ளாகுமோ என்றே சிந்த்திதுள்ளார் அந்த தியாகப் ... |
| உதவி தேவை - PART TIME ONLINE JOBS Posted: 22 Jun 2013 10:01 AM PDT ஈகரை நண்பர்களுக்கு வணக்கம், பகுதிநேரமாக ஆன்லைன் இல் எப்படி வேலை செய்வது? இது சம்பந்தமான இணயதள முகவரிகள் என்ன? தெரிந்தால் உதவிசெய்ய வேண்டுகிறேன். |
| Wi5 தனது சேவையை நிறுத்த போகிறதா ? Posted: 22 Jun 2013 09:57 AM PDT 2010 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட zylog ன் Wi5 என்கிற சேவை தனது வாடிக்கையாளர்(Customer Care ) சேவையை நிறுத்தி உள்ளது , தனது அலுவலகங்களை ஒவ் ஒரு ஊரிலும் மூடி வருகிறது ... மின் அஞ்சல்களுக்கு பதிலகள் வருவதில்லை இதை பற்றி மேலும் தெரிந்தால் தகவல் தாருங்கள் உறவுகளே .. |
| பூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்! Posted: 22 Jun 2013 09:38 AM PDT பூம்புகார் – தமிழ்ப்பாரம்பரியத்தின் புராதன துறைமுக மாநகரம்! தமிழ்ப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் 'புகார் நகரம்' என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த 'பூம்புகார்' அல்லது 'காவிரிப்பூம்பட்டிணம்' எனப்படும் நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பூம்புகார் புகைப்படங்கள் - பூம்புகார் கடற்கரை சோழ நாட்டின் முக்கிய நாகரிகக்கேந்திரமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அந்நாளில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் ... |
| Posted: 22 Jun 2013 09:36 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| கஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்! Posted: 22 Jun 2013 09:03 AM PDT கஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்! தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி கோயிலுக்காக பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. இந்த அக்னீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வெள்ளி, அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய ஸ்தலமாகும். காவிரி டெல்டா மாகானத்தில் இருக்கும் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோவில்களுள் ... |
| ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Posted: 22 Jun 2013 09:00 AM PDT ரேஷன் கடைகளில் தினை அரிசி மற்றும் தினை மாவு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான தினை அரிசி மற்றும் மாவு வகைகள் வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் உளுத்தம¢ பருப்பு, துவரம் பருப்பு போன்றவை கிலோ ரூ.30க்கும் பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படுகிறது. சிறப்பு அங்காடிகள் மூலம் தரமான வெளிமாநில அரிசி கிலோ ... |
| திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Posted: 22 Jun 2013 09:00 AM PDT திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும். திருநாகேஸ்வரம் வளமான வயல்களை கொண்ட ஊராகும். இங்கு, நெல்லும், கரும்பும் சோளமும் முக்கிய விளைபொருள்களாகும். மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர் இது. திருநாகேஸ்வரம் புகைப்படங்கள் - ஒப்பிலியப்பன் கோயில் - ராஜகோபுரம் திருநாகேஸ்வரத்தை ... |
| ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! Posted: 22 Jun 2013 08:52 AM PDT ஆலங்குடி - குரு பகவானின் நவக்ரக ஆலயம்! ஆலங்குடி தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இது மன்னார்குடி அருகே உள்ள கும்பகோணத்தில் இருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலங்குடி அருகே உள்ள முக்கிய நகரம் கும்பகோணம் ஆகும். நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான இது வியாழன் (ப்ருஹஸ்பதி / குரு பகவான் ) கிரஹத்திற்கானது. ஆலங்குடி , ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்திற்காக புகழ் பெற்றது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக இக்கோயிலை ... |
| தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! Posted: 22 Jun 2013 08:48 AM PDT தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர். தாராசுரம் புகைப்படங்கள் - ஐராவதேஸ்வரர் கோயில் தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ... |
| Posted: 22 Jun 2013 08:48 AM PDT உன் இதயக்கூண்டில் .. உன் அனுமதி இல்லாமல் பறவையாய் சிறைப்பட்டுடேன் ... கேட்காமல் உள்ளே .. வந்ததற்கு மன்னித்துவிடு ... இப்பறவைக்கு உன் இதயத்தில் ... சிறைக்கைதியாக இருந்து .... விட்டுப்போகவேணும் ... ஆயுள் கைதியாக இடம் தா ...!!! |
| Posted: 22 Jun 2013 08:43 AM PDT நீ எப்போதுமே அழகாய் இருக்கிறாய் கவர்சியாய் இருக்கிறாய் ஆனந்தமாக இருக்கிறாய் நான்.. இப்போதுதான் .. அழகாக இருக்கிறேன் கவர்சியாய் இருக்கிறேன் ஆனந்தமாக இருக்கிறேன் நீ எப்போதுமே அழகாய் இருக்கிறாய் கவர்சியாய் இருக்கிறாய் ஆனந்தமாக இருக்கிறாய் நான் இப்போது அழுது கொண்டிருக்கிறேன் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் தனிமையில் இருக்கிறேன் ....!!! |
| Posted: 22 Jun 2013 08:42 AM PDT என் அழைப்புகளை நீ நிராகரிக்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வருவது உன் மீதல்ல கண்ணே ..!!! கைபேசியை கண்டுபிடித்த .. நாயகன் மீது ...!!! ஆயிரம் குறுஞ்ச்செய்தி .. இலவசம் என்கிறார்கள் .. நீயோ ஒரு செய்தியனுப்ப .. ஆயிரம் நிமிடங்கள் எடுக்கிறாய் .. தவறாக புரிந்து கொள்கிறாய் .. எல்லாவற்றையும் ...!!! குறுஞ்ச்செய்தியில் .. மட்டும் உன் கண் காந்தமாக .. நேரில் ஏன் கண்ணே .. காந்தாரியாக ....??? |
| வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!! Posted: 22 Jun 2013 08:41 AM PDT உன் மரமென்னும்... இதயத்தில் -என் எண்ணங்களால்.. கூடு காட்டுகிறேன் ... நீ என் இதயத்தில் .. வந்து போவதுதான் .. என் உயிர் மூச்சு ... நான் பொறுப்பில்லாதவன் பொறுமையில்லாதவன் உன்னை கண்டபின் நான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!! கஸல் ;164 |
| Posted: 22 Jun 2013 08:40 AM PDT சுயநலவாதி வாழும் இடத்தில் பொதுநலவாதி ஏமாற்றுக்காரன் படியாதார் வாழும் இடத்தில் படித்தவன் முட்டாள் கதைப்பவர் வாழும் இடத்தில் கதையாதவன் பித்தன் வாசிக்காதார் வாழும் இடத்தில் வாசிப்பவன் அலட்டல் காரன் குழப்புபவர் வாழும் இடத்தில் குழப்பாதவன் ஏமாளி குழம்புபவன் வாழும் இடத்தில் குழம்பாதவன் திமிர் பிடித்தவன் இருப்பவன் வாழும் இடத்தில் இல்லாதவன் ஓட்டாண்டி கடன்பட்டான் வாழும் இடத்தில் கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன் குடித்தவன் வாழும் இடத்தில் குடிக்காதவன் அனுபவிக்க ... |
| Posted: 22 Jun 2013 08:31 AM PDT அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது. சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் ... |
| Posted: 22 Jun 2013 08:31 AM PDT குட்டியான செல்ல சண்டையால் .. கதைக்கமால் நீ இருந்த... தருணத்தில்... உணர்ந்தேன்... காதலுக்கு குட்டியான .. சண்டையும் ஒன்றுதான் .. பெரிய சண்டையும் .. ஒன்றுதான் .. என் மீது... நீ கொண்ட அளப்பரிய காதலை... உன் கண்ணீரின் வலியை .. என்னை கண்ட தருணத்தில் .. உன் கண் மடல்களின் வலி காட்டியது ..!!! |
| Posted: 22 Jun 2013 08:28 AM PDT தலைவா - பாடல்கள் - தரவிறக்கம் தரவிறக்க Code: ******************************************** http://www.mediafire.com/?8vz5uvyr38ik9rc கடவுச்சொல் : www.eegarai.net ******************************************** சுட்டிகள் மாறுதலுக்கு உட்பட்டது (பயனாளர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது நல்லது) நன்றி : தமிழ் ரோக்கெர்ஸ் குறிசொற்கள் (keywords) - தலைவா ,thalaiva mp3 , thalaiva songs |
| மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Posted: 22 Jun 2013 08:23 AM PDT 1. சில்லென்ற கால்கள் காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும் 2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள் காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும் 3. தரை மங்கலாகத் தெரிகிறது காரணம் - காலியான ... |
| Posted: 22 Jun 2013 08:13 AM PDT உன்னை பார்ப்பதற்கு முன் எனக்கு காதல் தெரியாது...! இன்று.. காதலைத்தவிர .. வேறு எதுவும் தெரியுதில்லை .. இப்படி என்னை காதல் கோமாவில் .. சேர்த்துவிட்டாயே ...!!! பேசுவதற்கே வரிகள் தடுமாறும் .. எனக்கு இப்போ .. கவிதைக்கு வரி தருகிறது .. உன் காதல் .. காதல் கவிஞரை உருவாக்கும் .. என்பதில் பொய்யில்லை ...!!! |
| Posted: 22 Jun 2013 08:12 AM PDT உன்னை கைபேசியில் அழைத்தேன் ... "திடீரென ஒருகுரல்" தற்பொழுது நீங்கள்... தொடர்பு கொள்ள முடியாது .. அவர் இப்போது வேறு ஒரு .. தொடர்பில் இருக்கிறார் ... என்றது ...!!! தயவு செய்து தொலை .. சேவை வழங்குனர்களே ... இந்த சொற்களை மாற்றி விடுங்கள் ... நிறைய இளைஞர்கள் ... சந்தோசப்படுவார்கள் ...!!! |
| Posted: 22 Jun 2013 08:05 AM PDT உன்னை எதற்காக பிடித்தது -என்று அம்மா கேட்கிறா ... தங்கை கேட்கிறாள் .. நண்பன் கேட்கிறான் ... கேட்பவர்களிடம்... எப்படிச்சொல்ல...??? காரண காரிய தத்துவத்தை ...??? விஞ்ஞானத்துக்கு .. பொருந்தும் அந்த தத்துவம் ... நாம் காதலுக்கு ... காரணகாரிய தத்துவம் எப்படி பொருந்தும் ...??? |
| Posted: 22 Jun 2013 08:04 AM PDT அன்பே என்னை மறக்க .. பயிற்சி செய்து .. மெல்ல மெல்ல ... மறந்து வருகிறேன் ... உன்னை மறக்க .. பலமுறை பயிற்சி .. செய்கிறேன் முடியவில்லை ... உன்னை மறப்பிக்கும் .. பயிற்சிகூடங்கள் .. நாட்டில் இல்லையாம் ...!!! |
| Posted: 22 Jun 2013 06:38 AM PDT வெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'ஃபிரஷ் டர்க்கி'. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை, இனப்பெருக்க காலத்தில் தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, அதைச் சுற்றிலும் முட்டையிடும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும். இந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ... |
| திருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்! Posted: 22 Jun 2013 06:27 AM PDT திருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்! தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால் நிறைந்தது. இது காவேரி நதியின் கிளை நதிகளால் உருவாக்கப்பட்ட படுகைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. திருவாரூர் புகைப்படங்கள் - ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி திருவாரூர் நகர், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தலைநகரங்களுள் ஒன்றாக திகழ்ந்தது. மாமன்னர் குலோத்துங்கச் ... |
| கும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்! Posted: 22 Jun 2013 06:24 AM PDT கும்பகோணம் - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்! குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் இது. கும்பகோணத்தின் இரண்டு புறங்களிலும் காவிரி மற்றும் அரசலாறுகள் பாய்கின்றன. கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. கும்பகோணம் புகைப்படங்கள் - சாரங்கபாணி கோயில் - கோயில் கோபுரங்கள் கும்பகோணம் பல மிகச் சுவையான ... |
| திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்! Posted: 22 Jun 2013 06:22 AM PDT திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்! திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி-பூம்புகார் சாலைக்கு தென்கிழக்கில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோயில்களுள் ஒன்றாகும். திருவெண்காடு புகைப்படங்கள் - சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவெண்காடு,காசிக்கு நிகராகக் கருதப்படும் ஆறு திருத்தலங்களுள் ஒன்று. இங்கு, ... |
| மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Posted: 22 Jun 2013 06:21 AM PDT மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! மயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும் சொல்லும் மற்றும் 'துறை' என்று நகரத்தைக் குறிக்கும் மூன்று வார்த்தைகளும இணைந்த கலவையே! முன்பொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் போன்று தோற்றம் பெற்று, இந்த இடத்தில் இருந்த சிவபெருமானை வணங்கி வந்தார். இதன் காரணமாகவே ... |
| சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Posted: 22 Jun 2013 06:20 AM PDT சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும். சுவாமிமலை புகைப்படங்கள் - சுவாமினாதசுவாமி கோயில் இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் ... |
| இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Posted: 22 Jun 2013 06:19 AM PDT பூமியை சுற்றிவரும் துணைக்கோளான சந்திரனின் அதிபிரகாசமான முழு வடிவத்தை, வழக்கமாக பவுர்ணமி நாளின்போது நாம் காண முடியும். ஆனால், மற்ற பவுர்ணமி நாட்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவை இன்று காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக தென்படும் அளவைவிட இன்றைய முழு நிலவு சற்று பெரிதாக தெரியும். பூமிக்கு மிக அருகில் வருவதால், பார்க்க பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் இருக்கும். இன்று நள்ளிரவு இந்த முழு நிலவு பூமிக்கு அருகில் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வர ... |
| திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்! Posted: 22 Jun 2013 06:17 AM PDT திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்! திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு. திருநள்ளாறு புகைப்படங்கள் - சனீஸ்வரன் கோயில் திரு+ நள + ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள' எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி ... |
| காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது Posted: 22 Jun 2013 06:16 AM PDT இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு செயற்கை மழை பெய்யச் செய்வதற்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே வேளையில் ஹெலிகாப்டர்கள் தண்ணீரை கொட்டின. அந்தக் காட்டுத் தீ கடந்த சில நாட்களாக எரிவதால் எழுந்த புகை மூட்டம் இந்தோனேஷியாவின் ரியாவ் மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. சுமத்ராவில் தோட்ட உரிமையாளர்கள் நிலத்தைத் துப்புரவு செய்வதற்கு சட்ட விரோதமாக மரங்களை சட்ட விரோதமாக வெட்டி எரிப்பதாக ... |
| OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற்கொலை போராளிகளின் உண்மைச் சம்பவம்! Posted: 22 Jun 2013 06:14 AM PDT ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப ... |
| சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Posted: 22 Jun 2013 05:28 AM PDT சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி. சீர்காழி புகைப்படங்கள் - சட்டநாதசுவாமி கோயில் தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் ... |
| சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! Posted: 22 Jun 2013 05:25 AM PDT சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்! தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. நாற்திசையிலும் நான்கு பிரம்மாண்ட கோபுர வாசல்களுடனும் வெகு விரிவான கட்டிடக்கலை அம்சங்களுடனும் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான கோயில் வளாகம் நடுநாயகமாக வீற்றிருக்க - அதைச்சுற்றி இந்த சிறுநகரம் உருவாகியிருக்கிறது. இக்கோயிலில் நடராஜர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டுள்ளார். சிதம்பரம் ... |
| விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம் Posted: 22 Jun 2013 05:20 AM PDT ஆஸ்திரேலியாவில், விபத்துக்குள்ளான பெண் ஒருவர், மயக்கம் தெளிந்ததும், தன் தாய் மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக, பிரெஞ்சு மொழியில் பேசத் தொடங்கியுள்ளார். இதனால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரை சேர்ந்த பெண் ஒருவர், சாலையில் நடந்து சென்ற போது, கார் மோதி வித்துக்குள்ளானார். தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் சுயநினைவிழந்தார். ஒரு வாரத்துக்கு பின், நினைவு திரும்பியதால், பெண்ணின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், அந்த பெண் என்ன பேசுகிறார் என, யாருக்கும் ... |
| Posted: 22 Jun 2013 05:12 AM PDT நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று ... |
| Posted: 22 Jun 2013 04:35 AM PDT கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் வித்வான் வேடத்தில் தோன்றினார். வித்வானுடைய மனைவியாக வந்த நடிகை அவரைக் கொஞ்சம் திண்டாட விட வேண்டும் என்று எண்ணி,""ஏன்னா, நீங்களும் பல ராஜாக்கள் கிட்டே சன்மானம், சால்வையெல்லாம் வாங்கிண்டு வந்துட்டேள். பெரிய வித்துவான்னு பேரும் வந்துடுத்து. ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். தோஷம் என்கிற வார்த்தைக்கும், சந்தோஷம் என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்கோ! பார்க்கலாம்!'' என்றாள். ஒரு நிமிஷம் யோசித்தார் என்.எஸ்.கே. ""அடியே, நீ கேட்ட இந்தக் கேள்விக்கு ... |
| மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா? Posted: 22 Jun 2013 03:29 AM PDT மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள். இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர். தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து, எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும். அ தனால் தான் மந்திரம் ஓதும் போது, ஓம் நமோ நாராயணாய, ஓம் முருகா, ஓம் நமசிவாய, ஓம் சக்தி என்று ஓம் என்பதை சேர்த்துச் சொல்கிறோம். ஓம் என்பதை ... |
| Posted: 22 Jun 2013 03:16 AM PDT அமெரிக்க விஞ்ஞானிகளின் குளோனிங் ஆராய்ச்சி வெற்றி போர்ட்லேண்ட்: மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |