Tamil News | Online Tamil News |
- வெற்றியை நெருங்கும் நேரத்தில் தி.மு.க.,வுக்கு பா.ம.க., அதிர்ச்சி: கனிமொழியை ஆதரிக்க முடியாது என கைவிரிப்பு
- என்.எல்.சி., பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ஆளும் கட்சி துணையுடன் வழக்குக்கு உயிரூட்ட முயற்சி: கருணாநிதி பதில்
- ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு பஸ்களில் "அம்மா மினரல் வாட்டர்'
- அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் கடிதம்
- சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு?
- உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர்
- தி.மு.க.,வுடன் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம்: மதுரை காங்., திடீர் "போர்க்கொடி'
- தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தில் திருத்தம்: இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை: ராஜபக்ஷே
- புதிய மின் கட்டணம் வெளியிட்டது தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம்
| Posted: ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய இரு கட்சிகளும் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து, வேட்பாளர் கனிமொழி, வெற்றியை நெருங்கும் நேரத்தில், "அவரை ஆதரிக்க முடியாது' என, பா.ம.க., கைவிரித்து விட்டதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படும், ராஜ்யசபாவின், ஆறு எம்.பி.,க்களுக்கு, ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், அ.தி.மு.க.,வின், நான்கு வேட்பாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு தேவைப்படும், 170 ஓட்டுக்கு, அ.தி.மு.க.,விடம், 151 ... |
| என்.எல்.சி., பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: புதுடில்லி: தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், 466 கோடி ரூபாய் நிதி திரட்ட, முடிவு செய்துள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில், மத்திய அரசுக்குச் சொந்தமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளது. இங்கு, சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, சமீப காலமாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், நெய்வேலி ... |
| ஆளும் கட்சி துணையுடன் வழக்குக்கு உயிரூட்ட முயற்சி: கருணாநிதி பதில் Posted: சென்னை: "ஆளும் கட்சியின் துணையுடன், வழக்குக்கு உயிரூட்ட முயற்சிக்கிறார்' என, சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார். சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, வேத அறிவியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் கவுதமன் என்பவர், தாக்கல் செய்த மனு: கடந்த, 2002 அக்டோபரில், ஒரு பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதில், "இந்து என்றால், திருடன்' என, அர்த்தம் உள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேச்சு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் கொடுத்தும், எந்த ... |
| ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு பஸ்களில் "அம்மா மினரல் வாட்டர்' Posted: சென்னை: ""தமிழகத்தில், நீண்ட தூரம் இயக்கப்படும் பஸ்கள், மற்றும் பஸ் நிலையங்களில், ஒரு லிட்டர் குடிநீர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய, "அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையம் துவக்கப்படும்,'' என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குறைந்த விலையில், பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தமிழகம் முழுவதும், "அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாள் ... |
| அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் கடிதம் Posted: சென்னை: ""ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளர் வெற்றி பெற கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேருக்கு, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். விஜயகாந்த் எழுதியுள்ள கடித விவரம்: கட்சி தலைமை அலுவலகத்தில், கடந்த, 16ம் தேதி, மாவட்டச் செயலர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வரும், 27ம் தேதி நடக்கும் ராஜ்யசபா தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பலரும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என ... |
| சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு? Posted: "பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ... |
| உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Posted: டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில், பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில், 207 பேர் தான் இறந்துள்ளனர் என, கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், பலி எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டும் என, தெரிவிக்கிறது; 60 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது. 40 ஹெலிகாப்டர்கள்: பேய் மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, கடும் குளிர் போன்றவற்றால், உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் மற்றும் பல பகுதிகளில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ... |
| தி.மு.க.,வுடன் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம்: மதுரை காங்., திடீர் "போர்க்கொடி' Posted: மதுரை: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது; தே.மு.தி.க.,வை ஆதரிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, தி.மு.க.வு,க்கு எதிரான முதல் நிலைப்பாட்டை மதுரை காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது. மதுரையில், பகுதிவாரியாக தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடத்துவதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர் தலைவர் தெய்வநாயகம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மைதீன் பாஷா முன்னிலை வகித்தார். சர்க்கிள் தலைவர் சையது பாபு உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் மாநில அமைப்பு செயலாளர் காந்தி பேசியதாவது: கடந்த 2006-2011ல், காங்., 34 சட்டசபை தொகுதிகளில் வெற்றி ... |
| தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தில் திருத்தம்: இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை: ராஜபக்ஷே Posted: கொழும்பு: ""இலங்கையில், தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய, இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை,'' என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில், வடகிழக்கு மாகாணங்களுக்கு, சுயாட்சி அளிக்க வழி செய்யும் ஒப்பந்தம், 1987ல், இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் மற்றும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவால் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது. இதையடுத்து, வடக்கு மாகாணத்தில், வரும் செப்டம்பரில், தேர்தலை நடத்த, இலங்கை அரசு ... |
| புதிய மின் கட்டணம் வெளியிட்டது தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் Posted: சென்னை: குடிசை மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு உள்ளது.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013 - 14ம் ஆண்டுக்கான, மின் கட்டண உயர்வு பரிந்துரையை, 81 நாள் தாமதமாக, கடந்த பிப்., 19ம் தேதி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும், சமர்ப்பித்தன. தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும், நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதை தொடர்ந்து, மின் கட்டணம் மாற்றியமைப்பதற்கான மனு மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 22,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |