Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.1.30 கோடி நிலத்தை அபகரித்து விற்றவர் கைது

Posted: 21 Jun 2013 01:22 PM PDT

திருச்சி பிராட்டியூர் பகுதியில் ரூ.1.30 கோடிமதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இலவச ரயில் சேவைக்கு ஏற்பாடு

Posted: 21 Jun 2013 01:22 PM PDT

கடும் மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மீட்புப் பணிக்கு ரயில்வே நிர்வாகமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் கைது

Posted: 21 Jun 2013 01:22 PM PDT

ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

நிலக்கரி ஊழல்: காங்கிரஸ் எம்.பி. வீட்டில் சிபிஐ சோதனை

Posted: 21 Jun 2013 01:21 PM PDT

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான நவீன் ஜிண்டாலின் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 21 Jun 2013 01:21 PM PDT

பெரம்பலூர் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கூட்டுறவுச் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம்

Posted: 21 Jun 2013 01:21 PM PDT

: அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணிஅரியலூர்

Posted: 21 Jun 2013 01:20 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் அரியலூரிலும், ஜயங்கொண்டத்திலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கும் சிறப்பு முகாம்: ஜூன் 24}ல் தொடக்கம்

Posted: 21 Jun 2013 01:20 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டம் தேவைப்படும் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கும் சிறப்பு முகாம் ஜூன் 24 முதல் ஜூன் 28 வரை நடைபெறவுள்ளது.

அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு

Posted: 21 Jun 2013 01:19 PM PDT

அரியலூர் தெற்கு எடத்தெருவில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வறட்சி நிவாரணமாக ரூ. 55.46 கோடி அளிப்பு

Posted: 21 Jun 2013 01:19 PM PDT

  பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணமாக 1 லட்சத்து 32 ஆயிரத்து 367 விவசாயிகளுக்கு, ரூ. 55.46 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

505 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை

Posted: 21 Jun 2013 01:19 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 505 பேருக்கு இலவச கண் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்காக கடத்தி சிறை வைத்ததாக 2-வது மனைவி மீது கணவர் புகார்

Posted: 21 Jun 2013 01:18 PM PDT

சொத்துக்காக கடத்தி சிறை வைத்த 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டக் எஸ்.பி.யிடம் கணவர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.

வேப்பந்தட்டை அருகே மண் பரிசோதனை முகாம்

Posted: 21 Jun 2013 01:18 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் இந்திய உரக் கூட்டமைப்பு, புதுதில்லி மற்றும் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில், மண் ப

தகராறில் மூதாட்டி உள்பட 5 பேரை தாக்கிய 3 பேர் கைது

Posted: 21 Jun 2013 01:17 PM PDT

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கடாரங்கொண்டான் காலனி தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி செல்லம்மாள்.

ஜயங்கொண்டம் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

Posted: 21 Jun 2013 01:17 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியின் 20-வது வார்டு செங்குந்தபுரத்தில் ரூ. 5 லட்சத்தில் தார்ச் சாலை அமைத்தல், 21-வது வார்டில் ரூ. 5 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சொத்துக்காக கடத்தி சிறை வைத்ததாக 2-வது மனைவி மீது கணவர் புகார்

Posted: 21 Jun 2013 01:16 PM PDT

சொத்துக்காக கடத்தி சிறை வைத்த 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டக் எஸ்.பி.யிடம் கணவர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.

வறட்சி நிவாரணம் அனைவரும் கிடைக்க நடவடிக்கை

Posted: 21 Jun 2013 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமை வகித்தார்.

பிரதோஷம்

Posted: 21 Jun 2013 01:16 PM PDT

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Posted: 21 Jun 2013 01:15 PM PDT

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன்.

மாங்காடு சிவன் கோவில் குடமுழுக்கு

Posted: 21 Jun 2013 01:15 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு அருள்மிகு வர்த்தனாம்பிகை உடனுறை விடங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினர்களை அறிவித்தார் ராஜபட்ச

Posted: 21 Jun 2013 01:15 PM PDT

இலங்கையில் 13ஏ சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினர்களை அதிபர் மகிந்த ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தார்.

கழிவுநீரில் சிக்கிய மாடு மீட்பு

Posted: 21 Jun 2013 01:15 PM PDT

பொன்னமராவதியில் உள்ள சின்ன அமர கண்டான் குளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரில் சிக்கிய மாடு தீயணைப்பு படையினரால் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

இலவச தொழிற் பயிற்சிக்கு ஜூன் 24-ல் நேர்காணல்

Posted: 21 Jun 2013 01:14 PM PDT

ஆலங்குடியில் இலவச தொழிற் பயிற்சிக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது.

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒத்திவைப்பு

Posted: 21 Jun 2013 01:14 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுவதாக இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

Posted: 21 Jun 2013 01:13 PM PDT

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாக அலுவலகத்துக்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 21 Jun 2013 01:13 PM PDT

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அறந்தாங்கியில் சாலை மறியல்

Posted: 21 Jun 2013 01:13 PM PDT

: பணிக்கு வராத வட்டார போக்குவரத்து ஆய்வாளரைக் கண்டித்து அறந்தாங்கி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

குற்றாலம் பேரருவியில் குளித்த புதுக்கோட்டை நபர் உள்பட இருவர் சாவு

Posted: 21 Jun 2013 01:12 PM PDT

குற்றாலம் பேரருவியில் குளித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உள்ளிட்ட இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

ஆசிய தடகளம்: 110 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

Posted: 21 Jun 2013 01:12 PM PDT

புணேவில் ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்காக கடத்தி சிறை வைத்ததாக 2-வது மனைவி மீது கணவர் புகார்

Posted: 21 Jun 2013 01:12 PM PDT

சொத்துக்காக கடத்தி சிறை வைத்த 2-வது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கணவர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 21 Jun 2013 01:11 PM PDT

பயிர்க் கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்புவதைக் கண்டித்து, தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.

குப்பைகள் மூலம் மின்சாரம்,மண்புழு உரம் தயாரிப்பு

Posted: 21 Jun 2013 01:11 PM PDT

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் குப்பைகள் மூலம் மின்சாரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகின்றன என்றார் அதன் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.

ஊராட்சிப் பள்ளியில் கணினி சாதனங்கள் திருட்டுதஞ்சாவூர்

Posted: 21 Jun 2013 01:10 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணினி சாதனங்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவர் சாவு

Posted: 21 Jun 2013 01:10 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை  இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை வழங்க நடவடிக்கை

Posted: 21 Jun 2013 01:10 PM PDT

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

மழை வேண்டி பெருவுடையார் கோவிலில் யாகம்

Posted: 21 Jun 2013 01:09 PM PDT

மழை பெய்ய வேண்டி, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

டி.எஸ்.பி.யை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Jun 2013 01:09 PM PDT

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளரை (டி.எஸ்.பி.) கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மகளிர் முன்னேற்றம் அதிமுக அரசின் லட்சியம்'

Posted: 21 Jun 2013 01:09 PM PDT

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தோடு அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் பாபநாசம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் வி. நாகையன்.

பாரத ஸ்டேட்வங்கி சார்பில் பள்ளிக்கு மின்விசிறி வழங்கல்

Posted: 21 Jun 2013 01:09 PM PDT

கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில், கொட்டையூர் வள்ளலார் தொடக்கப் பள்ளிக்கு 10 மின் விசிறிகள் புதன்கிழமை  நன்கொடையாக வழங்கப்பட்டன.

65,000 மாணவர்களுக்க வங்கிச் சேமிப்புக் கணக்கு

Posted: 21 Jun 2013 01:08 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 65,000 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்படவுள்ளது.

மாணவர்களைக் குழப்பும் பட்டியல்

Posted: 21 Jun 2013 01:08 PM PDT

தமிழகத்தில் மொத்தம் 565 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எது சிறந்த கல்லூரி என மாணவர்கள் தேர்ந்தெடுத்து, தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப முடிவு செய்ய வேண்டியுள்ளது.

சிறப்பெது கேட்பின்...

Posted: 21 Jun 2013 01:07 PM PDT

ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கர்கள் உடனே நட்புடன் சேர்ந்து மகிழ்வார்கள், ஆங்கிலேயர்கள் எளிதில் தங்கள் உணர்ச்சிகளைக் காட்ட மாட்டார்கள்.

புதுக்கோட்டை

Posted: 21 Jun 2013 01:07 PM PDT

திருச்சி

Posted: 21 Jun 2013 01:07 PM PDT

கரியும், கோதுமையும்

Posted: 21 Jun 2013 01:06 PM PDT

இந்திய நிலக்கரி நிறுவனம், அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சமாளித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது...

ஆறுமுகனேரி

Posted: 21 Jun 2013 01:06 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்த 83 பக்தர்கள் தமிழகம் திரும்பினர்

Posted: 21 Jun 2013 01:04 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை-வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களில் 83 தமிழக பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்து என்றால் திருடன் என்று நான் கூறவில்லை

Posted: 21 Jun 2013 12:58 PM PDT

இந்து என்றால் திருடன் என அர்த்தம் என்று தான் கூறவில்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல்: பா.ம.க. முடிவால் கனிமொழிக்கு பின்னடைவு

Posted: 21 Jun 2013 12:56 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு திமுக விடுத்திருந்த கோரிக்கையைப் பாமக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள்

Posted: 21 Jun 2013 12:55 PM PDT

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பாமக புறக்கணிப்பு: வாக்கு மதிப்பில் பெரிய அளவில் மாற்றமிருக்காது

Posted: 21 Jun 2013 12:54 PM PDT

பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.

உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 202 தமிழக யாத்ரிகர்கள் மீட்பு

Posted: 21 Jun 2013 12:53 PM PDT

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழக யாத்ரிகர்களில் இதுவரை 202 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 83 பேர் வெள்ளிக்கிழமை தமிழகம் சென்றனடைந்தனர்.

வங்கதேச சிறையில் உள்ள உல்ஃபா தீவிரவாதிகள் இந்தியாவிடம் சரணடைய விருப்பம்

Posted: 21 Jun 2013 12:46 PM PDT

வங்கதேச சிறையில் உள்ள 3 உல்ஃபா பிரிவினைவாத தீவிரவாதிகள் இந்தியாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சண்டை: 2 வீரர்கள் சாவு

Posted: 21 Jun 2013 12:45 PM PDT

ராஜஸ்தான் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் உயிரிழந்தனர்.

துரித கதியில் மீட்புப் பணிகள்

Posted: 21 Jun 2013 12:45 PM PDT

கடும் மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வட மாநிலங்களில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. உத்தரகண்டில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது: பாஜக

Posted: 21 Jun 2013 12:44 PM PDT

நாட்டில் ஒரு கோடியே 8 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கோஷ்டி மோதலின்போது துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்

Posted: 21 Jun 2013 12:44 PM PDT

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டுள்ளார்.

பிரேசிலில் மக்கள் போராட்டம் தீவிரம்

Posted: 21 Jun 2013 12:43 PM PDT

பிரேசிலில் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போராட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நிதி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சரிடம் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் விசாரணை

Posted: 21 Jun 2013 12:42 PM PDT

நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

மூதாட்டி தற்கொலை

Posted: 21 Jun 2013 12:34 PM PDT

தெற்கு தில்லியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை கண்டுபிடிக்கபிபட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.

புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர கட் ஆஃப் 95%

Posted: 21 Jun 2013 12:34 PM PDT

தில்லியில் புகழ்பெற்ற புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர  கடுமையான போட்டியை மாணவர்கள் சந்தித்தாக வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

தங்கக் கட்டிகள் கடத்த முயற்சி: 4 பேர் கைது

Posted: 21 Jun 2013 12:34 PM PDT

அடிவயிற்றில் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்த முயன்றவர் உள்பட 4 பேரை இரு வேறு சம்பவங்களில் தில்லி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி: உறவினர் தலைமறைவு

Posted: 21 Jun 2013 12:33 PM PDT

தில்லியில் புறநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை சுட்டுக் கொல்ல முயன்றதாக அவரது உறவினர் மற்றும் கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து, போலீஸார் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பொய் வழக்கிலிருந்து இளைஞர் விடுதலை

Posted: 21 Jun 2013 12:33 PM PDT

தில்லியில் எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், "பொய்யான பாலியல் புகார்களை அனுமதிக்கக்கூடாது' என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

"ஷூ' வியாபாரியிடம் ரூ. 1.20 லட்சம் கொள்ளை

Posted: 21 Jun 2013 12:33 PM PDT

தில்லியில் ஷூ வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு ரூ. 1.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து, தில்லி போலீஸார் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

திருடர்களைப் பிடிக்க உதவிய 84 வயது பெண்

Posted: 21 Jun 2013 12:32 PM PDT

வீட்டில் தனியாக இருந்த போது, திருட வந்தவர்களை சமயோசிதமாக பிடித்து போலீஸில் ஒப்படைக்க உதவியை 84 வயது மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் பாராட்டினர்.

ராஜீவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை

Posted: 21 Jun 2013 12:32 PM PDT

இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தன ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சோனியா காந்தி உத்தரவு

Posted: 21 Jun 2013 12:31 PM PDT

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் மொய்லி பதவி விலக வேண்டும்

Posted: 21 Jun 2013 12:31 PM PDT

தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

Posted: 21 Jun 2013 12:31 PM PDT

தில்லி யமுனை ஆற்றில் வெள்ளம் குறைந்துவரும் நிலையில்,  சுகாதாரக் கேடுகளால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தில்லி சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

பிரிவினையைத் தூண்டும் தலைவர் நாட்டுக்கு தேவையில்லை

Posted: 21 Jun 2013 12:31 PM PDT

இன்றைய சூழ்நிலையில் ஒருமைப்பாட்டை வளர்க்கும் தலைவர்தான் நாட்டுக்குத் தேவை; பிரிவினையைத் தூண்டுபவர் அல்ல என பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

"போலீஸ் டயல் 100' டி.வி. நிகழ்ச்சி

Posted: 21 Jun 2013 12:31 PM PDT

"போலீஸ் டயல் 100' என்ற பெயரில், பல்வேறு குற்றங்களைக் கண்டுபிடிப்பது குறித்த காட்சிகள் அடங்கிய டி.வி. ரியாலிட்டி ஷோ தில்லி போலீஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

காருண்ய கணபதி கோயிலில் சம்வத்ஸரம் நிறைவு

Posted: 21 Jun 2013 12:30 PM PDT

தில்லி மயூர் விஹார் ஃபேஸ்-2-இல் ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிந்ததையொட்டி, முதலாவது ஆண்டு சம்வத்ஸரம் விழா இரு தினங்கள் நடைபெற்றன.

முதல்வருக்கு எதிரான "தரம் தாழ்ந்த'விளம்பரங்களை அகற்றுங்கள்

Posted: 21 Jun 2013 12:30 PM PDT

தில்லி முதல்வருக்கு எதிரான தரம் தாழ்ந்த விளம்பரங்களை ஆட்டோக்களில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லி யாத்ரிகர்கள் மாயம்: கவலையில் உறவினர்கள்

Posted: 21 Jun 2013 12:30 PM PDT

புனித யாத்திரைக்காக தில்லியில் இருந்து உத்தகரண்ட் சென்ற  பலர் திரும்பி வராததாலும், அவர்களது நிலைமை குறித்த விவரம் தெரியாததாலும் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

வெள்ள நிவாரணம்:ஷீலா தீட்சித் வேண்டுகோள்

Posted: 21 Jun 2013 12:29 PM PDT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கேட்டுக் கொண்டுள்ளா

கேரள முதல்வர் பதவி விலக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 21 Jun 2013 12:29 PM PDT

பல கோடி ரூபாய் சோலார் மோசடி குறித்த விசாரணை முடியும்வரை கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் தொடரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வலியுறுத்தியிருக்கிறது.

9 இடங்களில் நடைமேம்பாலம்:மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

Posted: 21 Jun 2013 12:29 PM PDT

போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேம்பால மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் 9 நடைமேம்பாலங்கள் கட்ட தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) திட்டமிட்டு வருகிறது.

அமைச்சர் மொய்லி விலக வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 21 Jun 2013 12:28 PM PDT

தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோழிப் பண்ணைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 21 Jun 2013 12:28 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில், கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, பறவைக் காய்ச்சல் தடுப்பூசி என்ற பெயரில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்தக் கூடாது என்று ஆட்சியர் வா.சம்பத் எச்சரித்துள்ளார்.

சுயஉதவிக் குழுக்களுக்கு விருது: விண்ணப்பம் வரவேற்பு

Posted: 21 Jun 2013 12:28 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில், 2012-13-ம் ஆண்டுக்கு சிறந்த சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

Posted: 21 Jun 2013 12:27 PM PDT

திருநாவலூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி, வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரிக்க ஆலோசனை

Posted: 21 Jun 2013 12:27 PM PDT

விழுப்புரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட கட்டடங்களில், உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உரிய முறைப்படி பராமரிப்பு செய்வது, மேலும் புதிதாக உருவாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.

24-ல் விழுப்புரம் அரசுக் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Posted: 21 Jun 2013 12:27 PM PDT

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2013-14-ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

நக்சலைட்டுகளுடன் மோதல்: காவலர் சாவு; 3 பேர் காயம்

Posted: 21 Jun 2013 12:27 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் கமிட்டி ஊழியர் கூட்டம்

Posted: 21 Jun 2013 12:26 PM PDT

திண்டிவனத்தில், காங்கிரஸ் கமிட்டியின் ஊழியர் கூட்டம் மற்றும் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழாக் கூட்டம், அண்மையில் நடைபெற்றது.

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

Posted: 21 Jun 2013 12:26 PM PDT

பஸ் நிற்கும் முன்பே இறங்கியபோது தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு

Posted: 21 Jun 2013 12:26 PM PDT

நாட்டின் முப்படைத் தலைவரை நியமிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான கருத்தரங்கம்

Posted: 21 Jun 2013 12:26 PM PDT

உயர்கல்வியில் தரம் மற்றும் சிறப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சி

Posted: 21 Jun 2013 12:26 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சிகள் வழங்கும் நிறுவனங்களின் மூலம் ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வெள்ள அபாயம் குறித்த மசோதாவுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

Posted: 21 Jun 2013 12:25 PM PDT

உத்தரகண்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொருள் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள சேதங்களை தவிர்க்க மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஒரு மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

என்.எல்.சி. தலைவருக்கு சிறந்த அதிகாரி விருது

Posted: 21 Jun 2013 12:25 PM PDT

இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெüரவித்துள்ளது.

வெள்ள பாதிப்பு: இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் மீட்புப் பணி தீவிரம்

Posted: 21 Jun 2013 12:25 PM PDT

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புதிய அனல்மின் திட்டப் பணிகள் ஆய்வு

Posted: 21 Jun 2013 12:25 PM PDT

நெய்வேலியில் புதிதாக அமையவுள்ள அனல்மின் திட்டப் பணிகளை என்எல்சி திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் ஆர். கந்தசாமி வெள்ளிக்கிழமை பார்வையிட்டுப் பணிகளை முடுக்கிவிட்டார்.

நுழைவுச் சீட்டு பெறுவதில் தாமதம்: மாணவர்கள் தவிப்பு

Posted: 21 Jun 2013 12:24 PM PDT

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி: உத்தவ் தாக்கரேவுக்கு அளிக்க பாஜக முடிவு

Posted: 21 Jun 2013 12:24 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அளிக்க பா.ஜ.க. முன்வந்துள்ளது.

மாவட்டத்தில் 144 தடையுத்தரவு: தொழிற்சங்கங்கள் போராட முடியுமா?

Posted: 21 Jun 2013 12:24 PM PDT

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். இதனால் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கண்டன பொதுக் கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட

பாம்பு கடித்து விவசாயி சாவு

Posted: 21 Jun 2013 12:24 PM PDT

பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விவசாயி வெள்ளிக்கிழமை இறந்தார். பண்ருட்டி வட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை (55).  மாளிகைமேடு கிராம

ஒப்பந்ததாரரிடம் ரூ.1.29 லட்சம் பறிப்பு

Posted: 21 Jun 2013 12:24 PM PDT

ஒப்பந்ததாரர் கவனத்தை நூதன முறையில் திருப்பி அவரிடம் இருந்த ரூ.1.29 லட்சத்தை மர்மநபர் புதன்கிழமை பறித்துச் சென்றார்.

தாணே கட்டடம் இடிந்து 10 பேர் சாவு

Posted: 21 Jun 2013 12:23 PM PDT

தாணேவில் 3 மாடிக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™