Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தொலை தொடர்பு, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க ஆதரவு

Posted:

புதுடில்லி:தொலை தொடர்பு, பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர், ஆனந்த் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

@subtitle@10 நாள் பயணம்: @@subtitle@@
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், ஆனந்த் சர்மா, 10 நாள் பயணமாக, ஹெல்சிங்கி, செயின்ட் பீட்ஸ்பர்க், பெல்பாஸ்ட், லண்டன் ஆகிய நகரங்களுக்கு செல்கிறார். இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:தொலை தொடர்பு துறையில், அந்நிய நேரடி முதலீட்டிற்கான சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என நான் தீவிரமாக ஆதரவளித்து வருகிறேன். இது தொடர்பாக, தொலை ...

ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளர்கள் 8 பேர்: சிக்கல் நிறைந்த களமாக மாறியது

Posted:

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய, இன்று கடைசி நாள் என்பதால், ஏழாவது வேட்பாளராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவும், எட்டாவது வேட்பாளராக, தே.மு.தி.க., வேட்பாளரும் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர். மொத்தமுள்ள, ஆறு இடங்களுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களுடன் சேர்த்து, எட்டு பேர் போட்டியிடுவதால், ராஜ்யசபா தேர்தல், சிக்கல் நிறைந்த களமாக மாறியுள்ளது.தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேர் தேர்வு செய்வதற்கு, இம்மாதம், 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள். ...

கட்சி பதவிகளில் பலருக்கு புதிய பொறுப்பு : தேர்தலை எதிர்கொள்ள காங்., அடுத்தடுத்த அதிரடி

Posted:

புதுடில்லி:காங்., கட்சியைச் சேர்ந்த, அஜய் மக்கான், சி.பி.ஜோஷி ஆகியோரது ராஜினாமாக்களை அடுத்து, மத்திய அமைச்சரவை, இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. அடுத்தாண்டு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், தற்போது அமைச்சர்களாக இருக்கும் சிலரை, கட்சிப் பொறுப்புகளுக்கு அனுப்புவதற்காக, இந்த அதிரடி நடவடிக்கையை, காங்., மேலிடம் மேற்கொள்ளவுள்ளது.அடுத்தாண்டு, லோக்சபா தேர்தல் நடக்கஉள்ளது. அதற்கு முன்னதாக, இந்தாண்டு இறுதியில், ராஜஸ்தான், டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களுக்கு, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

@subtitle@ஊழல் குற்றச்சாட்டு:@@subtitle@@
காங்., ...

பா.ஜ., அமைச்சர்களை நீக்கினார் முதல்வர் நிதிஷ்: கூட்டணி உறவு மாறி பகையானது

Posted:

பாட்னா:நரேந்திர மோடி விவகாரத்தால், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையேயான, 17 ஆண்டு கூட்டணி, நேற்று முறிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்னதாகவே, பீகாரில், தன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த, 11 அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கி, தன் ஆவேசத்தை, முதல்வர் நிதிஷ் வெளிப்படுத்தினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு மாறி பகைமை ஏற்பட்டுள்ளது.தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு அடுத்து, பெரிய கட்சியாக விளங்கியது, ஐக்கிய ஜனதா தளம். பீகார் மாநிலத்தில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி ...

ரூபாய் வீழ்ச்சியை காட்டி பெட்ரோல் உயர்வா? முதல்வர் ஜெ., கண்டனம்

Posted:

சென்னை:பெட்ரோல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா, கண்டனம் தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அதையே காரணம் காட்டி, மாதத்திற்கு, இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாக உயர்த்தி வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக, தொடர்ந்து, ஆறாவது வாரமாக ...

"தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொந்தம் கொண்டாட முயற்சி': கருணாநிதி

Posted:

சென்னை:"தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் நலன் கருதி, முன்னெச்சரிக்கையோடு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக செய்யப்பட்ட ஒரு சாதனைக்கு, ஜெயலலிதா தற்போது சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின், தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுவதை எடுத்துக் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து, ஜூன், 12ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவதைப் போல, இந்த ஆண்டும் திறந்து விடப்படுமா? எனக் கேட்டேன். அதற்கு, ஜெயலலிதா தனது பதிலில், 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 6ம் தேதியே குறுவை ...

விஜயகாந்திடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் வெளிப்படை

Posted:

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இத்தேர்தலை புறக்கணித்தாலோ, மற்ற கட்சிகளுக்கு ஆதரவளித்தாலோ, நாம் விலை போய் விட்டதாக மக்கள் கருதுவர். எனவே, தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டும்' என, தே.மு.தி.க., நிர்வாகிகள், அக்கட்சித் தலைவர் விஜயகாந்திடம் கூறியுள்ளனர்.ராஜ்யசபா தேர்தல் நிலைப்பாடு குறித்து, முடிவெடுக்க, சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.காலை, 10:30 ...

அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர் அர்ஜூனன் மீது நில அபகரிப்பு வழக்கு நிலுவை?

Posted:

அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ள அர்ஜூனன் மீது, நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதாக, அவரது சகோதரர், சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால், இவ்வழக்கை மூன்றாண்டுகளுக்கு முன்பே "முடித்துவிட்டதாக' அர்ஜூனன் தரப்பினர் தெரிவித்தனர்.அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,வேட்பாளராக, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அர்ஜூனன் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அர்ஜூனன் மீது, அவரது சகோதரர் ஆண்டுகவுடர் கொடுத்துள்ள நிலஅபகரிப்பு புகார் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாக தகவல் ...

அதிக கட்டணம் வசூலிக்கும் "கிண்டர் கார்டன்' பள்ளிகள்: அரசின் கண்காணிப்பில் வருமா?

Posted:

சென்னை:அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்' (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகளும், 4,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும், 650க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில், நர்சரி, பிரைமரி பள்ளிகளில், அடிப்படை வசதியில்லை என கூறி, 900 பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்ட ...

கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்கள்: விவரம் கேட்டுள்ளது மத்திய அரசு

Posted:

புதுடில்லி:சிங்கப்பூர் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும், தனி நபர்களும், கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அந்த நாடு களிடம், சம்பந்தப்பட்ட நபர்களின், பணப்பரிமாற்ற விவரங்களைத் தரும்படி, மத்திய அரசு கோரிஉள்ளது.

@subtitle@அறிக்கை:@@subtitle@@
அமெரிக்காவைச் சேர்ந்த, "புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு' என்ற அமைப்பு, சமீபத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என, 500க்கும் மேற்பட்டோர், வரிச்சலுகை தரும், சிங்கப்பூர் உட்பட, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™