Daily Thanthi |
- இலங்கை தமிழர் பகுதியில் செப்டம்பர் மாதம் தேர்தல்: அதிபர் ராஜபக்சே அறிவிப்பு
- வங்காளதேச மேயர் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பிரதமர் ஹசினாவின் கட்சிக்கு பின்னடைவு
- சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்வு: பாக். பஸ்சில் குண்டை வெடித்தது பெண் தீவிரவாதி
- மிரட்டல் பிசுபிசுத்தது: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம்
- மக்கள் வேதனைப்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: பெட்ரோல் விலை உயர்வுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம்
- காவிரி பிரச்சினையில் நீதிமன்றத்தை கர்நாடக அரசு அவமதிக்கவில்லை - முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
- பா.ஜனதா–ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது ஏன்? அத்வானி கருத்து
- பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது துரதிருஷ்டவசமானது: ராஜ்நாத்சிங் பேட்டி
- பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா: இதே உத்வேகத்தை தொடர வீரர்களுக்கு டோனி வேண்டுகோள்
- நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் ஓவர் குறைப்பு: இங்கிலாந்து அணி 169 ரன்னில் ஆல்–அவுட்
இலங்கை தமிழர் பகுதியில் செப்டம்பர் மாதம் தேர்தல்: அதிபர் ராஜபக்சே அறிவிப்பு Posted: 16 Jun 2013 01:41 PM PDT கொழும்பு இலங்கையில் தமிழர் பகுதியில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ராஜபக்சே இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைமை இடமாக திகழ்ந்த கிளிநொச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்தார். அங்கு அவர் தலைநகர் கொழும்புவுடன் வடக்கு பகுதிகளை இணைக்கும் 153 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையை திறந்துவைத்தார். |
வங்காளதேச மேயர் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பிரதமர் ஹசினாவின் கட்சிக்கு பின்னடைவு Posted: 16 Jun 2013 01:27 PM PDT டாக்கா வங்காளதேசத்தில் நடைபெற்ற 4 மாநகர மேயர்கள் தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றது. பிரதமர் ஹசினாவின் ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்தது. மேயர் தேர்தல் வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி ஆட்சி நடத்துகிறது. முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சிக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைவராக இருக்கிறார். |
சாவு எண்ணிக்கை 25 ஆக உயர்வு: பாக். பஸ்சில் குண்டை வெடித்தது பெண் தீவிரவாதி Posted: 16 Jun 2013 01:23 PM PDT இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் குவெட்டா நகரில் பல்கலைக்கழக பஸ் மற்றும் மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் லஷ்கர்–இ–ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பினர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் 14 மாணவிகள், 4 நர்சுகள் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது. இதன் சாவு எண்ணிக்கை நேற்று 25 ஆக அதிகரித்தது. மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். |
மிரட்டல் பிசுபிசுத்தது: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம் Posted: 16 Jun 2013 01:21 PM PDT சியோல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்போவதாக சில மாதமாக வடகொரியா மிரட்டியது. ஐ.நா. சபை மூலம் அமெரிக்கா பொருளாதார தடையை கொண்டு வந்ததே வடகொரியாவின் இந்த கோபத்துக்கு காரணமாகும். |
Posted: 16 Jun 2013 01:11 PM PDT சென்னை, பெட்ரோல் விலை உயர்வுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனியாவது விலை நிர்ணய முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா யோசனை கூறியிருக்கிறார். இது குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– கடும் கண்டனம் |
காவிரி பிரச்சினையில் நீதிமன்றத்தை கர்நாடக அரசு அவமதிக்கவில்லை - முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி Posted: 16 Jun 2013 12:57 PM PDT பெங்களூர், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை என்று முதல்&மந்திரி சித்தராமையா கூறினார். சித்தராமையா பேட்டி முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக தாவணகெரேக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவரை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:- |
பா.ஜனதா–ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்தது ஏன்? அத்வானி கருத்து Posted: 16 Jun 2013 12:57 PM PDT புதுடெல்லி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 17 ஆண்டு காலமாக இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி இன்று விலகிக்கொண்டது. பா.ஜனதாவில் நரேந்திரமோடிக்கு முக்கியத்துவம் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து மூத்த தலைவர் அத்வானி சமீபத்தில் அதிரடியாக ராஜினாமா செய்தார். |
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது துரதிருஷ்டவசமானது: ராஜ்நாத்சிங் பேட்டி Posted: 16 Jun 2013 12:56 PM PDT புதுடெல்லி, பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது துரதிருஷ்டவசமானது என்று கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார். துரதிருஷ்டவசமானது |
பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா: இதே உத்வேகத்தை தொடர வீரர்களுக்கு டோனி வேண்டுகோள் Posted: 16 Jun 2013 12:39 PM PDT பர்மிங்காம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் டோனி, எஞ்சிய போட்டிகளிலும் இதே வேகத்தை தொடர வேண்டும் என்று வீரர்களை கேட்டுக் கொண்டார். இந்தியா வெற்றி |
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் ஓவர் குறைப்பு: இங்கிலாந்து அணி 169 ரன்னில் ஆல்–அவுட் Posted: 16 Jun 2013 12:35 PM PDT கார்டிப், மழையால் 24 ஓவராக குறைக்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 24 ஓவர் போட்டி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், கார்டிப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக்கில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன. இங்கிலாந்து அணியில் காயமடைந்துள்ள ஸ்வானுக்கு பதிலாக டிரெட்வெல்லும், நியூசிலாந்து அணியில் கணுக்கால் காயத்தால் அவதிப்படும் டிம் சவுதிக்கு பதிலாக கோரி ஆண்டர்சனும் சேர்க்கப்பட்டனர். |
You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |