Tamil News | Online Tamil News |
- பிரிட்டன் "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனம் மீது மீண்டும் ஊழல் புகார்
- உரத்த சிந்தனை: அத்வானியின் தப்பாட்டம் : - ஆர்.நடராஜன் -
- காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் ரூ.756 கோடி வினியோகம்
- "மாமூல்' பட்டியலில் உளவுப்பிரிவு போலீஸார்: அதிர்ச்சி தகவல் அம்பலம்
- தென் மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே காவிரி மேற்பார்வை குழு கூடி முடிவெடுக்க திட்டம்
- கூட்டல், கழித்தல் கணக்கு போடும் விஜயகாந்த்: தி.மு.க.,வை புறக்கணிக்கும் பின்னணி அம்பலம்
- தி.மு.க.,வின் "மெகா கூட்டணி' கனவு நிறைவேறுமா?
- காவிரி பிரச்னை தீராததற்கு கருணாநிதியே காரணம்: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு
- ஐந்து மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்., சுறுசுறுப்பு
- ராஜ்யசபாவில் ஆறாவது சீட்டை கைப்பற்ற பலப்பரீட்சை : தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., போட்டி
பிரிட்டன் "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனம் மீது மீண்டும் ஊழல் புகார் Posted: ![]() புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள, பிரிட்டனின், "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனம், மேலும் ஒரு ஊழலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்த விசாரணையை, சி.பி.ஐ., துவக்கியுள்ளது. இந்திய, வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலியை மையமாக வைத்து செயல்படும், "பின்னோமெக்கானிகா' நிறுவனத்திடம், ஹெலிகாப்டர்களை வாங்க, ராணுவ அமைச்சகம், ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, "பின்னோமெக்கானிகா' நிறுவனமும், அதன் துணை நிறுவனமான, பிரிட்டனைச் சேர்ந்த, "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனமும், இந்திய அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தாக தகவல் வெளியானது. ... |
உரத்த சிந்தனை: அத்வானியின் தப்பாட்டம் : - ஆர்.நடராஜன் - Posted: ![]() முதுமை, முதிர்ச்சி அல்ல. இதை உணர்த்தியுள்ளது முதுமைத் தலைவர் எல்.கே.அத்வானியின் முடிவு. இவரது திடீர் ராஜினாமா, பா.ஜ.,வைப் புரட்டிப் போட்டு விடவில்லை. இவர் தான் பணிய வேண்டி வந்தது. இதேபோல், காங்கிரஸ் கட்சியில் முதியவர் களா, புதியவர்களா என்ற நிலை வந்த போது, கட்சி பிளவுபட்டது. இந்திரா எழுந்தார்; முதியவர்கள் காணாமல் போயினர். இதை அறியாதவரா அத்வானி? "அவசரப்படாதீர்கள்' என்று, வெளிக்கட்சியின் நிதிஷ் குமாருக்கு, இன்று ஆலோசனை சொல்கிறார், நேற்று அவசரப்பட்ட அத்வானி.நரேந்திர மோடி, குஜராத்தையும் தாண்டி, பா.ஜ.,வையும் தாண்டி, திறமையாலும், நேர்மையாலும் செல்வாக்கு ... |
காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் ரூ.756 கோடி வினியோகம் Posted: ![]() காவிரி டெல்டா அல்லாத, 23 மாவட்டங்களில், இதுவரை, 16 லட்சம் விவசாயிகளுக்கு, 756 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள நிவாரணம் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என, தெரிகிறது.தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், சென்னை தவிர, 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் என, 3.52 லட்சம் விவசாயிகளுக்கு, 524.25 கோடி ரூபாய் நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. பிற மாவட்டங்களுக்கு, 835.21 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அரசு ... |
"மாமூல்' பட்டியலில் உளவுப்பிரிவு போலீஸார்: அதிர்ச்சி தகவல் அம்பலம் Posted: ![]() திருச்சி: போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர, "மாமூல்' பட்டியலில், உளவுப் பிரிவு போலீஸாரும் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தமிழக போலீஸ் துறையில், மாநகராட்சிகள் போலீஸ் கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்கள் போலீஸ் எஸ்.பி., தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.இதில், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில், ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவுப் பிரிவும், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் எஸ்.பி., எனப்படும தனிப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. மாநகரில் ஒரு உதவி கமிஷனர் தலைமையிலும், மாவட்டத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலும் இப்பிரிவுகள் ... |
தென் மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே காவிரி மேற்பார்வை குழு கூடி முடிவெடுக்க திட்டம் Posted: ![]() காவிரி மேற்பார்வை குழு ஆலோசனை கூட்டம், ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட போதிலும், தென் மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே, மீண்டும் காவிரி மேற்பார்வை குழு கூடி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.வறட்சி காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம், 17.650 அடியாகவும், நீர் இருப்பு, 3.446 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நடப்பாண்டு ஜூன், 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கவில்லை. இதனால், காவிரி டெல்டாவில், 4 லட்சம் ஏக்கரில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு படி, கர்நாடகா, ஜூன் மாதம், 10 டி.எம்.சி., ஜூலை மாதம், 34 டி.எம்.சி., நீர் மேட்டூர் அணைக்கு ... |
கூட்டல், கழித்தல் கணக்கு போடும் விஜயகாந்த்: தி.மு.க.,வை புறக்கணிக்கும் பின்னணி அம்பலம் Posted: ![]() அடுத்த சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே, தி.மு.க., வுடன் நெருங்குவதை, விஜயகாந்த் தவிர்த்து வருவதாக, பின்னணி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமையும் என்ற தகவல், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே வலம் வருகிறது. ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் கணக்கு, வேறு மாதிரியாக இருக்கிறது. வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கியே, விஜயகாந்தின் முழு சிந்தனையும் இருக்கிறது. |
தி.மு.க.,வின் "மெகா கூட்டணி' கனவு நிறைவேறுமா? Posted: ![]() "லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி' என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு, காங்கிரஸ், - ம.தி.மு.க., - கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு, அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு எதிராக, தே.மு.தி.க., - காங்கிரஸ், - ம.தி.மு.க., - கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகளுடன் "மெகா' கூட்டணி அமைத்து போட்டியிட, அறிவாலய கதவுகளை திறந்து வைக்க தி.மு.க., திட்டமிட்டு உள்ளது. ஆனால், தி.மு.க.,வின் திட்டத்திற்கு, எந்த கட்சியும் இதுவரை பிடி கொடுக்கவில்லை.சமீபத்தில், டில்லி சென்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனித்து போட்டியிடுவோம் என்ற சரவெடியை கொளுத்தி ... |
காவிரி பிரச்னை தீராததற்கு கருணாநிதியே காரணம்: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு Posted: ![]() சென்னை:"" தி.மு.க., தலைவர் கருணாநிதி செய்த, துரோகங்களால் தான், காவிரி நதிநீர் பிரச்னை, இன்றளவும் நீடித்து வருகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:காவிரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை, வெளியிட்ட பிறகு, நான்கு ஆண்டுகள், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இறுதி ஆணையை, மத்திய அரசிதழில் வெளியிட, ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர், கருணாநிதி. அவர், "இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா?' என்ற தலைப்பில், 12ம் தேதி ஒரு குதர்க்கமான அறிக்கையை வெளியிட்டிருப்பது, சாத்தான் வேதம் ஓதுவதுபோல் ... |
ஐந்து மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்., சுறுசுறுப்பு Posted: ![]() இந்த ஆண்டு இறுதியில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், ஆட்சியைப் பிடிக்கவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதற்கான முயற்சிகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயககூட்டணியில் நிலவும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு, மே மாதம், 31ம் தேதி முடிவடைகிறது. கடந்த ஒன்பதாண்டு ஆட்சிக் காலத்தில், சொல்லிக் ... |
ராஜ்யசபாவில் ஆறாவது சீட்டை கைப்பற்ற பலப்பரீட்சை : தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., போட்டி Posted: ![]() சென்னை:ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பமாக, ஆறாவது சீட்டைக் கைப்பற்ற, தி.மு.க., - இந்திய கம்யூ., மற்றும் தே.மு.தி.க., இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், தி.மு.க., சார்பில், கனிமொழி நேற்று மனு தாக்கல் செய்தார். இந்திய கம்யூ., மற்றும் தே.மு.தி.க., சார்பில், போட்டியிடுவதற்கான வேட்பு மனு படிவங்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளன.தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரை தேர்வு செய்வதற்கு, இம்மாதம், 27ம் தேதி, தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனு தாக்கல், கடந்த, 10ம் தேதி துவங்கியது.அ.தி.மு.க., சார்பில், ஐந்து பேர், நான்கு சுயேச்சைகள், மனு ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 16,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |