Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சொல் வேட்டை- 32

Posted: 15 Jun 2013 01:19 PM PDT

Alter ego  என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார்.

நான்மணிக்கடிகை

Posted: 15 Jun 2013 01:17 PM PDT

மாசு படினும் மணி தன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசுஒட்டும் பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும்.

உணவு பாதுகாப்பு மசோதா: முலாயம் சிங்குடன் மத்திய அமைச்சர்கள் பேச்சு

Posted: 15 Jun 2013 01:11 PM PDT

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன், மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, கமல்நாத் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.

தமிழகத்தில் காங்கிரûஸ பலப்படுத்த திட்டம்

Posted: 15 Jun 2013 01:11 PM PDT

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த, அகில இந்திய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பொதுச் செயலர் எச்.வசந்தகுமார் கூறினார்.

"குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்'

Posted: 15 Jun 2013 01:11 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தொடக்க கல்வித் துறை பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 01:10 PM PDT

:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மாதவலாயம் ஊராட்சிப் பகுதியில் 78 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

Posted: 15 Jun 2013 01:10 PM PDT

தோவாளை வட்டம், மாதவலாயம் ஊராட்சிப் பகுதியில் உள்ள 78 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை வழங்கினார்.

வடிகால்களில் அடைப்பு: சாலையில் தேங்கும் தண்ணீர்

Posted: 15 Jun 2013 01:10 PM PDT

குலசேகரம் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு பதிவுமூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 15 Jun 2013 01:09 PM PDT

சுகாதார ஆய்வாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான பதிவுமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஏ.அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் அதிமுக அலுவலகம் திறப்பு

Posted: 15 Jun 2013 01:09 PM PDT

குமரி மாவட்ட அதிமுக அலுவலகம் தாற்காலிகமாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

குமரி மாவட்டத்தில் பரவும் விஷக் காய்ச்சல்

Posted: 15 Jun 2013 01:09 PM PDT

:கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து விஷ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 15 Jun 2013 01:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Posted: 15 Jun 2013 01:08 PM PDT

நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு   விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.

குமரியில் வடஇந்திய சுற்றுலாப் பயணி சாவு

Posted: 15 Jun 2013 01:08 PM PDT

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வட இந்திய சுற்றுலாப் பயணி மாரடைப்பால் சனிக்கிழமை இறந்தார்.

உலக போதை எதிர்ப்பு தினம் 21,24-ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி

Posted: 15 Jun 2013 01:07 PM PDT

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் இம்மாதம் 21 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.

திருவட்டாறு அருகே இளைஞர் தற்கொலை

Posted: 15 Jun 2013 01:07 PM PDT

:திருவட்டாறு அருகே நகைப் பட்டறைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்குறுங்குடியில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி

Posted: 15 Jun 2013 01:07 PM PDT

திருக்குறுங்குடியில் வேளாண் துறை சார்பில் பாரம்பரியப் பொருள்கள்  கண்காட்சி நடைபெற்றது.  விழாவுக்கு நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆ. நாராயணன் தலைமை வகித்தார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மீது மற்றொரு விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

Posted: 15 Jun 2013 01:06 PM PDT

இந்திய ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது சிபிஐ புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.

லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர்: மேயர்

Posted: 15 Jun 2013 01:06 PM PDT

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 1-வது வார்டு பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என குறைகேட்புக் கூட்டத்தில் மேயர் எல். சசிகலா புஷ்பா உறுதியளித்தார்.

கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடும் முன் அணுகுசாலை: எம்.பி. வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 01:06 PM PDT

கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை (லெவல் கிராசிங் எண் 439) மூடும் முன் அணுகுசாலை அமைக்க வேண்டும் என எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டம் தொடக்கம்

Posted: 15 Jun 2013 01:05 PM PDT

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்:அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 15 Jun 2013 01:05 PM PDT

திருச்செந்தூர் பேரூராட்சி சாதாரணக் கூட்டத்திலிருந்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஓய்வூதிய அலுவலர்கள் சங்கக் கூட்டம்

Posted: 15 Jun 2013 01:05 PM PDT

ஸ்ரீவைகுண்டம் வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. 

முன்னாள் சிஐஏ உளவாளி: ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jun 2013 01:05 PM PDT

அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு திட்டத்தை அம்பலப்படுத்திய சிஐஏ முன்னாள் உளவாளி ஸ்னோடென்னுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவில்பட்டி அருகே நிலத் தகராறு:ஊராட்சித் தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்கு

Posted: 15 Jun 2013 01:04 PM PDT

கோவில்பட்டி அருகே நிலத் தகராறில் விவசாயியைத் தாக்கியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் மீதும், ஊராட்சித் தலைவரின் தந்தையைத் தாக்கியதாக 4 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

"பயிர்களைக் காக்க தண்ணீர் திறக்க வேண்டும்'

Posted: 15 Jun 2013 01:04 PM PDT

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மற்றும் வடகால் பாசனப் பயிர்களைக் காக்க தண்ணீர் திறந்து விட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பஸ்ஸிலிருந்து விழுந்த வியாபாரி சாவு

Posted: 15 Jun 2013 01:04 PM PDT

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு பஸ்ஸிலிருந்து தவறி கீழே விழுந்த பால் வியாபாரி இறந்தார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

Posted: 15 Jun 2013 01:04 PM PDT

நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர் பணி: விண்ணப்பித்தோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 15 Jun 2013 01:04 PM PDT

  தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 16 சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு சனிக்கிழமை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.

காயல்பட்டினத்தில் ஜும்ஆ தொழுகை தொடக்கம்

Posted: 15 Jun 2013 01:03 PM PDT

காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் உள்ள பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பைக்-லாரி மோதல்: இளைஞர் சாவு

Posted: 15 Jun 2013 01:03 PM PDT

திருச்செந்தூர் அருகே பைக்கும் லாரியும் மோதியதில் இளைஞர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.

கடலோரப் பாதுகாப்புக்காக மேலும் 30 காவல் நிலையங்கள்

Posted: 15 Jun 2013 01:03 PM PDT

தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 30 காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கூடுதல் காவல் துறை இயக்குநர் செ. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

நாசரேத் சேகர மன்றக் கூட்டம்: ஜூன் 28 வரை இடைக்காலத் தடை

Posted: 15 Jun 2013 01:03 PM PDT

நாசரேத் சேகர மன்றக் கூட்டம் நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீக்குளித்த பெண் மருத்துவமனையில் சாவு

Posted: 15 Jun 2013 01:02 PM PDT

மணப்பாடு அருகே  தீக்குளித்த பெண் மருத்துவமனையில் இறந்தார்.

951 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி

Posted: 15 Jun 2013 01:02 PM PDT

தமிழக அரசின் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி,  பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பை ஆகியவை வழங்கப்பட்டன.

புதிய தமிழகம் கட்சி உண்ணாவிரதம்

Posted: 15 Jun 2013 01:02 PM PDT

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jun 2013 01:01 PM PDT

ஆழ்வார்கற்குளத்துக்கு தனியார் பஸ்ûஸ மீண்டும் இயக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்னை யாரும் மிரட்டவில்லை!

Posted: 15 Jun 2013 01:01 PM PDT

இந்தியாவில் எண்ணெய் துரப்பணப் பணிகளில் ஈடுபடுவதற்கு எதிராக அச்சுறுத்தல் உள்ளதே தவிர, தனிப்பட்ட முறையில் என்னை யாரும் மிரட்டவில்லை என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

ஜூன் 18-ல் மின்தடை

Posted: 15 Jun 2013 01:01 PM PDT

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) மின்சாரம் இருக்காது.  இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் புருஷோத்தமன் வெ

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 15 Jun 2013 01:00 PM PDT

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி

Posted: 15 Jun 2013 01:00 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஜூன் 17) கடைசி நாளாகும். ஏற்கெனவே, 10 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

Posted: 15 Jun 2013 01:00 PM PDT

சிந்தலக்கரை எஸ்.ஆர்.எம்.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

வீரபாண்டியன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை: அதிகாரிகள் சோதனை

Posted: 15 Jun 2013 01:00 PM PDT

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

Posted: 15 Jun 2013 01:00 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு நோட்டு, எழுதுபொருள்கள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.

2,687 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 15 Jun 2013 12:58 PM PDT

செங்கத்தை அடுத்த அரட்டவாடி, பொரசப்பட்டு, ஆண்டிப்பட்டி, அரசங்கண்ணி ஆகிய கிராமங்களுக்கான அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா அரட்டவாடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

4 கிராம நிர்வாக அலுவலர்கள் தாற்காலிக பணிநீக்கம்

Posted: 15 Jun 2013 12:58 PM PDT

திருவண்ணாமலை அருகே கிராம அலுவலகத்துக்குச் செல்லாமல் நகரில் அறை எடுத்து பணி செய்ததாக 4 வி.ஏ.ஓ.க்களை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் காசி உத்தரவிட்டுள்ளார்.

திமுக மாணவரணி நல உதவி

Posted: 15 Jun 2013 12:58 PM PDT

கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி, போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள்

Posted: 15 Jun 2013 12:58 PM PDT

காவிரி டெல்டா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் கைது

Posted: 15 Jun 2013 12:58 PM PDT

காதலித்து குடும்பம் நடத்திய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வின்

தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்

Posted: 15 Jun 2013 12:57 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் (வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வியாபாரி வீட்டில் 13 சவரன் திருட்டு

Posted: 15 Jun 2013 12:57 PM PDT

செய்யாறு அருகே வியாபாரி வீட்டில் 13 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை திருடு போயுள்ளன.

"கல்வியால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்'

Posted: 15 Jun 2013 12:57 PM PDT

கல்வி வழியால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்று செய்யாறு கோட்டாட்சியர் ஜனனி சௌந்தர்யா கூறினார்.

ஆரணி ஜெ.டி.ஆர். பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு

Posted: 15 Jun 2013 12:56 PM PDT

ஆரணி ஜெ.டி.ஆர். நர்சரி பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின  கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது . கருத்தரங்கில் நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு உள்ளிட்ட தலை

ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 15 Jun 2013 12:56 PM PDT

செய்யாறில் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் குண்டர் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தீ விபத்தில் மாணவி சாவு

Posted: 15 Jun 2013 12:56 PM PDT

திருவண்ணாமலை அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி இறந்தார்.

நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தால் 2 ஆண்டுகளில் திண்டிவனம்-நகரி ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்

Posted: 15 Jun 2013 12:55 PM PDT

மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்து கொடுத்தால் இரண்டே ஆண்டுகளில் திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.கிருஷ்ணசாமி கூறினார்.

செம்மரம் வெட்டச் சென்றால் கடும் நடவடிக்கை

Posted: 15 Jun 2013 12:55 PM PDT

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து செம்மரங்களை வெட்ட ஆந்திர மாநிலத்துக்கு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் (பொறுப்பு) முருகன் எச்சரித்துள்ளார்.

நாகர்கோவில்

Posted: 15 Jun 2013 12:54 PM PDT

வாக்கெடுப்பு முறை எப்படி நடைபெறும்?

Posted: 15 Jun 2013 12:49 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படுவது நிச்சயம். இந்த வாக்கெடுப்பு பொது மக்கள் தேர்தலில் வாக்களிப்பது போன்று இருக்காது. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கும் முன்னுரிமை அடிப்படையில் இருக்கும்.

ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த பாஜக முடிவு

Posted: 15 Jun 2013 12:35 PM PDT

பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்கும் கூட்டத்தை பள்ளி மைதானத்தில் நடத்த மாநில கல்வித் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அக்கூட்டத்தை சஞ்சய் காந்தி மைதானத்தில் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பெண்களின் உரிமை: சட்ட அமைப்புகள் அரணாக செயல்பட வேண்டும்

Posted: 15 Jun 2013 12:34 PM PDT

சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் சட்ட அமைப்புகள் அரணாக செயல்பட வேண்டும் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

தெலங்கானா பகுதிகளில் பந்த்: மாணவர் தற்கொலை

Posted: 15 Jun 2013 12:31 PM PDT

ஆந்திர மாநிலத்தின் தெலங்கானா பகுதிகளில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஓரளவுக்கே ஆதரவு கிடைத்தது.

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு நிதீஷ் விருந்தளித்தது ஏன்?

Posted: 15 Jun 2013 12:30 PM PDT

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு நிதீஷ்குமார் விருந்து அளித்தது ஏன்? என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 23-ல் பாஜகவின் முஸ்லிம் மாநாடு

Posted: 15 Jun 2013 12:29 PM PDT

இம் மாதம் 23-ஆம் தேதி தில்லி தால்கடோரா அரங்கில் பாஜக சார்பில் முஸ்லிம் மாநாடு நடைபெற உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலக அளவில் இரண்டாவதாகத் தேர்வு

Posted: 15 Jun 2013 12:29 PM PDT

ஆண்டுக்கு 2.5 கோடி முதல் 5 கோடி வரையிலான பயணிகள் சேவை வழங்கும் விமான நிலையங்களுக்கான பிரிவில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு உலக அளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 

பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறினால் வரவேற்போம்: பவார்

Posted: 15 Jun 2013 12:29 PM PDT

ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து மதச்சார்பற்ற அணிக்கு வருவதை வரவேற்பதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

"ஐ.பி., சி.பி.ஐ. அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும்'

Posted: 15 Jun 2013 12:29 PM PDT

ஐ.பி. உளவுத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும் என்று பாஜக வயுறுத்தியுள்ளது.

தலைமைக் காவலர் மீது தாக்குதல்: கார் ஓட்டுநர் கைது

Posted: 15 Jun 2013 12:28 PM PDT

சாலையில் விதிமீறிச் சென்ற கார் மீது அபராதம் விதிக்க முயன்ற போக்குவரத்துப் பிரிவுத் தலைமைக் காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம வசிப்பிடங்களையும் முறைப்படுத்த தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

Posted: 15 Jun 2013 12:28 PM PDT

தில்லியின் கிராமப்புற வசிப்பிடங்களை முறைப்படுத்தும் வகையில், தில்லி நிலச் சீர்திருத்தச் சட்டம், 1954-இன் பிரிவு 81-ஐ பயன்படுத்துவது தொடர்பான முடிவு தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவதற்கான "திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்,

"கிராமங்களும் வளர்ச்சியடைய நடவடிக்கை'

Posted: 15 Jun 2013 12:28 PM PDT

நகரத்துக்கு இணையாக தில்லி அருகே உள்ள கிராமங்களும் வளர்ச்சியடையும் வகையில் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். தில்லி அருகே உள்ள கிராம விவசாயிகள் பங்கேற்ற மாநாடு தில்லி த

மதுரையில் முதியவர்கள் அதிக அளவில் துன்புறுத்தல்

Posted: 15 Jun 2013 12:27 PM PDT

இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுரை மாநகரில் இது அதிகம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய அமைச்சர் அஜய் மக்கான் ராஜிநாமா

Posted: 15 Jun 2013 12:27 PM PDT

மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றி அமைக்கப்படவுள்ள சூழலில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் அஜய் மக்கான் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

ஐக்கிய ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சி: காங்கிரஸ் கருத்து

Posted: 15 Jun 2013 12:27 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியை மதச்சார்பற்ற கட்சி என காங்கிரஸ் கூறி உள்ளது.

திருத்தத்தை இந்தியா தடுக்க வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 12:26 PM PDT

இலங்கை அரசியல் சாசன சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர அந் நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை இந்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற இலங்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நனவாகிய "கனவில்'     தமிழ் வீரப் பெண்கள்!- துரை.பச்சையப்பன் -

Posted: 15 Jun 2013 12:26 PM PDT

போர்க் கலையில் இந்தியப் பெண்களின் சரித்திரம் குறைவானதாக இருக்கலாம். ஆனால், அவர்களது வீரத்தின் ஆழம் உயர்வானது. இன்றளவும் இந்தியப் பெண்களின் வீர வரலாற்றுக்கு ஜான்சி ராணி லட்சுமிபாய், வேலு நாச்சியார் போன்றோர் சான்றாக உள்ளனர்.

1.60 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

Posted: 15 Jun 2013 12:25 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு (2013-14) முதல்    நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய சாதனை படைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை 1.60 லட்சம் விண்ணப்பங்கள்

சிபிஐ விசாரணை கோரி முதல்வரிடம் 33 ஆயிரம் புகார் மனுக்கள்

Posted: 15 Jun 2013 12:25 PM PDT

மும்பையில் திராவக வீச்சில் உயிரிழந்த தில்லியைச் சேர்ந்த ப்ரீதி ரதி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரும் 33,000 ஆன் லைன் புகார்கள் தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித்திடம் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தில்லிக்குள் நுழையாமல் எல்லையில் ஹரியாணா பேருந்துகள் நிறுத்தம்!

Posted: 15 Jun 2013 12:25 PM PDT

ஹரியாணா போக்குவரத்துப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தில்லி நகருக்குள் நுழைய மறுத்து எல்லைப் பகுதியில் சனிக்கிழமை பேருந்துகளை நிறுத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குற்ற வழக்குகள் பதிவு:தில்லிக்கு முதலிடம் 

Posted: 15 Jun 2013 12:25 PM PDT

கடந்த ஆண்டு நாடு முழுவதும் குற்ற வழக்குகள் பதிவானதில் தில்லி பிரதேசம் முதலிடம் வகிக்கிறது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோஷ்டி மோதலில் முதியவர் சாவு:பி.எஸ்.எஃப்.  வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Posted: 15 Jun 2013 12:24 PM PDT

உத்தரபிரதேசம், ஷம்லி மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நிகழ்ந்த மோதலில் முதியவர் விரேந்தர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேம்பாலத்தில் பைக் மோதி கீழே விழுந்த இளைஞர் மரணம்

Posted: 15 Jun 2013 12:24 PM PDT

வேலைக்காக இன்னும் மூன்று தினங்களில் வெளிநாடு செல்ல வேண்டிய இளைஞர், மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் இறந்தார். அவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.

சாந்தினி செüக்  மேம்பாட்டுத் திட்டத்துக்கு அனுமதி

Posted: 15 Jun 2013 12:23 PM PDT

மொகலாயர் காலத்துப் பழைமையும், பாரம்பரியமும் உடைய தில்லி சாந்தினி செüக் பகுதியை மேம்படுத்துவதற்கான ரூ.40 கோடி திட்டத்துக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால், இந்தத் திட்டம் விரைவில் தொடங்கும் என

விவசாய நிலங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 12:22 PM PDT

புதுச்சேரி மாநிலத்தில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று கிராமப்புறத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

புதுவை பேராசிரியர் நூல்கள் மலேசியாவில் வெளியீடு

Posted: 15 Jun 2013 12:22 PM PDT

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் மு.இளங்கோவன் எழுதிய செவ்விலக்கியச் சிந்தனைகள், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா மலேசியாவில் அண்மையில் நடந்தது.

உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: தொடக்கம் முதல் விசாரணை செய்ய வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 12:22 PM PDT

புதுச்சேரியில் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியது முதல் விசாரணை நடத்த வேண்டுமென்று மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சாலை விபத்தில் பொறியாளர் சாவு

Posted: 15 Jun 2013 12:21 PM PDT

காரைக்காலில் மோட்டார் சைக்கிளில் சென்ற மின்துறை இளநிலைப் பொறியாளர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார்.

வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் தடியடி: வெளிமாநில நீதிபதி விசாரிக்க கோரிக்கை

Posted: 15 Jun 2013 12:21 PM PDT

புதுச்சேரியில் வேலை கேட்டு நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியது தொடர்பாக, வெளி மாநில நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டுமென்று புதுச்சே

மரக்கன்று நடும் விழா

Posted: 15 Jun 2013 12:21 PM PDT

உலக ரத்ததான தினத்தையொட்டி, புதுச்சேரி உருளையான்பேட்டையில் உள்ள டாக்டர்ஸ் காலனியில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓவியப் போட்டி:புதுவை மாணவிகள் சிறப்பிடம்

Posted: 15 Jun 2013 12:20 PM PDT

நாமக்கல் ஆர்ட் பவுண்டேஷன் நடத்திய தேசிய அளவிலான ஓவியப் போட்டியில், புதுச்சேரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

இன்டர்நெட் இணைப்பு: கூகுள் நிறுவனம் புதிய முயற்சி

Posted: 15 Jun 2013 12:20 PM PDT

பூமியின் வளி மண்டலத்தில் ராட்சத பலூன்களை பறக்கவிட்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்கும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இரும்பு திருடிய 2 பேர் கைது

Posted: 15 Jun 2013 12:20 PM PDT

  திருநள்ளாறு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வைத்திருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகளைத் திருடிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.

தொகுதி பணிகளுக்காக முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை

Posted: 15 Jun 2013 12:20 PM PDT

"தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக முதல்வரின் தயவை நாட வேண்டியதில்லை; விடாமுயற்சியுடன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினாலேயே நிறைவேற்றிவிடலாம்' என விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செ

பான்மசாலா, குட்கா பொருள்களை 28-க்குள் அப்புறப்படுத்த உத்தரவு

Posted: 15 Jun 2013 12:19 PM PDT

தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்களை வரும் 28-ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வி.ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.

தமிழில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பரிசு

Posted: 15 Jun 2013 12:19 PM PDT

சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில், தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் நாளை முதல் விநியோகம்

Posted: 15 Jun 2013 12:19 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம், திங்கள்கிழமை (17-ம்தேதி) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பம் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்படுகிறது. இப்படிவத்தின் விலை ரூ.50. தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி

ஜூலை 7-ல் பேச்சுப் போட்டி: மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 15 Jun 2013 12:18 PM PDT

திருக்கோவிலூரில் வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிக்காக பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு முகாமில் 40 பேர் தேர்வு

Posted: 15 Jun 2013 12:18 PM PDT

செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

19-ல் ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்ஷணம்

Posted: 15 Jun 2013 12:18 PM PDT

: உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோயில் மஹாசம்ப்ரோக்ஷணம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

அமெரிக்க ரசாயன ஆலை விபத்து: 2 பேர் சாவு

Posted: 15 Jun 2013 12:17 PM PDT

அமெரிக்காவில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

சிறப்பு காவல்படையில் காவலர் பயிற்சி நிறைவு

Posted: 15 Jun 2013 12:17 PM PDT

உளுந்தூர்பேட்டை (பாலி) காவலர் பயிற்சிப்பள்ளி கவாத்து மைதானத்தில் 434 ஆண் காவலர்களுக்கு பிப்ரவரி 18-ம் தேதிமுதல் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™