Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சூரியன் மேற்கே உதித்தாலும் கட்சிக்கே விசுவாசமாக இருப்போம்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்

Posted:

ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர, மற்ற, 20 எம்.எல்.ஏ.,க்களின் மீது, சந்தேக பார்வை விழத் துவங்கியுள்ளது. இது குறித்து, அவர்களிடம் கேட்ட போது, பெரும்பாலானோர், "கட்சிக்கு விசுவாசமாகவே இருப்போம்' என்று தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகிய, ஏழு பேர், முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட துவங்கியுள்ளனர். ...

சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மாணவர்கள் கையில் உள்ளது: அப்துல் கலாம்

Posted:

சென்னை : இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். அவர்கள் கையில்தான் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உள்ளது' என, அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பேசினார்.திருவள்ளூர், பெரியபாளையம் ஜெ.என்.என்., பொறியியல் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழா, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.விழாவில், 205 மாணவர்களுக்கு பட்டமளித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: விஞ்ஞானத்திற்காக மாணவர்கள் அயராது பாடுபட வேண்டும். அதில், வரும் தடைகளைக்கண்டு பயப்படாமல் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் ...

ஜனத்தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சும்: ஐ.நா.,தகவல்

Posted:

நியூயார்க் : "அடுத்த, 15 ஆண்டுகளில், உலக மக்கள் தொகையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் வகிக்கும்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், உலகின் பல நாடுகளும், வேலை வாய்ப்பு, உணவு உற்பத்தி உள்ளிட்ட விஷயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளன.இதை தவிர்க்கும் வகையில், உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை திட்டத்தை, தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் மக்கள் தொகை, ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ...

குறுவை சாகுபடிக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம்: ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிட அரசு ஏற்பாடு

Posted:

சென்னை:மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில், டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொள்ள, இன்று (15ம் தேதி) முதல், தினசரி, 12 மணி நேரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.இப்பகுதியில், 1 லட்சம்ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய ல விவசாயிகளுக்கு, 18 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்வது தொடர்பான, ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். ஏழு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், இதில் ...

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted:

சென்னை:""தமிழகம் சார்பில், கர்நாடகா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மேட்டூர் அணையின், மொத்த கொள்ளளவு, 120 அடி. தற்போதைய நிலவரப்படி, அணையில், 17.65 அடி நீர் மட்டுமே உள்ளது. இச்சூழலில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொள்வது தொடர்பான, ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்தது.முதல்வர் ஜெயலலிதா தலைமை ...

நரேந்திர மோடி விசா விவகாரம்:அமெரிக்க எம்.பி.,க்கள் விவாதம்

Posted:

வாஷிங்டன்:குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது குறித்து, அமெரிக்க எம்.பி.,க்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடிக்கு, அமெரிக்க விசா வழங்குவது குறித்த சர்ச்சை, இன்னும் ஓயவில்லை. சில மாதங்களுக்கு முன், மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசு, தற்போது அது குறித்து பரீசிலிக்கத் துவங்கியுள்ளது.அமெரிக்க எம்.பி.,க்களை உறுப்பினர்களாகக் கொண்ட, மத விவகாரக் குழு கூட்டத்தில், மோடிக்கு விசா வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இது குறித்த அரசின் நிலைப்பாட்டை ...

எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஒரு சிலரிடமிருந்து மிரட்டல் வருகிறது: வீரப்ப மொய்லி

Posted:

புதுடில்லி:""வெளிநாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும் முடிவை எடுத்தால், பெட்ரோலிய அமைச்சர்களுக்கு மிரட்டல் வருகிறது,'' என, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பெட்ரோலிய அமைச்சருமான, வீரப்ப மொய்லி கூறியதாவது:

@subtitle@தடை, தாமதம்:@@subtitle@@
நம் நாட்டில், எண்ணெய் வளம் ஏராளமாக உள்ளது. ஆனால், அதை கண்டறிவதற்கான துரப்பன பணிகள் போதிய அளவில் நடக்கவில்லை. அதைச் செய்வதற்கு, குறிப்பிட்ட சிலரிடமிருந்து, இடையூறுகள் வருகின்றன. நிர்வாக ரீதியான தடைகளும்,தாமமும் ...

பா.ஜ., கூட்டணியில் முற்றுகிறது விரிசல்

Posted:

பாரதிய ஜனதாவுடன், 17 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துக் கொள்ள, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தயாராகி விட்டது. ஆனாலும், அதற்குப் பிறகு, எங்கு போய் சேருவது என்பது குறித்து, அக்கட்சிக்குள் குழப்பம்நிலவுகிறது.

@subtitle@முக்கியத்துவம்:@@subtitle@@
தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு அடுத்த நிலையில், இரண்டாவது பெரிய கட்சியாக, ஐக்கிய ஜனதா தளம் திகழ்கிறது. இந்த கட்சியின் தலைவரான சரத் யாதவ், கூட்டணியின் அமைப்பாளராகவும் உள்ளார். பா.ஜ.,வில் சமீப காலமாக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்களுக்கு, குறிப்பாக, ...

விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத ஆசிரியர்களுக்கு தண்டனை : பிளஸ் 2 தேர்வு முடிவு குளறுபடியில் அரசு நடவடிக்கை

Posted:

""பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.பிளஸ் 2, மறு மதிப்பீடு திட்டத்தில், 5,726 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண்கள், ஏற்கனவே இருந்ததை விட, குறைந்து விட்டதாக, மாணவர்கள் புலம்பினர். குறிப்பாக, விண்ணப்பிக்காத மாணவர்களின் விடைத் தாள்களும், மறு மதிப்பீடு செய்ததால், பெரும் குளறுபடி ஏற்பட்டது.இந்த விவகாரம் ...

சிறை நிரப்பும் போராட்டம் : பாரதிய ஜனதா அறிவிப்பு

Posted:

புதுடில்லி: ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, வரும், 17ம் தேதி முதல், 30ம் தேதி வரை, நாடு தழுவிய அளவில், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த, பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, பா.ஜ., தகவல் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற் போக்கு கூட்டணியின், 10 ஆண்டு கால ஆட்சியில், நாடு முழுவதும், ஊழலும், மோசடியும் பெருகி விட்டன. விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. அரசியல் சட்ட அமைப்புகளையும், மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இவற்றை கண்டித்து, வரும், 17ம் தேதி முதல், 30ம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™