Tamil News | Online Tamil News |
- பி.இ., - எம்.பி.பி.எஸ்., கட் ஆப் மதிப்பெண்களில் குளறுபடி: பிளஸ் 2 மறு மதிப்பீட்டில் கல்வித்துறை சொதப்பல்
- உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மத்திய அரசின் முடிவில் மாற்றம்
- கனிமொழிக்காக தி.மு.க., கெஞ்சல்: முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல்
- பா.ம.க., கலவரத்தால் ரூ.50 கோடி இழப்பு? அடுத்த கட்ட அதிரடிக்கு தயாராகுது அரசு
- கிட்னி மோசடி தொடர்பாக சேலம் டாக்டர் சிக்கியது எப்படி?
- ஆதிவாசி மக்களின் "எம்ப்ராய்டரி' வேலைப்பாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம்
- தேர்தல் நிதி விவகாரம்: அறிவாலயத்தில் இன்று நெல்லை மாவட்ட "பஞ்சாயத்து!'
- தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள்: சிதம்பரம் வேண்டுகோள்
- கூட்டாட்சி முன்னணி குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை: நிதிஷ்குமார் பளீர்
- இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் மாற்றம்: ஜூன் 18ம் தேதி தாக்கலாகிறது
Posted: ![]() பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்களின், "கட்-ஆப்' மதிப்பெண்கள், மாறியுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்காத போதும், அவர்களுடைய விடைத்தாள்களை, தேர்வுத்துறை, மறு மதிப்பீடு செய்ததில், ஏராளமானோருக்கு, மதிப்பெண்கள் குறைந்துள்ளன. தேர்வுத் துறையின் குளறுபடியால், மாணவர்கள், கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை, நேற்று முன்தினம், மருத்துவ கல்வி இயக்ககமும், அண்ணா ... |
உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மத்திய அரசின் முடிவில் மாற்றம் Posted: ![]() உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டிருந்த மத்திய அரசு, நேற்று முடிவை திடீரென மாற்றிக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு, பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் கூட்டி, மசோதாவை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது. @subtitle@எதிர்பார்ப்பு: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. எனினும், அதற்கு முன்னதாகவே, இன்னும் சில மாதங்களில், லோக்சபாவுக்கு தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுவதும், 67 சதவீத ஏழை ... |
கனிமொழிக்காக தி.மு.க., கெஞ்சல்: முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் திணறல் Posted: ![]() ராஜ்யசபா தேர்தலில், கனிமொழியை வேட்பாளராக நிறுத்துவது என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டதில் முடிவு செய்யப்பட்டது. அவர் போட்டியின்றி தேர்வாக, தே.மு.தி.க., மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கேட்க, தி.மு.க., சார்பில் தூதர்களை அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என, தி.மு.க, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா தேர்தல், இம்மாதம், 27ம்தேதி நடைபெறவுள்ளது. சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் உட்பட, 22 எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ... |
பா.ம.க., கலவரத்தால் ரூ.50 கோடி இழப்பு? அடுத்த கட்ட அதிரடிக்கு தயாராகுது அரசு Posted: ![]() சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில், நடந்த வன்முறை சம்பவங்களால், 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இத்தொகையை, அக்கட்சியிடம் அபராதமாக வசூலிக்கும் வகையில், அரசு, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளும் என, கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் பங்கேற்க, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, மாமல்லபுரத்திற்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்தோருக்கும், மரக்காணத்தில் ஒரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கலவர சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, ... |
கிட்னி மோசடி தொடர்பாக சேலம் டாக்டர் சிக்கியது எப்படி? Posted: ![]() தர்மபுரி: கிட்னி மோசடியில், சேலம் டாக்டர் சிக்கியது எப்படி என, "திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரியில், கிட்னி விற்பனை தொடர்பாக, சேலம் டாக்டர் மற்றும் நான்கு புரோக்கர் உள்ளிட்ட, ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில்,பென்னாகரம், சுஞ்சல்நத்தத்தை சேர்ந்த ஐயர்,என்பவர், சேலம் டாக்டர் கணேசனிடம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சையின் போது, ஐயருக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது. ஐயரின் ரத்த உறவு முறையில் யாரும், அவரது ரத்த வகை இல்லாததால், வெளியில் இருந்து, கிட்னி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. டாக்டர் கணேசன், ஐயருக்கு ... |
ஆதிவாசி மக்களின் "எம்ப்ராய்டரி' வேலைப்பாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் Posted: ![]() ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும், தோடர் இன ஆதிவாசி மக்களின், பாரம்பரிய தொழிலான எம்ப்ராய்டரி (பூ வேலைப்பாடு) தொழிலுக்கு, "புவியியல் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உலகளாவிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. @subtitle@பாரம்பரியம்: @@subtitle@@ நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், காட்டு நாயக்கர் என, பலவகை பழங்குடி, ஆதிவாசி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியின், "மண்ணின் மைந்தர்கள்' என்ற பெருமையை பெற்ற, இவர்களின் பாரம்பரியம், பல நூறு ஆண்டுகளை கடந்தது. இவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளில், தோடர் இன பெண்களே பூ வேலைப்பாடுகள் செய்து கொள்வர். தவிர, பூ ... |
தேர்தல் நிதி விவகாரம்: அறிவாலயத்தில் இன்று நெல்லை மாவட்ட "பஞ்சாயத்து!' Posted: ![]() நெல்லை மாவட்ட தி.மு.க., சார்பில், திரட்டப்பட்ட தேர்தல் நிதியில், வசூல் முறைகேடு புகார் தொடர்பாக, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் இன்று, "பஞ்சாயத்து' நடைபெறவுள்ளது. கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்டம், மேற்கு, கிழக்கு என, இரண்டாக பிரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அம்மாவட்ட, தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது. நெல்லை மாவட்ட தி.மு.க., சார்பில், தென்காசியில், மே மாதம் லோக்சபா தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக, 3 கோடி ரூபாய், பொருளாளர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதே ... |
தங்கம் வாங்கும் ஆசையை அடக்குங்கள்: சிதம்பரம் வேண்டுகோள் Posted: ![]() புதுடில்லி: "தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது- மக்கள் தங்கம் வாங்க கூடாது என்பது தான், என் ஒரே விருப்பம். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், திருப்தி அளிக்கும் அளவிற்கு, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. தங்கம் மீதான சுங்க வரியை மேலும் உயர்த்தி, என் புகழை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. @subtitle@பொருளாதாரம்: @@subtitle@@ சென்ற நிதியாண்டில், நிதிப் ... |
கூட்டாட்சி முன்னணி குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை: நிதிஷ்குமார் பளீர் Posted: ![]() பாட்னா: ""கூட்டாட்சி முன்னணியை ஏற்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; அது தொடர்பான பேச்சு, துவக்க நிலையில் தான் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதா, இல்லையா என்பது குறித்து, சனிக்கிழமை முடிவு செய்யப்படும்,'' என, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமான நிதிஷ்குமார் நேற்று கூறினார். குஜராத் முதல்வர், பாரதிய ஜனதாவை சேர்ந்த, நரேந்திர மோடியின் வளர்ச்சியில், பீகார் முதல்வர், நிதிஷ்குமாருக்கு நல்ல எண்ணம் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மோடியை மட்டம் தட்டியே பேசுவது நிதிஷûக்கு ... |
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் மாற்றம்: ஜூன் 18ம் தேதி தாக்கலாகிறது Posted: ![]() கொழும்பு: இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செப்டம்பரில்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள, 13ஏ சட்டம், தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்கிறது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி, இலங்கை ஆளும் கூட்டணியில் உள்ள, ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சி, பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. எனவே, வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13ஏ சட்டத்தில் திருத்தம் செய்ய, இலங்கை அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு, உருவாக்கப்பட்ட இந்த ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 14,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |