Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


8,000 பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அறிவிப்பு: ரூ.3,000 முதல், 35 ஆயிரம் வரைநிர்ணயம்

Posted:

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000 பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண கால வரையறை முடிந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கட்டண நிர்ணய குழு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தி வந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், 8,000 பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்து, தமிழக ...

ஜூலை 15 முதல் தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது 160 ஆண்டு சேவை

Posted:

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் ...

பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Posted:

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், தங்களின் பணிகளில் உள்ள பிரச்னைகளை விளக்கியும், உயர் அதிகாரிகளை போட்டு கொடுத்தும், நேரடியாக, பிரதமர் அலுவலகத்துக்கு, புகார் கடிதங்களை அனுப்புவதால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். "இனிமேல், பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாக புகார் கடிதம் எழுதினால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

@subtitle@பிரச்னை : @@subtitle@@
மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் ...

சோனியா மருமகனுக்கு எதிரான வழக்கு : விவரங்களை தெரிவிக்க அரசு மறுப்பு

Posted:

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேரா மீதான வழக்கில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட, பதில் மனு விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்க, மத்திய அரசு மறுத்து விட்டது.சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேரா மீது, "ஏழை மக்கள் கட்சி3யை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் சேர்ந்து, நில மோசடியில் ஈடுபட்டதாக, வதேரா மீது, புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, லக்னோவை சேர்ந்த, நுடான் தாகூர் என்பவர், அலகாபாத் ஐகோர்ட்டில், மனு ...

எம்.பி.,பதவிக்கு போட்டியிடுவதை தடுத்த தங்க கடத்தல் வழக்கு: சரவணப் பெருமாள் பின்னணி அம்பலம்

Posted:

அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, கழுத்தில் ருத்திராட்சமும், நெற்றியில் குங்குமப் பொட்டும் அணியும் வழக்கம் கொண்ட, சரவண பெருமாள், திடீரென மாற்றப்பட்டதற்கு, அவர், "கஸ்டம்ஸ்' மற்றும், "பெரா' வழக்குகளில், சிக்கியதே காரணம், என்பது தெரிய வந்துள்ளது.கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், நெல்லை அ.தி.மு.க., வேட்பாளர், நயினார் நாகேந்திரனை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட்டு தோற்ற, கட்சிக்காக, பெரிதாக எதையும் செய்யாத, சரவண பெருமாள், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.முற்பட்ட சமூகத்தை சேர்ந்த அவரை, ராஜ்யசபாவுக்கு ...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கட்டட நிதிக்கு ரூ.5 கோடி : முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted:

சென்னை:""அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மாபெரும் மருத்துவ மையத்திற்கான மத்திய அரசின் அங்கீகாரம் இந்தாண்டிற்குள் கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டு மத்தியில் வேறு ஒரு நல்ல ஆட்சி அமையும். அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த அங்கீகாரம் கிடைக்கும் என உறுதி கூறுகிறேன்,'' என்று வைர விழா ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா துவக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, வைர விழா ஆண்டு, நவீன புற்றுநோய் சிகிச்சை இயந்திரத்தை ...

ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? காங்கிரசுக்கு கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு ...

பா.ஜ., - காங்., அல்லாத மூன்றாவது அணி வருமா? புதிய கூட்டணி உருவாக்க மம்தா முயற்சி

Posted:

புதுடில்லி : பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடுத்து, தேசிய அரசியலில்பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயககூட்டணியிலிருந்து வெளியேற, ஐக்கிய ஜனதா தளம் கட்சி திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜியும், காங்., - பா.ஜ., அல்லாத கட்சிகளைஒருங்கிணைத்து, தேசிய அளவில், மூன்றாவது அணியை அமைப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதற்கு, பா.ஜ., ...

"எங்களிடம் தண்ணீர் இல்லை; தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது': கர்நாடகா அடம்

Posted:

"மேற்பார்வை குழு, தண்ணீர் பங்கீடு குறித்தெல்லாம் முடிவெடுக்கக் கூடாது' என, நேற்றைய கூட்டத்தில் வலியுறுத்திய கர்நாடகா, "தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது' என, உறுதியாக கூறிவிட்டது.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. மத்திய நீர்வள அமைச்சகத்தில், மதியம், 3:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 வரை, இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார் கலந்து ...

பி.இ., "ரேங்க்' பட்டியல் வெளியீடு: சாதனை மாணவர் மருத்துவத்தில் ஆர்வம்

Posted:

சென்னை:பி.இ., "ரேங்க்' பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது. "டாப்' வரிசையில் உள்ள இரு மாணவர்கள், மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளனர். பொறியியல் சேரும் மாணவர்கள், இ.சி.இ., - எம்.இ., பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, ஆர்வம் தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 21ம் தேதி துவங்குகிறது.மாநிலத்தில் உள்ள, 550 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலை, தகுதியான விண்ணப்பங்களாக ஏற்றுக்கொண்ட, 1.82 லட்சம் விண்ணப்பதாரர்களின், "ரேங்க்' பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், நேற்று மாலை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™