Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


2½ லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் புதிய சட்ட மசோதா மீது விவாதம் நடத்த பாராளுமன்றத்தில் ஒப்புதல்

Posted: 12 Jun 2013 02:35 PM PDT

வாஷிங்டன்

2½ லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா குறித்து விவாதம் நடத்த அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

விவாதம் நடத்த ஆதரவு

அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 கோடியே 10 லட்சம் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை விவாதத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பாராளுமன்ற செனட் சபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது.

நிதிஷ்குமார், சரத்யாதவுடன் அத்வானி பேச்சு பா.ஜனதா கூட்டணியில் நீடிக்க வேண்டுகோள்

Posted: 12 Jun 2013 02:18 PM PDT

புதுடெல்லி

பா.ஜனதா தலைவர் அத்வானி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களான நிதிஷ்குமார், சரத்யாதவ் ஆகியோருடன் டெலிபோனில் பேசினார். பா.ஜனதா கூட்டணியில் நீடிக்கும்படி, அத்வானி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

3–வது புதிய அணி

நரேந்திர மோடிக்கு பா.ஜனதாவில் முக்கியத்துவம் அதிகரிப்பதை தொடர்ந்து, பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உடையும் நிலை உருவாகி வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி அது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தனது முடிவை அறிவிக்க இருக்கிறது.

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது

Posted: 12 Jun 2013 02:06 PM PDT

புதுடெல்லி

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

நில பேர ஊழல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா–நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதியில் ரத்து

Posted: 12 Jun 2013 01:00 PM PDT

பர்மிங்காம்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாநியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை

7வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்து வீரரை தாக்கிய வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை

Posted: 12 Jun 2013 12:59 PM PDT

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், போதையில் இங்கிலாந்து வீரரை தாக்கினார். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி வருகிறது.

தோல்விக்கு பின் ஜாலி

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் சொல்கிறார்

Posted: 12 Jun 2013 12:57 PM PDT

கொச்சி,

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 27 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஸ்ரீசாந்த் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சிக்கு நேற்று காலை திரும்பினார். ரசிகர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அவரை வரவேற்றனர்.

பின்னர் ஸ்ரீசாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்று மோதல்: இங்கிலாந்தை சமாளிக்குமா இலங்கை?

Posted: 12 Jun 2013 12:55 PM PDT

லண்டன்,

இன்று நாள் எப்படி...? (13-06-2013)

Posted: 12 Jun 2013 11:51 AM PDT

ஆன்மிக சிந்தனை (13-06-2013)

Posted: 12 Jun 2013 11:26 AM PDT

ஆண்டியார் (13-06-2013)

Posted: 12 Jun 2013 11:25 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™