Tamil News | Online Tamil News |
- கோவை அருகே பள்ளி பஸ்சிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிர் தப்பினார்
- அதிகாரிக்குஅடி உதை: அடங்கவில்லை ஆளுங்கட்சி பிரமுகர்கள் அட்டகாசம்
- சவுதி அரேபியாவில் பணியாற்றும் 2 லட்சம் தமிழர்கள் வேலையிழப்பர்?
- மூன்று எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க தே.மு.தி.க., முயற்சி
- காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு
- காந்தி கொள்கைகள் : முதல்வர் நரேந்திர மோடி பாராட்டு
- ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் அத்வானி: ஆர்.எஸ்.எஸ்., தலையீட்டால் முடிவு
- ஊழலில் காங்., - எம்.பி., "மாஜி' மந்திரி கைகோர்ப்பு: நிலக்கரி சுரங்க மோசடியில் சி.பி.ஐ., அதிரடி
- வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி
- கோவையில் ‘கருப்பு’ பைனான்சியர்கள் ஓட்டம் : ரூ.100 கோடி சுருட்டலில் திடீர் திருப்பம்
| கோவை அருகே பள்ளி பஸ்சிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிர் தப்பினார் Posted: கோவை: கோவையில், தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தபோது, அவசர வழி கதவு திடீரென்று திறந்ததால், சீட்டில் அமர்ந்திருந்த, ஐந்து வயது சிறுமி, தவறி கீழே விழுந்தார்.கோவை - பொள்ளாச்சி ரோட்டில், தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு சொக்கனூரை சேர்ந்த லீனா, 5, சிறுமி யு.கே.ஜி., படித்து வருகிறாள். நேற்று மாலை வகுப்பு முடிந்த பின், பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் லீனா, உட்பட, 46 சிறுவர், சிறுமியர் பயணம் செ#தனர்.கல்லாங்காட்டுபுதூரைச் சேர்ந்த, சக்திவேல், 38,என்பவர் பஸ்சை ஓட்டினார். தண்ணீர்பந்தல் உள்ளிட்ட, இடங்களில் குழந்தைகளை இறக்கிய பின், பஸ் சென்று கொண்டிருந்தது.வழியில், ... |
| அதிகாரிக்குஅடி உதை: அடங்கவில்லை ஆளுங்கட்சி பிரமுகர்கள் அட்டகாசம் Posted: சென்னை:பள்ளிகரணையில் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகரராட்சி அதிகாரி ஒருவரை அ.தி.மு.க.,துணை செயலர், தனது அடியாட்களுடன் சென்று சராமாரியாக தாக்கிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக,மாநகராட்சி அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள அ.தி.மு.க.,பிரமுகரை தேடி வருகின்றனர்.பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 190வது வார்டில், பாரதிதாசன் 5வது குறுக்கு தெருவில் உள்ள அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு கொட்டகை அமைக்கப்பட்டு வருவதாக, ... |
| சவுதி அரேபியாவில் பணியாற்றும் 2 லட்சம் தமிழர்கள் வேலையிழப்பர்? Posted: சென்னை:சவுதி அரேபியாவில் அமலுக்கு வந்துள்ள, உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டத்தால், அந்நாட்டில் வேலை செய்யும், 2 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வேலையின்றி நாடு திரும்பும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, தமிழக அரசின் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு சட்டம் அமலுக்கு வந்ததால், அலுவலகப் பணிகள் மற்றும், "ஒயிட் காலர்' வேலைவாய்ப்புகளில், உள்நாட்டவரை வேலைக்கு அமர்த்த, சவுதி அரேபியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அப்பணிகளில் ... |
| மூன்று எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க தே.மு.தி.க., முயற்சி Posted: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர், முதல்வரை சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள அக்கட்சி தலைமை, அவர்களை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.தே.மு.தி.க.,விற்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உட்பட, 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். கட்சி தலைமை மீதுள்ள, அதிருப்தி காரணமாக, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வாக, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். விஜயகாந்தின் நண்பர்களான, சுந்தர்ராஜன், நடிகர் அருண் பாண்டியன், ரசிகர் மன்றத்தில் இருந்து அரசியலுக்கு வந்த தமிழழகன், சுரேஷ்குமார், மைக்கேல் ராயப்பன், சாந்தி ஆகிய, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், ... |
| காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு Posted: சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| காந்தி கொள்கைகள் : முதல்வர் நரேந்திர மோடி பாராட்டு Posted: காந்திநகர் : ""மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கையை கடைபிடிப்பதன் மூலம், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.காந்தி நகரில், அகில இந்திய கால்நடை மற்றும் பால் பொருட்கள் மேம்பாடு குறித்த மாநாட்டை தொடங்கி வைத்து, மோடி பேசியதாவது:நாட்டின் இன்றைய பொருளாதார பின்னடைவை சரி செய்யவும், எதிர் காலத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், மகாத்மா காந்தியின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். காந்தியின் கொள்கைகளை கடைபிடிப்பதின் மூலம், கிராமங்களை வளர்ச்சிப் ... |
| ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் அத்வானி: ஆர்.எஸ்.எஸ்., தலையீட்டால் முடிவு Posted: புதுடில்லி : கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, நேற்று முன்தினம் அதிரடி முடிவை எடுத்த, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாக, ராஜினாமா முடிவை, நேற்று மாலை திரும்ப பெற்றார். இதனால், பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட நெருக்கடி, முடிவுக்கு வந்துள்ளது. |
| ஊழலில் காங்., - எம்.பி., "மாஜி' மந்திரி கைகோர்ப்பு: நிலக்கரி சுரங்க மோசடியில் சி.பி.ஐ., அதிரடி Posted: புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல், மீண்டும் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, எம்.பி.,யும், பிரபல தொழில் அதிபருமான, நவீன் ஜிண்டால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு திரைப்பட இயக்குனருமான, தாசரி நாராயண ராவ் ஆகியோர் கைகோர்த்து, நிலக்கரி சுரங்க ஊழலில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்களுக்கு சொந்தமான பல இடங்களில், அதிரடி சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் அள்ளிச் சென்றுள்ளனர்.மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான, 2004-09ம் ஆண்டுகளில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், ஊழல் ... |
| வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி Posted: காந்திநகர் : "இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்பட்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, விவசாயிகளிடம் இருந்து, இரும்பு சேகரிக்க திட்டமிட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.பிரசார இயக்கம்:வரும், அக்டோபர், 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இரும்பு மனிதர் என, அழைக்கப்பட்ட படேலுக்கு, நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள, சர்தார் சரோவர் அணைக்கு எதிரே, 182 மீட்டர் (392 அடி) உயர சிலை அமைக்க, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது."ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படும், இந்த சிலை, முற்றிலும் ... |
| கோவையில் ‘கருப்பு’ பைனான்சியர்கள் ஓட்டம் : ரூ.100 கோடி சுருட்டலில் திடீர் திருப்பம் Posted: கோவையில்,ரூ.100கோடிக்கும் மேல் சுருட்டிய மோசடி சகோதரர்களை பிடிக்க ,போலீசுக்கு இணையாக, நகைக்கடை அதிபர்கள் மற்றும் பைனான்சியர்கள் சிலரும் தனிக்குழு அமைத்து, வெளிமாநிலங்களில் தேடுகின்றனர். மோசடி நபர்களுக்கு கடனளித்த பணத்தில் பெரும்பகுதி, கணக்கில் காட்டாத "கருப்புபணம்' என்பதால், பைனான்சியர்கள்பலரும், போலீசில் புகாரளிக்க இயலாமல் பதுங்கிவிட்டனர்.கோவை, புரூக்பாண்ட்ரோட்டிலுள்ள புரூக்பீல்டு அடுக்குமாடிகுடியிருப்பில்வசிக்கும் சகோதரர்கள் பாலாஜி,45, மற்றும் அசோக்குமார்,42. இருவரும்கூட்டாக, கோவைநகரில், நகைக்கடைகளை திறந்து, வங்கிகளில் ரூ.60கோடி, ரூ.12கோடி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 12,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |