Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அத்வானி ராஜினாமா கடிதம் கிளப்பியது புயல்: "லட்சியத்தில் இருந்து பாதை மாறுகிறது பா.ஜ.,'

Posted:

புதுடில்லி : பாரதிய ஜனதா மூத்த தலைவர், அத்வானி, 85, நேற்று திடீரென முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார். "கட்சி துவக்கப்பட்ட லட்சியத்திலிருந்து பா.ஜ., விலகுகிறது' என, ராஜினாமா கடிதத்தில் அத்வானி குறிப்பிட்டு, அதிருப்தியை வெளிப்படுத்தினார். லோக்சபா தேர்தலுக்கான, பிரசார குழு தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்ட மறுநாளே, மூத்த தலைவரான அத்வானி தெரிவித்த கருத்துகள், கட்சியில் புயலாக உருவெடுத்து உள்ளது.அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ...

அரசியலுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அத்வானி

Posted:

இந்தியாவின் துணைப் பிரதமராக பதவி வகித்தவரும், பா.ஜ., கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி, கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். 1927 நவ., 8ல் பிரிக்கப்படாத இந்தியாவில் (தற்போது பாகிஸ்தான்) கராச்சியில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்தார். பெற்றோர் கிதன்சந்த் அத்வானி - கியானி தேவி. பிரிவினைக்குப் பின், இந்தியாவில் குடியேறிய அத்வானி, ஐதராபாத்தில் பட்டப் படிப்பையும், மும்பை பல்கலையில் சட்டப் படிப்பையும் முடித்தார். மனைவி கமலா, மகள் பிரதீபா, மகன் ஜெயந்த். ஆரம்பம்: அத்வானி துவக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்ந்து 1947ல் அதன் செயலரானார். ...

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி: ஜெ., அறிவிப்பு

Posted:

""அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பாரதிய ஜனதா என, எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை,'' என, டில்லியில் நேற்று அதிரடியாக அறிவித்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ""40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்,'' என கூறியுள்ளார். இதன் மூலம், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., நிலையை அறிவித்து, மற்ற கட்சிகளை ஜெயலலிதா முந்தியுள்ளார்.

@subtitle@ஓய்வெடுத்தார்:@@subtitle@@
தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மதியம், 12:20 மணிக்கு டில்லி வந்தார். விமான நிலையத்தில் இருந்து, "தமிழ்நாடு ...

இரட்டை வேடம் போடுவது யார்: கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை : "இலங்கை தமிழர்கள் பிரச்னையில், இரட்டை வேடம் போடுவது யார்? மத்திய அரசா? முதல்வர் ஜெயலலிதாவா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:"இலங்கை பிரச்னையில், மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், இதே இலங்கை பிரச்னையில், ஜெயலலிதா போடாத இரட்டை வேடமா?இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் கொன்று குவித்த போது, இறுதிப் போர் நடத்திய நேரத்தில், "ராஜபக்ஷே நடத்தும் யுத்தம், தமிழர்களை எதிர்த்து அல்ல; விடுதலைப் புலிகளை எதிர்த்து தான்' என, ஜெயலலிதா கூறினாரா இல்லையா? அது ...

நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் சாடல்

Posted:

மும்பை :அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதை, காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கடுமையாக விமர்சித்துள்ளன.தேர்வு:பா.ஜ.,வின், தேசிய செயற்குழு கூட்டம், கோவா மாநிலம் பனாஜியில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.இதை, பா.ஜ.,வில், அத்வானி உள்ளிட்ட, ஒரு சில தலைவர்களை தவிர, பெரும்பாலான தலைவர்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகளிடையே, இதற்கு, கடும் விமர்சனம் ...

"ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்க தயார்' : ஸ்டாலின் ஆவேசம்

Posted:

ஓசூர் : ""ஒகேனக்கல் திட்டத்தை, ஜெயலலிதா தான் கொண்டு வந்தார்,'' என நிரூபித்தால், நான் அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயார்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.ஓசூரில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள், 90 சதவீதம் முடிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., கொண்டு வந்த மற்ற திட்டங்களை போல், ஒகேனக்கல் திட்டத்தையும், ஜெயலலிதா முடக்கி வைத்து விடுவார், என அச்சமடைந்து, நான் "ஒகேனக்கல் திட்டப் பணியை எங்களிடம் தந்து பாருங்கள். இரு மாதங்களில் முடித்து காட்டுகிறோம்' என, சவால் ...

கூட்டணி மாறுமா அல்லது குதிரை பேரம் நடக்குமா?

Posted:

ராஜ்யசபாவுக்கு, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்ய நடக்கும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஐந்து எம்.பி.,க்கள் உறுதியாகிவிட்ட நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது எந்தக் கட்சி என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், குதிரை பேரத்துக்கான வேலைகளை, அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன என, ஒருபுறம் கூறப்பட்டாலும், கூட்டணிகள் புதிதாக உருவாகும் என்றும் அரசியல்வட்டாரங்களில் கூறப்படுகிறது.ராஜ்யசபா எம்.பி.,க் களான, மைத்ரேயன், இளவரசன் (அ.தி.மு. க.,), கனிமொழி, சிவா (தி.மு.க.,), ஞானதேசிகன் (காங்.,), டி.ராஜா (இந்திய கம்யூ.,), ஆகியோரின் பதவி காலம், ஜூலை, 24ம் தேதி நிறைவு ...

கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: மாநகராட்சி "அதிரடி'

Posted:

கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, அனுமதி பெறாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த, அதிரடி நடவடிக்கையால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை, கணபதி லட்சுமிநகரை சேர்ந்தவர் பழனிசாமி; மாஜி டி.எஸ்.பி., இவரது மகன் பிரேம்; மருமகள் பூங்குழலி. இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் தமிழரசின் மகள். கோவை அவிநாசி ரோட்டில், ஹோப்காலேஜ் அருகில், பூங்குழலி பெயரில் இடமுள்ளது. அதன் அருகில், கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த, விஸ்வநாதனுக்கு ...

தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல்

Posted:

கடலூர்:மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அடாவடியாக அரசு நிர்ணயக் கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதால், பெற்றோர்கள் திணறி வருகின்றனர்.நாட்டிற்கு பல கல்வியாளர்களை உருவாக்கித் தந்த பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள கடலூர் மாவட்டம், கல்வியில் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விவசாயம் போன்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே. இந்நிலையில், போதிய மழையின்மை, மின்வெட்டு, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை ...

அமைச்சர் பதவி என்னை தேடி வரும்: மவுனம் கலைத்தார் சென்னிதலா

Posted:

திருவனந்தபுரம்: கேரள அமைச்சரவையில், தனக்கு முக்கிய பதவி கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அமைச்சர் பதவி என்னை தேடிவரும் என மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதலா, தெரிவித்துள்ளார். கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் காங். ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சாண்டிக்கும், மாநில காங். தலைவர் ரமேஷ் சென்னிதலாவிற்கும் பணிப்போர் நடக்கிறது. இதில் காங்.மேலிடம் தலையிட்டும் தீரவில்லை. சென்னிதலாவிற்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி காங்.மேலிடத்திற்கு நெருக்கடி கெடுத்து வருகின்றனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™