Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 10 Jun 2013 01:14 PM PDT

பெரம்பலூர், அரியலூரில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சன்னாசிநல்லூரில் நாளை சிறப்பு மனுநீதி நிறைவு நாள்

Posted: 10 Jun 2013 01:14 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் சன்னாசிநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெறுகிறது.

கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு

Posted: 10 Jun 2013 01:13 PM PDT

அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர்கள் திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மணல் கடத்தல்: ஒருவர் கைது

Posted: 10 Jun 2013 01:13 PM PDT

: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை வி. களத்தூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இளைஞர் சாவு: விசாரணைக் குழு நாளை வருகை

Posted: 10 Jun 2013 01:13 PM PDT

பெரம்பலூர் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்த இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணையர் இயக்குநர் தலைமையிலான விசாரணைக் குழுவினர் புதன்கிழமை (ஜுன் 12) பெரம்பலூர் வர உள்ளனர்.

வறட்சி நிவாரணம் கோரி மனு

Posted: 10 Jun 2013 01:12 PM PDT

அரியலூர் ஆட்சிரகத்தில் வறட்சி பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து இலந்தைக்கூடத்தை சேர்ந்த விவ

ஜூன் 14-ல் ரேஷன் குறைதீர் கூட்டம்

Posted: 10 Jun 2013 01:12 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களையவும் மக்களின் குறைகளைக் கே

வெங்கனூரில் நாளை சிறப்பு மனுநீதி நாள் முகாம்

Posted: 10 Jun 2013 01:11 PM PDT

: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

பெண் கொலை: இளைஞர் கைது

Posted: 10 Jun 2013 01:11 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெண்ணை கொலை செய்த இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து 2-வது நாளாக எரியும் குப்பைக் கிடங்கு

Posted: 10 Jun 2013 01:11 PM PDT

தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் எரிந்து கொண்டிருந்தது.

அடகு கடையில் ரூ. 30 ஆயிரம் திருட்டு

Posted: 10 Jun 2013 01:10 PM PDT

கும்பகோணம் அருகே அடகு கடையின் இரும்பு ஷட்டர் கதவினை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஆலங்குடி அருகே பெண்ணிடம் 10 பவுன் பறிப்பு

Posted: 10 Jun 2013 01:09 PM PDT

ஆலங்குடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தெற்கு பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் பாஞ்சாலை (50).

"காவிரி பிரச்னை: அனைத்துக் கட்சி கூட்டம் அவசியம்'

Posted: 10 Jun 2013 01:09 PM PDT

காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும் சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான கே. பாலகிருஷ்ணன்.

கும்மங்குடியில் நாளை மக்கள் குறைகேட்பு முகாம்

Posted: 10 Jun 2013 01:08 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் வட்டம், கும்மங்குடி கிராமத்தில் புதன்கிழமை (ஜூன் 12) மாவட்ட நிர்வாகம் சார்பில்  மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு சாகுபடிக்கு மானிய விலையில் உரங்கள்

Posted: 10 Jun 2013 01:08 PM PDT

கரும்பு சாகுபடியில் சொட்டுநீர் பாசனத்துக்கு தேவையான உபகரணங்கள், நீரில் கரையும் உரங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது என்றார் வேளாண் உதவி இயக்குநர் ராம. சிவக்குமார்.

உழவர் பாதுகாப்புத் திட்ட நிவாரண உதவி அளிப்பு

Posted: 10 Jun 2013 01:08 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பெண்ணுக்கு விபத்து நிவாரண உதவி அளிக்கப்பட்டது.

420 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 10 Jun 2013 01:07 PM PDT

இலுப்பூர் வட்டம், மாங்குடி ஊராட்சியில் 420 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இன்று "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

Posted: 10 Jun 2013 01:07 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ இயக்கக் கோரிக்கை

Posted: 10 Jun 2013 01:07 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குழு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழுவின் பொதுச் செயலர் க. வேழவேந்தன் முதல்வ

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jun 2013 01:07 PM PDT

அறந்தாங்கியில் நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Jun 2013 01:06 PM PDT

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெறவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலங்குடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகைப் பறிப்பு

Posted: 10 Jun 2013 01:06 PM PDT

ஆலங்குடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தெற்கு பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் பாஞ்சாலை

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசியல் நடவடிக்கைபாதிக்கப்படக் கூடாது

Posted: 10 Jun 2013 01:05 PM PDT

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் உகந்த சூழலை ஏற்படுத்த அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

Posted: 10 Jun 2013 01:05 PM PDT

தஞ்சாவூர் கரந்தையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சம்மேளனத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் அதிகரிக்க வேண்டும்'

Posted: 10 Jun 2013 01:05 PM PDT

மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.

ஆட்சிப் பணியில் தேர்வானவர்களின் மதிப்பெண்கள் முதல் முறையாக வெளியீடு

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

இன்று மன்னார்குடி - கோவைரயில் சேவை தொடக்கம்

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

மன்னார்குடி - கோவை செம்மொழி விரைவு ரயில் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) மன்னார்குடி ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது.

குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அத்வானி ராஜிநாமா அதிர்ச்சி அளிக்கிறது: ஆர்.எஸ்.எஸ். கருத்து

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

பாஜக பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல்

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

ாகையை அடுத்த கருவேலங்கடையில் அங்கீகாரமின்றி 6, 7, 8-ம்  வகுப்புகளை நடத்திய தனியார் பள்ளியை கண்டித்து அப்பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அத்வானி இல்லாத பாஜக கூட்டணியை நினைத்துப் பார்க்கவே முடியாது

Posted: 10 Jun 2013 01:04 PM PDT

அத்வானி இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒருவராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது என்று சிவசேனை கருத்துத் தெரிவித்துள்ளது.

புத்தகம், ரொட்டி, பால் இல்லாமல் தொடங்கிய காரைக்கால் பள்ளிகள்

Posted: 10 Jun 2013 01:03 PM PDT

கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புத்தகம், ரொட்டி, பால் என எதுவுமே தரப்படாததால், மாணவர்கள்  மைதானத்தில் விளையாடி நேரத்தை போக்கினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்த்ரா சஸ்பெண்ட்

Posted: 10 Jun 2013 01:03 PM PDT

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ராவை கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

புதுக்கோட்டை

Posted: 10 Jun 2013 01:03 PM PDT

மன்னார்குடி

Posted: 10 Jun 2013 01:02 PM PDT

தஞ்சாவூர்

Posted: 10 Jun 2013 01:02 PM PDT

கன்னியாகுமரி

Posted: 10 Jun 2013 01:02 PM PDT

நக்சல்களை சமாளிக்க பன்முக நடவடிக்கை தேவை

Posted: 10 Jun 2013 01:00 PM PDT

நக்சல்களை சமாளிக்க வளர்ச்சி மற்றும் பாதுகாப்புடன் கூடிய பன்முக நடவடிக்கை தேவை என மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர் சந்திர தேவ் தெரிவித்துள்ளார்.

"நேட்டோ' வாகனங்கள் மீது தாக்குதல்: 6 பேர் சாவு

Posted: 10 Jun 2013 12:22 PM PDT

பாகிஸ்தானில் நேட்டோ படையினருக்கு பொருள்களை எடுத்துச் சென்ற லாரி மீது தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

ஆப்கன் விமான நிலையத்தில் மோதல்: 7 தலிபான் பயங்கரவாதிகள் சாவு

Posted: 10 Jun 2013 12:22 PM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

விளையாட்டு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு எளிய வழிமுறைகள்

Posted: 10 Jun 2013 12:18 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன' என்று தில்லி பல்கலைக்கழக துணை பதிவாளர் ராம் தத் திங்கள்கிழ

கங்கையில் மூழ்கி தில்லி பெண் சாவு

Posted: 10 Jun 2013 12:18 PM PDT

தில்லி ஓக்லா பகுதியைச் சேர்ந்த சாஹிபா இப்ரார் ஹக் (30) என்ற பெண், ரிஷிகேஷ் அருகே திங்கள்கிழமை கங்கையாற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

போலீஸ்காரர் விரட்டிய போது தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

Posted: 10 Jun 2013 12:18 PM PDT

நகை பறிப்பில் ஈடுபட்டதாக தன்னைப் பிடிக்க விரட்டி வந்த போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னையும் சுட்டுக் கொண்ட இளைஞர் குல்தீப் (25) உயிரிழந்தார். அவரது கூட்டாளி தலைமறைவாகிவிட்டார்.

எம்.டி.எஸ். படிப்பில் ஓர் இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்

Posted: 10 Jun 2013 12:17 PM PDT

: தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (எம்.டி.எஸ்.) இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்வது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஓர் இடத்தை காலியாக வைத்திருக்கும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியின் வளர்ச்சி பாதிக்கும்

Posted: 10 Jun 2013 12:17 PM PDT

நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அது தலைநகரின் வளர்ச்சியை பாதிக்கும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் அகர்வால் எம்.பி. கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம் இன்றுதொடக்கம்: நாளையும் நடைபெறும்

Posted: 10 Jun 2013 12:17 PM PDT

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கிடையாது

Posted: 10 Jun 2013 12:16 PM PDT

2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் லட்சியம். இதில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார். திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியா ளர்களின் பல்வே

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மானம்பாடி சிவன் கோயிலை இடிக்கக்கூடாது

Posted: 10 Jun 2013 12:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்த "ஸ்ரீ கைலாசம்' சிவன் கோயிலை இடிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் சி.பி. ஜோஷியை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

துவாரகா ராம் மந்திரில் 14-ல் சுக்ல சஷ்டி விழா

Posted: 10 Jun 2013 12:16 PM PDT

துவாரகா ராம் மந்திரில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகனுக்கு இம்மாதம் 14-ஆம் தேதி சுக்ல சஷ்டி விழா நடைபெற உள்ளது.

பிஆர்பிஎல் நிறுவனத்துக்கு ரூ. 6.57 கோடி மின் கட்டண நிலுவையை அளிக்க முடிவு

Posted: 10 Jun 2013 12:15 PM PDT

பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவர் லிமிடெட் (பிஆர்பிஎல்) நிறுவனத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகையான (2012, செப்டம்பர் வரையிலானது) ரூ. 6.57 கோடியை அளிப்பதற்கு தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மாணவி பலாத்காரம்: கார் ஓட்டுநர் கைது

Posted: 10 Jun 2013 12:15 PM PDT

தில்லி பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், யோகேஷ் என்ற அவரது கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். ஓட்டுநரின் நண்பரான ஆசிஃப் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பைக்கில் சென்றவர் லாரி மோதி சாவு

Posted: 10 Jun 2013 12:15 PM PDT

தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கஷ்மீரி கேட் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் இறந்தார். அவரது நண்பரான ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி பலத்த காயமடைந்தார்.

ஆட்டோக்களில் விளம்பரங்களுக்குத் தடை

Posted: 10 Jun 2013 12:14 PM PDT

ஆட்டோக்களில் விளம்பரங்களுக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை கூறினார்.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து

Posted: 10 Jun 2013 12:14 PM PDT

தலைநகரில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்க தில்லி அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

சிறுமி பலாத்காரம்: கேபிள் டிவி நடத்தியவர் கைது

Posted: 10 Jun 2013 12:14 PM PDT

தில்லி கஞ்சன்வாலா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியில் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டு வந்த நேதர்பால் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கழுத்து நெரித்து சிறுவன் கொலை கொள்ளை கும்பல் துணிகரம்

Posted: 10 Jun 2013 12:14 PM PDT

வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த கும்பல், அங்கிருந்த 15 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. இது குறித்து, தில்லி போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது:

நண்பரைக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

Posted: 10 Jun 2013 12:13 PM PDT

நண்பரைக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த ஷெர் சிங்குக்கு (27) ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2011-இல் தில்லியில் தனது நண்பர் சுரேந்தர் சிங்கை கொலை செய்ததாக ஷெர் சிங் கைது செய்யப்பட்டார்.

இராக்கில் குண்டுவெடிப்பு: 22 பேர் சாவு

Posted: 10 Jun 2013 12:13 PM PDT

இராக்கில் திங்கள்கிழமை நிகழ்ந்த தொடர் கார் குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் 10 வீடுகள் சாம்பல்:ரூ.10 லட்சம் பொருள்கள் சேதம்

Posted: 10 Jun 2013 12:12 PM PDT

விருத்தாசலம் அருகே கண்டப்பங்குறிச்சி கிராமத்தில், திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. 17 பவுன் நகை உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் சேதமடைந்தன.

அமெரிக்காவின் ரகசியப் பணிகளை அம்பலப்படுத்தியவர் சிஐஏ முன்னாள் ஊழியர்

Posted: 10 Jun 2013 12:12 PM PDT

அமெரிக்காவின் சிஐஏ உள்ளிட்ட உளவு, விசாரணை அமைப்புகள் செய்து வரும் ரகசியப் பணிகளை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்தியவர் சிஐஏவில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம்: ஆட்சியர் மகிழ்ச்சி

Posted: 10 Jun 2013 12:12 PM PDT

விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

பெயரளவுக்கே நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 10 Jun 2013 12:12 PM PDT

கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறையினர் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அவை வெறும் பெயரளவுக்கே நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முதல்வருக்கு எம்.எல்.ஏ. நன்றி

Posted: 10 Jun 2013 12:11 PM PDT

மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்கருதி அண்ணாமலை பல்கலை.யை உரிய நேரத்தில் அரசு ஏற்று நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கு காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், சிதம்பரம் ஓமக்குளத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக்கூட்டத்தில் நன்றி தெரிவித்தார்.

கருணாநிதி பிறந்த நாள்:90 பேர் ரத்ததானம்

Posted: 10 Jun 2013 12:11 PM PDT

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொமுச சார்பில் நடைபெற்ற முகாமில், 90 பேர் ரத்ததானம் வழங்கினர்.

சிறுமி பலாத்காரம்:இளைஞர் கைது

Posted: 10 Jun 2013 12:10 PM PDT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே, பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

கூடுதல் கட்டணம்: தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

Posted: 10 Jun 2013 12:10 PM PDT

கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கூறி சிதம்பரத்தில், திங்கள்கிழமை தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதவித்தொகையை தாமதமின்றி வழங்க அகதிகள் கோரிக்கை

Posted: 10 Jun 2013 12:10 PM PDT

கடலூர் மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு, மாதாந்திர  உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்

Posted: 10 Jun 2013 12:09 PM PDT

அமெரிக்காவின் தீவிரமாக கண்காணித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

ஜாதி சான்றிதழ் கேட்டு மனு

Posted: 10 Jun 2013 12:09 PM PDT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு இந்து ஆதியன் என்று சான்று வழங்கக் கோரி கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இப் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் தலைமையில் அவர்கள் மாவட்ட ஆட்ச

பெண்ணை காணவில்லை

Posted: 10 Jun 2013 12:09 PM PDT

நெய்வேலியில் குடும்பத்தகராறு காரணமாக பெண் மாயமானார். இதுகுறித்த புகாரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அரசு சேவை இல்ல பள்ளியில்வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு

Posted: 10 Jun 2013 12:09 PM PDT

பள்ளி திறந்த முதல்நாளான திங்கள்கிழமை, கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடியாக ஆய்வு நடத்தினார். மாணவிகளுக்கு, இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் அவர் வழங்கினார்.

விதிமீறல்: 100 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து

Posted: 10 Jun 2013 12:08 PM PDT

கடலூர் மாவட்டத்தில், விதி மீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 100 தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 10 Jun 2013 12:08 PM PDT

: கடலூரில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 11 மின் தடை

Posted: 10 Jun 2013 12:08 PM PDT

100 விவசாயிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

Posted: 10 Jun 2013 12:07 PM PDT

கடலூர் மாவட்டத்தில், புதிதாக கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கு 100 விவசாயிகளுக்கு மானியக்கடன் வழங்க தமிழக அரசு ரூ.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அனுமதியில்லாத 44 பள்ளிகளை மூட நடவடிக்கை

Posted: 10 Jun 2013 12:07 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநில அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 10 Jun 2013 12:06 PM PDT

உத்தரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் மாநில அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க மற்றும் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

Posted: 10 Jun 2013 12:06 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகமாகச் சென்றனர்.

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத 200 பள்ளி வாகனங்கள்!

Posted: 10 Jun 2013 12:06 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பள்ளி வாகனங்கள் இதுவரை ஆய்வுக்கு உள்படுத்தப்படாமல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.  தாம்பரம் சேலையூர் சியோன் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 2-ம் வகுப்பு ம

100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை

Posted: 10 Jun 2013 12:06 PM PDT

முசரவாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க் கூட்டத்தில் முசரவாக்

வங்கதேச வேலை நிறுத்தத்தில் வன்முறை

Posted: 10 Jun 2013 12:06 PM PDT

வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு விடுத்த வேலை நிறுத்தத்தில் வன்முறை வெடித்தது.

14-ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்

Posted: 10 Jun 2013 12:05 PM PDT

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜெர்மனியில் வெள்ளப் பெருக்கு: 23 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted: 10 Jun 2013 12:05 PM PDT

ஜெர்மனியில் எல்பே நதியில் வெள்ளப் பெருக்கால் அணை உடைந்ததைத் தொடர்ந்து, அருகில் வசித்து வந்த சுமார் 23 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

Posted: 10 Jun 2013 12:05 PM PDT

திருப்புலிவனம் அருகே, ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குடிநீர் வசதி கேட்டு இருளர் இன மக்கள் மனு

Posted: 10 Jun 2013 12:04 PM PDT

திருக்கழுகுன்றம் அருகே இருளர் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம்

Posted: 10 Jun 2013 12:04 PM PDT

செங்கல்பட்டில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 10 Jun 2013 12:03 PM PDT

கடலூரில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கன்னியாகுமரியில் 20 வழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வழக்குரைஞர்கள் சங்கம்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

Posted: 10 Jun 2013 12:03 PM PDT

புதுச்சேரியில் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அரசு கொறடா ஜி.நேரு எம்.எல்.ஏ. காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.

திமுக, கம்யூனிஸ்ட் கண்டனம்

Posted: 10 Jun 2013 12:03 PM PDT

புதுச்சேரியில் முன்னாள் தினக்கூலி ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

Posted: 10 Jun 2013 12:02 PM PDT

புதுச்சேரியில் மீண்டும் பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை போராட்டம் நடத்திய முன்னாள் தினக்கூலி ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் ஓட்டுநர் கொலையில் மூவர் கைது

Posted: 10 Jun 2013 12:02 PM PDT

புதுச்சேரியில் கார் ஓட்டுநர் கொலையில், 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேடு

Posted: 10 Jun 2013 12:01 PM PDT

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2012-13-ஆம் ஆண்டின் பொது நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அனைத்து ஒன்றியங்களிலும் பொதுநிதிப் பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

Posted: 10 Jun 2013 12:01 PM PDT

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.லட்சுமணனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். சீரமைப்பு: நாளை மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

Posted: 10 Jun 2013 12:01 PM PDT

பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றின் சீரமைப்பு குறித்து திட்டமிட அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை (ஜூன் 12) கூடவிருக்கிறது.

ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற முதியவர்

Posted: 10 Jun 2013 12:01 PM PDT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார். இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சார அளவைக் குறைத்து வழங்கும் மத்திய அரசு

Posted: 10 Jun 2013 12:00 PM PDT

தமிழகத்துக்கு 1100 மெகாவாட் மின்சாரம் தர வேண்டிய மத்திய அரசு 900 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கி வருகிறது என்று ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன்  தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை வட்டம், செம்மனந்தல், மேட்டத்தூர், சிறுத்தனூர் மற்றும் சேமலங்

அரசு தொடக்கப் பள்ளி அமைக்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்

Posted: 10 Jun 2013 11:58 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு நிதி உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு

குறைதீர்வு கூட்டம்:ரூ. 4.25 லட்சம் நிவாரண உதவி

Posted: 10 Jun 2013 11:58 AM PDT

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.4.25 லட்சம் நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted: 10 Jun 2013 11:58 AM PDT

தேர்வாயில் உள்ள அரசு ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

விதிமீறல்: 3 வங்கிகளுக்கு அபராதம்

Posted: 10 Jun 2013 11:57 AM PDT

விதிமுறைகளை மீறி வைப்புத் தொகை பெற்ற புகாரைத் தொடர்ந்து, மூன்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™