puthiyathalaimurai.tv online |
- செப்டம்பர்15 முதல் அரசுப் பேருந்துகளில் மினரல் வாட்டர்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
- தமிழக யாத்திரிகர்களை மீட்க சிறப்புக் குழு டேராடூன் புறப்பட்டது
- வேட்டையாடப்படும் அரிய பறவைகள்: கவனிக்குமா அரசு?!
- மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க., ஆதரவு யாருக்கு: இன்று முடிவு
- லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே எச்சரிக்கை
- கூகுளின் தேடல்: இணையத்தில் பெண்கள் என்ன தேடுகிறார்கள்….?
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : இறுதிப் போட்டியில் இந்திய அணி
| செப்டம்பர்15 முதல் அரசுப் பேருந்துகளில் மினரல் வாட்டர்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 20 Jun 2013 11:07 PM PDT சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகளில் மினரல் வாட்டர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையங்களை அமைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் "மினரல் வாட்டர்" குடிநீர் தயாரிக்கும் வகையில், "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று துவங்கி வைக்கப்பட்டு விற்பனையும் அன்றைய தினமே துவங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒன்பது இடங்களில் "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியுள்ளார். "மினரல் வாட்டர்" தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும். இந்த நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் திறன் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசுப் போக்குவரத்து கழக நிறுவனங்களினால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். |
| சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை Posted: 20 Jun 2013 10:36 PM PDT சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரியின் விலையை உயர்த்துவது குறித்தும் இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. என்எல்சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்று 450 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணொளி: சமையல் எரிபொருள் விலை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை |
| பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது Posted: 20 Jun 2013 08:57 PM PDT பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. ஜூலை 30 வரை நடைபெறும் இந்த கலந்தாய்வில் சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். முதல் நாள் கலந்தாய்வை தொடங்கிவைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக் குபொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீடு கடிதம் வழங்கினார். தரவரிசையில் முதலிடம் பிடித்த ரகுராம் இசிஇ பிரிவை தேர்ந்தெடுத்தார். இரண்டாம் இடம்பிடித்த மாணவர் அஸ்வின் குமார் , மூன்றாம் இடம் பிடித்த அஜய் கவுதம் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்தனர். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 1க்குள் முடிக்க உள்ளதால், தினமும் 5000 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்புவதோடு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வழங்கும் முறை, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக குறிப்பிட்ட மாணவருக்கான கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களில் 1 லட்சத்து 789 பேர் முதல் தலைமுறை பட்ட படிப்பை மேற்கொள்பவர்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு குறித்த பட்டியலை பார்க்கலாம். காணொளி: உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கிவைத்தார் |
| தமிழக யாத்திரிகர்களை மீட்க சிறப்புக் குழு டேராடூன் புறப்பட்டது Posted: 20 Jun 2013 08:51 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக யாத்திரிகர்களை மீட்க தமிழக அரசு அமைத்த சிறப்புக் குழுவினர் டெல்லியில் இருந்து டேராடூன் புறப்பட்டனர். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பது குறித்தும், அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் நேற்று (20.6.2013) முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் வெளியிட்ட அறிக்கையில் உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களை தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். சிறப்பு மீட்பு குழு இதன் படி, தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதி ஜக்கையன் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத் தலைமை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த உயர்மட்டக் குழுவினர், உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களை உடனடியாக அரசு செலவில் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்து வருவார்கள், பின்னர் அங்கிருந்து அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, பின் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வருவார்கள் என தெரிகிறது . உதவி எண்கள் யாத்திரிகர்களின் உறவினர்கள் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓர் உதவி மையத்தினை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்புக்கொள்ள 011-24193455, 011-24193456 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று, சென்னையில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் உறவினர்கள் மேற்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். |
| வேட்டையாடப்படும் அரிய பறவைகள்: கவனிக்குமா அரசு?! Posted: 20 Jun 2013 08:14 PM PDT பறவைகள் அதிகம் கூடும் இடம், பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளம். ஆனால் அத்தகைய பறவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் அரிய வகை பறவையினங்கள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்படாத நீர்நிலைகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர்நிலைகள், ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளுக்கு புகழிடமாக உள்ளது. இங்கு கூழைக்கடாவாத்து, பூநாரை, செங்கால்நாரை, புள்ளி வாத்து, ஊசிவால் வாத்து, மற்றும் நாமக்கோழி என நுற்றுக்கணக்கான பறவைகள் பருவகாலத்திற்கு ஏற்றார் போல வலசை வருகிறன. சில பறவைகள் இங்கேயே கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள் பட்டியலிடப்பட்டு அவவை வேட்டையாடப்படுவதைத் தடை செய்துள்ளது அரசு. பாதுகாக்கப்படாத நீர்நிலைப் பகுதிகளில் உள்ள பறவைகள் வேட்டையாடப்படுவதால் அரிய வகை பறகைகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் ஏரியில் நாமக்கோழி உள்ளிட்ட அரிய பறவைகளை வேட்டையாடியதற்காக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறவைகளை வேட்டையாடும் இவர்கள் அருகே உள்ள அம்பத்தூர் மற்றும் ஆவடி சந்தைகளில் அதனை விற்றுவந்ததும் விசாரனையில் தெரியவந்துள்ளது. பல வகையான பறவைகளுக்கு புகழிடமாக உள்ள இந்த ஏரியை காப்பு நிலமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ள நரிக்குறவர் இன மக்களிடம் பறவைகள் குறித்த முக்கியத்துவத்தையும் அழிந்து வரும் பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினால்தான் பறவைகள் வேட்டையாடப்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் பறவையியல் வல்லுனர்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் நிர்நிலைகளில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காணொளி: வேட்டையாடப்படும் அரிய பறவைகள்: கவனிக்குமா அரசு? |
| மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க., ஆதரவு யாருக்கு: இன்று முடிவு Posted: 20 Jun 2013 07:57 PM PDT மாநிலங்களவைத் தேர்தலில் மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், யாரும் வாபஸ் பெறவில்லை. இதனால் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடப்பது உறுதியாகி உள்ளது. களத்தில் ஏழு வேட்பாளர்கள் இருந்தாலும், அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஆறாவது இடத்தை பிடிக்க திமுக, தேமுதிக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுகவுக்கு தற்போதைய நிலையில், 27 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், தேமுதிகவுக்கு 22 எம்எல்ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. காங்கிரஸ், பா.ம.க., மற்றும் அதிருப்தி தேமுதிக எம்எல்.ஏ.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பதைப் பொறுத்து வெற்றி, தோல்வி அமையும். திமுகவிற்கு ஆதரவளிப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே எச்சரிக்கை Posted: 20 Jun 2013 07:53 PM PDT ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். உறுதியளித்தபடி வலிமையான மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அன்னா ஹசாரே, காந்தி பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதி முதல், மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். காணொளி: லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே எச்சரிக்கை |
| கூகுளின் தேடல்: இணையத்தில் பெண்கள் என்ன தேடுகிறார்கள்….? Posted: 20 Jun 2013 07:36 PM PDT இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 15 கோடி பேரில் சுமார் 40 விழுக்காட்டினர் பெண்கள் என்று கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் . தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு. பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம். என்ன தேடுகிறார்கள்? கூகுள் தேடுபொறியில் பெண்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று ஆய்வு செய்ததில் ஆடைகள், பொருட்களை அடுத்து, உணவு தயாரிப்பது எப்படி, குழந்தைகளை பேணுவது எப்படி, முடியை பராமரிப்பது எப்படி, தோலை அழகாக வைத்துக்கொள்வது எப்படி…. போன்றவற்றைதான் அதிகம் தேடுகிறார்களாம். அதுவும் தங்களின் செல்போனில் இருந்து பெண்கள் இத்தகைய கேள்விகளை கூகுள் தேடுபொறியில் கொடுத்து அறிந்துக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், இவற்றை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, அந்த பொருட்களை வாங்க அவர்களுக்கு பரிந்துரைப்பதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்தனர். என்ன பார்க்கிறார்கள்? கூகுளின் இந்த ஆய்வு இத்தோடு நில்லாமல், தனது வீடியோ தளமான யுடியூபில் பெண்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்தியாவில் யூடியூபை பயன்படுத்துவோரில், 40 விழுக்காட்டினர் பெண்களாம். அதில், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்பட காட்சிகளை பார்ப்பதை தாண்டி, அழகு, ஃபேஷன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வீட்டை அழகாக வைத்து கொள்வது, சமையல் வீடியோக்கள் தான் அதிகமாக பெண்கள் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் அசூர வளர்ச்சியால் இணையம் இன்று எல்லோர் உள்ளங்கையிலும் ஊடுருவி விட்டது. மாய உலகமான அந்த இணைய உலகம் தனிமனிதனை மட்டுமல்லாது, சமூக மாற்றங்களையும் செய்துள்ளது. இது அறிவு வளர்ச்சியை நோக்கி இளைய தலைமுறையினரை கொண்டு செல்லும் களமாக இருந்தாலும், பொழுதை போக்கும் தளமாக அமைந்து விடக்கூடாது என்பது தான் எல்லோரின் எச்சரிக்கையும். அந்த வகையில், அறிவும், அறிவு சார்ந்தவையும் வெறும் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் அதில் நூறு விழுக்காடு பங்குண்டு என்பதை இளைய தலைமுறை பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பெண்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதன் மூலம், கருத்து சுதந்தரம், தனக்கான தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளுதல், தனக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் என சுதந்தரமான இயக்கத்துக்கு பெண்கள் உருவாகியுள்ளனர். |
| சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாய்னா நேவால் காலிறுதிக்கு தகுதி Posted: 20 Jun 2013 07:12 PM PDT சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், ஜப்பானின் எரிக்கோ ஹிரோசை , சாய்னா நேவால் எதிர் கொண்டார். முதல் செட்டை, இழந்த சாய்னா, அடுத்த இரண்டு செட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 16-21, 21-16, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில், தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவில் லிண்டாவேனி பனேட்ரியை சாய்னா எதிர்கொள்கிறார். இதனிடையே சமீபகாலமாக பட்டம் எதையும் கைப்பற்றாத சாய்னா நேவால், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து 11வது இடத்தில் இருந்து 12 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஆடவர் தரவரிசையில் இந்தியாவின் பருப்பள்ளி காஷ்யப், 10ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். |
| சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : இறுதிப் போட்டியில் இந்திய அணி Posted: 20 Jun 2013 06:51 PM PDT சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கார்டிஃப் நகரில் நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்ததது. இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி ரன் சேகரிக்க திணறியது. தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா 4 ரன்களிலும், திரிமன்னே 7 ரன்களிலும், சங்ககரா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்த்தனே 38 ரன்களிலும், கேப்டன் மேத்யூஸ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியால், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடினர். அபாரமாக விளையாடி ஷீகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 15 ஓவர்கள் மீதம் இருக்கையில் , 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. விராட் கோலி 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 23ம் தேதி பர்மிங்ஹாம் நகரில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 15 கோடி பேரில் சுமார் 40 விழுக்காட்டினர் பெண்கள் என்று கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் . தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு. பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.