Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கோவை மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ஜெயலலிதா உத்தரவு

Posted: 13 Jun 2013 02:15 PM PDT

சென்னை

கோவை மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

காட்டு யானை தாக்கி பலி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் மே மாதம் 30–ந்தேதி அன்று கோவை தெற்கு வட்டம், போளுவாம்பட்டி ஒதுக்குகாடு, கரடிமடை பிரிவு அருகே காட்டு யானையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மத்திய மந்திரிசபை மாற்றம் பற்றி பிரதமருடன் சோனியா ஆலோசனை

Posted: 13 Jun 2013 02:13 PM PDT

புதுடெல்லி

பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். அப்போது, மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றி அமைக்கும் பணி பற்றியும் இருவரும் பேசினர்.

இன்னும் ஒரு வாரத்தில் மேற்கண்ட இரு மாற்றங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், இந்த மந்திரிசபை மாற்றம்தான், இந்த அரசின் கடைசி மாற்றமென கருதப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதிக்கு முன்னேறுவது யார்? தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

Posted: 13 Jun 2013 01:47 PM PDT

கார்டிப்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி இடத்தை பிடிப்பதற்காக தென்ஆப்பிரிக்கா– வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட் இண்டீஸ்

இலங்கைக்கு எதிரான ஆட்டம்: இங்கிலாந்து 293 ரன்கள் குவிப்பு

Posted: 13 Jun 2013 01:45 PM PDT

லண்டன்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங் கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 293 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து 293 ரன்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 8–வது லீக் (ஏ பிரிவு) ஆட்டத்தில் இங்கிலாந்து– இலங்கை அணிகள் சந்தித்தன. தலா ஒரு மாற்றமாக இலங்கை அணியில் திசரா பெரேராவுக்கு பதிலாக குலசேகராவும், இங்கிலாந்து அணியில் டிரெட்வெல்லுக்கு பதிலாக ஸ்வானும் சேர்க்கப்பட்டனர்.

2017–ம் ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உரிமம் கோர மத்திய அரசு அனுமதி

Posted: 13 Jun 2013 01:44 PM PDT

புதுடெல்லி,

2017–ம் ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உரிமம் கோர அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ஜூலை 10–ந் தேதிக்குள் தொடங்கப்படும்: கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Posted: 13 Jun 2013 01:21 PM PDT

பெங்களூர்

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ஜூலை 10–ந் தேதிக்குள் அமல்படுத்துவது என்று பெங்களூரில் நேற்று நடந்த கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மந்திரிசபை கூட்டம்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் ரங்கநாத் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:–

ரெயில் மீது துப்பாக்கி சூடு

Posted: 13 Jun 2013 01:17 PM PDT

பீகார் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து பயணிகள் ரெயில் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில், தாக்குதலுக்கு உள்ளான ரெயிலின் உள்ளே பயணிகள் கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளனர்.

இன்று நாள் எப்படி...? (14-06-2013)

Posted: 13 Jun 2013 11:35 AM PDT

ஆன்மிக சிந்தனை (14-06-2013)

Posted: 13 Jun 2013 11:08 AM PDT

ஆண்டியார் (14-06-2013)

Posted: 13 Jun 2013 11:07 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™