Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உயிர் காப்பான் தோழன் manoranjan மனோரஞ்சன் எழுதும் காவியம்

Posted: 12 Jun 2013 03:14 PM PDT

என் அனுபவம் போதை மயக்கத்தில் இருந்த என்னை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நண்பன் ! நண்பர்கள் என்றால் என்ன வென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் ! ! அந்த காலத்து பழைமொழி ஒன்று உயிர் காப்பான் தொழன் தக்க சமயத்தில் உதவி செய்பவனே உண்மையான நண்பன் ! நண்பர்களுக்கு இடையே ஒற்றுமை வேண்டும் உண்மையான அன்பு வேண்டும் ! நட்பு என்பது பழைய கால கட்டத்திலேயா வந்தது ஆகும்! நண்பர்கள் பழகும் பழக்கத்தில் எவ்வளவு உண்மையாக பழகிறார்கள் என்று தெரியும் ! நட்பின் ஆழத்தை புரிந்துக்கொள்ள முடியாது ! "இப்போ கதைக்கு வரலாம் ! அன்று ...

தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்

Posted: 12 Jun 2013 02:56 PM PDT

தமிழ் வழி படிப்பவர்களுக்கு அரசு முன் உரிமை கொடுத்து படிப்பதற்கு பண உதவியும் செய்யும் நம் அரசு ! தமிழை வளர்ப்பதர்கு போராடிக்கொண்டு தான் இருக்கிறது இது எத்தனை பெருக்கு தெரியும் ! நம் நாட்டில் வாழும் பணக்காரர்கள் யார் யார் தன் பிள்ளைகளை தமிழ் வழி கல்வியில் சேர்த்துள்ளார்கள் என்று சொல்லுங்கள் ! எங்கலது பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட தன் பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளியில் தான் சேர்க்கிறார்கள் ! இப்படி இருந்தால் அப்பூரம் எப்படி தமிழ் வளரும் ! நீங்களே சொல்லுங்கள் ! தமிழை உயிர் மூச்சாக நினைத்த ...

நாமத்தையே உச்சரிக்கிறது

Posted: 12 Jun 2013 01:45 PM PDT

இப்போது
நான் கல்லூரிக்கு
போவதில்லை -நீ
வரும் பாதையை
பார்த்துவிட்டு வீடு
வருகிறேன்

என் கையெழுத்தில்
முதல் எழுத்தே -உன்
எழுத்தாக மாறிவிட்டது

எறிந்த சாம்பல் கூட
என்மீதிவிழுந்து -உன்
நாமத்தையே உச்சரிக்கிறது


நன்றி
இனியவன்

வெளி நாட்டுக் கணவன்

Posted: 12 Jun 2013 01:43 PM PDT

கசங்கிய மல்லிகைப்பூ தலையோடு தண்ணீர் எடுக்க வருபவளையும்... - வாயில் புடவை கட்டினாலும் வாரந்தோறும் கட்டியவனோடு எங்கேயாவது கிளம்பிச் செல்பவளையும்... - இந்தநேரம்தான் என்றில்லாமல் எந்த நேரமும் மன்மத அம்புகளை எதிர் கொள்ளும் எதிர்வீட்டு புதுமணப்பெண்ணையும்... - மாமியார்கள் உச்சரித்த தீர்ப்பை மேல்மூறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையிலும்... - பத்து சவரன் நகையும் வைரம் பதித்த புடவையும் தவணையில் கிடைக்கும் தாம்பத்யமும் ஈடு செய்வதில்லைதான் ஆதலால்-- தொல்காப்பியரே பொருள்வயிற்பிரிவை மறுபரிசீலனை ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -19)

Posted: 12 Jun 2013 12:59 PM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

கேரளாவில் சுவற்றில் ஏறி சாகசம் செய்யும் பள்ளி மாணவி

Posted: 12 Jun 2013 12:45 PM PDT

கேரள மாநிலம் பத்தனம் திட்டையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மினி. இந்த தம்பதியின் ஒரே மகள் ஆனிமேரி ஜோஸ் (வயது 9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மற்ற மாணவிகளை போல் அல்லாமல் ஆனிமேரிக்கு சுவரிலும் ஏறி விளையாடும் வினோத பழக்கம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள குறுகலான சுவற்றில் 2 புறமும் கைகளை பிடித்தபடி அதன் உச்சி வரை சர்வ சாதாரணமாக ஏறி விடுவார். 4 வயதில் இந்த பழக்கம் அவருக்கு ஏற்பட்டது. தற்போது எவ்வளவு உயரமான அறையாக இருந்தாலும் சுவற்றை பிடித்தபடி ...

கண்கள்

Posted: 12 Jun 2013 12:43 PM PDT

என்...
கண்ணீருக்கு
நீ...
காரணம் என்று தெரிந்திருந்தும்;

உன்னை மட்டும்தான்
காண ஏங்குகிறது
என்
கண்கள்...!!

- வித்யாசன்

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Posted: 12 Jun 2013 12:18 PM PDT

முதலிரவில் உனக்கு என்ன வேண்டும் என்று கணவன் கேட்டபோது மனைவி "எனக்கு நீங்கள் தமிழ்சொல்லித்தர வேண்டும்"என்று கோரினாள். "பொன்னையும் புடவையையும்தானே பெண்கள் கேட்பார்கள்?"என்று வியந்தார் கணவன். "எனக்குப் பொன்னும் புடவையும் வேண்டுமளவுக்கு இருக்கிறது. மேலும் வேண்டுமென்றால் கேட்டதுமே வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். என் விதிப்பயனால் தமிழறிஞராக நீங்கள் எனக்கு வாய்த்தீர்கள். எனக்குத் தமிழ்ஞானமே போதும்"என்றாள் மனைவி. கணவன் அவருக்குத் தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது அன்னைக்கு அது பிடிக்கவில்லை. ...

காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு

Posted: 12 Jun 2013 11:02 AM PDT

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதால், கூட்டணியை புதுப்பிப்பதற்கு, அச்சாரம் போடப்படுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியேறியது: ஐ.நா., சபையில், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை ...

தொன்மா என்றால் என்ன? - தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 12 Jun 2013 10:59 AM PDT

தொன்மா (Dinosaur) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் ...

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்

Posted: 12 Jun 2013 10:56 AM PDT

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) 13வது உலக கோடீஸ்வரர்கள் நிலவரம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்திலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. ...

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து

Posted: 12 Jun 2013 10:31 AM PDT

ஜெய்ப்பூர் : எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின், தவுசா மாவட்டம், ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார். மிகுந்த அதிர்ச்சி : இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., ...

வழக்கொழிந்த அளவுகள்

Posted: 12 Jun 2013 08:17 AM PDT

= = = = = = வழக்கொழிந்த அளவுகள் 1 = = = = = = . . . . . . . . . . . . . பரப்பளவு . . . . . . . . . . . இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி 9......சதுர அடி............= 1 சதுர கஜம் 484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி 10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர் 436.....சதுர அடி.........= 1 செண்ட் 100.....செண்ட்............= ...

கௌசிகா நதியை தூர்வார தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்

Posted: 12 Jun 2013 07:19 AM PDT

விருதுநகர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மா.பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார்.அப்போது தனது தொகுதி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.இதன்மூலம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியின் வளர்ச்சிக்கு செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்களான அரசு மருத்துவக் கல்லூரியை விரைவில் அமைக்க வேண்டும். விருதுநகர் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ...

உங்கள் பிளாக்குகளை அழகாக மாற்றுவது எப்படி?

Posted: 12 Jun 2013 07:10 AM PDT

பிளாக் நடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்....! நமது தமிழ் நண்பர்கள் பலர் இலவசமாக கிடைக்கும் பிளாக்கரில் அவர்களது பதிவுகளை பகிர்ந்து வருவர். ஆனால் அவர்களுக்கு அந்த பிளாக்குகளை அழகாக வடிவமைப்பது என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கும். இதோ அவர்களின் கவலைய போக்க வழி கீழே உள்ள வீடியோவில் உள்ளது. உங்கள் நண்பர்கள் யாரேனும் பிளாக் நடத்திக்கொண்டு இருந்தால் அவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி உதவவும்.

குழந்தைகள்... நம் தெய்வங்கள்: இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

Posted: 12 Jun 2013 06:29 AM PDT

ஒருபுறம், குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்வதை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றொரு புறம், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், வேலை பார்ப்பதை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுகிறது. இக்குழந்தைகளின் மனதிலும் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். வறுமை, பெற்றோர் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால், அந்த குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறி விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தை தொழிலாளர் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜூன் 12ம் ...

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி??

Posted: 12 Jun 2013 06:28 AM PDT

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?? சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது ...

நினைவுகளின் பதிவு - ஆதிரா

Posted: 12 Jun 2013 05:34 AM PDT

நாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் "அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா?" என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் "எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்" என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். "சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா" என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக "செங்கல்பட்டுக்கா? ...

காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!

Posted: 12 Jun 2013 05:31 AM PDT

உடைகள் எல்லாம்
எடுத்துக் கொண்டு
படைகளோடு
ஊருக்கு செல்லுகையில் நீ
பயணச்சீட்டு இல்லாமலே
என்னுடன் பயணிப்பதை
காட்டிக் கொடுத்தது
என் அலைபேசி ...!

Arumaiyana Kavithai...

Posted: 12 Jun 2013 04:29 AM PDT

பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...

வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !


வல்லபாய் படேலுக்கு 392 அடி உயர சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்கிறார் மோடி

Posted: 12 Jun 2013 02:15 AM PDT

"இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்பட்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, விவசாயிகளிடம் இருந்து, இரும்பு சேகரிக்க திட்டமிட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. பிரசார இயக்கம்:வரும், அக்டோபர், 31ம் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இரும்பு மனிதர் என, அழைக்கப்பட்ட படேலுக்கு, நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள, சர்தார் சரோவர் அணைக்கு எதிரே, 182 மீட்டர் (392 அடி) உயர சிலை அமைக்க, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது."ஒற்றுமை ...

காய்கறி விலை கடும் உயர்வு

Posted: 12 Jun 2013 02:01 AM PDT

கோடை காலத்தையொட்டி தற்போது காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.240-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சிறிய வெங்காயம் ரூ.110-க் கும், அவரை ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், தக்காளி ரூ.55க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும் விற்கப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.30-க்கும், ...

உலகின் மிக வயதான 'ஜப்பான் தாத்தா' மரணம்

Posted: 12 Jun 2013 01:58 AM PDT

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற ஜிரோய்மன் கிமுரா ஜப்பானில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 116. 1897ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த கிமுரா, தனது இளமைப் பருவத்தில் தபால் துறை ஊழியராக பணியாற்றினார். தனது 115வது ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது நீண்ட ஆயுளுக்கு அதிக நேரம் சூரிய வெளிச்சத்தின் கீழ் நின்றிருப்பதுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தார். 2012-ம் ஆண்டு இவரை உலகின் மிக வயதான முதியவராக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்தது. இறுதிக் காலத்தை விவசாயம் செய்வதில் ...

குடிமகன்களை மிரட்டும் போதை குரங்கால் பதற்றம்

Posted: 12 Jun 2013 01:55 AM PDT

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாநகரின் மந்திராலயா சாலையில் அஜீஜ் என்பவருக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. கடைக்கு தினமும் வரும் குரங்கு ஒன்று, குடிமகன்கள் குடித்தபின் டம்ளரில் மிச்சம் இருக்கும் மதுவை குடித்தும், சுண்டல் உள்பட தொடு உணவுகளை சாப்பிட்டும் கொழுத்தது. இதை கடை உரிமையாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக அனைவரும் ரசித்தனர். நாளடைவில் மதுக்கடைக்கு அழையாத வாடிக்கையாளராக குரங்கு மாறிவிட்டது. சில மாதங்கள் குடிமகன்கள் குடித்து மிச்சம் வைத்த மதுவை குடித்து வந்த குரங்கு, தனக்கு பாட்டிலில் ...

கடவுள் இருந்துவிட்டுப் போகட்டுமே !

Posted: 12 Jun 2013 01:49 AM PDT

அது ஒரு அநாதை இல்லம் யாரோ ஈன்றெடுத்த குட்டிக் குழந்தையவள் அதிகாலை வேளையில்... பத்து பிஞ்சுவிரல்கள் ஒன்றுகூடி ஐந்தாகும் சற்று குனிந்திருக்கும் அவளது முகத்தில் இமைகள் மூடப்பட்டிருக்கும் அவளின் முன்னங்கால்களை முத்தமிட நிலம் ஏக்கிக்கொண்டிருக்கும் அந்த வெண்பாதகங்கள் தூரத்திலிருந்து பார்க்கும் பூச்செடிகளைப் பொறாமைப்பட வைத்துக் கொண்டிருக்கும் என்ன கேட்க வேண்டுமென்று கேட்கத்தெரியாத அந்த மெல்லிதழ்களில் பிறக்கும் சாமி சாமி என்ற முனகலிசை காற்றில் கலந்து கொண்டிருக்கும் ...

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்

Posted: 12 Jun 2013 01:49 AM PDT

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jsp Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும். அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும் Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா) Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) First Name: உங்களது பெயர் உங்களது ...

வழக்கொழிந்துவிடுமோ நம் நற்றாய்மொழி?

Posted: 12 Jun 2013 01:47 AM PDT

தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்று வளர்த்த தாய்க்கு இணையானது. அது ஓர் இனத்தின் அடையாளம்; ஒரு தேசத்தின் நாகரிகக் குறியீடு; மக்களின் அறிவுசார்ந்த ஓர் ஒப்பற்ற போர்க்கருவி; மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்கும் கவசம்; இதனால்தான் "தாய்மொழி தினம்' உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பல்லாயிரம் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் உயர்தனிச் செம்மொழிகள் மிகச்சிலவே; கால்டுவெல் போன்ற மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் இலக்கண, இலக்கியங்களை ஆய்ந்து பார்த்து தமிழையும் "உயர்தனிச் செம்மொழி' என்று ...

ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Posted: 12 Jun 2013 01:26 AM PDT

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாரதப்பிரதமர் பதவியில் அமரச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் பி.ஆர்.கிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். சந்தர்ப்பவசம் சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்தரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ...

வருகிறது 1TB (1000GB) கிங்ஸ்டன் விரலி (Kingston PenDrive)

Posted: 12 Jun 2013 01:11 AM PDT

சற்று நினைத்து பாருங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive)வைத்துகொண்டால் எப்படி இருக்கும். நல்ல விஷயம் தான் இது சாத்தியமா? என்று நினைக்கும் உங்களை ஆச்சர்யபட விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் 1TB Flash Drive . இந்த ஆண்டு வேகஸில்(Vegas) நடைபெற்ற கணினி மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler ...

இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி - வெலிங்டன் பகுதியில் கெடுபிடி

Posted: 12 Jun 2013 12:49 AM PDT

குன்னூர்: பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி துவங்கியுள்ளதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி ...

இறப்பும் சிரிப்பும்

Posted: 12 Jun 2013 12:29 AM PDT

உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது

உனது
பூக்கூடையில்
பூக்கள் !

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

Posted: 12 Jun 2013 12:24 AM PDT

நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே. Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, ...

மேகங்கள்

Posted: 12 Jun 2013 12:14 AM PDT

மழை தரும் மேகங்கள் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். பூமியின் பரப்பில் உள்ள கடல் நீர் மற்றும் ஆறுகள், ஏரிகளில் உள்ள தண்ணீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலெழும்பிச் செல்கிறது. அந்த நீராவி மூலக்கூறுகள் இணைந்து மேகங்களாக திரள்கிறது. மேகங்களில் நான்கு வகை உண்டு. அவை, கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள், செங்குத்து மேகங்கள் எனப்படுகிறது. இவற்றைப் பற்றிய சிறு குறிப்புகளை இங்கே காண்போம்... கீழ்மட்ட மேகங்கள்: குறைந்தபட்ச உயரத்தில் காணப்படும் மேகங்கள் கீழ்மட்ட மேகங்கள் என அழைக்கப்படுகிறது. ...

80 வருடங்களுக்குப் பிறகு பள்ளிச் சான்றிதழ்

Posted: 12 Jun 2013 12:12 AM PDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அருகில் உள்ள வாட்டர்டவுன் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரடெரிக் கே ஆவார். இவருக்கு தற்போது 97 வயது நடந்து கொண்டிருக்கின்றது. இவர் பள்ளிப்பருவத்தில் வாட்டர்டவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். 1934-ம் வருடம் பள்ளி இறுதி வகுப்பை முடிக்க வேண்டிய இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு முதல் வருடமே பள்ளியிலிருந்து விலகினார். தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சென்ற பிரடெரிக், 1942-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். காலாட்படையின் 24-வது ...

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?

Posted: 12 Jun 2013 12:06 AM PDT

ஜெய்ப்பூர் : எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின், தவுசா மாவட்டம், ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார். மிகுந்த அதிர்ச்சி : இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., ...

நகலும் அசலும்

Posted: 11 Jun 2013 11:30 PM PDT

எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி

Posted: 11 Jun 2013 11:29 PM PDT

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, ஜூலை 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. எஸ்.எம்.எஸ். வளர்ந்து வரும் செல்போன் சந்தையை கருத்தில் கொண்டு, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்த உள்ளது. ஜூலை 1–ந் தேதி இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான பிரத்யேக எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிவிக்கும். எப்படி பதிவு செய்வது? இந்த வசதியை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவு ...

OS இன்ஸ்டால் செய்வது எப்படி ? - எளிய தமிழ் கையேடு

Posted: 11 Jun 2013 09:51 PM PDT

என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான். அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம். இது நண்பர் மதுரன் தன்னுடைய தமிழ்சாப்ட் என்ற தளத்தில் பகிர்ந்து இருந்தார். இப்போது அந்த தளம் இல்லாததால் ...

ரன் கமாண்டில் புரோகிராம்கள்

Posted: 11 Jun 2013 09:48 PM PDT

நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களுக்கும் மானிட்டர் திரையில் ஷார்ட் கட் ஐகான்களை ஏற்படுத்த முடியாது. பின் ஏதேனும் ஒன்றைத் தேடுவது சிரமமாகிவிடும். புரோகிராம்கள் வேண்டும் என்றால் ஸ்டார் பட்டன் அழுத்தி பின் புரோகிராம் கிளிக் செய்து பின் வரும் நீண்ட மெனுவில் தேடும் புரோகிராம் உள்ள போல்டரைத் திறந்து குறிப்பிட்ட புரோகிராம் பெயரில் கிளிக் செய்வதும் சிரமமே. எடுத்துக் காட்டாக உங்களுக்கு கால்குலேட்டர் தேவையாய் உள்ளது. ஸ்டார்ட் –– புரோகிராம் –– அக்சசரீஸ் – கால்குலேட்டர் என வரிசையாகச் செல்வது ...

சித்திரம் எழுப்பிய கவிதை

Posted: 11 Jun 2013 08:26 PM PDT

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம். (கலி விருத்தம்) அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள் இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில் நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில் கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று! --ரமணி, 01/03/2013 *****


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™