மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை
- பன்சாலுக்கு சி.பி.ஐ. சம்மன்: இன்று ஆஜராகிறார்
- கேரளாவில் கம்யூனிஸ்டு தொண்டரை துப்பாக்கியால் சுட்டு வெட்டிக்கொன்ற கும்பல்
- இந்தியா- சிங்கப்பூர் ராணுவப் பயிற்சி ஒப்பந்தம் நீட்டிப்பு
- அதிகாரியை கன்னத்தில் அறைந்த காஷ்மீர் மந்திரி: வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
- திருப்பதியில் 2-வது நாளாக பலத்த மழை: கம்ப்யூட்டர் பழுதானதால் டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி
- டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி மீது தாக்குதல்: இருவர் கைது
- கேரளாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- நரேந்திர மோடி தான் பிரபலமான தலைவர்: அத்வானிக்கு ராஜ்நாத்சிங் பதில்
- ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பா.ஜனதா குழு இன்று இலங்கை பயணம்
- ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு விமானிகள்
- விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்
- உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது
- பீகார்: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு 2 எம்.எல்.ஏ.க்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
- 76 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டபோது பிரதமரும், சோனியா காந்தியும் எங்கே போனார்கள்?: சுவாமி அக்னிவேஷ் கேள்வி
- ரெயில்வே உயர் பதவிகளுக்கு லஞ்சம்: பவன் குமார் பன்சாலை விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம்
- இந்தியாவின் முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் அனுப்பும் பணி 2 வாரம் தாமதம்
- மாவோயிஸ்ட் பற்றி விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம்: கமல்நாத்
- ஐ.பி.எல். சூதாட்டத்தை முன்னிறுத்தி வானாளாவிய ஊழலை மறைக்க காங்கிரஸ் முயற்சி: பா.ஜ.க.
- உணவு பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க பாரதீய ஜனதா விருப்பம்: ராஜ்நாத் சிங்
| பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை Posted: 03 Jun 2013 10:58 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள கும்பாளம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி (வயது 27). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊர் திரும்பிய ஆண்டனி இங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. |
| பன்சாலுக்கு சி.பி.ஐ. சம்மன்: இன்று ஆஜராகிறார் Posted: 03 Jun 2013 10:55 PM PDT ரெயில்வே உயர் பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பதற்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டையடுத்து முன்னாள் ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, மந்திரி பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் விலகினார். மகேஷ் குமார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கியது தொடர்பாக வினய் மிட்டல், நாராயண் ராவ், மஞ்சுநாத் ஆகிய ரெயில்வே அதிகாரிகளை கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில், மகேஷ் குமாருக்கு பதவி உயர்வு வழங்க ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக பவன்குமார் |
| கேரளாவில் கம்யூனிஸ்டு தொண்டரை துப்பாக்கியால் சுட்டு வெட்டிக்கொன்ற கும்பல் Posted: 03 Jun 2013 10:52 PM PDT பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் அருகே கொழிஞ்சன்பழம்பு பகுதியை சேர்ந்தவர் சிவதாசன் (வயது 30). இவரது மனைவி சர்தா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவதாசன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டராக பணியாற்றி வந்தார். |
| இந்தியா- சிங்கப்பூர் ராணுவப் பயிற்சி ஒப்பந்தம் நீட்டிப்பு Posted: 03 Jun 2013 10:43 PM PDT இந்திய இராணுவம் உடற்பயிற்சி மற்றும் போர்ப்பயிற்சி முறைகளை சிங்கப்பூர் ராணுவத்தினருக்கு அளித்து வருகின்றது. இதற்கான முதல் ஒப்பந்தம் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், பின்னர் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் போடப்பட்டன. சிங்கப்பூரில் ராணுவப் பயிற்சிக்குப் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் பயிற்சி பெற அந்நாட்டிற்கு மட்டும் இத்தகைய ஏற்பாடுகளைச் இந்தியா செய்து தருகின்றது. சென்ற வருடம் ஜூலை மாதம் சிங்கப்பூர் அரசின் பாதுகாப்புத்துறை செயலர் இந்தியா வந்தபோதே, இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, |
| அதிகாரியை கன்னத்தில் அறைந்த காஷ்மீர் மந்திரி: வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு Posted: 03 Jun 2013 10:24 PM PDT காஷ்மீரில் முதல்-மந்திரி உமர்அப்துல்லா மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருப்பவர் சாஜத் அகமத் கிச்லோ. இவர் கிஸ்த்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அங்கு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மந்திரி சாஜத் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்துக்கு சிஸ்த்வார் வளர்ச்சி குழுவின் முதன்மை அதிகாரியான ரியாஸ் சவுத்திரி தாமதமாக வந்தார். இதனால் கோபம் அடைந்த மந்திரி பொதுமக்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் அவரை கன்னத்தில் பளார் என இரண்டு முறை அறை விட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார். இதுபற்றி முதல்- |
| திருப்பதியில் 2-வது நாளாக பலத்த மழை: கம்ப்யூட்டர் பழுதானதால் டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி Posted: 03 Jun 2013 10:15 PM PDT திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது. கோவில் மற்றும் தங்கும் விடுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். |
| டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 03 Jun 2013 10:07 PM PDT இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வருபவர் சர்கம் ரஷா. இவர் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர் பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் |
| கேரளாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 03 Jun 2013 10:06 PM PDT கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், தம்பானூர், கொல்லம், கோழிக்கோடு, பத்தனம்திட்டை, திருச்சூர், நெய்யாற்றின் கரை, இடுக்கி போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது. |
| நரேந்திர மோடி தான் பிரபலமான தலைவர்: அத்வானிக்கு ராஜ்நாத்சிங் பதில் Posted: 03 Jun 2013 09:20 PM PDT குஜராத் முதல் - மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் வற்புறுத்தி வருகிறார்கள். நரேந்திரமோடிக்கு பாரதீய ஜனதா தலைவர் ராஜ் நாத்சிங்கும் ஆதரவு தெரிவித்து அவரை ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமித்துள்ளார். ஆனால் நரேந்திர மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் போபாலில் நடந்த கட்சி கூட்டத்தில் அத்வானி பேசுகையில் மத்தியபிரதேச மாநில முதல் - மந்திரி சிவராஜ்சிங் சவுகானை வானளாவ புகழ்ந்தார். அவர் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக கூறினார். நரேந்திரமோடி |
| ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பா.ஜனதா குழு இன்று இலங்கை பயணம் Posted: 03 Jun 2013 09:08 PM PDT பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி துணை தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறது. அக்குழுவில் சிவசேனா கட்சி தலைவர் சுரேஷ்பிரபு, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராம்மராவ், மனித உரிமை ஆர்வலர் மோனிகா அரோரா, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி விவேக் கட்ஜீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் |
| ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு விமானிகள் Posted: 03 Jun 2013 07:52 PM PDT கடந்த மே மாதம் 26ஆம் தேதி, ஏர் இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஏஐ 452 என்ற எண்ணுள்ள ஏ321 ஏர்பஸ் விமானம் ஒன்று விசாகப்பட்டினத்தில் இருந்து புது டெல்லிக்குப் பறந்துகொண்டிருந்தது. அப்போது, அதிலிருந்த ஒரு எஞ்சினில் எண்ணெய் குறைவாக இருப்பதாக எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது. இதுபோன்ற எச்சரிக்கை வரும்போது, விமானத்தின் என்ஜினை 30 வினாடிகளுக்குள் நிறுத்தவேண்டும் என்பது பொதுவான விதிமுறையாகும். |
| விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன் Posted: 03 Jun 2013 05:05 PM PDT பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார் |
| உ.பி.யில் ரூ.1 1/2 கோடி 'கொக்கைன்' பறிமுதல் - இருவர் கைது Posted: 03 Jun 2013 02:56 PM PDT உத்தரபிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள பேகம்புல் பகுதியில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி அவர்களிடம் வாகனப் பதிவேடு மற்றும் லைசென்ஸ் தொடர்பாக கேட்டபோது |
| பீகார்: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு 2 எம்.எல்.ஏ.க்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை Posted: 03 Jun 2013 02:17 PM PDT கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்கண்ட் என்ற தனி மாநிலமாக பிரிக்கப்படாமல் ஒன்றிணைந்த பீகார் மாநிலமாக இருந்தபோது 1995ம் ஆண்டு நடைபெற்ற கால்நடை |
| Posted: 03 Jun 2013 02:00 PM PDT ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பேட்டியளித்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ், நக்சலைட்டுகள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக சுவாமி அக்னிவேஷ் கூறியதாவது |
| ரெயில்வே உயர் பதவிகளுக்கு லஞ்சம்: பவன் குமார் பன்சாலை விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் Posted: 03 Jun 2013 11:36 AM PDT ரெயில்வே உயர் பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பதற்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டையடுத்து முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, மந்திரி பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் பதவி விலக நேரிட்டது |
| இந்தியாவின் முதல் வழிகாட்டி செயற்கைக்கோள் அனுப்பும் பணி 2 வாரம் தாமதம் Posted: 03 Jun 2013 08:46 AM PDT நாடு முழுவதையும் கண்காணித்து தகவல் அனுப்பும் வகையில் இந்தியா தனது முதல் வழிகாட்டி செயற்கைக் கோளை உருவாக்கி உள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 என்ற இந்த செயற்கைக்கோளை, பி.எஸ்.எல்.வி.- சி22 எக்ஸ்.எல். என்ற ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து வரும் 12-ம் தேதி விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. |
| மாவோயிஸ்ட் பற்றி விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம்: கமல்நாத் Posted: 03 Jun 2013 08:22 AM PDT உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் தெரிவிக்காவிட்டால், அவசர சட்டம் கொண்டு வந்து திட்டத்தை நிறைவேற்றலாம் என்று காங்கிரஸ் உயர்மட்டக்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு மசோதா பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. |
| ஐ.பி.எல். சூதாட்டத்தை முன்னிறுத்தி வானாளாவிய ஊழலை மறைக்க காங்கிரஸ் முயற்சி: பா.ஜ.க. Posted: 03 Jun 2013 07:25 AM PDT நாட்டில் 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் ஊழல், ரெயில்வே முறைகேடு என பல ஊழல்களால் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டுள்ளது. தற்போது தனியார் அமைப்பான ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்ட சர்ச்சை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. |
| உணவு பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க பாரதீய ஜனதா விருப்பம்: ராஜ்நாத் சிங் Posted: 03 Jun 2013 06:06 AM PDT பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ளது. அதை முன் கூட்டியே நடத்தி உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்களை நிறைவேற்ற பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |