Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 55 பேர் மாயம்

Posted: 13 Jun 2013 11:04 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியளவில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு படகு கவிழ்ந்தது.தலைநகரான கொல்கத்தாவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில்

தெலுங்கானா போராட்டம்: ஐதராபாத்தில் 50 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted: 13 Jun 2013 10:22 PM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த தெலுங்கானா போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில் ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்று தகவல் கிடைத்ததால் இந்த போராட்டத்துக்கு போலீசாரும், அரசும் அனுமதி மறுத்துவிட்டது.

தவறான மாதிரி வினா-விடை: ஐஐடி-யில் சேர விரும்பும் மாணவர்களின் தகுதி மதிப்பீடு குறையும் அபாயம்

Posted: 13 Jun 2013 09:04 PM PDT

இந்தியத் தொழில்நுட்பக் கழக ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு என்று அறியப்படும் ஜே.இ.இ., தேர்வு உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்தியாவில் இயங்கும் 15 தொழில்நுட்பக் கழகங்களும், ஆண்டுதோறும் சுழற்சி முறையில் இந்தத் தேர்வினை நடத்துகின்றன. இதில் ஆரம்பத் தேர்வு, இறுதித் தேர்வு என்ற இரண்டு பகுதிகள் உண்டு.

மகாராஷ்ட்ராவில் நக்சலைட்டுகள் தாக்குதல்: எஃகு தொழிற்சாலை துணைத்தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் பலி

Posted: 13 Jun 2013 09:03 PM PDT

மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் இடாபல்லி நகரத்தில் நேற்று நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் லாயிட் எஃகு தொழிற்சாலை துணைத்தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மம்தா பானர்ஜியின் புதிய அணியில் இணைய தயார்: சந்திரபாபு நாயுடு

Posted: 13 Jun 2013 08:23 PM PDT

அடுத்த ஆண்டு (2014) நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிட மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பீகார் முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், ஒடிசா முதல்-மந்திரியும் பிஜு ஜனதா தள கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் ஆகியோரிடம் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் இந்த புதிய அணியில் சேரலாம் என்றும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். தெலுங்கு

நிலச்சரிவால் அவதியுற்ற 15,000 சுற்றுலா பயணிகள்

Posted: 13 Jun 2013 08:02 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து 15 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையின் விளைவாக, 290 கி.மீ நீளமுள்ள ரிஷிகேஷ்- கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் தடைபட்டன. அவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் மனேரி சைன்ஜி கிராமமும்

ஆந்திர ரெயிலில் கொள்ளை முயற்சி: போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு கொள்ளையர்கள் ஓட்டம்

Posted: 13 Jun 2013 04:16 PM PDT

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி-மந்திராலயம் ரெயில்வே சாலை வழியாக நேற்று கோயம்புத்தூர்-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. குண்டக்கல் அருகே கொசிகை-இரானகல்லுக்கும் இடையே ஒரு இடத்தில் அதிகாலை செயினை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது.

பிரதமர் வேட்பாளர் பற்றி ஐக்கிய ஜனதா தளத்திற்கு உறுதி கூறவில்லை: நிர்மலா சீதாராமன்

Posted: 13 Jun 2013 03:16 PM PDT

பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற பிரச்சாரக்குழு தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆரம்பம் முதலிலேயே நரேந்திர மோடியை எதிர்த்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறி வருகிறது.

போராட்டத்திற்கு அனுமதி வேண்டி தெலுங்கானா ஆதரவு கட்சிகள் கவர்னருடன் சந்திப்பு

Posted: 13 Jun 2013 11:30 AM PDT

ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு நாளை சட்டசபையை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தபோதிலும், தடையை மீறி போராட்டம் நடத்துவதாக அக்குழு எச்சரித்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் நகரில் இன்றும், நாளையும் 144

நாராயணமூர்த்தி வருகையால் இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளம் 8 சதவிகிதம் உயர்வு

Posted: 13 Jun 2013 10:52 AM PDT

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. கம்பெனியான இன்போசிஸ் நிறுவனத்தை தமிழரான திரு. நாராயணமூர்த்தி பெங்களூரில் 1981-ம் ஆண்டு நிறுவினார். அவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

பிரதமருடன் சோனியா சந்திப்பு: விரைவில் மந்திரிசபை மாற்றம்

Posted: 13 Jun 2013 08:15 AM PDT

அவசர சட்டம் கொண்டு வந்து உணவு மசோதாவை நிறைவேற்றும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாறாக, பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

பீகாரில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்: மத்திய ரிசர்வ் படை வீரர் காயம்

Posted: 13 Jun 2013 07:26 AM PDT

பீகாரில் இன்று பயணிகள் ரெயில் மீது 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். பின்னர்

யானை தந்தம் கடத்தல்: கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது

Posted: 13 Jun 2013 04:21 AM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள சுல்லமலை என்ற இடத்தில் சிலர் யானை தந்தத்துடன் வந்து கொண்டிருப்பதாக பாலக்காடு மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெய்சங்கருக்கு தகவல் வந்தது.

ஜியா கான் தற்கொலை வழக்கு: சூரஜ் பஞசோலியை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

Posted: 13 Jun 2013 03:25 AM PDT

இந்தி திரைப்பட நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் சூரஜ் பஞ்சோலியை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் பயணிகள் ரெயில் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 3 பேர் பலி

Posted: 13 Jun 2013 02:58 AM PDT

சத்தீஸ்கர் மாநில தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பீகாரில் இன்று பயணிகள் ரெயில் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மதியம் 1 மணியளவில் வனப்பகுதியில் உள்ள ஜாமுயி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

Posted: 13 Jun 2013 02:49 AM PDT

ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுளாக போராடி வரும் போராட்டக்குழு, நாளை சட்டசபையை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தபோதிலும், தடையை மீறி போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் நகரில்

உணவு பாதுகாப்பு அவசர சட்டம் நிறைவேற்றும் முடிவு ஒத்திவைப்பு

Posted: 13 Jun 2013 01:20 AM PDT

உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து அதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இன்று பிரதமர் மன்மோகன்‌ சிங் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மசோதாவிற்கு எதிர்க்கட்சிகளின் ஒப்புதலை பெறும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாக கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி, அவர்களது ஆதரவோடு உணவு

அமெரிக்க நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் இந்தியாவின் அப்பல்லோ டயர் நிறுவனம்

Posted: 13 Jun 2013 12:59 AM PDT

இந்திய வாகன வரலாற்றில் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக தற்போது கருதப்படுவது குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கூப்பர் டயர் அண்ட் ரப்பர் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது ஆகும். இந்த வர்த்தகம் 2.5 பில்லியன், அதாவது ரூ.14,500 கோடியில் முடிந்துள்ளது. நேற்று அப்பல்லோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூப்பர் நிறுவனத்தின் பங்குகளை 40 சதவிகித பிரீமியத்தில், ஒரு பங்கின் மதிப்பு 35 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் அனைத்துப் பங்குகளையும் பெற்று அதனைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளுவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், நியூயார்க் பங்கு சந்தையில் கூப்பர் நிறுவனத்தின் பெயர் நீக்கப்படும். வாகன விற்பனை சரிவால், வர்த்தக உலகம் சோர்வடைந்திருக்கும் இந்த நேரத்தில், அப்பல்லோ டயர்சின் இந்த வியாபாரம் அதன் நிலையை 16ஆம் இடத்திலிருந்து உலகின் ஏழாவது பெரிய டயர் நிறுவனம் என்ற நிலைக்கு உயர்த்துகின்றது. இதன்மூலம் அமெரிக்கா, சீனா உட்பட வளர்ந்துள்ள

கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: மம்தா வீடு முன் போராட்டம்

Posted: 13 Jun 2013 12:57 AM PDT

கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்ற இடத்தில் 20 வயது கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் கல்லூரி தேர்வு முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அருகில் இருந்த காம்பவுண்டுக்குள் தூக்கிச் சென்று கற்பழித்தனர். அவர்களுடன் போராடியதால் மாணவியை தாக்கி கொலை செய்து தப்பிச் சென்று விட்டனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த கண்காணிப்பு தீவிரமாகிறது

Posted: 13 Jun 2013 12:45 AM PDT

இந்திய தொலைக்காட்சிகளில் மக்களுக்கு தேவையில்லாத நிகழ்ச்சிகள் ஒளி பரப்புவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2008-ம் ஆண்டு 'மின்னனு ஊடகங்கள் கண்காணிப்பு குழு' அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது 191 தொலைக்காட்சிகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™