Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சுதந்திரமான நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம்: ப. சிதம்பரம் தகவல்

Posted: 27 Jun 2013 11:14 PM PDT

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரகாண்ட் வெள்ளச்சேதத்தில் 13 ஆண்டுக்கு முன் மாயமான கணவரை கண்டு பிடித்த மனைவி

Posted: 27 Jun 2013 11:00 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் பலர் வெள்ள பிரளயத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பலரின் குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்திய வேளையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு

காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கத் தயார்: ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா அறிவிப்பு

Posted: 27 Jun 2013 09:29 PM PDT

ஆந்திர முன்னாள் முதல்வர், ராஜசேகர ரெட்டியின் மகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா ரெட்டி, மாநிலம் முழுவதும் 2,500 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டார். நேற்றுடன் அவர் பயணம் முடிந்ததை அடுத்து, ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் 35 இடங்களையும், சட்டசபை தேர்தலில் 220 இடங்களையும் தங்களின்

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு சுஷில்குமார் ஷிண்டே நிரந்தர அழைப்பாளராக நியமனம்

Posted: 27 Jun 2013 08:00 PM PDT

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராக மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டார். அவர் பாராளுமன்ற அவைத்தலைவராகவும், காங்கிரஸ் உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார். மேலும் சிக்கலான பிரச்சினைகளின்போது அரசுக்கும், கட்சிக்கும் இடையே ஒரு தீர்வு காணும் நபராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டியில் உறுப்பினராக இருந்தது இல்லை. கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.ராவ் சமீபத்தில் மத்திய மந்திரியானதை தொடர்ந்து

சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 27 Jun 2013 04:10 PM PDT

சி.பி.ஐ.க்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பான மந்திரிகள் குழுவின் யோசனைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

வானிலை காரணமாக 500 பேரை பத்ரிநாத்தை விட்டு நடந்து அழைத்துவந்த ராணுவ கமாண்டர்

Posted: 27 Jun 2013 02:47 PM PDT

பதிரிநாத் மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை ராணுவ ஹெலிகாப்டர்களை கொண்டு வீரர்கள் மீட்டு வருகின்றனர். அங்கு கடந்த 12 நாட்களாக விமானப்படையினரும், ராணுவத்தினரும், துணைநிலை ராணுவத்தினரும் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றி வெளியேற்றியுள்ளனர்.

பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் பலி

Posted: 27 Jun 2013 12:53 PM PDT

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பிசென்பூர் பேரி கிராமத்தை 5 பேர் பக்கத்து கிராமமான ஷ்ராத் என்னும் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மழைபெய்து கொண்டிருந்தது.

உத்தரகாண்டில் மீட்புப்பணி இன்று முடிவடைகிறது: இன்னும் 436 பேரை காணவில்லை

Posted: 27 Jun 2013 12:45 PM PDT

உத்தரகாண்டில் மீட்புப்பணி இன்று முடிவடைகிறது. இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 436 பேரை காணவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 16, 17-ந்தேதிகளில் பெய்த பேய்மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை அங்கு புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டன. 2,052 வீடுகள் தரைமட்டமாகி

மும்பை தலோஜா சிறைச்சாலையில் தாதா அபு சலீம் மீது துப்பாக்கி சூடு

Posted: 27 Jun 2013 11:30 AM PDT

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் அபு சலீம். இவன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி ஆவான். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபு சலீம் உலக நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தான்.

ஜார்க்கண்ட் காடுகளில் துப்பாக்கி சண்டை: 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Posted: 27 Jun 2013 09:38 AM PDT

ஜார்க்கண்ட் மாநில லதேகர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மத்திய ரிசர்வ் படையினர், ஜார்க்கண்ட் ஜாகுவார் படை மற்றும் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எரிவாயு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 27 Jun 2013 08:50 AM PDT

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சி.பி.ஐ. அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சி.பி.ஐ. அமைப்பு அதிக அதிகாரத்துடன் செயல்படுவது

உத்தரகாண்டில் இறந்த இந்தோ-திபெத்திய எல்லை போலீசாருக்கு பிரதமர் இரங்கல்

Posted: 27 Jun 2013 08:42 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை வீரர்களுடன், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமர்நாத் யாத்திரை: 3000 பேருடன் முதல் குழு பயணம்

Posted: 27 Jun 2013 06:06 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்க தரிசனம் உலக பிரசித்தி பெற்ற வழிபாடாகும். பனிக் கட்டியால் உருவாகும் இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு

உத்தரகாண்டில் சிக்கி தவித்த கேரள சாமியார்களை மீட்கக்கோரி பா.ஜனதா போராட்டம்: தடியடி

Posted: 27 Jun 2013 05:42 AM PDT

உத்தரகாண்டில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்தில் ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். அங்கு சிக்கி தவிக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் சிவகிரியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் பக்தர்கள் உத்தரகாண்டில் சிக்கி தவித்தனர். அவர்களை உடனடியாக மீட்கக்கோரி கேரள மாநில பாரதீய ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேற்று கேரளா தலைமைச் செயலகம் முன்பு திரண்டு கோஷம் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் அரண் அமைத்து பாரதீய ஜனதா தொண்டர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால்

22 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்து விழுந்தன

Posted: 27 Jun 2013 05:36 AM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த மழை 27 நாட்களாக பெய்து வருகிறது. வழக்கத்தை விட மழையின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் பல இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை கேரள முழுவதும் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 51 செ.மீ. மழை தான் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக

மழையால் உருக்குலைந்த உத்தரகாண்டில் இன்று நிலநடுக்கம்

Posted: 27 Jun 2013 04:50 AM PDT

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் மீட்புப் பணிகள் முடிவடையவில்லை. மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது மிரட்டி வரும் மழையால் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது

டெல்லி அருகே ஓடும் காரில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்

Posted: 27 Jun 2013 03:47 AM PDT

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவியை ஒடும் பஸ்சில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் 13 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்

இமயமலையின் பலவீனமான சூழலியலை பாதுகாக்க தனி அமைச்சகம்: பி.சி.கந்தூரி வலியுறுத்தல்

Posted: 27 Jun 2013 03:23 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி இன்று பார்வையிட்டார். சாலை மார்க்கமாக சென்று திரும்பிய அவர் டேராடூனில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

அரியானாவில் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் பலி

Posted: 27 Jun 2013 02:15 AM PDT

அரியானா மாநிலம் கைதால் மாவட்டம் சவுஷாலா கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து, 4 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். சவுஷாலா கிராமத்தைச் சேர்ந்த அஜய், நூதன், சச்சின் மற்றும் பூபிந்தர் ஆகியோர் நேற்று மாலை விளையாடுவதற்காக வீட்டில் இருந்து சென்றனர். அனைவருக்கும் 7 முதல் 8 வயது

உத்தரகாண்ட் வெள்ளம்: கேரள அரசு ரூ.2 கோடி நிவாரணம்

Posted: 27 Jun 2013 01:24 AM PDT

உத்தரகாண்ட் மாநில வெள்ள நிவாரணத்துக்காக கேரள அரசு ரூ.2 கோடி நிதி உதவி அளிப்பதாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணமாக அளிக்க உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்புப்பணியில் ஈடுபட கேரளாவில் இருந்து மீட்புப்படை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ராணுவத்தினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™