Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க சிங்கப்பூர் சந்தர்ப்பம் வழங்கும்

Posted: 27 Jun 2013 11:19 PM PDT

இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் தொழில் வாய்ப்பு வழங்க உள்ளது. கட்டிட நிர்மாணத்துறையில் சிங்கப்பூர், இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்ளது. முதல் கட்டமாக 200 தொழிலாளர்களுக்கு  அளிக்கப்பட உள்ளது. இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 270000 பேர் கட்டிட நிர்மாணத்துறையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்கும் இந்திய இன்டர்நெட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். – எஸ்.என்.சிங்

Posted: 27 Jun 2013 08:46 PM PDT

உச்ச நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தின் சட்டப்படிப்பு துறை முன்னாள் தலைவர் எஸ்.என்.சிங் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் ‘இந்தியர்கள் இன்டர்நெட்டில் பரிமாறிக் கொள்ளும் தகவல்களை அமெரிக்க நிறுவனங்கள் வேவு பார்க்கின்றன. அந்த தகவல்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்க இந்தியாவில் உள்ள இன்டர்நெட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ரஞ்சன் கோகய் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் 'தன்னுடைய தனிப்பட்ட தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

உத்தரகாண்டில் இன்று மீட்புப்பணி முடிவடைகிறது; இன்னும் 436 பேரை காணவில்லை; 842 பேர் உயிரிழப்பு.

Posted: 27 Jun 2013 08:32 PM PDT

உத்தரகாண்டில் மீட்புப்பணி இன்று முடிவடைகிறது. இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 436 பேரை காணவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 16, 17-ந்தேதிகளில் பெய்த பேய்மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை அங்கு புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டன. 2,052 வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 200 கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 147 பாலங்கள் பழுது அடைந்தன. 1,307 ரோடுகள் கடும் சேதத்துக்குள்ளாகி உள்ளன. பல்லாயிரம் பேர் பலியாகி இருக்கக்கூடும் என [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவை திபெத் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா வற்புறுத்தல்

Posted: 27 Jun 2013 08:23 PM PDT

இமயமலைத்தொடரின் வட கிழக்கே அமைந்துள்ள திபெத் நாட்டை 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனா கைப்பற்றிக்கொண்டது. பின்னர் அங்கிருந்து தலாய் லாமா தலைமையில் தப்பித்து வந்தவர்கள் இமாச்சல் பிரதேசத்தில் தங்கி தனி அரசாக போராடி வருகின்றனர். இந்நிலையில் திபெத் மதத்தலைவர் தலாய் லாமாவுடனோ அல்லது அவரது பிரதிநிதிகளுடனோ நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த சீனாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்கர்கள் சீனாவை சுற்றிப்பார்க்க அபூர்வமாக அனுமதித்ததைப்போல் திபெத்திற்கும் சென்றுவர அனுமதி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. திபெத்தின் மனித உரிமை பிரச்சினைகள் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வானிலை மோசமடைந்ததால் பத்ரிநாத்தைவிட்டு 500 பேரை நடந்து அழைத்துவந்த ராணுவ கமாண்டர்

Posted: 27 Jun 2013 08:17 PM PDT

பதிரிநாத் மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை ராணுவ ஹெலிகாப்டர்களை கொண்டு வீரர்கள் மீட்டு வருகின்றனர். அங்கு கடந்த 12 நாட்களாக விமானப்படையினரும், ராணுவத்தினரும், துணைநிலை ராணுவத்தினரும் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றி வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் வானிலை மிக மோசமாக இருந்ததால் பத்ரிநாத் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்வதில் தடை ஏற்பட்டது. உடனே அவர்களை மலைப்பாதை சாலைகள் வழியாக பத்ரிநாத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 3ம் இடத்திற்கு முன்னேற்றம்

Posted: 27 Jun 2013 08:06 PM PDT

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை  4-ம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதேபோல் இந்தியாவின் இரண்டு வீராங்கனைகள் டாப்-50 வரிசையில் இடம்பெற்றுள்ளனர். பி.வி.சிந்து 12-ம் இடத்தில் நீடிக்கிறார். நாக்பூரைச் சேர்ந்த அருந்ததி அதிரடியாக 10 இடங்கள் முன்னேறி டாப்-50 வரிசையில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். அவர் இப்போது 49-வது இடத்தில் உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பருபள்ளி காஷ்யப் 2 இடங்கள் பின்தங்கி 13-வது இடத்தில் உள்ளபோதும், [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் ; நோவாக் ஜோகோவிச் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்

Posted: 27 Jun 2013 07:58 PM PDT

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்டர் கோர்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அமெரிக்காவின் பாப்பி ரெனால்ட்சை சந்தித்தார். இதில் நோவாக் ஜோகோவிச் 7-6, 6-3, 6-1 என்ற நேர் செட்டுகளில் பாப்பி ரெனால்ட்சை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நோவாக் ஜோகோவிச் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈராக் தேனீர் விடுதிகளை குறிவைத்து குண்டுத்தாக்குதல்!

Posted: 27 Jun 2013 07:54 PM PDT

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தேனீர் விடுதிகளை குறிவைத்து நேற்று மாலை குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் தேனீர் விடுதியில் கால்பந்து விளையாட்டை டி.வி.யில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரிவினைவாத குழுக்களிடையேயான இந்த மோதலில் கால்பந்து ரசிகர்கள் பலியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எந்த தீவிரவாத குழுக்களும் பொறுப்பேற்கவில்லை. ஷியா பிரிவு பிரதமர் நூரி அல் மாலிக்கி அரசுக்கு எதிராக சன்னி குழுக்கள் நடத்திய தாக்குதலாகவே [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்.பிக்கள் தேர்வில் 31 வாக்குகளுடன் வெற்றி பெற்றார் கனிமொழி!

Posted: 27 Jun 2013 07:45 PM PDT

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர்.6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

மன்னார் மறைமாவட்ட ஆயரை பிரபாகரனோடு ஒப்பிட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

Posted: 27 Jun 2013 07:38 PM PDT

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™