Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்

Posted: 25 Jun 2013 11:02 PM PDT

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 ஆயிரம் பேர் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஜங்கிள் சாட்டி பகுதியில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். பெரு வெள்ளத்தால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. சாலையும் முற்றிலும் சிதைந்து விட்டது. இதனால் 2 ஆயிரம் பேரும் அங்கு தவித்தனர். தங்களை மீட்க மீட்பு படையை

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது

Posted: 25 Jun 2013 10:52 PM PDT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி சமீப காலமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு பற்றி பயப்படாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ள போதிலும், அதன் பாதிப்பு தடுக்க முடியாத படிதான் உள்ளது.

இந்தியாவின் முதல் 'நேவிகேஷன்' செயற்கைகோள்: ஜூலை 1-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது

Posted: 25 Jun 2013 10:35 PM PDT

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் வழி செல்லும் தகவல் அறிய உதவும் நேவிகேஷன் செயற்கைக்கோள் ஜூலை 1ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. கடந்த 12ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த இந்த செயற்கைக்கோளில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டதால்

உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு எதிரொலி: திருப்பதி மலைபாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு

Posted: 25 Jun 2013 10:10 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு சென்ற பக்தர்கள் உள்பட பலர் பலியாகி விட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மோசமான வானிலையால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளது

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து 15 பேர் காயம்

Posted: 25 Jun 2013 09:57 PM PDT

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் பிட் ரோகிமோர் பகுதியில் நேற்று இரவு குண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இன்று அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர்

அமெரிக்க ராணுவ தளபதி ஜூலை மாதம் இந்தியா வருகை

Posted: 25 Jun 2013 09:05 PM PDT

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா-அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி போன்றவற்றில் இணைந்து செயல்பட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்

Posted: 25 Jun 2013 06:54 PM PDT

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் போர்ப்படையில் பெண் விமானி சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இந்தியா தனது பெண் விமானிகளை போர்க்களத்திற்கு அனுப்புவதில்லை. ஆயினும், இந்த விமானிகள் உத்தரகாண்டில் நடந்துவரும் மீட்புப்பணியில் திறம்பட செயல்பட்டு தங்களது பணித் திறமையை நிரூபிக்கின்றனர்.

வெள்ள சேத துயரத்துக்கு இடையே உயிருக்கு போராடியவர்களிடம் நகை பறிப்பு: ரூ.1 கோடி ரொக்கம்-நகைகள் மீட்பு

Posted: 25 Jun 2013 06:28 PM PDT

கேதார்நாத் மழை - வெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. வரலாறு காணாத மழை-வெள்ளத்தினால், 'இமாலய சுனாமி' என்று

உத்தரகாண்டில் மீட்பு பணியை தீவிரப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 25 Jun 2013 04:03 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தும்படி, மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய பேய் மழை - வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர

உத்தரகாண்ட் மீட்பு பணி விவகாரத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா மோதல்

Posted: 25 Jun 2013 03:16 PM PDT

உத்தரகாண்ட் மீட்பு பணி விவகாரத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள சேதப்பகுதிகளை, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு பகுகுனா 10 லட்சம், மோடி 5 லட்சம் நிவாரணம்

Posted: 25 Jun 2013 02:44 PM PDT

உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் மலைப்பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய 20 பேரை மீட்டுக்கொண்டு புறப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர் கௌரிகுந்த் என்னுமிடத்தில் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் மீட்புப்படை வீரர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். அவர்களில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சோகச்சம்பவத்திற்கு உத்தரகாண்ட்

உத்தரகாண்டில் 15000 குஜராத்தியர்களை மீட்டதாக மோடி பொய் சொல்கிறார்: காங்கிரஸ்

Posted: 25 Jun 2013 01:36 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தேர்ந்தெடுத்து பொய் சொல்லி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறியதாவது:- இப்படியொரு சோகச்சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், நீங்கள் மீட்புப்பணிகளை செய்ய விரும்புகிறது பற்றி இங்கு குறிப்பிட்டு பேசமுடியாது. அதுபோன்று சிலர் இங்கு பேசிவருவது

உத்தரகாண்டில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா 30 லட்ச ரூபாய் உதவி

Posted: 25 Jun 2013 01:18 PM PDT

உத்தரகாண்டில் பெய்த இடியுடன் கூடிய கனமழைக்கு 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க அஞ்சப்படுகிறது. மேலும் நிறைய கிராமங்கள் மற்றும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இந்த பேரிடரில் சிக்கியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தரகாண்ட் துயர்துடைப்பிற்காக சீனா செஞ்சிலுவை சங்கத்தினர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர். இதற்கான நிதியை இந்தியாவிற்கான

உத்தரகாண்டில் மீட்பு பணி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது: மன்மோகன் சிங்

Posted: 25 Jun 2013 12:27 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- உத்தரகாண்டில் நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு

உத்தரகாண்டில் மீட்புப்பணி ஹெலிகாப்டர் விபத்து: 20 பேர் இறந்திருக்க அச்சம்

Posted: 25 Jun 2013 11:30 AM PDT

உத்தரகாண்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 10000-க்கும் மேற்பட்டோர் 10 நாட்களாகியும் இன்னும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கேதர்நாத்தில் பேராபத்தில் சிக்கியிருந்தோர் 20 பேரை மீட்டுக்கொண்டு எம்.ஐ. 17 வீ 5 ரக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று கௌச்சருக்கு புறப்பட்டது. அப்போது

சத்தீஸ்கர் தாக்குதல்: 2 மாவோயிஸ்டுகள் ஒடிசாவில் கைது

Posted: 25 Jun 2013 07:38 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டார் மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்

கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது

Posted: 25 Jun 2013 06:45 AM PDT

மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு 3 டி.எம்.சிக்கு கீழ் குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு வெறும் 80

உத்தரகாண்டில் மீட்புப்பணி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது: 8 பேர் பலி

Posted: 25 Jun 2013 06:16 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

Posted: 25 Jun 2013 05:36 AM PDT

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர்களை சுட்டுக்கொன்று தலையை துண்டித்து சென்றது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. அதன்பிறகும்

மத்திய அரசின் தோல்வியால் தீவிரவாத செயல்கள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

Posted: 25 Jun 2013 05:28 AM PDT

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே ராணுவ வீரர்களை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகதீன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அரசின் தோல்வியால் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™