Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரள எம்.எல்.ஏ.-மகன் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்: எர்ணாகுளம் எஸ்.பி. விசாரணை

Posted: 23 Jun 2013 11:05 PM PDT

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும், முதல்-மந்திரி உம்மன்சாண்டி அலுவலகம் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண் சரிதா எஸ். நாயருக்கு உதவி செய்ததாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக கேரள சட்டசபையிலும் தொடர்ந்து அமளி நிலவுகிறது. இந்த நிலையில் அங்கமாலி தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.யும், கடந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து மந்திரியாக இருந்தவருமான ஜோஸ் தெற்றயில், அவரது மகன் ஆதர்ஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: தரிசனத்துக்கு 20 மணிநேரம் காத்திருப்பு

Posted: 23 Jun 2013 10:58 PM PDT

திருப்பதி ஏழமலையான் கோவிலில் சனி, ஞாயிறு விடுமுறையை யொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்தனர். நேற்று 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து இருக்கிறார்கள். இன்றும் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிந்தன. இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது. நேற்று 1.5 லட்சம் லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 80 ஆயிரம் பேர்

உத்தரகாண்ட்: இறந்தவர்கள் உடலை எரிக்க 50 டன் விறகு

Posted: 23 Jun 2013 10:50 PM PDT

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. பகலில் மீட்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், அன்றிரவு ராணுவ உயரதிகாரிகள் ஒன்றுகூடி ஆலோசித்து மறுநாள் பணிகளை திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் 5 ஆயிரம் பேர் பலி: நோய் பரவும் அபாயம்

Posted: 23 Jun 2013 10:43 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்த மாநிலமே உருக்குலைந்து போனது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் பள்ளத்தாக்குகள் மத்தியில் ஏராளமான சிற்றாறுகளும், நதிகளும் ஓடுகின்றன. இங்குதான் கேதார்நாத் என்ற புனித தலம் அமைந்துள்ளது. மலைப்பாதை வழியாக சென்று நதிகளை கடந்து தான் கேதார்நாத் செல்ல வேண்டும். வழக்கமாக 6

கேரளாவில் கனமழை நீடிப்பு: 2 வாரத்திற்கு ரேசனில் இலவச அரிசி வழங்க உத்தரவு

Posted: 23 Jun 2013 10:22 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் 72 சதவீதம் மழை இப்போதே பதிவாகி விட்டது. கொச்சி, ஆலப்புழை, பத்தனம்திட்டை போன்ற பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. கொச்சியில் கனமழைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளது. இதில் பெரும்பாலானவை வாழைகள் ஆகும். ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி கிழங்குகளும் மழையால் அழிந்து விட்டது. இதைத்தொடர்ந்து கேரள அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு, உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேசன் கடைகள் மூலம் 2 வாரத்திற்கு தேவையான அளவு இலவச அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி மேல் சபை தேர்தலில் யாருக்கு ஆதரவு?: காங்கிரஸ் இன்று முடிவு

Posted: 23 Jun 2013 08:24 PM PDT

தமிழ்நாடு சட்டசபையில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக, 27-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், அ.தி.மு.க. 4 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அ.தி.மு.க ஆதரவுடன் ஒரு இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. மேற்கண்ட 5 இடங்களுக்கும் அ.தி.மு.க. கூட்டணியிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், 5 வேட்பாளர்களும் தேர்வு பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால், 6-வது இடத்துக்குத்தான் பலத்த போட்டி உருவாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் எல்லா பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்களா?: மம்தா கேள்வி

Posted: 23 Jun 2013 05:22 PM PDT

மேற்கு வங்கத்தில் சமீப காலங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு

காஷ்மீர் மாநிலத்தில் ஹவாலா பணம் கடத்திய 3 பேர் கைது

Posted: 23 Jun 2013 05:11 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சத்வாரி பகுதியில் ஹவாலா பணம் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து

உத்தரகாண்ட் பேரழிவு: அமெரிக்கா ரூ.90 லட்சம் நிவாரண உதவி

Posted: 23 Jun 2013 04:54 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

கேதர்நாத் பகுதியில் இருக்கும் சாதுக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுகோள்

Posted: 23 Jun 2013 04:28 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பெய்து வரும் மழைக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5000 பேர் உயிரிழந்து இருக்க அஞ்சப்படுகிறது. இந்நிலையில் எங்கும் செல்லமுடியாமல்

பண பரிமாற்றத்தில் முறைகேடு: ரூ.45 லட்சம் டெபாசிட் செலுத்த வங்கிக்கு உத்தரவு - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

Posted: 23 Jun 2013 04:21 PM PDT

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 'பூனா ஆட்டோ அன்சிலரிஸ்' என்ற நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில், வங்கி கணக்கு வைத்துள்ளது. இந்த கணக்கில் இருந்து சட்ட விரோதமாக 'சட்லஜ் டெக்ஸ்டைல்' என்ற

கர்நாடகாவில் யானைகள் தாக்கி 4 பேர் பலி: தமிழக காட்டுப்பகுதிக்கு விரட்ட முயற்சி

Posted: 23 Jun 2013 04:07 PM PDT

கர்நாடக மாநிலம் ஹொஸ்கோட் மாவட்ட ஓரோஹல்லிக்கரே கிராம காட்டுப்பகுதியில் யானை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதை போட்டோ எடுப்பதற்காக கன்னட தினசரி பத்திரிக்கையாளர் மஞ்சுநாத் கௌடா அதன் அருகில் சென்ற இருக்கிறார்.

உத்தரகாண்ட் வெள்ள நிவாரண பணிகள்: சத்தீஷ்கார் அரசு ஊழியர்கள் ரூ.22 கோடி நிதியுதவி

Posted: 23 Jun 2013 03:09 PM PDT

சத்தீஷ்கார் மாநில அரசு ஊழியர் சங்கங்களின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை உத்தரகாண்ட் வெள்ள நிவாரண பணிகளுக்கு அளிக்க முடிவு

உத்தரபிரதேசத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Posted: 23 Jun 2013 02:31 PM PDT

இமயமலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக உத்தரபிரதேசத்தில் பாயும் முக்கிய நதிகளான கங்கை, சாரதா, காக்ரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் துயரம்: ஏர் இந்தியா விமானக் கட்டணத்தைக் குறைத்துள்ளது

Posted: 23 Jun 2013 01:07 PM PDT

உத்தரகாண்ட் துயரத்திலிருந்து மீண்டு வருவோருக்கு உதவும் விதமாக ஏர் இந்தியா விமான நிறுவனம் டேஹ்ராடூனிலிருந்து இயங்கும் தனது விமான சேவைகளின் அடிப்படைக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அரசில் இரு அதிகார மையம் செயல்படுகிறது: பாஜக பிரச்சாரக்குழு தலைவர் மோடியின் முதல் தாக்கு

Posted: 23 Jun 2013 11:14 AM PDT

2014-ம் பாராளுமன்றத்திற்கான பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டது. பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக இன்று பதன்கோட்டில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசினார்.

உ.பி. உள்ளூர் கிரிக்கெட்டில் தகராறு: இருவர் மீது துப்பாக்கிச்சூடு

Posted: 23 Jun 2013 10:38 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சஹிபாபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது சோனு, ரிஜ்வான் ஆகிய இரு அணிகளுக்கிடையே விக்கெட் எடுத்தது தொடர்பாக

உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயரக்கூடும்: பேரிடர் மேலாண்மை மந்திரி கவலை

Posted: 23 Jun 2013 08:59 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாளை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. மழை காரணமாக கருமேக மூட்டமாக உள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் பயணம்: மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Posted: 23 Jun 2013 07:55 AM PDT

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து வடக்கு பகுதியை இணைக்கும் புதிய ரெயில் போக்குவரத்து தொடக்கவிழா வரும் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் விழா

இமாச்சல பிரதேசம்: பாராளுமன்ற இடைதேர்தலில் 48 சதவீத ஓட்டுப்பதிவு

Posted: 23 Jun 2013 07:51 AM PDT

இமாச்சல பிரதேச முதல் மந்திரி வீர்பத்ர சிங் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநிலத்தின் மண்டி பாராளுமன்ற தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. 52 ஆயிரத்து 361 வாக்காளர்களை கொண்ட கின்னவுர் மாவட்டத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™