மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜனநாயகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: பிரணாப் முகர்ஜி
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் 90 பேர் இன்று சென்னை திரும்புகிறார்கள்
- உத்தரகாண்ட் வெள்ளம்: காணாமல் போன 13 ஆயிரம் பக்தர்கள் கதி என்ன?
- பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு மோடி காய்ச்சல்: பாரதீய ஜனதா கிண்டல்
- சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: போலீஸ்காரர் பலி, 3 பேர் படுகாயம்
- மும்பை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
- உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை பேண நடவடிக்கை: ஜெயந்தி நடராஜன்
- மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பு: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
- பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்: 'இஸ்ரோ' வளாகத்தில் கிடந்த துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
- ஹூஸ்டனில் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்குகிறது
- தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய்க்கு புதிய வரி: மத்திய அரசு அறிவிப்பு
- பீகார் மக்களின் கட்டளையை மீறியதாக நிதிஷ், சரத் மீது பொது நல வழக்கு
- நெல்லியாம்பதி பஞ்சாயத்து முன்னாள் பெண் உதவி தலைவர் தற்கொலை
- சார்தாம் யாத்திரை மீண்டும் தொடங்க குறைந்தது 3 வருடங்களாவது ஆகும்: கோவில் கமிட்டி அறிவிப்பு
- உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் நன்கொடை வழங்க பிரதமர் வேண்டுகோள்
- நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் சதி: சோனியா காந்தி குற்றச்சாட்டு
- உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு
- உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள்: ஷிண்டே
- டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி பல்கலைக்கழக தேர்வு எழுத ஏற்பாடு: கோர்ட் உத்தரவு
- ராஜஸ்தானில் அனல் மின்சார நிலையத்துக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினர்
| ஜனநாயகத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: பிரணாப் முகர்ஜி Posted: 20 Jun 2013 10:57 PM PDT ஜனநாயக அமைப்பில் தீவிரவாதத்திற்கு இடமே கிடையாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி நேற்று தலைநகர் அகர்தாலாவில் நகராட்சி உறுப்பினர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:- |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் 90 பேர் இன்று சென்னை திரும்புகிறார்கள் Posted: 20 Jun 2013 10:41 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கன மழைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் 399 பேர் அங்கு சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களை பத்திரமாக மீட்டு சென்னைக்கு அழைத்து வருவதற்கு தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கைகளை |
| உத்தரகாண்ட் வெள்ளம்: காணாமல் போன 13 ஆயிரம் பக்தர்கள் கதி என்ன? Posted: 20 Jun 2013 10:40 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கின்றனர். |
| பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு மோடி காய்ச்சல்: பாரதீய ஜனதா கிண்டல் Posted: 20 Jun 2013 10:12 PM PDT பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:- குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பற்றி நிதிஷ்குமார் அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய பேச்சில் இருந்து நிதிஷ்குமார் 'மோடி' காய்ச்சலில் அவதிப்பட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. நிதிஷ்குமார் உடனடியாக ஒரு நல்ல டாக்டரைப் பார்ப்பது நல்லது. மோடியைப் பார்த்து |
| சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: போலீஸ்காரர் பலி, 3 பேர் படுகாயம் Posted: 20 Jun 2013 09:34 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். |
| மும்பை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி Posted: 20 Jun 2013 08:30 PM PDT மகாரஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் இடபாடுகளில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். |
| உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை பேண நடவடிக்கை: ஜெயந்தி நடராஜன் Posted: 20 Jun 2013 08:09 PM PDT இமயமலையை ஒட்டி அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் சேதம் அடைந்தன. அங்கு மழை-வெள்ளத்துக்கு 150-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவின் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது |
| மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பு: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு Posted: 20 Jun 2013 06:00 PM PDT மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு, மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் |
| பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்: 'இஸ்ரோ' வளாகத்தில் கிடந்த துண்டு பிரசுரத்தால் பரபரப்பு Posted: 20 Jun 2013 05:36 PM PDT பெங்களூர் ஜாலஹள்ளி அருகே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீஸ், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்ரோ வளாகத்திற்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது |
| ஹூஸ்டனில் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்குகிறது Posted: 20 Jun 2013 12:43 PM PDT இந்தியத் திரைப்பட விழாக் கொண்டாட்டத்தின் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் 12 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படும். கல்வி நிகழ்ச்சிகளும் |
| தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய்க்கு புதிய வரி: மத்திய அரசு அறிவிப்பு Posted: 20 Jun 2013 12:11 PM PDT தங்கம், சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயம் சாரா பொருட்களுக்கு மத்திய அரசு புதிய வரி விதிக்கிறது. இது ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு வரி விதிப்புகளின் மூலம் மத்திய அரசுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது |
| பீகார் மக்களின் கட்டளையை மீறியதாக நிதிஷ், சரத் மீது பொது நல வழக்கு Posted: 20 Jun 2013 09:43 AM PDT பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும், பாரதீய ஜனதாவும் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. பீகார் மக்கள் அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் குறித்த விவகாரத்தில் இரு கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு விலகிவிட்டனர். |
| நெல்லியாம்பதி பஞ்சாயத்து முன்னாள் பெண் உதவி தலைவர் தற்கொலை Posted: 20 Jun 2013 08:59 AM PDT பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி வேலுமணி (வயது36) இவர் கடந்தமுறை நடந்த நெல்லியாம்பதி பஞ்சாயத்து தேர்தலில் 3-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக |
| சார்தாம் யாத்திரை மீண்டும் தொடங்க குறைந்தது 3 வருடங்களாவது ஆகும்: கோவில் கமிட்டி அறிவிப்பு Posted: 20 Jun 2013 08:21 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் இடியுடன் கூடிய கடும்மழையால் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களையும் இணைத்து 'சார்தாம்' என்ற பெயரில் நடைபெற்றுவந்த புனித யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வருடங்களாவது ஆகும் என்று கேதார்நாத், பத்ரிநாத் கோவில் கமிட்டி நிர்வாக இயக்குனரான பி.டி.சிங் இன்று தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த இரண்டு கோவில்களைச் சுற்றிலும் இப்போது சேறும் சகதிகளும், மரணம் மற்றும் பேரழிவுமாக காட்சியளிக்கிறது என்று அவர் வேதனை பொங்க |
| உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் நன்கொடை வழங்க பிரதமர் வேண்டுகோள் Posted: 20 Jun 2013 08:20 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். "கனமழை, வெள்ளப்பெருக்கினால் ஏராளமான மக்கள் பலியாகி உள்ளனர். |
| நிலையற்ற தன்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் சதி: சோனியா காந்தி குற்றச்சாட்டு Posted: 20 Jun 2013 06:47 AM PDT ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:- நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன. அந்த கட்சிகள் எல்லாம், நாட்டின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யமாட்டார்கள். பதவியை பிடிப்பதில் மட்டுமே அவர்கள் |
| உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு Posted: 20 Jun 2013 06:34 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதால் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இடைவிடாத மழையால் பேரழிவு ஏற்பட்டிருப்பதால், உத்தரகாண்ட் |
| உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள்: ஷிண்டே Posted: 20 Jun 2013 05:30 AM PDT உத்தரகாண்டில் ஒரு வார காலமாக பெய்துவரும் இடியுடன் கூடிய பேய்மழையில் சிக்கி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். அவர்களை உடனடியாக மீட்டுவர அதிகமான ஹெலிகாப்டர்களை விரைந்து அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது:- உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்க இதுவரை 22 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் 22,392 பேரை காப்பாற்றியுள்ளோம். 22 ஹெலிகாப்டர்கள் |
| டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு குற்றவாளி பல்கலைக்கழக தேர்வு எழுத ஏற்பாடு: கோர்ட் உத்தரவு Posted: 20 Jun 2013 04:47 AM PDT கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் இரவில் பேருந்தில் கடத்தி, கற்பழித்து சாலையில் வீசிச்சென்றது. பின்னர் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் சிறுவன் ஒருவன் தவிர மற்ற 5 பேர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. |
| ராஜஸ்தானில் அனல் மின்சார நிலையத்துக்கு சோனியா காந்தி அடிக்கல் நாட்டினர் Posted: 20 Jun 2013 03:44 AM PDT ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சூரத்கர் நகரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் தற்போது 6 உற்பத்தி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மேலும் இரண்டு புதிய உற்பத்தி பிரிவுகளை நிறுவ முடிவு செய்யப்பட்டிருந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |