மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தேர்தல்: காங். முதல் மந்திரிகளுக்கு சோனியாகாந்தி எச்சரிக்கை
- ஒடிசா: சரணாலயத்தில் இருந்து தப்பிய புலி கிராமப் பகுதியில் நடமாட்டம்
- திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணை 13- ந்தேதிக்கு தள்ளி வைப்பு
- பா.ஜ.க. செயற்குழு கூட்டம்: அத்வானி இன்றும் புறக்கணிப்பு
- 'மோடி என்றாலே பா.ஜனதா தலைவர்களுக்கு ஜுரம்': காங்கிரஸ் கிண்டல்
- பழங்குடியினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி
- மகாராஷ்டிராவில் தேசியவாத காங். மந்திரிகளிடம் ராஜினாமா கடிதங்களை பெற்றார் சரத் பவார்
- மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சி
- அசாமில் மந்திரவாதி நரபலி: 13 பேர் கைது
- பா.ஜனதா அரசுக்காக காத்திருக்கும் மக்கள்: கோவா முதல்- மந்திரி
- 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 53 வயது குற்றவாளிக்கு தூக்கு
- மோடி ‘பலூன்’ விரைவில் வெடிக்கும்: சரத்பவார்
- காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: வீரர் பலி
- உ.பி. பசுமை மாநிலம் ஆகிறது: 4 கோடி மரக்கன்றுகள் நட அகிலேஷ் யாதவ் உத்தரவு
- தடைபட்டு நிற்கும் 215 திட்டங்களை செயல்படுத்த புதிய குழு: ப.சிதம்பரம் தகவல்
- உத்தரகாண்ட் அரசுக்கு நெருக்கடி: மேலும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
- '2ஜி' ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு அபராதம்
- குப்பை அள்ளாததால் பா.ஜனதா மேயருக்கு காங்கிரசார் வளையல் போடும் போராட்டம்
- கூடுதல் போதைக்காக மது விருந்தில் பாம்பு விஷம்: 1 3/4 லிட்டர் விஷத்துடன் 6 பேர் கைது
- அரசு பொதுத்தேர்வு: உ.பி. சிறைக் கைதிகள் 6 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி
| பாராளுமன்ற தேர்தல்: காங். முதல் மந்திரிகளுக்கு சோனியாகாந்தி எச்சரிக்கை Posted: 07 Jun 2013 11:07 PM PDT பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை |
| ஒடிசா: சரணாலயத்தில் இருந்து தப்பிய புலி கிராமப் பகுதியில் நடமாட்டம் Posted: 07 Jun 2013 10:30 PM PDT ஒடிசா மாநிலத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்ட நந்தன்கனன் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த புலி கடந்த மாதம் 30ம் தேதி 18 அடி உயர கம்பி வேலியை தாண்டி குதித்து அருகாமையில் உள்ள வனப்பகுதியில் ஓடி மறைந்தது |
| திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணை 13- ந்தேதிக்கு தள்ளி வைப்பு Posted: 07 Jun 2013 10:16 PM PDT தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள பத்மினி கார்டன் மைதானத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். |
| பா.ஜ.க. செயற்குழு கூட்டம்: அத்வானி இன்றும் புறக்கணிப்பு Posted: 07 Jun 2013 10:16 PM PDT பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதி யில் தேர்தல் நடத்தப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார திட்டம் ஆகியவை ராகுல்காந்தி |
| 'மோடி என்றாலே பா.ஜனதா தலைவர்களுக்கு ஜுரம்': காங்கிரஸ் கிண்டல் Posted: 07 Jun 2013 08:07 PM PDT கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில், நரேந்திரமோடிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவால் அத்வானி கலந்துகொள்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை. மூத்த தலைவர்கள் உமாபாரதி, ஜஸ்வந்த்சிங், ரவிசங்கர்பிரசாத், சத்ருகன் சின்கா, வருண்காந்தி உள்ளிட்டவர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை |
| பழங்குடியினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி Posted: 07 Jun 2013 05:20 PM PDT இந்திரா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பழங்குடியினர் பகுதியில் பாதுகாப்புக்கும் வளர்ச்சி பணிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் |
| மகாராஷ்டிராவில் தேசியவாத காங். மந்திரிகளிடம் ராஜினாமா கடிதங்களை பெற்றார் சரத் பவார் Posted: 07 Jun 2013 09:30 AM PDT மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 கேபினட் மந்திரிகளும், 5 இணை மந்திரிகளும் உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்து வந்தபோதிலும், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. |
| மேற்கு வங்கத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சி Posted: 07 Jun 2013 07:13 AM PDT மேற்கு வங்க மாநிலத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றது. மேற்கு வங்க மாநிலம் பாரக்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே நேற்று இரவு நடந்த மோதலில் ஒருவர் |
| அசாமில் மந்திரவாதி நரபலி: 13 பேர் கைது Posted: 07 Jun 2013 05:22 AM PDT அசாம் மாநிலத்தில் மந்திரவாதியை கொன்று நரபலி கொடுத்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ளூர் மந்திரவாதியை சிலர் நரபலிக்காக கொன்று புதைத்திருப்பதாக பன்ஸ்கண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. |
| பா.ஜனதா அரசுக்காக காத்திருக்கும் மக்கள்: கோவா முதல்- மந்திரி Posted: 07 Jun 2013 05:14 AM PDT கோவாவில் நாளை பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. இதையொட்டி அந்த மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- நாட்டில் நல்லாட்சியை வழங்குவதற்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு, இந்த செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். |
| 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: 53 வயது குற்றவாளிக்கு தூக்கு Posted: 07 Jun 2013 05:09 AM PDT மும்பை அருகே வாஷி பகுதியில் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி திடீரென மாயமானாள். உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பதற்றமடைந்த பெற்றோர் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். மறுநாள் அதிகாலை, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் பிணம் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. |
| மோடி ‘பலூன்’ விரைவில் வெடிக்கும்: சரத்பவார் Posted: 07 Jun 2013 04:38 AM PDT பாரதீய ஜனதா கட்சியில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க மூத்த தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு கூட்டங்களிலும் அவரை முன்னிலைப்படுத்தி |
| காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு: வீரர் பலி Posted: 07 Jun 2013 04:07 AM PDT காஷ்மீரில் இன்று இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது. பூஞ்ச் பகுதியில் உள்ள மாண்டி என்ற இடத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். எல்லையில் ஊடுருவும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக |
| உ.பி. பசுமை மாநிலம் ஆகிறது: 4 கோடி மரக்கன்றுகள் நட அகிலேஷ் யாதவ் உத்தரவு Posted: 07 Jun 2013 03:47 AM PDT உத்தரபிரதேசத்தை பசுமை மாநிலமாக மாற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலத்தில் உள்ள பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சென்ற ஆண்டில் பல லட்சம் மரங்கள் நடப்பட்டன. அவை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு தற்போது நிழல்தர தொடங்கியுள்ளன. |
| தடைபட்டு நிற்கும் 215 திட்டங்களை செயல்படுத்த புதிய குழு: ப.சிதம்பரம் தகவல் Posted: 07 Jun 2013 03:37 AM PDT மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 66 வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். |
| உத்தரகாண்ட் அரசுக்கு நெருக்கடி: மேலும் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி Posted: 07 Jun 2013 03:34 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பகுகுணா பொறுப்பேற்றார். முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த ராவத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மந்திரி பதவி கிடைக்கும் என காத்திருந்த அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் |
| '2ஜி' ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு அபராதம் Posted: 07 Jun 2013 03:30 AM PDT 2-ஜி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என விவேக் கார்க் என்பவர் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவினை இன்று விசாரித்த சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். |
| குப்பை அள்ளாததால் பா.ஜனதா மேயருக்கு காங்கிரசார் வளையல் போடும் போராட்டம் Posted: 07 Jun 2013 03:22 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதியான காசியாபாத் டெல்லி அருகே அமைந்து உள்ளது. இந்த நகர மேயராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த தெலுராம் கம்போஜ் பதவி வகித்து வருகிறார். குடிநீர் தட்டுப்பாடு, குப்பை அள்ளாத பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தெலுராம் மீது காங்கிரஸ் கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். நேற்று அவர்கள் தெலுராமிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். அப்போது தெலுராம் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். இதனால் அவர் காங்கிரசாரிடம் இருந்து மனு வாங்குவதற்கு சற்று தாமதம் |
| கூடுதல் போதைக்காக மது விருந்தில் பாம்பு விஷம்: 1 3/4 லிட்டர் விஷத்துடன் 6 பேர் கைது Posted: 07 Jun 2013 02:52 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் நள்ளிரவு 'போதை' விருந்து கூடுதல் போதைக்காக கருநாகத்தின் விஷம் மதுவில் கலந்து வழங்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விருந்துகளுக்காக கருநாகத்தின் விஷத்தை 'சப்ளை' செய்யும் |
| அரசு பொதுத்தேர்வு: உ.பி. சிறைக் கைதிகள் 6 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி Posted: 07 Jun 2013 02:47 AM PDT உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மேல்நிலைத் தேர்வில் சிறைக் கைதிகள் 6 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விசாரணைக் கைதிகளான அவினேஷ் 77.4 சதவீத மதிப்பெண்கள், ஷாகித் 76.4 சதவீதம், ஷெலண்டர் 76.2 சதவீதம், மோனு 75 சதவீதம், விக்ராந்த் 73.6 சதவீதம், ரெங்கு ராவத் 69 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக முசாபர் நகர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சேவா ராம் தெரிவித்தார். இந்த கைதிகள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |