மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோவளம் அருகே திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய தம்பதி கொலை
- மராட்டியத்தில் பலத்த மழை: ஒரே மாவட்டத்தில் 5 பேர் பலி
- பா.ஜனதா தேசிய செயற்குழு: அத்வானி பங்கேற்க மாட்டார்
- மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி, 2 பேர் படுகாயம்
- சிறிய ரக பயணிகள் விமானம் வாங்கியுள்ள நிர்மா தொழிலதிபர்
- ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பொருட்களை அனுப்ப பிலிப்கார்ட் நிறுவனம் தடை
- ஷிண்டேவுக்கு எதிரான வழக்கு: மன்மோகன்சிங், சோனியாவை சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் - டெல்லி கோர்ட்டில் மனு
- 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 1.5மீ நீளமுடைய முடிக்கற்றை அகற்றம்
- பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் நியமனம்
- உத்தர பிரதேசத்தில் இன்று மின்னல் தாக்கி 11 பேர் பலி
- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை: கர்நாடக முதல்வர் பேட்டி
- தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: ப.சிதம்பரம் மீண்டும் வேண்டுகோள்
- இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம்
- ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழகம் மேல்முறையீடு
- 5 முக்கிய தொழில்களில் ரிலையன்ஸ் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி தகவல்
- பீகார் இடைத்தேர்தலில் தோல்வி: பா.ஜனதா வேலை செய்யவில்லை-ஐக்கிய ஜனதா தளம்
- ஆந்திர முதல்-மந்திரி மீது காங்கிரஸ் எல்.எல்.ஏ. சோனியாவிடம் புகார்
- கணவருடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
- ஏழைகளுக்கு இலவச மின்சாரம்: கேரள அரசு அறிவிப்பு
- மகாத்மா காந்தியின் சத்தியசோதனை காஷ்மீரி மொழியில் வெளியீடு
| கோவளம் அருகே திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்திய தம்பதி கொலை Posted: 06 Jun 2013 11:17 PM PDT கேரள மாநிலம் கோவளம் அருகே உள்ள விழிஞ்ஞம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன், (வயது 70). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் திரேசம்மாள் (76). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். திவாகரன் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இதேபோல திரேசம்மாளும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் 35 வருடங்களுக்கு |
| மராட்டியத்தில் பலத்த மழை: ஒரே மாவட்டத்தில் 5 பேர் பலி Posted: 06 Jun 2013 11:08 PM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அகமத் நகர் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நேற்றிரவு, வாட்சைர் கிராமத்தின் அருகே காரில் சென்ற 3 பேர் கரைபுரண்டு ஓடிய படாலி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர். |
| பா.ஜனதா தேசிய செயற்குழு: அத்வானி பங்கேற்க மாட்டார் Posted: 06 Jun 2013 10:45 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று கோவாவில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் 2014 பாராளுமன்ற தேர்தல் பிரசார குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் பெயரை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடிக்கு இணையான இன்னொரு பிரசார குழுவையும் ஏற்படுத்தி |
| மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி, 2 பேர் படுகாயம் Posted: 06 Jun 2013 09:23 PM PDT மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயமடைந்தனர். |
| சிறிய ரக பயணிகள் விமானம் வாங்கியுள்ள நிர்மா தொழிலதிபர் Posted: 06 Jun 2013 08:03 PM PDT குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில்,1969-ல், கர்சான்பாய் பட்டேல் என்ற தனி மனிதரால் நிர்மா என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. துணி துவைக்கும் சோப்பு மற்றும் சோப்புத்தூள் தயாரிப்பில் அந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. தன்னுடைய தயாரிப்பை சைக்கிள் மூலம் வீடுவீடாக சென்று அவர் விற்று வந்தார். மெள்ள, அவரது தொழில் விரிவடையத் துவங்கியது. கடந்த 2004ஆம் ஆண்டு, தனி நிறுவன பெயரில் 8,00,000 டன்கள் விற்பனை இலக்கை எட்டி, உலகிலேயே அதிக அளவு விற்பனையை எட்டிய நிறுவனம் என்ற |
| ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பொருட்களை அனுப்ப பிலிப்கார்ட் நிறுவனம் தடை Posted: 06 Jun 2013 05:03 PM PDT இந்தியாவில், இணையதள வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பிலிப்கார்ட் நிறுவனம் குறிப்பிடத்தக்கது. பொருட்களை வாங்க விரும்புவோர் இணையதளத்தில் ஆர்டர் செய்தால், அவற்றை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டமும் இதில் உண்டு. உத்தரபிரதேசத்தில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை இந்தத் திட்டத்தின் கீழ் அனுப்புவதில்லை என்ற முடிவினை சமீபத்தில் இந்த நிறுவனம் எடுத்துள்ளது. உத்தரபிரதேசம் மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலமாகும். மேலும், நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சாட்டிலைட் டவுன் போன்ற மாதிரிக் குடியிருப்புகளும் உள்ளன. அதேபோல், வர்த்தக நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்களும் அங்கு அதிகம் பேர் உள்ளனர். |
| Posted: 06 Jun 2013 03:41 PM PDT மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, கடந்த ஜனவரி 20-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகையில், 'இந்து தீவிரவாதம்' வளர்ந்து வருவதாக கூறினார். அதனால் அவருக்கு எதிராக விவேக் கார்க் என்பவர் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனிநபர் புகார் |
| 14 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 1.5மீ நீளமுடைய முடிக்கற்றை அகற்றம் Posted: 06 Jun 2013 08:59 AM PDT அரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் வசித்து வருபவர் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 14 வயது சிறுமியான இவருக்குத் தலைமுடியை விழுங்கும் 'ரபுன்செல் சின்ட்ரோம்' என்ற அரிய வகை வியாதி இருந்துள்ளது. இவ்வாறு இவர் உட்கொண்ட முடியானது, 1.5 மீ நீளத்திற்கு வயிற்று பகுதி, குடல் பகுதியைத் தாண்டி மலக்குடல் வரை அடைத்துக் கொண்டிருந்தது. |
| பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் நியமனம் Posted: 06 Jun 2013 08:47 AM PDT பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருபவர் ஷபர்வா. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதராக டி.சி.ஏ. ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.சி.ஏ.ராகவன் இப்போது சிங்கப்பூருக்கான இந்திய தூதராக பணியாற்றி |
| உத்தர பிரதேசத்தில் இன்று மின்னல் தாக்கி 11 பேர் பலி Posted: 06 Jun 2013 07:46 AM PDT வடக்கு மாநிலமான உ.பி., பீகார், இமாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு பகுதியில் பருவ மழை தொடங்கியுள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று காலை உத்தரப்பிரதேசத்தில் பெய்த கன |
| காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை: கர்நாடக முதல்வர் பேட்டி Posted: 06 Jun 2013 05:45 AM PDT காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டபிறகு, அந்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய கடமையில் இருந்து கர்நாடக அரசு நழுவி வருகிறது. இதையடுத்து தமிழகத்திற்கு ஏற்பட்டுட்டுள்ள நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க |
| தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: ப.சிதம்பரம் மீண்டும் வேண்டுகோள் Posted: 06 Jun 2013 04:23 AM PDT வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய |
| இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம் Posted: 06 Jun 2013 03:49 AM PDT அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அமேசான் நிறுவனம் இணையதள சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனமாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் புத்தக விற்பனையில் ஈடுபட்ட இந்த நிறுவனம், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடியோ பொருட்கள், மென்பொருள், ஆபரணங்கள் என பல துறைகளிலும் இன்று விற்பனையில் முன்னணியில் உள்ளது. பல நாடுகளிலும் இணையதளம் மூலம் இந்த நிறுவனத்தின் விற்பனை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவிலும் அமேசான் நிறுவனம் தனது விற்பனைத் தளத்தைத் தொடங்க உள்ளது. அமேசானின் இந்திய நிர்வாகியான அனில் அகர்வால் இந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, இந்திய விதிமுறைகளின்படி எந்த ஒரு அந்நிய நிறுவனமும் இந்தியாவில் அதன் விற்பனையில் முழுவதுமாக உரிமை செலுத்தமுடியாது. ஆனால் அமேசான் நிறுவனம் |
| ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழகம் மேல்முறையீடு Posted: 06 Jun 2013 03:19 AM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டதையடுத்து, ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. |
| 5 முக்கிய தொழில்களில் ரிலையன்ஸ் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி தகவல் Posted: 06 Jun 2013 03:01 AM PDT ரிலையன்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு தாரர்கள் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். |
| பீகார் இடைத்தேர்தலில் தோல்வி: பா.ஜனதா வேலை செய்யவில்லை-ஐக்கிய ஜனதா தளம் Posted: 06 Jun 2013 02:36 AM PDT குஜராத், பீகார், மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாடு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குஜராத்தில் 2 பாராளுமன்ற தொகுதியிலும், 4 சட்டசபை தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் அவுரா பாராளுமன்ற தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் பீகாரில் மகாராஜ் கஞ்ச் பாராளுமன்ற தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்து முதல் - மந்திரி நிதிஷ்குமாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சுஷில்குமார் மோடி துணை முதல் - மந்திரியாகவும் சில மந்திரிகளும் இடம்பெற்றுள்ளனர். |
| ஆந்திர முதல்-மந்திரி மீது காங்கிரஸ் எல்.எல்.ஏ. சோனியாவிடம் புகார் Posted: 06 Jun 2013 12:22 AM PDT ஆந்திராவில் முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி மீது காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிருப்பதியில் உள்ளனர். முதல்-மந்திரியை விமர்சனம் செய்த சுகாதாரத்துறை மந்திரி சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஐதராபாத் கண்டோன்மெண்ட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சங்கர்ராவ் முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி பற்றி பகிரங்கமாக புகார் தெரிவித்து |
| கணவருடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை Posted: 06 Jun 2013 12:12 AM PDT கிழக்கு டெல்லியில் மந்தவாலி பகுதியில் வசிப்பவர் தேவேந்திர யாதவ். டெக்ஸ்டைல் டிசைனராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சவிதா (வயது 31). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகளும் இருந்தனர். நேற்று காலை டிபன் தயாரித்துக் கொண்டு இருந்த போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது. பின்னர் கணவர் வேலைக்கு சென்று விட்டார். அங்கு போனதும் அவர் மனம் கேட்காமல் மனைவிக்கு போன் செய்தார். |
| ஏழைகளுக்கு இலவச மின்சாரம்: கேரள அரசு அறிவிப்பு Posted: 05 Jun 2013 11:54 PM PDT கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. நேற்று உம்மன் சாண்டி தலைமையில் கேரள மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. |
| மகாத்மா காந்தியின் சத்தியசோதனை காஷ்மீரி மொழியில் வெளியீடு Posted: 05 Jun 2013 11:22 PM PDT இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேசப்பிதா மகத்மாகாந்தியின் சுயசரிதை நூல் சத்திய சோதனை ஆகும். இதனை தங்களது மாநிலமொழியான காஷ்மீரியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது காஷ்மீரி மக்களின் விருப்பமாக இருந்தது. காந்தியின் நூல்களை வெளியிடும் நவஜீவன் டிரஸ்ட் நிர்வாகியான விவேக் தேசாய் கூறும்போது, ஒவ்வொரு வருடமும் புதுடெல்லியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் காஷ்மீர் மக்கள் தங்களைச் சூழ்ந்துகொண்டு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |