puthiyathalaimurai.tv online |
- ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை
- பெங்களூரு குண்டுவெடிப்பு:கிக்சன் புகாரியின் ஜாமின் மனு தள்ளுபடி
- வத்தலக்குண்டு அருகே சந்தன மரக்கட்டை கடத்த முயற்சி: 2 பேர் கைது
- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை
- வட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- மேட்டுக்கடை அருகே 25 கிலே கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
- குளித்தலை அருகே ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேடு புகார்
- விருதுநகரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
- ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரிக்க 2 நபர் அடங்கிய விசாரணைக்குழு
| ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை Posted: 06 Jun 2013 10:42 PM PDT ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியோடு இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நமது பெயர் மற்றும் விவரங்களை தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் முயற்சியின் இறுதி வடிவம் ஆதார் எண் என்கிற பிரத்யேக அடையாள எண் ஆகும். அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் பெயர், குடும்பத்தலைவர் உடனான உறவு,பாலின வகை, பிறந்த தேதி, திருமண நிலை, கல்வித் தகுதி, தொழில், தந்தை, தாய், துணைவரின் முழுப்பெயர், பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் வசித்து வரும் ஆண்டுகள், நிரந்தர வசிப்பிட முகவரி என மொத்தம் 14 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். பயோமெட்ரிக் அடையாளம் ஒவ்வொரு மனிதனின் பயோமெட்ரிக் அடையாளம் எனப்படும் பண்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒவ்வொருவரின் புகைப்படம், கைவிரல் ரேகைகள், விழி திரையின் பதிவு ஆகியவை அடங்கும் மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்படும், என்ன குறைபாடு உள்ளதோ அதுவும் பதிவேட்டில் இடம்பெறும் ஆதார் எண் வழங்கப்படும் விதம் அனைத்து தகவல்களும் இந்திய அரசின் பிரத்யேக அடையாள எண் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தனிநபருக்கான பிரத்யேக எண் வழங்கப்படும். இந்த எண் குறித்த விபரம் அஞ்சல் வழியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படுத்தப்படும். தகவல் சேகரிப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் ஆதார் எண் தகவல் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம் தங்கள் பகுதி முகாம்களை தவறவிட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் அமைக்கப்பட உள்ள நிரந்தர மையங்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம். தகவல்களில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். மேலும் ஆதார் எண் இருந்தால் தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்கின்றனர் அதிகாரிகள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கே ஆதார் எண் வழங்கப்படும். காணொளி : http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4838 |
| பெங்களூரு குண்டுவெடிப்பு:கிக்சன் புகாரியின் ஜாமின் மனு தள்ளுபடி Posted: 06 Jun 2013 10:38 PM PDT பெங்களூரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிச்சன் புகாரிக்கு ஜாமின் வழங்க கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடகாவில் நடைபெறுவதால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். |
| வத்தலக்குண்டு அருகே சந்தன மரக்கட்டை கடத்த முயற்சி: 2 பேர் கைது Posted: 06 Jun 2013 10:12 PM PDT திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். |
| திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை Posted: 06 Jun 2013 10:04 PM PDT திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அடுத்த ஆண்டு முதல் செயல்படும் என்றும் டீன் சந்திரசேகர் தெரிவித்தார். |
| வட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 06 Jun 2013 09:35 PM PDT வட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வட மாவட்டங்களில் பதட்டம் குறைந்துள்ளதால், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர், விவசாயத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். |
| மேட்டுக்கடை அருகே 25 கிலே கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது Posted: 06 Jun 2013 09:35 PM PDT ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அருகே இரு சக்கர வாகனத்தில் 25 கிலோ கஞ்சா கடத்தியதாக சேலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய அண்ணாமாலை என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
| குளித்தலை அருகே ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேடு புகார் Posted: 06 Jun 2013 09:29 PM PDT கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல ஆரியம்பட்டி மற்றும் குமாரமங்கலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் குறைத்து வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 148 ரூபாய்க்கு பதில் 60 ரூபாய் மட்டுமே ஊதியம் தரப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். |
| விருதுநகரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை Posted: 06 Jun 2013 09:26 PM PDT விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 38 ஆயிரத்து 240 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் , வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு உதவி கண்காணிப்பாளர் ஷியாமலா தலைமையில் , கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வங்கிச் செயலாளர் கருப்பையா, காசாளர் ஜெயக்கொடி உள்ளிட்டோரிடம் இருந்து , கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு Posted: 06 Jun 2013 09:18 PM PDT தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல், மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதுபோல், தஞ்சை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. இதுதவிர, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, நாகை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பரவலாக மழை பெய்துள்ளது. காணொளி : http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4832 |
| ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரிக்க 2 நபர் அடங்கிய விசாரணைக்குழு Posted: 06 Jun 2013 08:18 PM PDT ஐ.பி.எல் பந்தய சூதாட்டம் குறித்து விசாரிப்பதற்காக இரண்டு நபர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார். பி.சி.சி.ஐ -யின் தினசரி அலுவல்களை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜக்மோகன் டால்மியா கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கு தெடர்பு இருப்பது குறித்து விவாதிப்பதற்காக பி.சி.சி.ஐ செயற்குழு வரும் 10- ஆம் தேதி டெல்லியில் கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.பி.எல் சூதாட்ட புகார்களின் எதிரொலியாக பி.சி.சி.ஐ செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தாலேவும், பொருளாளராக இருந்த ஷிர்கேவும் அன்மையில் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் துணைச்செயலாளரான சஞ்சய் பட்டேல் தற்போது பி.சி.சி.ஐ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐ.பி.எல் பந்தய சூதாட்டம் குறித்து விசாரிப்பதற்காக இரண்டு நபர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |