மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பத்ரிநாத் மலைப்பாதை துண்டிப்பு: தமிழக பக்தர்களை மீட்பதில் சிக்கல்
- உம்மன்சாண்டி பதவி விலகும் வரை போராடுவோம்: சட்டசபை முன்பு அச்சுதானந்தன் “தர்ணா”
- மும்பை தாக்குதல் தீவிரவாத அமைப்புக்கு நிதி ஒதிக்கீடு: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை - குர்ஷித் தகவல்
- கேதார்நாத் கோவிலில் வெள்ளம் 500 பக்தர்கள் கதி என்ன?: 13 ஹெலிகாப்டர்களில் தேடுகிறார்கள்
- குஜராத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டக் குழு ஒப்புதல்
- வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு: சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு
- இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
- 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்: போலீசில் தந்தை புகார்
- பீகார் சட்டசபையில் இன்று பலப்பரீட்சை : நிதிஷ் குமாரை காப்பாற்ற காங்கிரஸ் "கை" கொடுக்குமா?
- தீமைகளை எதிர்த்து கடுமையாக போராடி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை
- மதச்சார்பற்ற இந்தியா மோடியை ஏற்றுக் கொள்ளாது : காங்கிரஸ் கருத்து
- ஒடிசா: ஓடும் பஸ்சில் பழங்குடியின பெண் கற்பழிப்பு - கண்டக்டர் கைது
- இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம்: பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி
- அயோத்திக்கு வருவதாக மோடி ஒப்புதல் அளிக்கவில்லை : குஜராத் முதல் மந்திரி அலுவலகம் விளக்கம்
- உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்குங்கள்: இமாச்சல்-உத்தரகாண்ட் முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள்
- உத்தரகாண்டில் பேய் மழை: கேதர்நாத் பாதுகாப்பு பணியிலிருந்த 45 போலீசார் மாயம்
- கரைபுரண்டு ஓடும் யமுனை நதியால் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை
- இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தலைமை விருந்தினராக சீனாவுக்கு அழைப்பு: மணீஷ் திவாரி தகவல்
- இமாச்சல் பிரதேசத்தில் 300 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 11 பேர் பலி
- தெலுங்கானா விவகாரம் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷிண்டே
| பத்ரிநாத் மலைப்பாதை துண்டிப்பு: தமிழக பக்தர்களை மீட்பதில் சிக்கல் Posted: 18 Jun 2013 11:16 PM PDT வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. 87 ஆண்டுகளுக்கு பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேய்மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள புனித தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகத்தில் இருந்து பலர் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர். சைதாப்பேட்டை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து 52 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 37 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்ரிநாத்துக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர். இவர்கள் அனைவரும் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தில் சிக்கி கடந்த 4 நாட்களுக்கு மேலாக தவித்து வருகிறார்கள். |
| உம்மன்சாண்டி பதவி விலகும் வரை போராடுவோம்: சட்டசபை முன்பு அச்சுதானந்தன் “தர்ணா” Posted: 18 Jun 2013 11:00 PM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்த சரிதா எஸ். நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் சரிதா எஸ். நாயருக்கு கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர்கள் டென்னி ஜோப்பன், சலீம் ராஜ் ஆகியோர் துணை போனதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால் அவர்கள் இருவரையும் |
| Posted: 18 Jun 2013 10:33 PM PDT 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியது லஷ்கர் இ தொய்பா அமைப்பு. தடை செய்யப்பட்ட இதன் தாய் இயக்கம் ஜமாத் உத் தாவா. இதன் தலைவன் ஹபிஸ் சயீத். இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான கட்சியின் ஆட்சி நடைபெறும் |
| கேதார்நாத் கோவிலில் வெள்ளம் 500 பக்தர்கள் கதி என்ன?: 13 ஹெலிகாப்டர்களில் தேடுகிறார்கள் Posted: 18 Jun 2013 10:23 PM PDT இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. முன்பு உத்தரபிரதேச மாநிலத்துடன் இருந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் மலை மீது உள்ளன. பல நதிகளை கடந்து சாலை வழியாக செல்ல வேண்டும். 6 மாதங்கள் மட்டும்தான் கோவில் திறந்து இருக்கும். மழை மற்றும் குளிர்காலங்களில் கோவில் மூடப்பட்டு விடும். இமய மலையில் அமைந்துள்ளதால் ஏராளமான |
| குஜராத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டக் குழு ஒப்புதல் Posted: 18 Jun 2013 09:10 PM PDT குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று மத்திய திட்ட குழுவின் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்தார். |
| வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு: சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு Posted: 18 Jun 2013 08:23 PM PDT நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெள்ளம் காரணமாக இமயமலைத் தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணியதலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு |
| இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Posted: 18 Jun 2013 04:48 PM PDT தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து |
| Posted: 18 Jun 2013 04:06 PM PDT ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் போலீஸ் நிலையத்தில் 15 வயது இளம் பெண்ணின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார். 'எனது மகளுடன் 'பேஸ் புக்' மூலம் பழகிய அல்வர் பகுதியை சேர்ந்த சமீர் குமார் என்பவன் சில மாதங்களுக்கு |
| பீகார் சட்டசபையில் இன்று பலப்பரீட்சை : நிதிஷ் குமாரை காப்பாற்ற காங்கிரஸ் "கை" கொடுக்குமா? Posted: 18 Jun 2013 02:51 PM PDT பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப் படுத்துவதற்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அத்வானி உள்பட பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர் |
| தீமைகளை எதிர்த்து கடுமையாக போராடி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும்: அப்துல் கலாம் அறிவுரை Posted: 18 Jun 2013 01:16 PM PDT டெல்லியில் உள்ள தேசிய பால பவனில் நடைபெற்ற சிறுவர் - சிறுமியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:- ஒவ்வொரு குழந்தையிடமும் சிறப்பு வாய்ந்த தனித்தன்மைகள் உள்ளன. உங்களது நோக்கம் நிறைவேறுவதற்கான |
| மதச்சார்பற்ற இந்தியா மோடியை ஏற்றுக் கொள்ளாது : காங்கிரஸ் கருத்து Posted: 18 Jun 2013 12:55 PM PDT ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட குருதாஸ் காமத் ஜெய்பூரில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி என்பது ஒரு மதவாத முகம் |
| ஒடிசா: ஓடும் பஸ்சில் பழங்குடியின பெண் கற்பழிப்பு - கண்டக்டர் கைது Posted: 18 Jun 2013 12:35 PM PDT ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பழங்குடியின பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜகத்பூர் செல்லும் ஏ.சி. பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். அதிகாலை 3 மணியளவில் கட்டக் அருகே பஸ் வந்தபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர் |
| இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம்: பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி Posted: 18 Jun 2013 11:02 AM PDT பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது சிங்கள அரசு மீது மன்மோகன்சிங் அதிருப்தி தெரிவித்தார். இலங்கை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் குழு, கடந்த 16–ந் தேதி இந்தியாவுக்கு வந்தது. ஆர்.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான அக்குழுவில் எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந்திரன், |
| அயோத்திக்கு வருவதாக மோடி ஒப்புதல் அளிக்கவில்லை : குஜராத் முதல் மந்திரி அலுவலகம் விளக்கம் Posted: 18 Jun 2013 11:00 AM PDT ராம ஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளையின் தலைவர் நிருத்தியா கோபால் தாசின் 75வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாளை (19ம் தேதி) அயோத்தி செல்வதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது |
| உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்குங்கள்: இமாச்சல்-உத்தரகாண்ட் முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள் Posted: 18 Jun 2013 09:31 AM PDT இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இமயமலையில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சென்ற 73 ஆயிரம் பேர் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். |
| உத்தரகாண்டில் பேய் மழை: கேதர்நாத் பாதுகாப்பு பணியிலிருந்த 45 போலீசார் மாயம் Posted: 18 Jun 2013 09:10 AM PDT உத்தரகாண்டில் இடியுடன் கூடிய கன மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பெரும்பாலான சாலைகள் சேறு சகதிகளால் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் பல லட்சம் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். |
| கரைபுரண்டு ஓடும் யமுனை நதியால் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை Posted: 18 Jun 2013 08:54 AM PDT உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. இந்த தொடர் மழை காரணமாக |
| இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தலைமை விருந்தினராக சீனாவுக்கு அழைப்பு: மணீஷ் திவாரி தகவல் Posted: 18 Jun 2013 08:03 AM PDT டெல்லியில் இன்று சீனத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற துவக்க விழாவில் சீனாவின் ஊடகத்துறை மந்திரி காய் பச்சாவோ தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். முன்னதாக பச்சாவோ தலைமையிலான குழுவினர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி மணீஷ் திவாரியை சந்தித்து ஆலோசனை |
| இமாச்சல் பிரதேசத்தில் 300 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 11 பேர் பலி Posted: 18 Jun 2013 07:51 AM PDT இமாச்சல் பிரதேசம் மணாலி அருகே உள்ள மலை கோடை வாசஸ்தலமான நதானி நோக்கி இன்று மாலை 17 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நாக்கர் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையின் உச்சியிலிருந்து உருண்ட அந்த வேன், 300 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தோடும் பியாஸ் நதியில் |
| தெலுங்கானா விவகாரம் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷிண்டே Posted: 18 Jun 2013 05:59 AM PDT ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கான பகுதியை தனி மாநிலமாக பிரித்து தரக்கோரி தெலுங்கானா ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்குள்ள நிலைமை குறித்து ஆந்திரப்பிரதேச கவர்னருடன் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |