மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உத்தரகாண்ட் வெள்ளம் எதிரொலி: மலைப் பிரயாணங்களைத் தவிர்க்கும் சுற்றுலாப் பயணிகள்
- குஜராத் மக்களை மட்டும் மீட்டு அழைத்து செல்வதா? மோடிக்கு சிவசேனா கண்டனம்
- மோசமான வானிலை: ராகுல் காந்தி உத்தரகாண்டில் தங்கினார்
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 23 தமிழக பயணிகளை மீட்பதில் தாமதம்
- திருவனந்தபுரத்தில் கனமழை: ஒரே நாளில் 200 வீடுகள் இடிந்தன
- கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சாவு
- உத்தரகாண்டுக்கு பஞ்சாபிலிருந்து 400 வாகனங்களில் சென்றோர் பத்திரமாக உள்ளனர்
- தீவிரவாதத்தின் மீது அரசு கடுமையாக நடந்துகொள்ளவில்லை: ஸ்ரீநகர் தாக்குதலுக்கு பாரதீய ஜனதா கண்டனம்
- பிரதமர் வருகையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல்: இறந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
- உத்தரகாண்டில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் ரெயிலில் செல்கிறது
- பீகாரில் போலீசார் துப்பாக்கி சூடு: 3 பொதுமக்கள் பலி
- ஜம்மு- காஷ்மீருக்கு இது புதிதல்ல... வி.வி.ஐ.பி.க்கள் வருகையை குறிவைக்கும் தீவிரவாதிகள்
- திட்டமிட்டபடி பிரதமர் மன்மோகன் சிங் நாளை காஷ்மீர் பயணம்
- கேரள எம்.எல்.ஏ.- மகன் மீது பெண் என்ஜினீயர் கற்பழிப்பு புகார்
- கால்நடை தீவன ஊழல் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற லல்லு பிரசாத் மனு
- கேதர்நாத்: கோவில் மணியில் 9 மணி நேரம் தொங்கி உயிர் பிழைத்த ஓட்டல் அதிபர்
- ஸ்ரீநகர் அருகே ராணுவம் மீது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி
- காங்கிரஸ் கட்சிக்கு ‘மோடி போபியா’ நோய்: பா.ஜனதா கிண்டல்
- அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியா வருகிறார்
- கூட்டணி விவகாரம்: பா.ஜனதாவுக்கு சிவசேனா அட்வைஸ்
| உத்தரகாண்ட் வெள்ளம் எதிரொலி: மலைப் பிரயாணங்களைத் தவிர்க்கும் சுற்றுலாப் பயணிகள் Posted: 24 Jun 2013 10:52 PM PDT உத்தரகாண்ட் பகுதியில் கொட்டித்தீர்த்த மழைக்கும், வெள்ளத்துக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதன் விளைவு இந்திய சுற்றுலாத் துறையிலும் பிரதிபலிக்கின்றது. இந்த சீசன் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்துப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சார்தாம் பகுதியின் பேரழிவைக் கண்ட மக்கள் மலைப் பிரதேசங்களைத் தவிர்த்து ராஜஸ்தான், காஷ்மீர், கோவா, கேரளா போன்ற இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். |
| குஜராத் மக்களை மட்டும் மீட்டு அழைத்து செல்வதா? மோடிக்கு சிவசேனா கண்டனம் Posted: 24 Jun 2013 10:44 PM PDT உத்தரகாண்டிற்கு சென்ற நரேந்திர மோடி குஜராத் பக்தர்களை மட்டும் மீட்டு அழைத்து சென்றதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் வெள்ள பகுதிகளை பார்வையிட சென்ற குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அங்கு சிக்கித் தவித்த சுமார் 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை மீட்டு அழைத்து சென்றார். |
| மோசமான வானிலை: ராகுல் காந்தி உத்தரகாண்டில் தங்கினார் Posted: 24 Jun 2013 10:29 PM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் இருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு விரைவுப்படுத்த டேராடூனில் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 23 தமிழக பயணிகளை மீட்பதில் தாமதம் Posted: 24 Jun 2013 10:08 PM PDT தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித பயணம் சென்ற பயணிகளை பத்திரமாக மீட்டுவர தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வருவாய்த் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், செயலாளர் ககன் தீப்சிங்பேடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் டேராடூனில் முகாமிட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து எஸ்.டி.கே.ஜக்கையன் கூறியதாவது:- இதுவரை 447 பேர் மீட்கப்பட்டு விமானம் மற்றும் ரெயில் மூலம் |
| திருவனந்தபுரத்தில் கனமழை: ஒரே நாளில் 200 வீடுகள் இடிந்தன Posted: 24 Jun 2013 09:57 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி வருகிறது. திருவனந்தபுரம் உள்பட மாநிலம் முழுவதும் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்றும், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மழை பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. |
| கார்-டேங்கர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சாவு Posted: 24 Jun 2013 03:39 PM PDT கோவா-மும்பை நெடுஞ்சாலையில் கார்-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக இறந்தனர். மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்த் சவான்(வயது65). இவருடைய மனைவி அனிதா (60), இந்த தம்பதியரின் மகன்கள் |
| உத்தரகாண்டுக்கு பஞ்சாபிலிருந்து 400 வாகனங்களில் சென்றோர் பத்திரமாக உள்ளனர் Posted: 24 Jun 2013 03:15 PM PDT பஞ்சாபிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் உத்தரகாண்ட் கோவிந்த் மலைத்தொடருக்கு ஆண்மீக சுற்றுலா சென்றனர். அப்போது அங்கு பெய்த இடியுடன் கூடிய கடும் பேய் மழையில் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். |
| தீவிரவாதத்தின் மீது அரசு கடுமையாக நடந்துகொள்ளவில்லை: ஸ்ரீநகர் தாக்குதலுக்கு பாரதீய ஜனதா கண்டனம் Posted: 24 Jun 2013 02:46 PM PDT காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே விடுமுறையில் வீடு சென்று திரும்பிக்கொண்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து கோழைத்தனமாக இரு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அரசின் தீவிரவாதம் குறித்த அணுகுமுறையே காரணம் என்று பாரதீய ஜனதா குறைகூறியுள்ளது. |
| பிரதமர் வருகையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல்: இறந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு Posted: 24 Jun 2013 02:02 PM PDT காஷ்மீருக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதையொட்டி ஸ்ரீநகர் அருகே சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கியால் சுட்டனர். |
| உத்தரகாண்டில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் ரெயிலில் செல்கிறது Posted: 24 Jun 2013 11:25 AM PDT உத்தரகாண்டில் ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் பேய் மழைக்கு அங்கு 5000 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆற்றுப்பாலங்கள், சாலைகள் முழுமையாக சேதமடைந்து விட்டதால், கிராமங்கள், மலைகளின் மேல் சிக்கியுள்ள 15000 பேர் அங்கிருந்து வேறு எங்கும் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். |
| பீகாரில் போலீசார் துப்பாக்கி சூடு: 3 பொதுமக்கள் பலி Posted: 24 Jun 2013 09:03 AM PDT பீகார் மாநிலம் பகாஹா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுகுறித்து ஏ.டி.ஜி.பி. பரத்வாஜ் கூறியதாவது:- போலீசார் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க அந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது கிராமத்தில் உள்ள சிலர் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றப் பத்திரிக்கையை மாற்றும்படி கூறியுள்ளனர். அப்போது போலீசார் மறுப்பு தெரிவிக்க கிராம மக்கள் அவர்களை சூழ்ந்து |
| ஜம்மு- காஷ்மீருக்கு இது புதிதல்ல... வி.வி.ஐ.பி.க்கள் வருகையை குறிவைக்கும் தீவிரவாதிகள் Posted: 24 Jun 2013 08:18 AM PDT பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாளை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், ஹிஸ்புல் முஜாதீன் தீவிரவாதிகள் இன்று ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வருகையை முன்னிட்டு அல்லது அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது புதிதல்ல. கடந்த 1998-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பல்வேறு |
| திட்டமிட்டபடி பிரதமர் மன்மோகன் சிங் நாளை காஷ்மீர் பயணம் Posted: 24 Jun 2013 06:37 AM PDT பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாளை முதல் 2 நாட்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் பயணத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாதிகள், தலைநகர் ஸ்ரீநகரில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று ராணுவ |
| கேரள எம்.எல்.ஏ.- மகன் மீது பெண் என்ஜினீயர் கற்பழிப்பு புகார் Posted: 24 Jun 2013 06:13 AM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது அங்கமாலி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் ஜோஸ் தெட்டியல். 68 வயதாகும் இவர் சோசலிஸ்டு ஜனதா கட்சியை சேர்ந்தவர். கடந்த முறை கேரளாவை ஆண்ட அரசில் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார். இவரது மகன் ஆதர்ஷ் (28). கேரள மாநிலம் அங்க மாலி அருகேயுள்ள மஞ்சப் பிரா என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக 26 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். அவர் ஆலுவா போலீஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இன்ஸ்பெக்டர் உசேனிடம் |
| கால்நடை தீவன ஊழல் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற லல்லு பிரசாத் மனு Posted: 24 Jun 2013 05:45 AM PDT பீகார் மாநில முதல் மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் பொறுப்பு வகித்த போது ரூ.37.70 கோடியை முறைகேடாக பயன்படுத்திய கால்நடை தீவன ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முறைகேட்டில் லல்லு பிரசாத் யாதவ்விற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து |
| கேதர்நாத்: கோவில் மணியில் 9 மணி நேரம் தொங்கி உயிர் பிழைத்த ஓட்டல் அதிபர் Posted: 24 Jun 2013 04:51 AM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இருந்து உயிர் தப்பிய பலர், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி தாங்கள் உயிர் பிழைத்த அதிசயத்தை பற்றி பேட்டியளித்து வருகின்றனர். கேதர்நாத் கோயிலின் அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் கங்கா சிங் பண்டாரி. கேதர்நாத்தில் கரை புரண்டோடிய |
| ஸ்ரீநகர் அருகே ராணுவம் மீது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி Posted: 24 Jun 2013 04:49 AM PDT பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் நாளை ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளனர். இதையொட்டி பிரதமர் வரும் பாதைகள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் 2 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர் |
| காங்கிரஸ் கட்சிக்கு ‘மோடி போபியா’ நோய்: பா.ஜனதா கிண்டல் Posted: 24 Jun 2013 04:24 AM PDT காங்கிரஸ் கட்சிக்கு 'மோடி போபியா' நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களை வகுப்புவாதிகள் என்று அழைப்பதற்கு முன்னால், காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதா கூறியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் கன்வால் ஷர்மா கூறியதாவது:- |
| அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியா வருகிறார் Posted: 24 Jun 2013 04:23 AM PDT 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி நேற்று புதுடெல்லி வந்து சேர்ந்தார். மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஜான் கெர்ரி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் அடுத்த (ஜூலை) மாதம் இந்தியாவிற்கு |
| கூட்டணி விவகாரம்: பா.ஜனதாவுக்கு சிவசேனா அட்வைஸ் Posted: 24 Jun 2013 03:56 AM PDT பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் சமீபத்தில் விலகியது. அதன்பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம் விலகியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டணியை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |